Tuesday, November 30, 2010

நிதானமாக இரு!

ராதேக்ருஷ்ணா

பொறுமை இருந்தால்தான்
நீ க்ருஷ்ணனை பார்க்கமுடியும்!
அவசரப்பட்டால் உன்னால் 
உலகில் பெரிய காரியங்களை
நிச்சயம் செய்யவே முடியாது!
நிதானமாக இரு! 

பொறுமையோடு இரு!

ராதேக்ருஷ்ணா

எல்லா சமயங்களிலும் நீ
பொறுமையோடு இருந்தால் 
மட்டுமே உன்னால் சவால்களை
சமாளிக்கமுடியும்! பொறுமையே 
உனது மூலதனம்! பொறுமையே
நிம்மதி ரஹஸ்யம்!

வெற்றிப்படி!

ராதேக்ருஷ்ணா

எல்லாவற்றையும் நிதானமாக 
கவனி! பரபரப்பே வேண்டாம்!
எது நடந்தாலும் நீ நிதானமாக
இரு! அப்பொழுதுதான் உன்னால்
ஜெயிக்கமுடியும்! இதுவே வெற்றிப்படி!

Monday, November 29, 2010

நீயும் உன் குழப்பமும்!

ராதேக்ருஷ்ணா!

நீயும் உன் குழப்பமும்! உன்
குழப்பத்தைக் கொண்டு 
சாக்கடையில் வீசி எறி!
உன் சந்தேகத்தை குழி
தோண்டி புதை! நிம்மதியாக
வாழ எல்லாம் இருக்கிறது! 
வாழ்!

உன்னை சரி செய்...

ராதேக்ருஷ்ணா

நீ யார் உலகை திருத்த?
நீ உன்னை திருத்திக்கொள்!
நீ யார் அடுத்தவரைப் பற்றி
குறை சொல்ல? உன்னை 
சரி செய்துகொண்டு வாழ்வை
ரசித்து அனுபவி!

க்ருஷ்ணனிடம் கொடுத்துவிடு!

ராதேக்ருஷ்ணா

என்ன நடந்துவிட்டது? ஏன்
சோர்ந்துபோகிறாய்? ஏன் 
கவலைப்படுகிறாய்? ஏன் 
வாழ்வை வெறுக்கிறாய்? உன்
மனதின் கவலைகளை
 க்ருஷ்ணனிடம் கொடுத்துவிட்டு
உன் வேலையை பார்!

நல்லதை நம்பு!

ராதேக்ருஷ்ணா

நல்லதை நினைப்பதற்கு உனக்கு
யாருடைய தயவும் வேண்டாம்!
நல்லதை நினைக்க நீ
ஞானியாகஇருக்க வேண்டாம்!
நல்லதை நீ நம்பினால்
போதும்! நன்மை...

நல்லதே வாழ்க்கை!

ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வில் எதுவுமே
சரியில்லை என்றாலும் நீ
நல்லதை மட்டுமே
நினைத்துக்கொண்டிரு! 
நிச்சயம் அதுவே உன்
வாழ்க்கையை நன்றாக
மாற்றும்! நல்லதே வாழ்க்கை!

நல்லதை மட்டுமே நினை!

ராதேக்ருஷ்ணா!

வாழ்வில் மாற்றம் வரவேண்டும்
என்றால் முதலில் உன் மனதில்
 மாற்றம் வரவேண்டும்! நல்லதை
மட்டுமே நினை! நல்லதை
மட்டுமே பேசு! நல்லவை
மட்டுமே நடக்கும்!

கடவுள் உண்டு!

ராதேக்ருஷ்ணா!

கடவுள் உண்டு! கடவுள்
உண்டு! கடவுள் உண்டு!
இதில் துளியும் சந்தேகம்
இல்லை! எத்தனை பேர்
இல்லை என்று சொன்னாலும்
கடவுள் இருப்பதென்னவோ
சத்தியம்தான்!

எங்கும் உளன் கண்ணன்...

ராதேக்ருஷ்ணா!

கடவுள் இல்லாத ஒரு
இடம், ஒரு நாள், ஒரு
பொருள் என்பது என்றுமே
கிடையாது! எங்கும் நீக்கமற
நிறைந்த கடவுளை எங்கே
என்று யாரால் காட்ட
முடியும்? யோசி...

சத்தியம்!

ராதேக்ருஷ்ணா

கடவுள் இல்லை என்று
சொல்பவரும் கடவுளையே
தேடுகின்றனர்! கடவுள் இல்லை
என்று சொல்கின்றவன்
நிச்சயம் ஒரு நாள் கடவுளை
பார்த்தே தீருவான்! சத்தியம்!

Saturday, November 27, 2010

பலம் அளவே வாழ்க்கை!

ராதேக்ருஷ்ணா

பொறாமை அளவே சந்தேகம்!
சந்தேக அளவே குழப்பம்!
குழப்ப அளவே வெறுப்பு!
வெறுப்பு அளவே மனோ 
தைரியம்! தைரிய அளவே பலம்! 
பலம் அளவே வாழ்க்கை!

நம்பிக்கை அளவே வாழ்க்கை!

ராதேக்ருஷ்ணா

பேச்சளவே சிந்தனை! சிந்தனை
அளவே முயற்சி! முயற்சி அளவே
வாய்ப்புகள்! வாய்ப்பளவே வெற்றிகள்!
வெற்றி அளவே தன்னம்பிக்கை!
நம்பிக்கை அளவே வாழ்க்கை!

உன்னைப் பொறுத்தே...

ராதேக்ருஷ்ணா

மனதளவே வாழ்க்கை! 
சிந்தனையைப் பொறுத்தே உன்
சந்தோஷம்! ஆசைகளைப் பொறுத்தே
உன் துக்கம்! முயற்சியை
பொறுத்தே உன் வெற்றிகள்!
உன்னைப் பொறுத்தே உன் உலகம்!

Thursday, November 25, 2010

மனம் தான் அடிப்படை!

ராதேக்ருஷ்ணா

நல்ல மாற்றம் என்பது உன்
மனதை அடிப்படையாக கொண்ட
விஷயம்! இதற்கு உன் கை 
ரேகையோ, ஜாதகமோ எப்படி
உதவ முடியும்? க்ருஷ்ணனை
திடமாக நம்பு!

மாற்றம் வரும்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் நல்லதே 
என்ற புத்தி உனக்கு என்று
வருகிறதோ, அன்று முதல் உன்
வாழ்வில் நிச்சயம் நல்ல மாற்றம் 
வரும்! எதிர்கால ஜோசியமே 
வேண்டாமே!

க்ருஷ்ணன் நல்லதுதான் செய்வான்!

ராதேக்ருஷ்ணா

இன்றைய பொழுது மிகவும்
நல்லது! இன்று உன் வாழ்வில்
நல்ல மாற்றங்கள் வரும்! இப்படி
 எல்லாம் கேட்க அவசியமே 
இல்லை! க்ருஷ்ணன் நல்லதுதான்
 செய்வான் என்று நம்பு!

Wednesday, November 24, 2010

கவலைப்படவேண்டாம்!

ராதேக்ருஷ்ணா

பக்தி இருப்பதால் நீ எதைப்பற்றியும் 
கவலைப்படவேண்டாம்! எல்லா
பாரத்தையும் உன் க்ருஷ்ணனிடம்
கொடுத்துவிட்டு நீ நிம்மதியாக 
இரு! நல்லதே நடக்கிறது!

ஒரு கை பார்த்துவிடு!

ராதேக்ருஷ்ணா

எது வந்தாலும் கலங்காதே!
ஒரு கை பார்த்துவிடு! நீ
பயப்பட பயப்படத்தான்
எல்லோரும் உன்னை பாடாய்
படுத்துவார்கள்! நீ தைரியமாக
இரு! உன்னால் முடியும்!

அளவு கிடையாது...

ராதேக்ருஷ்ணா

உனக்கும் க்ருஷ்ணனுக்கும்
 இடையே உள்ள அன்பே
பக்தி! இதற்கு எந்த அளவும்
 கிடையாது! இதற்கு யாருடைய
அனுமதியும் வேண்டாம்! உன் 
மனது ஒத்துழைக்கவேண்டும்!

Tuesday, November 23, 2010

கலங்காமல் இரு!

ராதேக்ருஷ்ணா

எது வந்தாலும் கலங்காமல்
இருந்தால் தான் உன்னால்
வாழ்வில் ஜெயிக்க முடியும்!
கலங்குவதால் உன் வாழ்க்கையை
நீ அதல பாதாளத்தில் 
தள்ளுகின்றாய்!

செய்!

ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கை கேவலமானது
என்று யாரும் முடிவு செய்ய
 முடியாது! நீ சிரத்தையுடன் 
வாழ்ந்து எல்லோர் முன்பும் 
உன் வாழ்க்கையின் 
மரியாதையை காட்டு! செய்!

நாமஜபம் செய்!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் என்ன சமயத்தில்
எது நடக்கும் என்று யாருக்கும்
தெரியாது! அதனால் எப்பொழுதும்
பகவானுடைய நாமத்தை
ஜபித்துக்கொண்டே இருக்கவேண்டும்! 

Monday, November 22, 2010

சுகம் தரும் சாதனம்!

ராதேக்ருஷ்ணா!

பக்தி என்பது ஒரு அனுபவம்!
பக்தி என்பது ஒரு பாரம்
இல்லை! பக்தியை கடனே
என்று செய்யாதே! பக்தி
என்பது உனக்கு சுகம் தரும்
சாதனம்! புரிந்து செய்!

பக்தி சாம்ராஜ்யம்!

ராதேக்ருஷ்ணா

பக்தி சாம்ராஜ்யத்தில் ஒரு
நாளும் சண்டை இல்லை!
போட்டி இல்லை! பொறாமை
இல்லை! குழப்பம் இல்லை!
நம்பிக்கை துரோகம் இல்லை!
சந்தோஷம் மட்டுமே உண்டு!
அனுபவி!

நீ க்ருஷ்ணனின் சொத்து!

ராதேக்ருஷ்ணா

பக்தி சாம்ராஜ்யம் உனக்காக
காத்திருக்கிறது! நீ ஏன் உன்னை
யார் யாரிடமோ கொண்டு அடகு
வைக்கிறாய்? நீ க்ருஷ்ணனின்
சொத்து! இதை ஒரு நாளும்
மறக்காதே!  

ராதேக்ருஷ்ணா

திருமங்கை ஆழ்வார் திருவாலி 
திருநகரியில் குறையலூரில் 
பிறந்தார்! ஸ்ரீரங்கராஜனுக்கு 
கைங்கர்யம் செய்தார்!
திருக்குறுங்குடியில் பரமபதித்தார்!

திருமங்கை மன்னா...

ராதேக்ருஷ்ணா

திருமங்கை ஆழ்வார் ஸ்ரீரங்கம்
கோயிலின் மதில் கைங்கர்யம்
செய்தார்! திருஞான சம்பந்தரை தன்
 கவியினால் அசர வைத்திருக்கிறார்!
திருமங்கை மன்னா...

திருமங்கை ஆழ்வாரின் திருநக்ஷத்ரம்!

ராதேக்ருஷ்ணா

திருமங்கை ஆழ்வாரை நினை!
அவரைப்போல் பக்தர்களுக்காக
கைங்கர்யம் செய்! அவரைப்போல் 
பகவானின் கழுத்தில் கத்தியை வை! 
இன்று அவர் பிறந்த நக்ஷத்ரம்!

திருமங்கை ஆழ்வாரை நினை!

ராதேக்ருஷ்ணா

திருமங்கை ஆழ்வாரை நினை!
அவரைப்போல் பக்தர்களுக்காக
கைங்கர்யம் செய்! அவரைப்போல் 
பகவானின் கழுத்தில் கத்தியை வை! 
இன்று அவர் பிறந்த நக்ஷத்ரம்!

பதிய வை!

ராதேக்ருஷ்ணா

உன்னை கஷ்டப்படுத்தி தெய்வத்திற்கு
 என்ன பிரயோஜனம்? நீ
சந்தோஷமாக இருந்தால் தான்
தெய்வத்திற்கு மிகவும் சந்தோஷம்!
இதை உன் மனதில் பதிய வை!

சுகமாக இரு!

ராதேக்ருஷ்ணா

எந்த ஒரு துக்கத்தையும் 
தெய்வம் உனக்கு தரவில்லை!
நீயாக உன் மனதை
குழப்பிக்கொண்டால் அதற்கு
தெய்வம் என்ன செய்ய முடியும்?
இனியாவது சுகமாக இரு!

தெய்வம் சோதிக்கவில்லை!

ராதேக்ருஷ்ணா

ஒரு நாளும் தெய்வம்
உன்னை சோதிக்கவில்லை!
உன் பூர்வ ஜன்ம கர்ம
வினைகளும், உன்னுடைய
ஆசைகளுமே உன்னை பாடாய்
படுத்துகிறது! தெய்வம் 
உன்னை காப்பாற்றுகிறது!

Friday, November 19, 2010

நிம்மதி வரும்!

ராதேக்ருஷ்ணா

தெய்வம் நம்மோடு இருப்பதை
நாம் துன்பங்கள் வரும்பொழுதுதான்
உணரமுடியும்! அதனால்
பிரச்சனைகள் வந்தால் 
கலங்காமல் நாம ஜபம்
செய்! நிம்மதி வரும்!

பகவானுக்காக அர்ப்பணம்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு பொழுதையும்
பகவானுக்காக அர்ப்பணம்
செய்து விடு! உன் கடமையில்
சிரத்தையுடன் இரு! காலம்
வரும் வரை பொறுத்திரு!
நிச்சயம் நல்லதே நடக்கும்! 

சிந்தனை செய்!

ராதேக்ருஷ்ணா

நடந்ததை நினைத்து ஒரு
பிரயோஜனமும் இல்லை!
இனி சரியாக இருக்க 
உன்னை தயார் செய்து கொள்! 
நடந்தது நடந்துவிட்டது!
அதுவும் நன்மையே!
சிந்தனை செய்!

யோசி!

ராதேக்ருஷ்ணா

வாழ்வை நீ முடிவு செய்யாதே!
வாழ்வை நீ ஏற்றுக்கொள்!
வாழ்வை நீ கேவலப்படுத்தாதே!
வாழ்வை நீ திட்டாதே! வாழ்வை
 நீ வாழ்! புரியவில்லையா? 
யோசி! யோசி!

உன் வாழ்க்கை!

ராதேக்ருஷ்ணா

வாழ்வை ஜெயிக்க முதலில்
நீ வாழ்வை ரசிக்கவேண்டும்!
வாழ்வில் ஜெயிக்க நீ 
எப்பொழுதும் உன் வாழ்வை
மதிக்கவேண்டும்! வாழ்க்கை
உன்னுடைய வாழ்க்கை!

உன்னிப்பாக கவனி...

ராதேக்ருஷ்ணா

வாழ்வை ஜெயிக்க நீ
நடப்பவைகளை உன்னிப்பாக
கவனித்துக்கொண்டே
 இருக்கவேண்டும்! அதிலிருந்து
பாடம் படித்து சரியான
நேரத்தில் உபயோகப்படுத்து!

Tuesday, November 16, 2010

சுகமான பிரயாணம்!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையை பாரமாக
நினைக்காதே! அது ஒரு
சுகமான பிரயாணம்!

நல்லதை நினைப்போம்!

ராதேக்ருஷ்ணா

வாழும் வரை நல்லதை
நினைப்போம்! நல்லதை 
சொல்வோம்! செய்வோம்! 

Monday, November 15, 2010

இன்றைய பொழுதை மதி!

ராதேக்ருஷ்ணா

இன்றைய பொழுதை மதித்து
வாழ்ந்தால் நாளை
நன்றாயிருக்கும்!

நீ வெல்வாய்!

ராதேக்ருஷ்ணா

உன்னிடம் நிறைய நல்லவைகள்
இருக்கிறது! அதனால் நீ
வெல்வாய்!

உலகோடு ஒத்து வாழ்!

ராதேக்ருஷ்ணா

உலகோடு ஒத்து வாழ
முடியாவிட்டால் நீ எப்படி
சந்தோஷமாக இருக்க முடியும்?
யாரும் ஒத்து வருவதில்லை
என்று சொல்ல உனக்கு என்ன
அதிகாரம் இருக்கிறது?

ஆனந்தமாயிரு!

ராதேக்ருஷ்ணா

எல்லோரிடமும் ஒத்து வாழ்!
உனக்கு கிடைத்தவற்றை முதலில்
மதிக்க கற்றுக்கொள்! அப்பொழுதுதான்
உன் க்ருஷ்ணன் உன்னிடத்தில்
சந்தோஷப்படுவான்! ஆனந்தமாயிரு!

ஸ்ரீ பூதத்தாழ்வார் திருநக்ஷத்திரம்!

ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ பூதத்தாழ்வார்
திருநக்ஷத்திரம்! அவருடைய 
பிறந்த நாளான இன்று
அவரின் திருவடிகளில்
 சரணாகதி செய்வோம்! நாமும் 
பகவானை அனுபவிப்போம்!

ஜெய் ஸ்ரீ பத்மநாபா!

ராதேக்ருஷ்ணா

இன்றோடு பாபங்கள் நம்மை
விட்டு நீங்கட்டும்! இன்றோடு
மனதில் அஹம்பாவம் அழியட்டும்!
இன்றோடு நம் சுயநலம் 
இல்லாமல் போகட்டும்! ஜெய்
ஸ்ரீ பத்மநாபா! காப்பாற்று!

பரம சுகம்!

ராதேக்ருஷ்ணா

பத்மநாபரோடு ஆராட்டுக்கு போவதே 
பரம சுகம்! பத்மநாபர்
மாலை 6 மணி அளவில் 
சங்கு முகம் கடலில்
இறங்குவார்! நீயும் உன்னிடத்தில்
ஆனந்தமாக குளி!

ஆனந்த நீராட்டம்!

ராதேக்ருஷ்ணா

இன்று பத்மநாப சுவாமி
சங்கு முகம் கடலில்
 பக்தர்களோடு நீராடி ஆனந்தம்
தரப்போகிறார்! நீ உடனே
திருவனந்தபுரத்திற்கு வா!
நீராடி மகிழ! 

Friday, November 12, 2010

பத்மநாபரின் இஷ்டம்!

ராதேக்ருஷ்ணா

உன்னை ஸ்ரீ அனந்த பத்மநாப
சுவாமியின் கைகளில் வில்லாய்
கொடுத்து விடு! உன் வாழ்வின்
லட்சியங்களை பத்மநாபரின்
இஷ்டமாக விட்டு விடு!
வாழ்க்கை சுகமானது!

துஷ்ட குணங்களை கொடுத்துவிடு!

ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ அனந்த பத்மநாப
சுவாமியின் வேட்டைக்கு 
உன்னுடைய துஷ்ட குணங்களை
கொடுத்துவிடு! அவர் அவைகளை 
வேட்டையாடி உனக்கு 
சமாதானம் தருவார்!

ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியின் வேட்டை!

ராதேக்ருஷ்ணா

இன்று திருவனந்தபுரத்தில்
ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி
வேட்டைக்காக தன் கோயிலை 
விட்டு வெளியில் வருகிறார்!
நீயும் வா! அவர் வேட்டையாடும்
அழகை பார்!

Thursday, November 11, 2010

உன்னை காப்பாற்றிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

நீ எத்தனை தான் பார்த்து
பார்த்து செய்தாலும், ஒரு நாள்
நீ செய்யவில்லை என்றால் 
இந்த மனிதக்கூட்டம் உன்னை
காறித்துப்பும்! இனியாவது
உன்னை காப்பாற்றிக்கொள்!

க்ருஷ்ணனுக்காக வாழ்!

ராதேக்ருஷ்ணா

நம்மால் முடிந்த நல்லதை
எல்லோருக்கும் செய்யவேண்டும்
என்கிற ஆசையில் க்ருஷ்ணனை
மறந்து ஓடிக்கொண்டிருக்கிறாய்
என்பதை நினைவில் கொள்!
க்ருஷ்ணனுக்காக வாழ்!

அடிமையாகிவிடாதே!

ராதேக்ருஷ்ணா

எல்லோருக்கும் நல்லது செய்வது
தப்பில்லை! ஆனால் அதற்காக
அவர்களிடம் அடிமையாகிவிடாதே!
உனக்கென்று ஒரு வாழ்க்கை
இருக்கிறது என்பதை 
மறந்துவிடாதே!

Wednesday, November 10, 2010

மனிதர்களிடம் ஜாக்கிரதை!

ராதேக்ருஷ்ணா

உலகில் மிகவும் ஜாக்கிரதையாக
இருக்க வேண்டியது 
மனிதர்களிடம்தான்! மிருகங்கள்
என்ன செய்யும் என்று சொல்ல
 முடியும்! மனிதர்களை நிர்ணயம்
செய்வது கடினம்!

சரியாக யோசி!

ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள்!
எப்படி வேண்டுமானாலும் தன்னை
மாற்றிக்கொள்வதில் சாமர்த்தியசாலிகள்!
நீதான் ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும்! சரியாக யோசி!

உன்னை காப்பாற்றிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

எப்பொழுதும் மனிதர்களிடம்
ஜாக்கிரதையாக இரு! 
வார்த்தைகளை மாற்றி மாற்றி
பேசுவதில் மனிதர்கள் மிகவும்
கெட்டிக்காரர்கள்! உன்னை
காப்பாற்றிக்கொள்!

Tuesday, November 9, 2010

தயாரா?

ராதேக்ருஷ்ணா

எத்தனை பேரோடு சண்டை
போடுவது? முதலில் நம்முடைய
கெட்ட குணங்களோடு சண்டை
போட்டு அவற்றை ஜெயித்துவிட்டு
பிறகு மற்றவரோடு சண்டை
போடுவோம்! தயாரா?

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP