Saturday, November 10, 2012

சரியாக புரிந்துகொள்...

ராதேக்ருஷ்ணா!

எல்லா மஹாத்மாக்களையும் எல்லோரும் 
கொண்டாடுவதில்லை! எல்லா மஹாத்மாக்களும் 
உலகில் தங்கள் மஹிமையை காட்டுவதில்லை!
சரியாக புரிந்துகொள்வதே சரி!

அறிந்துகொள்...

ராதேக்ருஷ்ணா!

சில ஜனங்கள் ஒரு மஹாத்மாவை 
கேவலப்படுத்துவதால், அந்த மஹாத்மா 
மோசமானவர் என்று அர்த்தமில்லை!
உன் குருவை நீ சரியாக 
அறிந்துகொள்ளவேண்டும்!


குருவை புரிந்துகொள்!

ராதேக்ருஷ்ணா!

பலர் உன் குருவை புகழ்வதால் 
நீ அவரை கொண்டாட வேண்டாம்!
சிலர் உன் குருவை இகழ்வதால்,
நீ அவரை கேவலப்படுத்த வேண்டாம்!
குருவை புரிந்துகொள்!

Friday, November 9, 2012

நம்பிக்கை மட்டுமே!

ராதேக்ருஷ்ணா!

எத்தனை முறை மனிதரை 
நம்பி ஏமாந்து விட்டாய்?
இனியாவது உன் க்ருஷ்ணனை 
பூரணமாக நம்பி உன் வாழ்வில் 
ஏமாறாமல் இரு! இனி 
நம்பிக்கை மட்டுமே!

ஏன் யோசிக்கிறாய்?

ராதேக்ருஷ்ணா!
உன் வாழ்க்கையை யாரையெல்லாமோ 
நம்பி கொடுத்திருக்கிறாய்! உனது 
உள்ளேயும், உன் கூடவும், எப்போதும் 
இருக்கும் க்ருஷ்ணனை நம்பி 
கொடுப்பதற்கு ஏன் யோசிக்கிறாய்?

ஆனந்தத்தை அனுபவி...

ராதேக்ருஷ்ணா!

உன்னை நீ பகவானிடம் 
ஒப்படைப்பதால், உனது பாரத்தை 
நீ அவரிடம் கொடுத்துவிடுகிறாய்!
பிறகென்ன? ஆனந்தத்தை அனுபவிப்பது  
மட்டுமே உன் வேலை!

Thursday, November 8, 2012

மாறுவாய்!

ராதேக்ருஷ்ணா!

கோபப்படுவதால் சண்டை முடிவதில்லை!
சந்தேகப்படுவதால் துன்பங்கள் மறைவதில்லை!
குறையை கவனிப்பதால் மற்றவரின் அருமை 
புரிவதில்லை! மாறுவாய்!

க்ருஷ்ணனை பிடி!

ராதேக்ருஷ்ணா!
புலம்புவதால் கஷ்டம் மாறுவதில்லை!
அழுவதால் பிரச்சனைகள் தீர்வதில்லை!
குழம்புவதால் கவலைகள் அழிவதில்லை!
க்ருஷ்ணனை பிடி! எல்லாம் மாறும்!

Wednesday, November 7, 2012

புரிந்து கொள்!

ராதேக்ருஷ்ணா!

குரு உன்னை நாம ஜபம் 
செய்ய சொல்வது உனது 
குடும்பத்திற்காகவும், உன் 
வாழ்க்கைக்காகவும், உன் 
எதிர்காலத்திற்காகவும் தான்!
இதை ஒழுங்காக புரிந்து கொள்!

உடனே செய்வாய்!

ராதேக்ருஷ்ணா!

உன் குருவிடம் நிஜமாகவே 
உனக்கு மரியாதை இருந்தால்,
அவர் சொல்லும்படி விடாமல் 
நாம ஜபம் செய்து க்ருஷ்ணனையே 
நினைத்துக்கொண்டிருப்பாய்! 
உடனே செய்வாய்! 


உயர்ந்த பக்தி!

ராதேக்ருஷ்ணா!

குரு உன்னிடம் எதிர்ப்பார்ப்பது 
உயர்ந்த பக்தியை மட்டுமே!
அதைத் தவிர வேறு எதற்காகவும் 
உன் குரு உன்னை கொண்டாடவே 
மாட்டார்! நன்றாக பக்தி செய்வாய்!


Tuesday, November 6, 2012

நிறைய பிடிக்கும்!

ராதேக்ருஷ்ணா!

குருவிற்கு யார் விடாமல் 
நாம ஜபம் செய்கிறாரோ 
அவர்களை மட்டுமே நிறைய 
பிடிக்கும்! நீ நாம ஜபம் 
செய்யாவிட்டால் நிச்சயம் 
குருவுக்கு உன்னை பிடிக்காது!


ஒரே வழி!

ராதேக்ருஷ்ணா!

குரு உன் மேல் விசேஷ அனுக்ரஹம்  
செய்ய வேண்டுமா?அப்படியெனில் 
நீ விடாமல் க்ருஷ்ண நாமம் 
ஜபிப்பாய் ! இது ஒன்று தான் உன் 
குருவை இழுக்க ஒரே வழி!

உன்னை நினைக்கிறான்!

ராதேக்ருஷ்ணா!

நீ க்ருஷ்ணனை நினைக்கும்போது
உன் க்ருஷ்ணன் உன்னை 
நினைக்கிறான்! நீ க்ருஷ்ணன் பெயரை 
ஜபிக்கும்  போது க்ருஷ்ணன் உன் 
பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறான்!

Monday, November 5, 2012

உணர்வாய்!

ராதேக்ருஷ்ணா!

மனதிற்கு சமாதானம் வேண்டும்
 என்றால், நீ க்ருஷ்ணனை நினை!
அவன் நாமத்தை விடாமல் 
ஜபிப்பாய் ! வாழ்வில் பல நல்ல 
மாறுதல்களை நீ உணர்வாய்!

க்ருஷ்ணனை நினை...

ராதேக்ருஷ்ணா!
க்ருஷ்ணனை நினைப்பதால் நீ 
உனது கவலைகளை மறக்கிறாய்!
உன் மனதும் உடலும் ஆரோக்கியமாய் 
இருக்கும்! க்ருஷ்ணனை நினைத்தால் 
நல்லதே நடக்கும்!

நினைப்பாய்...ஜபிப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனை அவனது பாதம் 
முதல் தலை முடி வரை நிறுத்தி 
நிதானமாக நினைப்பாய்! கூடவே 
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்று 
விடாமல் ஜபிப்பாய்!

Sunday, November 4, 2012

தலையில் மயில்பீலி!

ராதேக்ருஷ்ணா!

பரந்த நெற்றியில் அழகான 
திலகம்! அற்புதமான காதுகளில் 
மகர குண்டலங்கள்! அழகாக 
சுருண்ட கருத்த தலை முடி!
தலையில் மயில்பீலி! நினை!

வில் போன்ற புருவம்!

ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனுடைய பற்கள் முத்து 
போலே பிரகாசிக்கும்!எடுப்பான 
மூக்கு க்ருஷ்ணனுக்கு ! சிவந்த 
தாமரை போன்ற கண்கள்!
அழகாக வளைந்த வில் 
போன்ற புருவம்!

பளபளக்கும் கண்கள்!

ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனின் திருமுக மண்டலம் 
எப்பொழுதும் புன் சிரிப்போடு இருக்கும்!
கண்ணாடி போன்ற பளபளக்கும் கண்கள்!
கோவைப்பழம் போலே சிவந்த 
உதடுகள் அவனுக்கு!


Saturday, November 3, 2012

அழகான தோள்கள்...


ராதேக்ருஷ்ணா!

உருண்டு திரண்ட அழகான 
தோள்கள் க்ருஷ்ணனுக்கு! நீண்ட 
கைகள்! அழகாக சிவந்த 
உள்ளங்கைகள்! 10 விரல்களிலும் ஜோரான 
மோதிரங்கள் அணிதிருக்கிறான்!

வக்ஷஸ்தளம்...


ராதேக்ருஷ்ணா! 

எல்லோரும் மயங்கும் படியான 
வக்ஷஸ்தளம் க்ருஷ்ணனுக்கு! எடுப்பான 
கழுத்து! வித விதமான நவரத்தின 
மாலைகளும், பூ மாலைகளும் அவன் கழுத்தில்...

சாமுத்ரிகா லக்ஷணம்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனின் தொப்புள் கருந்தாமரை 
பூ போலே இருக்கும்! அவனுடைய 
வயிற்றில் சாமுத்ரிகா லக்ஷணப்படி 
3 மடிப்புகள் இருக்கும்! அகன்ற 
மார்பு பிரதேசம் அவனுக்கு!

Friday, November 2, 2012

நினைப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனின் இடை நன்றாக 
சிறியதாக இருக்கும்! அதில் 
பகவான் அழாகான பட்டு 
பீதாம்பரம் உடுத்தி இருப்பான்!
 இடுப்பில் ஒட்டியாணம் இருக்கும்!
 நினைப்பாய்!

மென்மையாய் இருக்கும்!


ராதேக்ருஷ்ணா!

பகவானுடைய கணுக்கால்களில் அழகான 
தண்டையும், சலங்கையும் மின்னும்!
 முழங்கால்கள் மிகவும் மென்மையாய் இருக்கும்!
 திருத்தொடைகள் அகலமாய் இருக்கும்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP