Friday, July 30, 2010

உன்னிடம் இருக்கா?

ராதேக்ருஷ்ணா

குருவிடம் மரியாதை அவசியம்!
குருவிடம் அன்பு அவசியம்!
குருவிடம் பணிவு அவசியம்!
குருவிடம் நம்பிக்கை அவசியம்!
குருவிடம் பக்தி அவசியம்!
உன்னிடம் இருக்கா?

குரு எல்லோருக்கும் பொதுசொத்து !

ராதேக்ருஷ்ணா

குருவிற்கு எல்லோருமே முக்கியம்!
உனக்கு மட்டும் அதிக
முக்கியத்துவம் தரவேண்டும் 
என்று எதிர்பார்ப்பது
தவறாகும்! குரு என்றும்
எல்லோருக்கும் பொதுசொத்து !

குருவை புரிந்துகொள்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிமிஷமும் குரு
உன் வாழ்க்கையை பற்றி
யோசனை செய்துகொண்டே 
இருக்கிறார்! நீ குரு
சொல்லும்படியாக நடந்தால்
உனக்கு நல்லது! 
குருவை புரிந்துகொள்!

Thursday, July 29, 2010

உன்னை நீ செதுக்கு!

ராதேக்ருஷ்ணா

நீ ஒரு பாறை மலை! ஒவ்வொரு
 நாளும் நாம ஜபம் என்கிற 
உளி கொண்டு உன்னை நீ 
செதுக்கு! ஒவ்வொரு நிகழ்ச்சியும் 
உன்னை சிந்திக்கவைக்கிறது!
அழகான சிற்பமாகு!

உன்னை பக்குவப்படுத்து!

ராதேக்ருஷ்ணா

உன்னை பக்குவப்படுத்து! அதை
மட்டுமே நீ தினமும் செய்து 
வந்தால், உன் வாழ்க்கை 
சிறக்கும்! வாழ்க்கையில் 
வெற்றியின் ரகசியம் நம்மை
நாம் பக்குவப்படுத்துவதே!

சேர்க்கவேண்டியத்தை சரியாக சேர்!

ராதேக்ருஷ்ணா

சேர்க்கவேண்டியத்தை முறைப்படி
சேர்த்தால், ருசியான சாப்பாடு
தயார்! அது போலே, வாழ்வில் 
எதை எவ்வளவு சேர்க்கிறாயோ,
அது போலே ஆனந்தமும், 
சுகமும் உண்டு!

Wednesday, July 28, 2010

தெரிந்ததும் உண்டு! தெரியாததும் உண்டு!

ராதேக்ருஷ்ணா

எல்லாம் தெரிந்தவன் எவனுமில்லை!
எதுவுமே தெரியாத மனிதனுமில்லை!
அதனால் உனக்கு தெரியாததை
கற்றுக்கொள்! தெரிந்ததை 
நன்றாக உபயோகப்படுத்திக்கொள்!

உன் க்ருஷ்ணனை கண்டுபிடி!

ராதேக்ருஷ்ணா

உன்னிடம் க்ருஷ்ணன் ஒளிந்து 
கொண்டிருக்கிறான்! அவன்
மட்டுமே உனக்கு என்றும்
 துணை! உன் க்ருஷ்ணனை நீ  
உனக்குள் கண்டுபிடித்துவிட்டால்,
அப்பொழுது தெரியும் ஆனந்தம்!

சத்தியமாக நீ மாறுவாய்!

ராதேக்ருஷ்ணா

உன்னால் நிச்சயம் உன்னை
மாற்றிக்கொள்ள முடியும்!
உனக்குள் இருக்கும் க்ருஷ்ணனை
நம்பி,  திடமாக பிரார்த்தனை
செய்தால் சத்தியமாக நீ
மாறுவாய்! வெல்வாய்!

உயர்ந்து காட்டு!

ராதேக்ருஷ்ணா

யாராவது பரிகாசம் செய்தால்,
அவர்கள் முன் உன் பலத்தை
நிரூபணம் செய்! உன் வாழ்வில்
உயர்ந்து காட்டு! உன் ஒவ்வொரு
காரியத்தையும் அழகாக
செய்து காட்டு!

மனதை திடமாக்கு!

ராதேக்ருஷ்ணா

உலகம் எல்லோரையும் பரிகாசம்
செய்யும்! அது யாரை 
பரிகாசம் செய்யவில்லை!
க்ருஷ்ணனையே பரிகசிக்கும் 
உன்னையா விட்டு வைக்கும்?
மனதை திடமாக்கு!

வாழ்ந்து காட்டு!

ராதேக்ருஷ்ணா

உலகம் உன்னை பார்த்து 
ஏளனம் செய்தால், நீ அதை
காதில் வாங்கிக்கொள்ளாதே!
நீ உலகத்தின் முட்டாள்தனத்தை
பார்த்து சிரி! உலகத்தின் 
முன் வாழ்ந்து காட்டு!

Tuesday, July 27, 2010

க்ருஷ்ணனுக்கு கொடுத்துவிடு!

ராதேக்ருஷ்ணா

யார் வாழ்த்தினாலும், யார்
கேவலப்படுத்தினாலும்
எல்லாவற்றையும் உன் 
க்ருஷ்ணனுக்கு கொடுத்துவிடு!
அவ்வளவுதான்! அதற்கு மேல்
யோசிக்க ஒன்றுமில்லை!

உன் வேலையை ஒழுங்காக பார்!

ராதேக்ருஷ்ணா

நல்லவைகளை நினைக்க மட்டுமே
 உனக்கு அதிகாரம் உண்டு!
கெட்டவற்றை நினைக்க 
உனக்கு ஒரு நாளும் 
அவசியமே கிடையாது! உன்
 வேலையை ஒழுங்காக பார்!

க்ருஷ்ணனுக்கு தெரியும்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிமிடமும் நல்லதை 
நினைத்து, க்ருஷ்ண நாமத்தை
சொல்லிக்கொண்டு, உன் 
கடமைகளை சிரத்தையோடு
செய்துகொண்டே இரு! மற்றவை
க்ருஷ்ணனுக்கு தெரியும்!

என் குருவே சரணம்!

ராதேக்ருஷ்ணா!

குருவே சரணம்! எத்தனை 
கோடி தடவை நன்றி 
சொன்னாலும், எத்தனை 
கைங்கர்யங்கள் செய்தாலும்,
என் குருவே உங்களுக்கு 
நான் பட்ட கடன் தீராது!

வாழ்க!

ராதேக்ருஷ்ணா

குருவே செல்வம்! 
குருவே வழி!
குருவே கதி!
குருவே பலம்!
குருவே ஆனந்தம்!
குருவே தீர்வு!
குருவே கல்வி!
குருவே அன்பு!
குருவே தேவை!
 குருவே நம்பிக்கை!
வாழ்க!

குருவே துணை!

ராதேக்ருஷ்ணா

குருவே துணை! எத்தனை
 படித்தாலும், எவ்வளவு பணம் 
இருந்தாலும், எத்தனை பேர்
என்னோடு இருந்தாலும், குருவே 
எனக்கு உங்களை தவிர யாரும், 
என்றும் துணை இல்லை !

நிறைகளை பார்!

ராதேக்ருஷ்ணா

மற்றவரை பற்றி நீ குறை 
சொல்லும்போது உன் தரம்
தாழ்ந்து போகிறது! மற்றவரின்
குற்றங்களை பார்ப்பதைவிட 
அவர்களின் நிறைகளை பார்!
மனம் நிம்மதி பெரும்!

ஒரே நியாயம்!

ராதேக்ருஷ்ணா

உன்னை பற்றி யாராவது
தவறாக பேசினால் உனக்கு
பிடிக்கிறதா? இல்லை அல்லவா?
அதேபோல் தானே மற்றவருக்கும்!
உனக்கு ஒரு நியாயம் ...
மற்றவருக்கு ஒரு நியாயமா?

தவறாக பேசாதே!

ராதேக்ருஷ்ணா

அடுத்தவரை பற்றி தவறாக
பேசுவதால் உனக்கு என்ன 
நன்மை கிடைத்தது? உனக்கு
பாவம் சேர்ந்ததுதான் மிச்சம்!
யாரை பற்றியும் தவறாக பேசாதே!

Friday, July 23, 2010

உலகம் உன்னிடம் வசப்படும்!

ராதேக்ருஷ்ணா

உலகில் யார் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
வாழட்டும்! நீ எப்பொழுதும்
நல்லவற்றை நினை!
நல்லவற்றை பேசு! 
நல்லவற்றை செய்!
உலகம் உன்னிடம் வசப்படும்!

நல்லவைகளை மட்டுமே நினை!

ராதேக்ருஷ்ணா
உன்னுடைய எல்லா
எண்ணங்களும் உன்
குடும்பத்தில் தாக்கத்தை
ஏற்படுத்தும்! நல்லவைகளை
மட்டுமே நினைத்து ஒரே
ஒரு நாள் வாழ்ந்து பார்!
செய்! செய்! எல்லாம் மாறும்!

இனியாவது மாறு!

ராதேக்ருஷ்ணா

உன்னுடைய ஒவ்வொரு 
எண்ணத்திற்கும் நிச்சயம்
பலம் உண்டு! உன் மனதின்
ஆழத்தில் நீ எதையெல்லாம் 
வைத்தாயோ அதுவே
 இன்று உன் வாழ்க்கை! 
இனியாவது மாறு!

Thursday, July 22, 2010

விட்டலனுக்கு அன்போடு கொடு!

ராதேக்ருஷ்ணா

இது போல் ஒரு ஆஷாட
சுக்ல த்வாதசியில் தான்
விட்டலன் கோமா பாய்
 கொடுத்த சோள மாவு 
ரொட்டியை ரசித்து 
சாப்பிட்டான்!  நீயும் 
அன்போடு  முடிந்ததை கொடு!

ஹே விட்டலா! உன் வயிறு நிறைந்ததா?

ராதேக்ருஷ்ணா

ஹே விட்டலா! இன்று
பண்டரீபுரத்தில் எத்தனை
வேஷங்களில் அலைகிறாய்?
இன்று எத்தனை பேர் தந்த 
சாப்பாட்டை ரசித்து 
சாப்பிட்டாய்? உன் வயிறு
நிறைந்ததா?

என்னையே தந்தேன்!

ராதேக்ருஷ்ணா

இன்று பலரும் அவர்களுக்கு
தெரியாமலே பகவான்
பாண்டுரங்கனோடு ஆகாரம்
சாப்பிடப்போகிறார்கள்! 
ஹே விட்டலா! நானும் 
தருகிறேன்! ஏற்றுக்கொள்! 
என்னையே தந்தேன்!

Wednesday, July 21, 2010

எனக்கு விட்டலன் வேண்டும்!

ராதேக்ருஷ்ணா

இன்று விட்டலனின் பக்தர்கள்
எல்லோருக்கும் சாஷ்டாங்க 
நமஸ்காரம்! எனக்கு விட்டலன்
வேண்டும்! அவனிதத்தில் தூது
செல்லுங்கள் ! இந்த 
குழந்தை அழுகிறது!

வா! வா! விட்டலா!

ராதேக்ருஷ்ணா

ஹே விட்டலா! இது போல் ஒரு
ஆஷாட சுக்ல ஏகாதசியில்
தானே கூர்மதாசருக்கு
தரிசனம் தந்தாய்! இன்று 
என்னை பார்க்க வருவாயா?
வா! வா! உடனே வா!

இன்று ஆஷாட சுக்ல ஏகாதசி!

ராதேக்ருஷ்ணா

இன்று ஆஷாட சுக்ல ஏகாதசி!
விட்டலனின் ராஜதானியில் 
கோலாகலம்! அவனுக்கு 
பிரியமானவர்கள் எல்லாம்
இப்பொழுது அவனருகில்!
அவன் அருகில் என்று 
நான் செல்வேன்?

Tuesday, July 20, 2010

என் அருமை விட்டலா! காப்பாற்று!

ராதேக்ருஷ்ணா

என் அருமை விட்டலா! நாளை
உன் ஊரில் ஒரே பக்தி விழா!
எனக்கும் வர ஆசை! 
ஆனால் என் பூர்வ ஜன்ம கர்ம
 வினை என்னை பாடாய்
 படுத்துகிறது! காப்பாற்று!

ஹே விட்டலா! தயை காட்டு!

ராதேக்ருஷ்ணா

ஹே விட்டலா! என்னுடைய 
எல்லா குற்றங்களையும் 
மன்னித்து, உன்னுடைய
சன்னிதானத்திற்கு அழைத்து
செல்! உன்னை மட்டுமே 
திடமாக நம்புகிறேன்!
தயை காட்டு!

ஹே விட்டலா! நிரந்தரமான பக்தியை கொடு!

ராதேக்ருஷ்ணா

ஹே விட்டலா! உன் சரண
கமலங்களில், இந்த ஏழைக்கும்,
நிரந்தரமான பக்தியை கொடு!
உன்னை விட்டால் இந்த
அனாதைக்கு யாரும் நாதன்
இல்லை! காப்பாற்று!

Monday, July 19, 2010

க்ருஷ்ணனுக்கு விற்று விடு!

ராதேக்ருஷ்ணா

உன் மனதை க்ருஷ்ணனுக்கு
விற்று விடு! அதை யாரிடம்
கொடுத்தாலும் உனக்குத்தான் 
கஷ்டம்! உன்னை நீயே
கஷ்டப்படுத்தலாமா? தயவு
செய்து நிம்மதியாய் இரு!

க்ருஷ்ண அன்பு நிரந்தரம்!

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனின் மனதில் 
உனக்கென்று ஒரு இடம்
நிரந்தரமாக என்றும் உண்டு!
அதனால் யாரும் உன் மேல்
அன்பு செலுத்தவில்லை என்று
ஏங்காதே! நாம ஜபம் செய்!

க்ருஷ்ணனின் நிழலாக இரு!

ராதேக்ருஷ்ணா

நீ பகவான் க்ருஷ்ணனின் 
நிழலாக இருக்க ஆசைப்படு!
அப்பொழுது யாராலும் உன்னை
க்ருஷ்ணனிடமிருந்து பிரிக்க
முடியாது! க்ருஷ்ணனின் 
நிழலாக இருந்து பார்!

கோபத்தை விட்டு விடு!

ராதேக்ருஷ்ணா

ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு!
உன் மனதில் எத்தனை முறை
கோபத்தினால் கஷ்டங்களை
அனுபவித்திருக்கிறாய்! 
போதும் கோபத்தை இன்று 
முதல் விட்டு விடு!

சரி செய்!

ராதேக்ருஷ்ணா

கோபத்தினால் இது வரை நீ
பல நல்ல சந்தர்ப்பங்களை
நழுவ விட்டிருக்கிறாய்! 
கோபத்தினால் பலருடைய
இதயத்தை நீ காயம்
செய்திருக்கிறாய்! சரி செய்!

கோபம்...

ராதேக்ருஷ்ணா

கோபம் உன் வாழ்க்கையின்
சந்தோஷத்தை கெடுக்கிறது!
கோபம் மற்றவர்களுக்கு உன்
மேல் ஒரு வெறுப்பை
 ஏற்படுத்துகிறது! உன் 
கோபத்தினால் உடல்
பலவீனமாகிறது!

க்ருஷ்ணன் ஏற்றுக்கொள்வான்!

ராதேக்ருஷ்ணா

உன் மனதின் அழுக்குகளை
க்ருஷ்ணனிடம் கொடுத்துவிடு !
நிச்சயம் க்ருஷ்ணன் அவற்றை
ஏற்றுக்கொள்வான்! அவனை
தவிர யார் உனக்கு என்ன 
நன்மை செய்துவிட முடியும்?

விடாமல் க்ருஷ்ண நாமஜபம் செய்!

ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையை சரியாக
வைத்துக்கொள்ள உனக்கு 
முழு அதிகாரம் உண்டு!
விடாமல் க்ருஷ்ண நாமஜபம்
செய்து வர உன் வாழ்க்கை
சரியாக நடக்கும்! நம்பு!

முயற்சி செய்துகொண்டே இரு!

ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வின் நிம்மதிக்கான
முயற்சிகளில் ஒருநாளும்
சோர்ந்துவிடாதே! வாழ்வின்
எல்லை வரை முயற்சி 
செய்துகொண்டே இரு!
சத்தியமாக உனக்கு 
வெற்றி நிச்சயம்!

Friday, July 16, 2010

வெறுப்பு காட்டாதே!

ராதேக்ருஷ்ணா

மற்றவர்கள் மேல் உனக்கிருக்கும்
ஒவ்வொரு வெறுப்பும், 
விரோதமும் நிச்சயம் உன்
 வாழ்வில் கஷ்டத்தை 
கொடுக்கும்! அதனால் 
யாரிடமும் வெறுப்பை
என்றும் காட்டாதே!

முன்னேற்றம் தெரியும்!

ராதேக்ருஷ்ணா

எல்லோரிடமும் அன்பு செலுத்து!
யாரிடம் எல்லாம் விரோதம்
இருக்கிறதோ அதை எல்லாம் 
உன் மனதிலிருந்து எடுத்து 
விடு! வாழ்வில் நிச்சயம்
முன்னேற்றம் தெரியும்!

மனதின் ஆழத்தின் எல்லை!

ராதேக்ருஷ்ணா
நம்பிக்கை மனதில் எத்தனை
ஆழம் செல்கிறதோ அத்தனை
தூரம் வாழ்வில் நல்ல 
மாற்றங்கள் தெரியும்! உன் 
மனதின் ஆழத்தின் எல்லையை
நம்பிக்கை தொடட்டும்!

ஜீவராசிகளை பார்த்து கற்றுக்கொள்!

ராதேக்ருஷ்ணா

புலியை பார்! வீரமாக இருக்க 
கற்றுக்கொள்! பாம்பை பார்!
அழிக்க நினைப்பவர்கள் முன்
சீறி பயமுறுத்த கற்றுக்கொள்!
எறும்பை பார்! சேமிக்க 
கற்றுக்கொள்!

வாழ்க்கை பாடம்!

ராதேக்ருஷ்ணா!

மரங்களை பார்! பொறுமையாய்
இருக்க பழகிக்கொள்! புல்லை
பார்! பணிவாய் பழக 
தெரிந்துகொள்! நாயை பார்!
நன்றியோடு இருக்க 
கற்றுக்கொள்! மலரை பார்! 
சிரிக்க கற்றுக்கொள்!

கற்றுக்கொள்!

ராதேக்ருஷ்ணா

பறவைகளை பார்! சளைக்காமல் 
உழைக்க கற்றுக்கொள்
தேனீக்களை பார்! சுறுசுறுப்பாய்
வாழ கற்றுக்கொள்! ஆமைகளை
பார்! நிதானமாக இருக்க
 கற்றுக்கொள்!

Wednesday, July 14, 2010

நம்பிக்கையும் நாமஜபமும் எல்லாம் தரும்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் நம்பிக்கையை
விதையாக உன் மனதில்
விதைத்துவிடு! நாம ஜபத்தை
தண்ணீராக ஊற்று! அது உனக்கு 
நிழல், பழம் எல்லாம் தரும்!

உன்னுடைய நீங்காத செல்வம்!

ராதேக்ருஷ்ணா

உலகில் நம்பிக்கைக்கு சமமான
பலமான பொருள் எதுவுமில்லை!
நம்பிக்கையை உன் உயிருக்கு 
சமமாக நினை! நம்பிக்கைதான்
உன்னிடத்தில் உள்ள 
நீங்காத செல்வம்!

வேதரஹஸ்யம்!

ராதேக்ருஷ்ணா

நம்பிக்கை வை என்பதே
வேதரஹஸ்யம்! நம்பிக்கையே 
மந்திரங்களின் பொருள்! 
நம்பிக்கையே குரு 
சொல்லித் தரும் பாடம்!
நம்பிக்கையே வாழ்வின்
சந்தோஷம்!

Tuesday, July 13, 2010

கொசுவாகிவிடு!

ராதேக்ருஷ்ணா

நம்பிக்கை வானம் போல்!
அதற்கு எல்லையே கிடையாது!
உன்னைவிட உன் நம்பிக்கை
பெரியதாக இருக்கட்டும்! 
உன் நம்பிக்கை முன் நீ
கொசுவாகிவிடு! பிறகு புரியும்!

உன் துணை!

ராதேக்ருஷ்ணா

நம்பிக்கையை ஆகாரமாக 
சாப்பிடு! அவநம்பிக்கையை
மல, மூத்திரம் போல் வெளியில்
தள்ளிவிடு! உனக்கு யார் 
துணையும் வேண்டாம்! 
நம்பிக்கை என்றும்
 உன் துணை!

ஜோராக வளரட்டும்!

ராதேக்ருஷ்ணா

மனம் முழுவதும் நம்பிக்கை
வலம் வரட்டும்! உன் மனதை
நீ திறந்தால் அதில் நம்பிக்கை
மட்டுமே  இருக்க வேண்டும்!
நம்பிக்கை ஆலமரம் போல்
ஜோராக வளரட்டும்!

Monday, July 12, 2010

சுகமாக இரு!

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் இதுவரை உனக்கு
நல்லதே செய்திருக்கிறான்!
நல்லவற்றையே தந்திருக்கிறான்!
இனியும் நல்லதை மட்டுமே
செய்யப்போகிறான்! அதனால்
சுகமாக இரு!

நீ வெல்வாய்!

ராதேக்ருஷ்ணா

நல்லவற்றை நினைத்தவர்கள்
வீண்போனதில்லை! நல்லவற்றை
செய்தவர்கள் வீழ்ந்ததில்லை!
நல்லவைகளை மட்டுமே உன்
வாழ்வில் வைத்துக்கொள்!
நீ வெல்வாய்!

நன்மை மட்டுமே!

ராதேக்ருஷ்ணா

நல்லதை மட்டுமே நினை!
நல்லதை மட்டுமே பேசு!
நல்லதை மட்டுமே யோசி!
அப்பொழுது நீ நல்லவற்றையே
செய்வாய்! பிறகு உனக்கு
நல்லவை மட்டுமே!

நல்லதை கொடு! வித்தியாசம் புரியும்!

ராதேக்ருஷ்ணா

மனதிற்கு பிடிவாதம் அதிகம்!
நீ எதை திரும்ப திரும்ப
கொடுக்கிறாயோ, அதில் 
தானாக ஈடுபடும்! அதனால்
நல்லவற்றையே கொடுப்பாய்!
வித்தியாசம் புரியும்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP