Saturday, February 26, 2011

வாழ முடியாதா??


ராதேக்ருஷ்ணா

ஒரு மரம் தன் வாழ்வை
அணுகும் முறையில் கூட
மனிதர் தன் வாழ்வை
அணுகுவதில்லை! ஒரு
மரத்தால் வாழ முடியும்
என்றால் உன்னால் 
வாழ முடியாதா??

வெற்றியாளர்கள்...தோல்வியாளர்கள்...


ராதேக்ருஷ்ணா

வெற்றியாளர்களின் அணுகுமுறையும்
தொல்வியாலர்களின் அணுகுமுறையும்
தான் வித்தியாசம்! இருவர் எதிர் 
கொள்ளும் வாழ்க்கை முறையில்
ஒன்றும் வித்தியாசம் இல்லை!

அணுகுமுறை...


ராதேக்ருஷ்ணா

யார் எப்படி இருந்தாலும், உன்
அணுகுமுறை சரியாக இருந்தால்
உன்னால் எல்லோரிடமும் சந்தோஷமாகப்
பழகமுடியும்! உன் அணுகுமுறையில்தான்
குற்றம் இருக்கிறது!

Friday, February 25, 2011

பக்தியோடு கடமை!


ராதேக்ருஷ்ணா

பக்தி செய்! பக்தி என்பது
உன் கடமையை நீ ஆனந்தமாக 
செய்வதற்கான ஒரு வழி!
கடமையை விட்டு பக்தி 
செய்தால் ஒரு பலனுமில்லை!
பக்தியோடு கடமை!

கற்பனை பக்தி வேண்டாம்!


ராதேக்ருஷ்ணா

பக்தி என்று சொல்லிக்கொண்டு
உன்னை நீயே படுத்திக்கொள்ளாதே!
உனது புத்தியை சரியான பக்தியில் 
ஈடுபடுத்து! கற்பனை பக்தியால்
 ஒரு பிரயோஜனமும் இல்லை!

உபயோகப்படுத்திக்கொள்!


ராதேக்ருஷ்ணா

பக்தி என்பது நீ சுகமாக
நிம்மதியாக இருப்பதற்கே!
அதனால் பக்தியை
உபயோகப்படுத்திக்கொள்! 
பக்தியை பாரமாக்கிக்கொள்ளாதே!
சுலபமாக பக்தி செய்!

Thursday, February 24, 2011

ஆட்சி செய்!


ராதேக்ருஷ்ணா

பயத்தை உன் காலடியில்
போட்டு மிதித்து கொல்!
தைரியத்தை ஆயுதமாகக்
கொள்! உலகையே வசம் 
செய்து, உன் வாழ்வை 
ஆசனமாக்கி அதில் 
உட்கார்ந்து ஆட்சி செய்!

பயத்தை துரத்து!


ராதேக்ருஷ்ணா

மனிதா! இனியும் நீ பயந்தால்
உன்னை இழந்துவிடுவாய்!
உன்னை இழந்துவிட்டு உலகில்
நீ என்னதான் செய்யமுடியும்?
பயத்தை துரத்து! நம்பிக்கை
கொள்! வெல்வாய்!

நிமிர்ந்து நில்!


ராதேக்ருஷ்ணா

மனமே! ஒரு நாளும் பயப்படாதே!
நீ பயந்தால் கொசு கூட
உன்னை பார்த்து சிரிக்கும்!
கொசு கூட உன்னை 
துரத்தும்! ஹே மனிதா! 
தைரியமாக நிமிர்ந்து நில்!

Tuesday, February 22, 2011

தவறு செய்யாதே!


ராதேக்ருஷ்ணா

யாரும் உன்னை திட்டவே 
கூடாது என்று நீ நினைப்பதே
தவறு! நீ ஒழுங்காக இருக்கவேண்டும்
என்று நினைப்பது மட்டுமே சரி!
இனியும் தவறு செய்யாதே!

ஜெயிக்கமுடியும்!


ராதேக்ருஷ்ணா

யார் உன்னை எப்படி
இகழ்ந்தாலும் உன் மனது
திடமாக இருந்தால் நிச்சயம்
உன்னால் ஜெயிக்கமுடியும்!
மனது ஒருநாளும் தளரக்கூடாது!
மனதே ஜெயிப்பாய்!

அதிசயமானது!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களின் மனது மிகவும்
அதிசயமானது! அது நல்லதையும்
பிடித்துக்கொள்ளும், சமயத்தில்
கெட்டதையும் பிடித்துக்கொள்ளும்!
அதனால் நிதானமாக இரு!

வாழ்க்கை பயணம்...


ராதேக்ருஷ்ணா

இன்று வரை வாழ்க்கை
பயணத்தில் வந்துவிட்டோம்!
இன்னும் எத்தனை நாள் வரை
இந்தப் பயணம் உண்டோ அதுவரை
 நம்பிக்கையோடும், ஆனந்தத்தோடும் 
பிரயாணம் செய்வோம்!

மரணம்...


ராதேக்ருஷ்ணா!

எந்த பிரயாணத்தையும் நம்மால்
தள்ளிப்போட முடியும் அல்லது
போகாமல் இருக்க முடியும்,
மரணம் என்னும் பிரயாணத்தை
தவிர! அதன் நாளும் தெரியாது!

ஒன்றாய் செல்வோம்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை என்னும் பயணத்தில் 
எல்லோரும் பிரயாணம் 
செய்துகொண்டிருக்கிறோம்! 
இதில் அத்தனை பேரும் சக
பிரயாணிகளே! அதனால் சண்டையே
வேண்டாம்! ஒன்றாய் செல்வோம்!

க்ருஷ்ணன் அறிவான்!


ராதேக்ருஷ்ணா

உன் உதவிகள் மதிக்கப்படவில்லை
என்றால், அதற்காக ஒரு நாளும்
வருந்தாதே! எல்லாம் க்ருஷ்ணனுக்கு 
தெரியும் என்று நிம்மதியாக இரு
உன் க்ருஷ்ணன் அறிவான்!

மனித தர்மம்!


ராதேக்ருஷ்ணா

மற்றவருக்கு நீ செய்த உதவிகளை
மறந்துவிடு! ஆனால் ஒரு நாளும்
அடுத்தவர் உனக்கு செய்த 
உதவிகளை மறக்காதே! இதுவே
மனிதரின் தர்மம்! தெளிவாய் இரு!

க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு...


ராதேக்ருஷ்ணா

எல்லோருக்கும் நல்லது செய்வதில்
ஒரு தவறுமில்லை! அதற்காக
உன் வாழ்க்கையை இழக்கவேண்டிய
அவசியமில்லை! உதவிகளை க்ருஷ்ணனை
நினைத்துக்கொண்டு செய்!

சுமை பிடிக்கும்!


ராதேக்ருஷ்ணா

உலகையே சுமக்கிற க்ருஷ்ணனுக்கு
உன்னையும் உன் வாழ்வையும்
சுமப்பது ஒரு கஷ்டமில்லை!
அவனுக்கு சுமை பிடிக்கும்!
உன்னாலோ சுமக்க முடியாது!
புரிந்ததா?

சுமைதாங்கி!


ராதேக்ருஷ்ணா

உன் பாரத்தை சுமக்க உன்
க்ருஷ்ணன் தயாராக இருக்கிறான்!
அவனே உன் வாழ்க்கையின்
 சுமைதாங்கி! அதனால் நீ
சுமைகளை அவனிடம்
இன்றே கொடுத்துவிடு! 

ஒப்படைத்துவிடு!


ராதேக்ருஷ்ணா

எல்லா விஷயங்களையும் நீ உன் 
தலையில் ஏற்றி வைத்துக்கொண்டால
உனக்கு தான் குழப்பம்! எல்லா
விஷயங்களையும் நீ க்ருஷ்ணநிடத்தில்
ஒப்படைத்துவிடு!

Saturday, February 19, 2011

முடிந்ததை செய்!


ராதேக்ருஷ்ணா

பார்த்து பார்த்து நல்லது
செய்யும் தெய்வத்தையே குறை
சொல்லும் மனிதர்கள், உன்னையா 
குற்றம் சொல்லாமல் 
விடப்போகிறார்கள்? அதனால்
உன்னால் முடிந்ததை செய்!

உன்னை தாழ்வாக நினைக்காதே!


ராதேக்ருஷ்ணா

இதுவரை எல்லா மனிதர்களையும்
திருப்தி செய்த மனிதர் இந்த
உலகில் வாழ்ந்ததில்லை! 
வாழப்போவதுமில்லை! அதனால்
உன்னை தாழ்வாக நினைக்காதே!

விலகப்போவதில்லை!


ராதேக்ருஷ்ணா

எத்தனை செய்தாலும் மனிதர்கள்
நிச்சயம் திருப்தி அடையப்போவதில்லை!
நீ க்ருஷ்ணனுக்கு எதுவுமே 
செய்யாவிட்டாலும் க்ருஷ்ணன்  
உன்னை விட்டு விலகப்போவதில்லை!

Friday, February 18, 2011

குழம்பவே கூடாது!


ராதேக்ருஷ்ணா

நீ எந்த சமயத்திலும்
எதற்கும் குழம்பவே கூடாது!
குழப்பம் வரும்பொழுது
உடனேயே வேகமாக நாம
ஜபம் செய்து க்ருஷ்ணனிடம்
பிரார்த்தனை செய்!

காத்துக்கொள்!


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் எதையாவது நினைத்துக்கொண்டு
 குழம்பிக்கொண்டே இருப்பார்கள்!
அதனால் அவர்கள் உன்னை
குழப்பாமல் உன்னை நீ காத்துக்கொள்!
பிரார்த்தனை செய்!

நீயும் ஜெயிக்க வேண்டும்...


ராதேக்ருஷ்ணா

வாழ்வில் எல்லா நிகழ்ச்சிகளையும்
க்ருஷ்ண லீலாவாக பார்ப்பவர்களே,
அற்புதமாக இன்று வரை 
ஜெயித்து இருக்கிறார்கள்! நீயும் 
ஜெயிக்க வேண்டும் அல்லவா? 

Thursday, February 17, 2011

தலையால் வணங்குகிறேன்!


ராதேக்ருஷ்ணா

ஸ்ரீ ரங்க யாத்திரை என்று
எவருடைய ராஜ்ஜியத்தில் தினமும்
 பறை அறிவிக்கப்பட்டதோ, 
அப்படிப்பட்ட ஸ்ரீ குலசேகர ஆழ்வாரை 
தலையால் வணங்குகிறேன்!

ஸ்ரீ குலசேகர ஆழ்வாரின் திருநக்ஷத்திரம்!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ குலசேகர ஆழ்வாரின்
திருநக்ஷத்திரம்! சுவாமி ராமானுஜரும்
"எங்கள் குலசேகரன் என்று கூறினால்
கிளியே உனக்கு அமுதம் தருவேன்"
என்றார்! பாக்கியம்!

Wednesday, February 16, 2011

பொறாமையில் புழுங்காதே!


ராதேக்ருஷ்ணா

உனக்கு கிடைத்த ஆனந்தங்கள்
அனைத்துமே உன் தகுதியைக்காட்டிலும்
அதிகமானதே! அதனால் அதை
 நினைத்து சந்தோஷப்படு! 
பொறாமையில் புழுங்காதே!

கோடானுகோடி ஆனந்தம்!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் கோடானுகோடி 
ஆனந்தத்தை எல்லா 
ஜீவராசிகளுக்கும் தருகிறான்! நாம்
நம் மனதின் ஆசைகளால் அதை
அனுபவிக்காமல் புலம்பிக்கொண்டே
இருக்கிறோம்...

எல்லா ஜீவராசிகளும் அனுபவிக்கின்றன!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் நான் சுகமே 
அனுபவிக்கவில்லை என்று யார்
சொன்னாலும் அது பொய் தான்!
பலவித சுகங்களை எல்லா
ஜீவராசிகளும் இந்த உலகில்
அனுபவிக்கின்றன!

உன் வாழ்வை கவனி!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் ஜெயிக்க 
வேண்டுமென்றால் முழு நம்பிக்கையும்
விடா முயற்சியும் என்றும் 
தேவை! உன் வாழ்வை நீ
கவனிக்காவிட்டால் வேறு
யார் கவனிப்பார்? யோசி!

உன் வாழ்வு...


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வை மற்றவர்கள்
எப்படி பார்க்கிறார்கள் என்பதை
விட நீ எப்படி பார்க்கிறாய் என்பது
தான் முக்கியம்! உன் வாழ்வை
முடிவு செய்ய மற்றவர் யார்?

இது என்ன கொடுமை?


ராதேக்ருஷ்ணா

உன்னிடம் வாழ்வில் வெல்லவேண்டிய
எல்லா தகுதிகளும் பூரணமாக
உள்ளது! நீ அடுத்தவர் வாழ்வை
பார்த்துக்கொண்டு, உன் வாழ்வில்
தோற்கிறாய்! இது என்ன கொடுமை?

Saturday, February 12, 2011

கண்ணனிடம் பேசுவீரா?


ராதேக்ருஷ்ணா

அற்புதமான இளமையில், அரசையும்,
பெண் சுகத்தையும் தந்தையின் 
சுகத்திற்காக த்யாகம் செய்த கங்கை
 மைந்தா பீஷ்மரே எனக்காக
 கண்ணனிடம் பேசுவீரா?

பீஷ்மரின் பக்தியை தா!


ராதேக்ருஷ்ணா

உடம்பு முழுவதும் அம்பு
துளைத்து அம்புப்படுக்கையில்
இருந்துகொண்டு விஷ்ணு சஹஸ்ர 
நாமம் ஜபித்த பீஷ்மரின் பக்தியை
எனக்குத் தா க்ருஷ்ணா! கோவிந்தா!

விஷ்ணு சஹஸ்ரநாம ஜபம் செய்!


ராதேக்ருஷ்ணா

பீஷ்மரை போலே நல்ல 
வைராக்கியம் வர பிரார்த்தனை 
செய்! பீஷ்மாஷ்டமியான இன்று
விஷ்ணு சஹஸ்ரநாம ஜபம் செய்!
தந்தைக்காக த்யாகம் செய்த பீஷ்மா!

Friday, February 11, 2011

உன் கடமை!


ராதேக்ருஷ்ணா

பக்தி இருந்தால் உலகை
புரிந்துகொள்ளலாம்! பக்தியை 
நமக்கு புரியவைக்கத்தான் குரு
பாடுபடுகிறார்! குருவை 
புரிந்துகொள்வது உன் கடமை!
முயற்சி செய்!

குருவின் கடமை!


ராதேக்ருஷ்ணா

நாம் க்ருஷ்ணனின் சொத்து
என்கிற புத்தியை நமக்கு 
தருவதுதான் குருவின் கடமை!
அதனால் குரு நம்முடைய
அஹம்பாவத்தை வதம் 
செய்தே தீருவார்! 

பக்தி அனுபவம்...


ராதேக்ருஷ்ணா

மனிதருக்கு பக்தி அனுபவம்
வரவைப்பதுதான் குருவின் கடமை!
உலகின் மற்ற அனுபவங்கள் தானாக 
வந்துவிடும்! பக்தி அனுபவம்
 குருவால்தான் தர முடியும்!

Thursday, February 10, 2011

கண்ணனுக்காக...


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய நியாயமான
சந்தோஷத்தை உன் சொந்தங்கள்
ரசிக்கவில்லை என்றால், அது
அவர்கள் குற்றம்! அதில் உன் 
தவறு ஏதும் இல்லை! 
கண்ணனுக்காக சந்தோஷமாக இரு!

நிம்மதியாக இரு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை கண்ணன் அறிவான்!
அதனால் நீ எப்பொழுதும்
சந்தோஷமாக இரு! மனிதர்கள்
உன்னை பற்றி நினைப்பதற்கெல்லாம்
நீ கவலைப்படாதே! நீ
நிம்மதியாக இரு!

கடவுளுக்கு நிரூபணம் செய்!


ராதேக்ருஷ்ணா

உன்னை நீ கடவுளுக்கு நிரூபணம்
செய்தால் போதும்! மனிதர்கள் 
உன்னை புரிந்துகொள்ளவில்லை 
என்று வருத்தப்படாதே! உன்
சந்தோஷத்தை அவர்கள்
உணரமாட்டார்கள்!

Wednesday, February 9, 2011

த்யான ரஹஸ்யம்!


ராதேக்ருஷ்ணா

நினைவிலே கண்ணன்! இதுதான்
நல்ல பக்தர்களின் அடையாளம்!
உன் நினைவு கண்ணையே சுற்றி
வர விடாமல் அவன் நாமத்தையே
பாடிக்கொண்டிரு! இதுவே
த்யான ரஹஸ்யம்! 

க்ருஷ்ணன் காப்பாற்றுவான்!


ராதேக்ருஷ்ணா

திரௌபதி போலே பகவான்
க்ருஷ்ணனை திடமாக நம்பி
நாம ஜபம் செய்து உன் வாழ்வின்
பொறுப்பை விட்டுவிடு! நிச்சயம்
க்ருஷ்ணன் உன்னை
 காப்பாற்றுவான்! க்ருஷ்ணா!

வர்க்கலை ஜனார்தனன்...


ராதேக்ருஷ்ணா

இன்று இப்பொழுது நாங்கள்
வர்க்கலா ஜனார்தன சுவாமி
கோயிலுக்கு செல்கிறோம்! 
வர்க்கலை ஜனார்தனன் அழகன்!
கடலோரத்தில் ஒரு குன்றின் மேல்
இந்தக் கண்ணன் நிற்கிறான்!

பக்தர்களோடு இரு!


ராதேக்ருஷ்ணா

இரவும் பகலும் பக்தர்களோடு
இரு! உன் அஹம்பாவத்தை விடு!
ஆனந்தமாய் இரு! பக்தியை 
கொண்டாடு! வாழ்வை அனுபவி!
கொஞ்சம் சிரி! அழுகையை 
அழி! புன்னகை!

பக்தி வாழ்க!


ராதேக்ருஷ்ணா

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்
பக்தி மிகவும் முக்கியம்!
பக்தியோடு நாம் ஒரு காரியத்தை
செய்தால் நிச்சயம் அது
அற்புதமாகவே இருக்கும்!
பக்தி வாழ்க!

பக்தருக்கு சமானம் பக்தரே!


ராதேக்ருஷ்ணா

எல்லோரும் பக்தரே! பக்தி 
மட்டுமே உலகில் சிறந்தது!
பக்தர்களோடு ஒரு விழாவை
கொண்டாடினால், அதுவே மிக
சுகமானது! பக்தருக்கு 
சமானம் பக்தரே!

அஞானம் விலகியது!


ராதேக்ருஷ்ணா

மனதின் இருட்டேல்லாம் ஸ்ரீ
அனந்த பத்மநாபனின் தீபாராதனையை
பார்த்த உடனேயே விலகியதே!
அஞானத்தை விரட்ட இதை 
விட சுலபமான வழி இல்லை!

பரம சுகம்!

ராதேக்ருஷ்ணா

விடியற்காலையில் குயில்கள் கூவ,
இளம் தென்றல் காற்று சுகமான
என்னை வருட, ஸ்ரீ அனந்த 
பத்மநாபனின் கோயிலில் ப்ரதக்ஷணம்
செய்வதே பரம சுகம்!

ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியின் திருமஞ்சனம்!


ராதேக்ருஷ்ணா

இன்று விடியல் காலை
ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியின்
திருமஞ்சனத்தைக் கண்டேன்!
ஆஹா! அகிலாண்ட கோடி 
பிரம்மாண்ட நாயகனின் அபிஷேகம்
பார்ப்பதே சுகம்!

கோடானுகோடி வந்தனங்கள்!


ராதேக்ருஷ்ணா

திருவனந்தபுரத்தில் வாழ பாக்கியம்
பெற்ற உத்தம ஜீவன்கள் அனைவரின்
பாதங்களுக்கும் கோடானுகோடி 
வந்தனங்கள்! அடியேன் தாசானு
தாசன்! பத்மநாபா!

பாக்யவான்கள்!


ராதேக்ருஷ்ணா

திருவனந்தபுரத்தில் தினமும்
ஸ்ரீ அனந்த பத்மநாபனை 
தரிசிப்பவர்கள் பரம பாக்யவான்கள்!
திருவனந்தபுரம் வைகுண்டத்தைக்
காட்டிலும் உயர்ந்தது!

என்னவென்று சொல்வேன்?


ராதேக்ருஷ்ணா

இன்று இப்பொழுது திருவனந்தபுரத்தில்
இருக்கிறேன்! ஸ்ரீ அனந்த பத்மநாப
சுவாமியை தரிசித்த சுகத்தை நான்
என்னவென்று சொல்வேன்? 
அழகன்! அற்புதன்!

Saturday, February 5, 2011

குழந்தையின் நன்மையே முக்கியம்!


ராதேக்ருஷ்ணா

குடும்பத்தில் குழந்தை மீது
பொறுப்பு இருவருக்குமே உண்டு!
குழந்தை நன்றாக இருப்பது 
மட்டுமே முக்கியம்! பிடிவாதம்
நல்லதல்ல! குழந்தை பாவம்...

தாம்பத்திய ரகசியம்!


ராதேக்ருஷ்ணா

மனைவி என்பவள் மந்திரியாக 
இருக்கவேண்டும்! ஒரு கணவனின்
 பெருமை, அவனுடைய மனிவியினாலேயே 
உலகத்தில் நிரூபணம் ஆகிறது!
இதுவே தாம்பத்திய ரகசியம்!

தானே சரிசெய்யவேண்டும்!


ராதேக்ருஷ்ணா

எப்பொழுதுமே தம்பதிகளின் நடுவில்
மற்றவர் நுழைந்து அறிவுரை
சொல்லாமல் இருப்பது நல்லது!
தம்பதிகள் பிரச்னையை 
தானே சரிசெய்யவேண்டும்!

Friday, February 4, 2011

காலம் பதில் சொல்லும்!


ராதேக்ருஷ்ணா

உறவுகள் உன்னை புரிந்துகொள்ளாத
போதும், உன் கண்ணன் உன்னை
நன்றாக அறிவான்! அதனால் நீ
அவன் குழந்தையாகவே இரு!
காலம் பதில் சொல்லும்!
கலங்காதே!

க்ருஷ்ணனின் பாதத்தில் சமர்ப்பணம்!


ராதேக்ருஷ்ணா

எது எப்படி போனாலும்,
யார் எப்படி நடந்தாலும்,
எல்லாவற்றையும் க்ருஷ்ணனின்
பாதத்தில் போட்டுவிட்டு நீ நாம
ஜபம் செய்துகொண்டிரு! அது
மட்டுமே நீ செய்வாய்! 

புரிந்ததா?


ராதேக்ருஷ்ணா

எப்பொழுதும் யார் எது
 சொன்னாலும் உடனே மறுத்துப்பேச
வேண்டிய அவசியமில்லை! இடத்தைப்
பொறுத்து, மனிதர்களைப் பொறுத்து
நீ பேச வேண்டும்! புரிந்ததா?

Thursday, February 3, 2011

ராதிகா ராணியின் வேலைக்காரி!


ராதேக்ருஷ்ணா

இன்று நீ ராதிகா ராணியின்
வேலைக்காரி! அதனால்
ஆனந்தமாக, சுதந்திரமாக
பிருந்தாவனத்தில் யமுனா
நதியில் நீந்தி விளையாடு,
க்ருஷ்ணனோடு!

சேவா குஞ்சத்தில் இருக்கப்போகிறாய்!


ராதேக்ருஷ்ணா

இன்று முழுவதும் பிருந்தாவனத்தில்
சேவா குஞ்சத்தில் நீ 
இருக்கப்போகிறாய்! இங்கு யாரும்
 உனக்கு விரோதி இல்லை! 
இங்கு எல்லோரும் உனக்கு மிக
மிக அன்பானவர்களே!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP