Wednesday, August 31, 2011

வாரீர் மதுரைக்கு...


ராதேக்ருஷ்ணா

கள்ளழகரின் ஊராம், வைகையும் 
தவழும் ஊராம், தூங்கா நகரமாம், 
பக்திக்கு ஒரு ஊராம், தமிழ் 
வளர்த்த பாண்டியன் ஊராம்,,,
வாரீர் மதுரைக்கு உடனே!

சங்கம் வளர்த்த மதுரை...


ராதேக்ருஷ்ணா

நீங்களும் எங்களோடு மதுரைக்கு வாருங்கள்!
சங்கம் வளர்த்த மதுரைக்கு போகலாம்!
நம்மாழ்வாரின் பாசுரத்தை மதித்த 
பொற்றாமரை குளத்தை பார்ப்போம்!

மதுரைக்கு கிளம்புகிறோம்!


ராதேக்ருஷ்ணா

நாங்கள் இப்பொழுது மதுரைக்கு 
கிளம்புகிறோம்! கூடல் அழகரை தரிசனம் 
செய்துவிட்டு அவரின் சஹோதரி என் அத்தை 
மீனாட்சியையும் தரிசனம் செய்யப்போகிறோம்!

Sunday, August 28, 2011

யார்தான் சமம்?


ராதேக்ருஷ்ணா

ஊருக்கொரு ஒரு நியாயம், 
தனக்கு ஒரு நியாயமா? 
பிடித்தவருக்கு ஒரு நியாயம், 
பிடிக்காதவருக்கு ஒரு நியாயமா? 
கடவுளைத் தவிர யார்தான் சமம் இங்கே?

ஒரு நியாயம்!


ராதேக்ருஷ்ணா

உனக்கு உன்னை தப்பாக பேசினால்
 பிடிக்காதென்றால், நீ மட்டும் எப்படி 
அடுத்தவரை தப்பாகப் பேசலாம்?
 இது என்ன உலக விந்தை? 
எல்லோருக்கும் ஒரு நியாயமே!

மாற்றிக்கொள்!


ராதேக்ருஷ்ணா

சிலருக்கு அடுத்தவர் தன்னை யாரும் 
ஒன்றும் சொல்லக்கூடாது என்ற ஆசை! 
ஆனால் அதற்கு ஏற்றார் போல் 
தான் நடந்துகொள்ளவேண்டாமா?
 உடனே உன்னை மாற்றிக்கொள்!

Friday, August 26, 2011

உன்னை நீ காத்துக்க்கொள்!


ராதேக்ருஷ்ணா

உன்னுள் நல்லதை விதைக்க 
நீ தான் முயல வேண்டும்! 
உன்னுள் கெட்டதை விதைக்க
 உலகம் என்றுமே தயாராக
 இருக்கிறது! உன்னை நீ தான் 
காத்துக்க்கொள்ளவேண்டும்!

நிச்சயம் நீ ஜெயிப்பாய்!


ராதேக்ருஷ்ணா

மனதில் தைரியத்தை விதை!
 புத்தியில் நம்பிக்கையை விதை! 
காரியத்தில் சிரத்தையை விதை! 
வாயில் நாம ஜபத்தை விதை! 
நிச்சயம் நீ ஜெயிப்பாய்!

விதைத்துக்கொண்டே இரு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் விதைத்த விதை 
ஒரு நாளும் வீண் போகாது!
அதனால்  லட்சியங்களை நீ
 விதைத்துக்கொண்டே இரு!
ஒரு நாள் நிச்சயம் அது 
முளைக்கும்! மரமாகும்!

Sunday, August 21, 2011

மிக விசேஷம்!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு க்ருஷ்ண ஜெயந்தியும் 
வித்தியாசமானதே! இந்த க்ருஷ்ண
ஜெயந்தி மிக மிக விசேஷமே! இந்த
முறை கண்ணின் லீலை மிகவும்
ஆச்சரியமானதே!

நல்லவை மட்டுமே!


ராதேக்ருஷ்ணா

எது நடந்தாலும் நன்மைக்கே!
நமது வாழ்வில் நம்மைக் காட்டிலும்
கண்ணனுக்கு அக்கறை அதிகம்!
அவன் செய்யும் ஒவ்வொன்றுமே
நம் வாழ்விற்கு நல்லவை மட்டுமே!

ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி!
தூத்துக்குடியில் கோலாகலமாக 
நடக்க இருக்கிறது! வந்து உன்னை
கண்ணனிடம் தந்து அவனை
 வாங்கிக்கொண்டு செல்!
சீக்கிரம் வா!

Wednesday, August 17, 2011

ஊழலில்லாத பாரதம்...


ராதேக்ருஷ்ணா

போதும் நாம் சலித்துவிட்டோம்!
இனியும் ஊழலோடு வாழ 
நம்மால் முடியாது! எதிர்கால
சந்ததிக்கு ஊழலில்லாத 
பாரதம் தருவது நம்
கடமை! வா! வா!

நிம்மதியாய் வாழ்!


ராதேக்ருஷ்ணா

நீ தைரியமாக உன் வாழ்க்கையை
வாழ தெரிந்துகொள்! மற்றவை
எல்லாம் கடவுளின் கருணையோடு
நிச்சயமாக ஜோராகவே நடக்கும்!
நிம்மதியாய் வாழ்!

நாமஜபம் செய்!


ராதேக்ருஷ்ணா

எப்படியும் உன் வாழ்க்கை
 நல்லதாகவே நடக்கும்! நீ மனதை 
போட்டு அலட்டிக்கொள்வதால்
ஒரு பிரயோஜனமும் இல்லை!
தைரியமாக நாமஜபம் 
செய்துகொண்டே இரு!

Thursday, August 11, 2011

வாழ்க்கைக்கு ஆதாரம்!


ராதேக்ருஷ்ணா

கண்ணன் வராமல் மற்ற யார்
வந்து என்ன பிரயோஜனம்?
கண்ணன் அல்லவா வாழ்வின்
ஆனந்தம்! கண்ணன் அல்லவா 
நம் வாழ்க்கைக்கு ஆதாரம்!
அவன் தானே ஆனந்தம்!

கண்ணன் நடத்திக் கொடுப்பான்!


ராதேக்ருஷ்ணா

தன்  வீட்டு விசேஷங்களுக்கு
கண்ணனை முதலில் அழைப்பவர்கள்
நிச்சயம் பரம பாக்கியசாலிகள்!
ஏனெனில் கண்ணன் அழகாக தானே 
அதை நடத்திக் கொடுப்பான்!

க்ருஷ்ணனின் ஆசீர்வாதத்தோடு...


ராதேக்ருஷ்ணா

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியும்
க்ருஷ்ணனின் ஆசீர்வாதத்தோடு
நடக்கிறது! அதனால் நம்  வீட்டு 
விசேஷங்களுக்கு கண்ணனைத்தான்
முதலில் அழைக்கவேண்டும்!

Thursday, August 4, 2011

நீங்காத சொத்து!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் தான் நமக்கு
என்றும் நீங்காத சொத்து!
அந்த சொத்தை யாரும் 
நம்மிடம் இருந்து வாங்கவும்
முடியாது! நாமும் கொடுக்க 
முடியாது! க்ருஷ்ணன் போதும்!

ஜாக்கிரதையாக இருப்பது நல்லது!


ராதேக்ருஷ்ணா

நம் சொத்துக்கள் ஒன்றும் நமக்கு
தெய்வம் இல்லை! அதே சமயத்தில்
நம்முடைய சொத்துக்காக 
பழகுபவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக
இருப்பது நல்லது!

ஒரு வயது வந்துவிட்டால்...


ராதேக்ருஷ்ணா

ஒரு வயது வந்துவிட்டால் நாம் 
நம்முடைய சொத்துக்களை நமக்கு
புத்தி தெளிவாக இருக்கும்போதே 
நமக்கு பிரியமானவருக்கு எழுதி
வைப்பது நல்லது!

Wednesday, August 3, 2011

ஆண்டாளுக்கு சமம் உண்டோ?


ராதேக்ருஷ்ணா

தான் சூடிக்களைந்த மாலையைக்கொண்டு
கண்ணனை இதுவரை நம் ஆண்டாளைத்
தவிர யாரும் கட்டியதில்லை! எங்கள்
ஆண்டாளுக்கு சமம் உண்டோ
இவ்வுலகில்? சரணம்! 

பாக்கியசாலிகள்!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்பவர்கள்
பாக்கியசாலிகள்! இன்று ஸ்ரீவில்லிபுத்தூர்
தேரோட்டத்தில் தேர் இழுப்பவர்
பாக்கியசாலிகள்! ஆண்டாள் 
திருவடிகளே சரணம்!

இன்று திருவாடிப்பூரம்!


ராதேக்ருஷ்ணா

இன்று திருவாடிப்பூரம்! நமக்காக
நம் ஆண்டாள் இந்த பூமியில்
அவதரித்த திருநாள்! நமக்கு
நாம ஜப மகிமையை உணர்த்த
தாயார் வந்த நாள் இன்று!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP