Thursday, September 23, 2010

கெடுதல் செய்யாதே!

ராதேக்ருஷ்ணா

முடிந்தால் உதவி செய்!
மறந்தும் யாருக்கும் கெடுதல்
செய்யாதே! யாருடைய வாழ்வையும்
கெடுக்காதே! யாரைப் பற்றியும் 
வம்பு பேசாதே! உன் 
வாழ்க்கையை ஒழுங்காக கவனி!

கவலை வேண்டாம்!

ராதேக்ருஷ்ணா

மனதில் நம்பிக்கையோடு இரு!
ஒரு நாளும் உன் நம்பிக்கை
வீண் போகாது! க்ருஷ்ணனுக்கு
உன்னை காப்பாற்ற நன்றாக
தெரியும்! அதனால் எந்த 
கவலையும் படாதே!

Wednesday, September 22, 2010

உன்னை மாற்றிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

தீவிரவாதத்திற்கு முக்கிய
 காரணம் அஹம்பாவமே!
நீ அஹம்பாவத்தில்
இருக்கும்போதெல்லாம் நீ
ஒரு தீவிரவாதியே! இதை நீ
உணர்ந்து உன்னை மாற்றிக்கொள்!

அஹம்பாவம் வேண்டாம்!

ராதேக்ருஷ்ணா

உனது வாழ்க்கையில் நீ 
அஹம்பாவத்திற்கு இடம்
கொடுத்தால் நிச்சயம் தோற்று
விடுவாய்! அஹம்பாவத்தினால் 
நீ பல முறை க்ருஷ்ண 
தரிசனத்தை இழந்திருக்கிறாய்!

உன் முடிவு என்ன?

ராதேக்ருஷ்ணா

அஹம்பாவத்தினால் நீ இழந்தது
பல கோடி! பக்தியினால்
இது வரை நீ அடைந்த
நன்மைகள் பல கோடி!
அதனால் இரண்டில் 
எதுவென்று  நீ முடிவு செய்!

Tuesday, September 21, 2010

ஜெயிக்கவேண்டும்!

ராதேக்ருஷ்ணா

நீ உலகை பார்த்து 
பயப்படக்கூடாது! நீ 
மனிதர்களிடம் பயந்து
ஒதுங்கக்கூடாது! நீ 
நிகழ்ச்சிகளை கண்டு 
நடுங்கக்கூடாது! நீ
வாழ்வில் ஜெயிக்கவேண்டும்!

பாக்கியசாலி!

ராதேக்ருஷ்ணா

நீ எப்பொழுதும் க்ருஷ்ண
குழந்தை!  நீ என்றுமே ஆத்மா!
நீ பக்தியை அனுபவிக்க வந்த
பக்தன்/பக்தை! நீ உலகில் வாழ
வந்த பாக்கியசாலி! புரிந்துகொள்!

கண்டுபிடி!

ராதேக்ருஷ்ணா

நீ சில விஷயங்களில் புத்திசாலி!
 நீ சில காரியங்களில் திறமைசாலி! 
நீ சில சமயங்களில் அறிவாளி! 
நீ சில சந்தர்ப்பங்களில் 
பயந்தாங்கொள்ளி! கண்டுபிடி!

Monday, September 20, 2010

யோசித்து செலவு செய்!

ராதேக்ருஷ்ணா

செலவு செய்யும் முன்பு
பல தடவை யோசி! செலவு
செய்த பின் உன்னால் யோசிக்க
 முடியாது! யோசித்தாலும் ஒரு 
பிரயோஜனமில்லை! இது உன்
வாழ்க்கை! ஜாக்கிரதை!

பணத்தை அவமதிக்காதே!

ராதேக்ருஷ்ணா

பணத்தை மதிக்க கற்றுக்கொள்!
பணத்தை உபயோகப்படுத்த
தெரிந்துகொள்! பணத்தை
அவமதிக்காதே! செலவு செய்வது 
சுலபம்! சம்பாதிப்பது கடினம்...

பணத்தை சேமி!

ராதேக்ருஷ்ணா

பணத்தை சேமி!
 தேவையானவற்றிற்கு மட்டும்
செலவு செய்! கஞ்சனாக 
இருக்காதே! ஊதாரியாகவும்
இருக்காதே! பணத்தை நல்ல
வழியில் உபயோகப்படுத்து!

நிம்மதியாயிரு!

ராதேக்ருஷ்ணா

பக்தர்களின் மனதில் க்ருஷ்ணன்!
க்ருஷ்ணனின் மனதில் பக்தர்கள்!
நீயும் க்ருஷ்ண பக்தன்/பக்தை!
 அதனால் எப்பொழுதும்
 சந்தோஷமாகவே இரு! 
நிம்மதியாயிரு!

என்றும் ஆனந்தமே!

ராதேக்ருஷ்ணா

உன்னை தன் மனத் தொட்டிலில்
க்ருஷ்ணன் வைத்திருக்கிறான்!
உனக்கு ஏன் கவலை? உனக்கு
ஏன் குழப்பம்? உனக்கு ஏன்
சஞ்சலம்? உனக்கு என்றுமே
ஆனந்தம் மட்டும்தான்!

ஆனந்தமாய் தாலாட்டு பாடு!

ராதேக்ருஷ்ணா

மனமே தொட்டில்! உன்
க்ருஷ்ணனை அதில் இட்டு
ஆனந்தமாய் தாலாட்டு பாடு!
எல்லாவற்றையும் மறந்து உன்
க்ருஷ்ணனிடம் உன் மனதை
கொடு! பிறகு பார்!
உனக்கே புரியும்!

யாரும் கட்டுப்படுத்தவில்லை!

ராதேக்ருஷ்ணா

யாரும் உனக்கு எல்லையை
 நிர்ணயம் செய்யவில்லை! உன்
எல்லைகளை தாண்டக்கூடாது
என்று யாரும் உன்னை 
கட்டுப்படுத்தவில்லை! மனதில்
நம்பிக்கையோடு வெளியில் வா!

புரிகிறதா?

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு 
எல்லையை நீ தான் வரைந்து
வைத்து கொண்டிருக்கிறாய்!
அதனால்தான் வயது கடந்தவுடன்
நீ வருத்தப்படுகிறாய்! புரிகிறதா?

எல்லைகளை தாண்டு!

ராதேக்ருஷ்ணா

எல்லா எல்லைகளையும் நீ
தான் தாண்டி வரவேண்டும்!
எல்லைகள் உனக்காக சுருங்காது!
நீ எல்லைகளை கடந்தால்தான்
நீ அதைவிட பலசாலி என்று
உனக்கு புரியும்!

Friday, September 17, 2010

தெய்வத்தின் துணை!

ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்பவர்களுக்குத்தான்
தெய்வம் என்றும் துணை 
இருக்கும்! முயற்சி 
செய்யாதவர்களை தெய்வம்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை! உன்
முயற்சிதான் உன் வாழ்க்கை! 

முயற்சியே வாழ்க்கை!

ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்வதினாலே நீ உன்னை
 உலகில் அறிமுகப்படுத்துகிறாய்!
 உனது பெருமையும், வெற்றியும் 
உன் முயற்சியில்தான் 
ஒளிந்துகொண்டிருக்கிறது!
முயற்சியே வாழ்க்கை!

முயற்சி...

ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்துகொண்டே 
இரு! உன்னால் உருப்படியாக 
செய்யமுடிந்தது முயற்சி 
மட்டுமே! முயற்சி செய்பவர் 
ஒரு நாளும் வீழ்வதில்லை! 
முயற்சிப்பதே பரம சுகம்!

Thursday, September 16, 2010

புரிந்து கொள்!

ராதேக்ருஷ்ணா

நீ எதையெல்லாம் தொலைத்தாயோ
அதையெல்லாம் உன் க்ருஷ்ணன் 
உன்னிடம் இருந்து உரிமையோடு
எடுத்துக்கொண்டான் என்பதை 
புரிந்து கொள்! அப்பொழுது 
கவலை இல்லை!

தொலைக்காமலிருக்க பார்!

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் தொலைந்த பொருளை
நினைத்துக்கொண்டு வாழ்வை
தொலைத்தவர்கள் பலர்! நீயும்
அந்த வரிசையில் போய் 
சேர்ந்துவிடாதே! இனிமேல்
தொலைக்காமலிருக்க பார்!

உன் க்ருஷ்ணன்...

ராதேக்ருஷ்ணா

தொலைந்ததை பற்றி கவலைப்பட்டு
உன் சக்தியை ஏன் இழக்கிறாய்?
நீ தொலைத்ததை விட உயர்வான
ஒரு பொருள் உன்னிடம் என்றும்
உள்ளது! அது உன் க்ருஷ்ணன்...

Wednesday, September 15, 2010

ஹே ராதிகா! எங்கள் வீட்டிற்கு வா!

ராதேக்ருஷ்ணா

ஹே ராதிகா! உன் பிறந்த
நாளுக்கு எங்கள் வீட்டிற்கு வா!
உனக்கு அலங்காரம் செய்து
உன்னோடு இன்று விருந்து 
சாப்பிடவேண்டும்...வா! 
எங்கள் வீட்டை புனிதமாக்கு!

மனமெங்கும் க்ருஷ்ணன்!

ராதேக்ருஷ்ணா

வா! ராதிகா ராணியின் 
திருவடிகளில் சரணாகதி 
செய்வோம்! காமத்தை கொன்று
போட்டு, பிரேமையை உடலெங்கும்
பூசிக்கொள்வோம்! மனமெங்கும்
க்ருஷ்ணனை வைப்போம்... வா!

இன்று ராதாஷ்டமி!

ராதேக்ருஷ்ணா

இன்று ராதாஷ்டமி! நமது
செல்ல குட்டி, க்ருஷ்ண
ப்ரியை, அழகி, பிருந்தாவன
ஈஸ்வரி ராதிகா ராணியின்
பிறந்த நாள்! வாருங்கள்...
அழகாய் கொண்டாடுவோம்...

Tuesday, September 14, 2010

தாம்பத்யம்...

ராதேக்ருஷ்ணா

தாம்பத்யம் ஒரு பயணம்!
குடும்பம் ஒரு ரயில் வண்டி!
கணவனும் மனைவியும் ரயில்
வண்டி செல்லும் இரும்பு பாதை!
 க்ருஷ்ணன் வண்டி ஓட்டுனர்!
 குரு வண்டிக்கு காவலாளி! 

குடும்பம் ஒரு பள்ளிக்கூடம்!

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் ஒரு திருப்பம்
திருமணம்! குடும்பம் 
மனிதர்களை பக்குவப்படுத்தும் 
ஒரு பள்ளிக்கூடம்! கணவனும்
மனைவியும் மாணவர்கள்!
குழந்தை மதிப்பெண்கள்!

அனுபவி!

ராதேக்ருஷ்ணா

கல்யாணம் என்பது ஒரு
சுகமான அனுபவம்! குடும்பம்
என்பது ஒரு பொக்கிஷம்!
மனைவி என்பவள் மந்திரி!
கணவன் என்பவன் ராஜா!
குழந்தை என்பது வரம்! 
அனுபவி!

உன்னை மாற்று!

ராதேக்ருஷ்ணா

உன்னை ஒவ்வொரு நாளும்
சரி செய்து கொள்! உன்னை
நீ சரியாக வைத்துக்கொண்டால்
நீ அனுபவிக்கும் உலகம்
சரியாகிவிடும்! உன்னை மாற்ற
நீ முயற்சி செய்! வென்று காட்டு!

அன்பு...

ராதேக்ருஷ்ணா

எல்லோரிடமும் அன்பு காட்டு!
அன்பைக் கொடுத்து இதுவரை
உலகில் வீணானவர்கள் 
எவருமில்லை! பாசத்தினால் 
வாழ்வை இழந்தவர்கள் பல கோடி!
அன்பு நன்மையே செய்யும்!

இது தர்மம்!

ராதேக்ருஷ்ணா!

யார் மீதும் வெறுப்பு காட்டாதே!
எல்லோருக்கும் க்ருஷ்ணன்
இருக்கிறான்! எல்லோரிடமும்
க்ருஷ்ணன் இருக்கிறான்!
அதனால் யாரையும் வெறுத்து 
ஒதுக்காதே! இது தர்மம்!

Monday, September 13, 2010

கோழையாகிவிடாதே!

ராதேக்ருஷ்ணா!

உலகம் யாரை பற்றியும்
இதுவரை நல்லதை மட்டுமே
சொன்னதில்லை! உன்னை 
கேவலமாக பேசுகிறது என்று
மூலையில் ஒதுங்கி 
கோழையாகிவிடாதே! நீ வாழ்...

வெற்றி நிச்சயம்!

ராதேக்ருஷ்ணா

உலகத்தை நினைத்து
 பயந்தவர்கள் வாழ்வில் 
இதுவரை எதையும்
சாதித்ததில்லை! உன்
 குறிக்கோளில் எப்பொழுதும்
 கவனமாக இரு!
வெற்றி நிச்சயம்! நம்பு!

உன் கடமையை செய்!

ராதேக்ருஷ்ணா

உலகம் என்ன வேண்டுமானாலும்
சொல்லட்டும்! நீ உன் 
கடமையை  செய்துகொண்டிரு!
 நீ உலகைப்பற்றி கவலைப்படாதே!
 அது யாரை பற்றியும்
ஒழுங்காக சொன்னதே இல்லை!

வழி நடத்த வேண்டும்!

ராதேக்ருஷ்ணா

குழந்தைகளிடம் அன்பு 
காட்டலாம்! செல்லம் கொடுத்து
 கெடுக்கக்கூடாது! குழந்தைகளை 
மிரட்டி நோகடிக்கவும் கூடாது!
குழந்தைகளை வழி நடத்த வேண்டும்!

க்ருஷ்ணனின் வரப்ரசாதம்!

ராதேக்ருஷ்ணா

குழந்தைகளை ஒரு நாளும் 
எதற்காகவும் பயமுறுத்தவே 
கூடாது! குழந்தை என்பது
க்ருஷ்ணனின் வரப்ரசாதம்!
அதை ஜாக்கிரதையாக
வைப்பது நம் கடமை!

க்ருஷ்ணனின் செல்லம்!

ராதேக்ருஷ்ணா

குழந்தைகள் பகவான் க்ருஷ்ணனின்
செல்லம்! குழந்தைகளிடம்
 தாய்க்கும், தந்தைக்கும் 
வளர்க்கும் அதிகாரம் மட்டுமே 
உண்டு! ஒரு நாளும் 
எந்த உரிமையும் இல்லை!

Friday, September 10, 2010

நேசி!

ராதேக்ருஷ்ணா

தவறு செய்யாதவர் உலகில்
இல்லை! தவறு மட்டுமே
செய்பவர்களும் உலகில் இல்லை!
அதனால் கவலைப்படாதே!
யாரையும் அவமானப்படுத்தாதே!
வாழ்க்கையை நேசி!

மனித தர்மம்!

ராதேக்ருஷ்ணா

தவறு செய்வது மனித இயல்பு! 
அதை திருத்திக்கொள்வது
மனித தர்மம்! செய்த தவறை
நினைத்து வருத்தப்படுவதை விட
இனி செய்யாமல் இருக்க பார்!

தவறு செய்யாமல் இரு!

ராதேக்ருஷ்ணா

திரும்ப திரும்ப ஒரே
தவறை நீ செய்யும்போது,
உனக்கே உன் மேல் 
வெறுப்பு உண்டாகும்! தவறு 
செய்துவிட்டு வருந்துவதைவிட 
செய்யாமலிருப்பது உத்தமம்!

Thursday, September 9, 2010

விலகாத நம்பிக்கை!

ராதேக்ருஷ்ணா

உன் உடல் எப்பொழுதும்
உறுதியாக இருக்கவேண்டும்!
ஒரு வேளை உடல் 
தளர்ந்தாலும், உள்ளம்
ஒரு நாளும் தளரவேகூடாது!
நம்பிக்கை ஒரு நாளும் 
விலகவேகூடாது!

பழகிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

கெடுதல்களையே நினைத்து
நினைத்து பயப்பட பழகி
 விட்டாய்! அதனால் இனி 
உன்னை நல்லவைகளை
நினைக்க பழகிக்கொள்!
உன்னால் நல்லதை மட்டுமே
நினைக்க முடியும்!

பலனை க்ருஷ்ணன் தருவான்!

ராதேக்ருஷ்ணா

அமைதியாக உன் கடமைகளை
செய்து கொண்டிரு! க்ருஷ்ணன்
உன் செயல்களை உன்னிப்பாக
கவனிக்கின்றான்! அதனால் உன்
செயல்களின் பலனை அவன் 
நன்றாக தருவான்!

Wednesday, September 8, 2010

மனம் தான் காரணம்!

ராதேக்ருஷ்ணா

இடம் மாறுவதால் கஷ்டம்
அதிகமாவதும் இல்லை
பிரச்சனைகள் குறைவதுமில்லை!
உன் மனதும், முன் ஜன்ம
வினையும் தான் காரணம்!
நாம ஜபம் செய்!

வாழ்க்கை வாழவைக்கும்!

ராதேக்ருஷ்ணா

நினைவுகளை வாழ்வின் 
முன்னேற்றத்தில் செலுத்து!
நிச்சயம் உன்னை வாழ்க்கை 
வாழவைக்கும்! தைரியமாக 
இரு! கடமைகளை பாரம் என்று 
ஒரு நாளும் நினைக்காதே!

கனவைத்தாண்டி ஜெயித்துக்காட்டு!

ராதேக்ருஷ்ணா

கனவுகள் நடக்கவில்லை என்று,
நிகழ் காலத்தை கோட்டை
விடாதே! நிகழ் காலத்தில்
உறுதியோடு முயற்சி செய்து
கனவைத்தாண்டி ஜெயித்துக்காட்டு!

Tuesday, September 7, 2010

ஹே ராகவேந்திரா! அனுக்ரஹம் செய்!

ராதேக்ருஷ்ணா

ஹே ராகவேந்திரா! எங்கள்
குடும்பம் வாழ, நல்ல 
ஆரோக்கியம் பெற, எங்கள் 
மனதில் சாந்தி உண்டாக,
வாழ்வில் நிம்மதி உண்டாக
 ஆசீர்வாதம் கேட்கிறோம்...
அனுக்ரஹம் செய்!

உன் திருவடியே கதி!

ராதேக்ருஷ்ணா

ஹே ராகவேந்திரா! ஹிந்து
தர்மம் தழைக்க வரம் தா!
அதற்கு உழைக்க பலம் தா!
ஹிந்துக்களுக்கு நம்பிக்கையையும்,
ஒற்றுமையையும் தா! 
உன் திருவடியே கதி!

ஹே ராகவேந்திரா! தா! தா!

ராதேக்ருஷ்ணா

ஹே ராகவேந்திரா! நல்ல
பக்தியை தா! நல்ல ஞானத்தை
தா! உன்னத வைராக்கியத்தை
தா! திடமான மனசை தா!
அசராத புத்தியை தா! தா! தா!

உனதாக்கிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

நேரத்தை உனதாக்கிக்கொள்!
சக்தியை உனதாக்கிக்கொள்!
க்ருஷ்ணனை உனதாக்கிக்கொள்!
கைங்கர்யத்தை உனதாக்கிக்கொள்!
சந்தோஷத்தை உனதாக்கிக்கொள்!
வாழ்க...

விட்டுவிடாதே!

ராதேக்ருஷ்ணா

இன்று நடக்கின்ற விஷயங்களில்
உனக்கு நல்ல செய்திகள்
ஒளிந்துகொண்டிருக்கிறது!
அதை கண்டுபிடித்து உன்
வாழ்க்கையை நன்றாக 
செய்துகொள்! விட்டுவிடாதே!

தைரியமாக எதிர்கொள்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளையும் கொண்டாடு!
ஒவ்வொரு நாளையும்
உபயோகப்படுத்திக்கொள்!
உப்பு பெறாத விஷயங்களுக்கு
எல்லாம் மனசு உடைந்து
போகாதே! தைரியமாக எதிர்கொள்!

க்ருஷ்ணனை அனுபவி!

ராதேக்ருஷ்ணா

நீ எப்பொழுதெல்லாம்
க்ருஷ்ணனை நினைக்கின்றாயோ,
க்ருஷ்ண நாமத்தை ஜபிக்கின்றாயோ
அப்பொழுதெல்லாம் ஸ்ரீ 
க்ருஷ்ண ஜெயந்தியே!
இன்று க்ருஷ்ணனை அனுபவி! 

ராதேக்ரிஷ்ணா

எப்பொழுதெல்லாம் நீ
க்ருஷ்ணனின் அனுக்ரஹத்தை
உணருகின்றாயோ, அப்பொழுதெல்லாம்
ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்திதான்! 
அதனால் தினம் தினம் 
க்ருஷ்ண ஜெயந்தியே!

க்ருஷ்ணனை கூப்பிடு!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் ஸ்ரீ 
க்ருஷ்ண ஜெயந்தியே! நீ
ஆசைப்பட்டு க்ருஷ்ணனை
கூப்பிட, அவன் உனக்காக
வருகின்ற நாளெல்லாம் 
க்ருஷ்ண ஜெயந்தி தான்!
இன்று கூப்பிடு!

நீ அழியாத ஆத்மா!

ராதேக்ருஷ்ணா

உடல் அழியும்! ஆத்மா
அழியாது! உடலுக்கு வியாதி
வரும்! போகும்! ஆத்மாவை
அழிக்க யாராலும் முடியாது!
நீ அழியாத ஆத்மா! 
அதனால் பயப்படாதே!

ஆத்மாவுக்கு வியாதி கிடையாது!

ராதேக்ருஷ்ணா

உடலில் வியாதி வரும்! ஆனால்
அதனால் ஆத்மாவுக்கு ஒரு
பாதிப்பும் கிடையாது! ஆத்மாவுக்கு
ஒரு வியாதியும் வராது! அதனால்
வியாதிக்கு கவலைப்படாதே!

க்ருஷ்ணனின் வரப்ரசாதம்!

ராதேக்ருஷ்ணா

உனது உடலை கொண்டாடாதே!
உனது உடலை ஜாக்கிரதையாக
வைத்துக்கொள்! உனது உடல்
க்ருஷ்ணனின் வரப்ரசாதம்! உனது
வாழ்க்கை க்ருஷ்ணனின் ஆசீர்வாதம்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP