Friday, December 31, 2010

திருமலையே! நீ நினைத்தால் ...

ராதேக்ருஷ்ணா

திருமலையே! நீ என்னை
நினைத்துக்கொண்டே இரு!
அப்பொழுதுதான் என்னால் 
உன்னை தரிசிக்க முடியும்!
எனக்கு பக்தி இல்லை! 
ஆனாலும் நீ நினைத்தால் 
எனக்கு பக்தி வரும்!

கோடி நமஸ்காரங்கள்!

ராதேக்ருஷ்ணா

உன் மலையை விட்டு உடல்
வந்துவிட்டாலும், மலையப்பா!
இன்னும் மனது திருமலையிலே
தான் சுற்றிக்கொண்டிருக்கிறது!
உனக்கும், திருமலைக்கும் கோடி
நமஸ்காரங்கள்!

நான் வேண்டும் வரம்!

ராதேக்ருஷ்ணா

ஸ்ரீநிவாசா! உன் சரண
கமலங்களில் சரணாகதி 
செய்கிறோம்! எல்லா பிறவியிலும்
உன் திருமலையை தொழும் 
வரம் தா! அதுவே நான்
வேண்டும் வரம்! கோவிந்தா!

Thursday, December 30, 2010

ஆத்மா பரிசுத்தமாயிற்று!

ராதேக்ருஷ்ணா

ஆகாச கங்கையின் பவித்ர
ஜலத்தில் ஆத்மா பரிசுத்தமாயிற்று!
மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம்
செய்யும் ஆகாச கங்கையே நீ
வாழ்க! ஸ்ரீநிவாசா!

விஷ்ணு பாதம் பார்த்தோம்!

ராதேக்ருஷ்ணா

திருமலையில் விஷ்ணு பாதம்
பார்த்தோம்! அங்கிருந்து 
ஸ்ரீநிவாசரின் திருக்கோயிலை 
கண்டேன்! எத்தனை சுகமான
குளிர்ந்த காற்று! மலையப்பா!
நீ நன்றாக இரு!

வைகுந்தத்தில் இருக்கிறோம்!

ராதேக்ருஷ்ணா

அருமையான காலைப்பொழுது!
அற்புதமான ஸ்ரீநிவாச தரிசனம்!
சுகமான பனி வீசும் விடியற்காலை!
திருமலை என்னும் வைகுந்தத்தில்
இருக்கிறோம்!

Tuesday, December 28, 2010

கோவிந்தா! கோவிந்தா!

ராதேக்ருஷ்ணா

திருமலை சகல விதமான
பாபங்களையும் பொசுக்கும்!
ஒரு நாளும் வீண் போகாத 
பக்தியை தரும்! நிச்சயம் 
ஸ்ரீநிவாச தரிசனம் தரும்!
கோவிந்தா! கோவிந்தா!

உன் சரணத்தில் பணிந்தோம்!

ராதேக்ருஷ்ணா

எங்களின் பாக்கியம் திருமலை
ஏறுகின்றோம்! நீங்களும் எங்களோடு
வாருங்கள்! மலையப்பா! இந்த
குழந்தைகளை உன் மலையில்
ஏற்றிவிடு! உன் சரணத்தில் 
பணிந்தோம்!

சுகம்!

ராதேக்ருஷ்ணா

நாங்கள் அலர்மேல்மங்கா தாயாரின்
பரம காருண்யத்தில் திளைத்து
ஆனந்தத்தில் இருக்கிறோம்! அடுத்து
நாங்கள் கோவிந்தராஜனை தரிசிக்கப்
போகிறோம்! சுகம்!
 

Monday, December 27, 2010

சந்தோஷமாக இருந்துவிடு!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை ஒரு ரயில் பயணம்!
இந்த பயணத்தில் யாரோ
வருவார், யாரோ போவார்,
யாரும் நிரந்தரம் இல்லை!
அதனால் முடிந்தவரை
சந்தோஷமாக இருந்துவிடு!

கண்ணன் கையில்!

ராதேக்ருஷ்ணா

ரயில் பயணங்களில் எப்படி
ஒரு சில விஷயங்களை
மட்டுமே நாம் செய்கிறோமோ
அதுபோலே வாழ்க்கையிலும்
ஒரு சிலதை மட்டுமே நாம்
செய்கிறோம்! மற்றவை
கண்ணன் கையில்! 

வாழ்க்கைக்கு சாரதி...

ராதேக்ருஷ்ணா

ரயிலை ஓட்ட ஒரு சாரதி!
அதுபோலே வாழ்க்கைக்கு
சாரதி நம் கண்ணனே! நீ
ஒன்றுமே செய்யாமல் இருந்தாலே
வாழ்க்கை சுகமாயிருக்கும்!
அர்த்தம் புரிந்ததா?

உள்ளம் நிறைந்தது!

ராதேக்ருஷ்ணா

இன்றைய பொழுது கோபூஜையில்
எங்களை மறந்தோம்! மூன்று
திவ்ய தேச கோமாதாக்களையும்,
2 திவ்ய தேச கன்றுகளையும்
கண்டு உள்ளம் நிறைந்தது!
ஆனந்தம்!

அளவில்லாத கருணை!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் தெய்வம்
எங்கள் மீது கருணையை
அள்ளி அள்ளி தெளிக்கின்றது!
இந்தக் கருணையை தாங்கும்
சக்தி துளியும் எனக்கில்லை!
சடகோபா நீ பெரியவன்!

பரமானந்தமான நாள்!

ராதேக்ருஷ்ணா

இன்று பரமானந்தமான நாள்!
சுவாமி நம்மாழ்வாரை ராஜ
கோலத்திலும், அவரின் மந்திரியாக
சுவாமி ராமானுஜரையும், ஆழ்வார்
திருநகரியில் சேவித்தோம்! சுகம்!

Saturday, December 25, 2010

பக்திக்கு அடிப்படை...

ராதேக்ருஷ்ணா

பொறுமை உள்ளவர்கள் மட்டுமே
பக்தி செய்யமுடியும்!
பொறுமை என்பது பக்திக்கு
அடிப்படையான விஷயம்!
பொறுமையினால் மட்டுமே
தெய்வத்தை அடையமுடியும்!

பொறுமையாயிரு!

ராதேக்ருஷ்ணா

பொறுமை இருந்தால் நீ
எல்லாவற்றையும் ஒழுங்காக
கற்றுக்கொள்வாய்! பொறுமையை
இழந்தால் நீ எதையும்
 ஒழுங்காக அனுபவிக்கமாட்டாய்!
இனியாவது பொறுமையாயிரு!

நிதானத்தை கைவிடாதே!

ராதேக்ருஷ்ணா

ஒரு நாளும் நிதானத்தை
கைவிடாதே! நிதானத்தை நீ
இழக்காத வரையில் உலகம்
உன்னிடம் பயப்படும்!
நிதானத்தை நீ இழந்தால்
உன்னையே இழப்பாய்!

Thursday, December 23, 2010

நொந்து போகக்கூடாது!

ராதேக்ருஷ்ணா

இன்று மறந்தும் என்ன
வாழ்க்கை என்று நொந்து
போகக்கூடாது! இன்று முழுவதும்
நீ நிம்மதியாக, திருப்தியாக
 மட்டுமே இருக்கவேண்டும்! நீ
செய்தாகவேண்டும்!

சத்தியம் செய்!

ராதேக்ருஷ்ணா

இன்று உன்னோடு சத்தியமாக
ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி
இருக்கிறார்! அதனால் இன்று
முழுவதும் நீ சந்தோஷமாகத்தான்
இருக்கவேண்டும்! சத்தியம் செய்!

ஒரு கவலையும் வேண்டாம்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு விடியலும் நல்லதே!
அதனால் இன்று சந்தோஷமாக
இருக்க பழகிக்கொள்! நிச்சயம்
தெய்வம் உன்னோடு இருக்கிறது!
உனக்கு ஒரு கவலையும் 
வேண்டாம்! சரியா?

Wednesday, December 22, 2010

பாகுபாடு கிடையாது!

ராதேக்ருஷ்ணா

எல்லோரையும் பகவானுக்குப் பிடிக்கும்!
அவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர்
என்ற பாகுபாடு கிடையாது!
அதனால் நீ யாரையும் கேவலமாக
நினைக்காதே! க்ருஷ்ணா!

அவமதிக்காதே!

ராதேக்ருஷ்ணா

எல்லோரிடத்திலும் பகவான்
இருக்கிறான்! அதனால் யாரையும்
அவமதிக்காதே! க்ருஷ்ணன் இருப்பதால்
யாரையும் பரிகாசம் செய்யாதே!
எல்லோரும் நல்லவரே! க்ருஷ்ணா! 

பாக்கியசாலிகள்!

ராதேக்ருஷ்ணா

திருவனந்தபுரம் எத்தனை அழகாக
 அமைதியாக சௌக்கியமாக 
இருக்கிறது! திருவனந்தபுரத்தில்
வாழ்பவர்கள் பாக்கியசாலிகள்!
சுகமான அந்தப்புரம்!

Tuesday, December 21, 2010

இன்று திரு அனந்த பத்மநாப சுவாமி தரிசனம்!

ராதேக்ருஷ்ணா

இன்று இப்பொழுது 
திருவனந்தபுரத்தில், திரு
அனந்த பத்மநாப சுவாமியின் 
அந்தப்புரத்தில்  இருக்கிறேன்! 
இன்னும் சிறிது நேரத்தில் 
அவரை தரிசிப்போம்!

மலையப்ப சுவாமி தரிசனம்!

ராதேக்ருஷ்ணா

நேற்று இரவு அற்புதமாக
திருமலையில் கொட்டும் பனியில்,
மலையப்ப சுவாமியை தரிசித்து
விட்டு, குளிர்ந்த காற்றில் சுகமாக
உலாவினோம்! 

நரசிம்ஹ சுவாமி தரிசனம்!

ராதேக்ருஷ்ணா

நேற்று இந்த சமயத்தில்
திருக்கடிகாசலத்தில் (சோளிங்கரில்)
நரசிம்ஹ சுவாமியை தரிசித்து
விட்டு, மலையிலிருந்து கீழே
இறங்கிக்கொண்டிருந்தோம்...

Monday, December 20, 2010

எவ்வளவு ப்ரியம்!!

ராதேக்ருஷ்ணா

இந்த கடிகாச்சலத்தில் (சோளிங்கர்)
ஒரு கடிகை நேரமிருந்து தவம்
செய்தால் நிச்சயம் மோக்ஷம்
கிடைக்கும்! எங்களிடம்
நரசிம்மனுக்கு எவ்வளவு ப்ரியம்!

க்ருஷ்ணனின் லீலை...

ராதேக்ருஷ்ணா

தெய்வத்தின் திட்டங்கள் எபோதுமே
விசேஷம்தான்! மனிதர்கள்தான் 
புரிந்துகொள்வதில்லை! இன்று
க்ருஷ்ணனின் லீலையால், 
திருமலைக்கு பதில் 
திருஎவ்வுள் கண்டோம்!

க்ருஷ்ண கருணை...

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் புதியதே!
இன்று இப்பொழுது திருமலைக்கு
சென்றுகொண்டிருக்கிறோம்! க்ருஷ்ண
 கருணை என்பது இதுதான்!
எங்களை அன்பிலே திளைக்க
வைக்கிறான் கண்ணன்!

அநியாய கிருபை!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு பெருமாளும் போட்டி
போட்டுக்கொண்டு எங்களுக்கு
காட்சி கொடுத்த விதத்தை
எப்படி சொல்வேன்? இது 
அநியாய கிருபை! தாங்கும்
சக்தி எங்களுக்கில்லை! 
கருணை...

காஞ்சி யாத்திரை...

ராதேக்ருஷ்ணா

காஞ்சி வரத பத்தினி
பெருந்தேவி தாயாரோடு 
ஆரம்பித்த இந்த காஞ்சி
யாத்திரை ஆசார்யன் வேதாந்த
தேசிகரோடு பூர்த்தி அடைந்தது!
ஆனந்தம்!

நாளை வரும்!

ராதேக்ருஷ்ணா

நேற்று முடிந்து இன்று
வந்தாகிவிட்டது! இன்று முடிந்து
நாளை வந்துவிடும்! அதனால்
நாளை வரும்! ஆனால் நீயும் 
நானும் உலகில் இருப்போமா 
என்று தெரியாது!

இன்று உன் கையில்...

ராதேக்ருஷ்ணா

நாளை நன்றாக இருக்கவேண்டும்
என்று ஆசைப்படும் மனித
இனமே, இன்று உன் கையில் 
இருப்பதை ஏன் மறந்துவிடுகிறாய்?
இன்று நேற்றாவதற்குள் 
முழித்துக்கொள்!

முழித்துக்கொள்!

ராதேக்ருஷ்ணா

நாளை நன்றாக இருக்கவேண்டும்
என்று ஆசைப்படும் மனித
இனமே, இன்று உன் கையில் 
இருப்பதை ஏன் மறந்துவிடுகிறாய்?
இன்று நேற்றாவதற்குள் 
முழித்துக்கொள்!

இன்று அற்புத நாளே!

ராதேக்ருஷ்ணா

இன்றைய பொழுது நல்ல
பொழுதே! இதில் துளியும் 
சந்தேகம் இல்லை! நீ நாம
ஜபம் செய்து, க்ருஷ்ணனை
திடமாக நம்பினால் நிச்சயம்
இன்று அற்புத நாளே!

Friday, December 17, 2010

கீதா ஜெயந்தி!

ராதேக்ருஷ்ணா

இன்று 'கீதா ஜெயந்தி'!
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்
அர்ஜுனனுக்கு ஸ்ரீமத் பகவத்
கீதையை உபதேசித்த
 புண்ணியமான நாள்! இன்று 
கீதை பாராயணம் செய்!
 வாழ்க!

பூரண அனுக்ரஹம்!

ராதேக்ருஷ்ணா

வைகுண்ட ஏகாதசியில் விரதம்
இருந்தால் பகவானுடைய
அனுக்ரஹம் பூரணமாக 
கிடைக்கும்! இன்று இரவு 
விழித்து விடாது நாம ஜபம்
 செய்ய மோக்ஷம் கிடைக்கும்!

வைகுந்தத்தை அருளும் நாள்!

ராதேக்ருஷ்ணா

இன்று என் கண்ணன் தூக்கம்
கலைந்து கண் விழிக்கும் நாள்!
அவன் எனக்கு வைகுந்தத்தை
அருளும் நாள்! கண்ணா! இந்த
ஏழைகளைக் காத்து உன் 
இஷ்டப்படி வாழ வை!

Thursday, December 16, 2010

நல்ல மாற்றம்!

ராதேக்ருஷ்ணா

இந்த மார்கழி உன் மனதில்
நல்ல மாற்றத்தை கொண்டுவரும்!
நிச்சயம் உன் மனதில் நல்ல பக்தி
வளரும்! நல்ல வைராக்கியம் வரும்!
நல்ல ஞானம் பிறக்கும்!

க்ருஷ்ணனோடு கொண்டாடு!

ராதேக்ருஷ்ணா

இந்த மார்கழியை க்ருஷ்ணனோடு
கொண்டாடு! இந்த மார்கழியில்
உன் அஹம்பாவத்தை அழித்து
விடு! இந்த மார்கழியில் உன்
பக்தியை வளர்த்துக்கொள்!
க்ருஷ்ணன் உண்டு!

மார்கழி முதல் நாள்!

ராதேக்ருஷ்ணா

இன்று மார்கழி முதல் நாள்!
திருப்பாவையின் முதல் பாசுரம்!
நாராயணன் நமக்கே பறை 
தருவான்! அதனால் எப்பொழுதும்
சந்தோஷமாக பக்தியோடு இரு!

Wednesday, December 15, 2010

ஸ்ரீ ஞாநேஷ்வரின் கிருபை!

ராதேக்ருஷ்ணா

நான் ஒன்றும் பெரிய தபஸ்வி
இல்லை! பெரிய பக்தன் 
இல்லை! பெரிய ஞானி 
இல்லை! விடாமல் நாம ஜபம்
செய்பவன் இல்லை! இருந்தாலும்
ஸ்ரீ ஞாநேஷ்வர் கிருபை செய்தாரே! 

அளவில்லாத ஆசீர்வாதம்!

ராதேக்ருஷ்ணா

இந்த்ரயாணி நதிக்கரையில்
நிம்மதியாக அமர்ந்திருக்கிறேன்!
என்னால் நம்பவே முடியவில்லை!
இன்றைய பொழுது ஆசீர்வாதத்தை
அள்ளி தந்திருக்கிறது! ஆஹா!

எத்தனை அமைதி!

ராதேக்ருஷ்ணா

நாங்கள் இப்பொழுது தான்
சந்த் ஞாநேஷ்வர் ஜீவ சமாதியை
தரிசனம் செய்துவிட்டு வெளியில்
வருகிறோம்! எத்தனை அமைதி!
மனது மிகவும் லேசாக இருக்கிறது!

இதில் என்ன தவறு?

ராதேக்ருஷ்ணா

குருவிடம் கோபம் கொள்வதால்
ஒரு பிரயோஜனமும் இல்லை!
குரு உன் நன்மையையே 
சிந்திக்கிறார்! அதனால் தவறுகளை
சுட்டிக்காட்டி திருத்துகிறார்!
இதில் என்ன தவறு?

குருவின் குழந்தைகள்!

ராதேக்ருஷ்ணா

குரு என்பவர் உன்னை
அடிமையாக நினைக்கவில்லை!
உன்னை தன்னுடைய குழந்தையாக
நினைக்கிறார்! உன் மேல் முழு
 உரிமை குருவிற்கு இருப்பதால்
உன்னை கோபிக்கிறார்!

உன் நலம் விரும்பி!

ராதேக்ருஷ்ணா

உன் குருவிடம் நீ உண்மையாக
இருந்தால் உனக்கு நல்லது!
குருவிடம் உண்மையாக இருப்பதால்
உன் வாழ்க்கை உயரும்!
குரு என்பவர் உன் நலம்
விரும்பி! நினைவில் கொள்!

Monday, December 13, 2010

தீர்மானிக்காதே!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொருவரும் ஒரு விதம்!
சில சமயம் சில விதம் அழகு!
சில சமயம் அதுவே அசிங்கம்!
ஆகவே உலகில் இதுதான் சரி
என்று சில விஷயங்களில்
தீர்மானிக்காதே!

ஒரு விதம்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொருவரும் ஒரு விதம்!
சில சமயம் சில விதம் அழகு!
சில சமயம் அதுவே அசிங்கம்!
ஆகவே உலகில் இதுதான் சரி
என்று சில விஷயங்களில்
தீர்மானிக்காதே!

ஆசை...

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை!
இதில் சில சமயங்களில்
அடுத்தவரின் ஆசை நமக்கு
அசிங்கமாகத் தெரியலாம்!
அதேபோல் அவர்களுக்கும் நம்
ஆசை அசிங்கமாகத் தெரியும்!

உன்னை திருத்திக்கொள்!

ராதேக்ருஷ்ணா

எல்லாம் ஒழுங்காக 
நடந்துகொண்டிருக்கிறது! உன்
மனம் யோசிப்பது போல், உன் 
விரோதி கூட யோசிப்பதில்லை!
உன்னை திருத்திக்கொள்!
எல்லாம் சரியாகப் புரியும்!

ஒரு குறையுமில்லை!

ராதேக்ருஷ்ணா

நினைவே சுகம்! சத்குருவின்
நினைவில் நீ இருக்க
உனக்கு ஒரு குறையுமில்லை!
சத்குரு உன்னை ஒரு நாளும் 
மறப்பதில்லை! அதனால் வாழ்க்கை
சுகமானதே! அனுபவி!

நினைவில் சத்குரு...

ராதேக்ருஷ்ணா

நினைவில் சத்குரு இருக்க
நீ எந்த யோசனையும் செய்யாமல்
நிம்மதியாக இருக்கலாம்! உன் 
தேவைகளை குரு சிந்தித்திருக்கக
உனக்கு ஒரு கஷ்டமில்லை! 
நிம்மதி!

நினைவில் கண்ணனை வை!

ராதேக்ருஷ்ணா

நினைவில் கண்ணனை வை!
எதைப்பற்றியும் கவலைப்படாதே!
அவன் உன்னோடு உனக்காக 
இருக்கிறான்! அதனால் எப்பொழுதும்
நீ நிம்மதியாகவே இரு!
உன் வாழ்க்கை சுகமே!

Friday, December 10, 2010

இயந்திரம் பக்குவப்படுத்தாது!

ராதேக்ருஷ்ணா

நீ இயந்திரத்தை விட உயர்ந்த
மனிதன்! நீ மனிதர்களோடு
பழகினால் தான், வாழ்வை 
புரிந்துகொள்ள முடியும்!
இயந்திரம் உன்னை 
பக்குவப்படுத்தாது!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP