Wednesday, June 30, 2010

வாழ்ந்து காட்டுவாய்!

ராதேக்ருஷ்ணா

யாரும், எதுவும் உன்னை
கலங்கவைக்க கூடாது!
நீ அசராமல் இரு! உன் 
வாழ்க்கை க்ருஷ்ணனின் 
ஆசிர்வாதத்தில் நடக்கிறது!
வாழ்ந்து காட்டுவாய்!
உன்னால் முடியும்!

நாம ஜபம் பலமுடையது!

ராதேக்ருஷ்ணா

உலகம் சிறியது! க்ருஷ்ணன்
பெரியவன்! மனிதர்கள்
பலவீனமானவர்கள்! நாம ஜபம்
பலமுடையது! பிரச்சனைகள்
தற்காலிகமானது! தீர்வு நிரந்தரம்!

நீ ஜெயிக்க பிறந்திருக்கிறாய்!

ராதேக்ருஷ்ணா

நீ பிரச்சனைகளை சமாளித்து
ஜெயிக்க பிறந்திருக்கிறாய்! நீ
க்ருஷ்ணனின் கைகளில் 
பத்திரமாக இருக்கிறாய்! மனதை
தைரியமாக வைத்துக்கொள்!

Monday, June 28, 2010

க்ருஷ்ணன் கவனித்து கொள்வான்!

ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையின் மிக 
முக்கியமான காரியம் பக்தியே!
அதை ஒழுங்காக செய்வாய்!
எதைப்பற்றியும் ஒரு நாளும் 
கவலைப்படாதே! க்ருஷ்ணன் 
கவனித்து கொள்வான்!

தைரியமாக இரு!

ராதேக்ருஷ்ணா

இன்று முதல் எல்லாம் நன்றாக 
இருக்கும்! இன்று முதல் உன்
மனது நிம்மதியாக இருக்கும்!
இன்று முதல் உன் வாழ்க்கை
பிரகாசமாக இருக்கும்!
தைரியமாக இரு!

மறக்காதே!

ராதேக்ருஷ்ணா

சடங்கும், சம்பிரதாயமும் 
க்ருஷ்ணனுக்கு முக்கியமில்லை!
உன் மனதின் சிரத்தையும், 
பக்தியும், பணிவும், முயற்சியும் 
தான் க்ருஷ்ணனுக்குப் 
பிடிக்கும்! மறக்காதே!

இது சத்குருவின் 500வது செய்தி!

ராதேக்ருஷ்ணா

இது சத்குருவின் 500வது 
செய்தி! கொண்டாடு! 
க்ருஷ்ணனுக்கு நன்றி சொல்!
இன்னும் கோடி கோடி 
செய்திகள் வர பிரார்த்தனை 
செய்! க்ருஷ்ணா கருணா
சாகரா நீயே கதி!

சனாதனமான இந்து தர்மம்...

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ண ராஜ்யத்திற்கு பிரார்த்தனை
செய்வோம்! நிச்சயம் இந்து
தர்மம் ஜெயித்தே தீரும்! என்
சனாதனமான இந்து தர்மம்
ஒரு நாளும் அழியாது!

நிச்சயம் நீ ஜெயிப்பாய்!

ராதேக்ருஷ்ணா

நினைவிலே க்ருஷ்ணன்! 
புத்தியிலே குரு! 
செயலிலே சிரத்தை! 
சலிப்பில்லாத முயற்சி!
திடமான மனது!
குறையாத நம்பிக்கை!
நிச்சயம் நீ ஜெயிப்பாய்!

அனுபவி!

ராதேக்ருஷ்ணா

மனதோடு க்ருஷ்ணா! வாயோடு
நாமசங்கீர்த்தனம்! நெஞ்சோடு 
திடமான நம்பிக்கை! குருவின்
ஸ்மரணம்! சத்சங்கத்தோடு 
நேரம்! சந்தோஷமான
 வாழ்க்கை! அனுபவி!

இதையே சொல்லிக்கொண்டிரு!

ராதேக்ருஷ்ணா

இதையே சொல்லிக்கொண்டிரு!
 நான் க்ருஷ்ணனின் குழந்தை!
நான் க்ருஷ்ணனின் அடிமை!
நான் க்ருஷ்ணனின் இஷ்டப்படி 
மட்டுமே இருப்பேன்! நான் 
சந்தோஷமாக இருக்கிறேன்!

Saturday, June 26, 2010

மாற்றம் உன் நன்மைக்காகத்தான்!

ராதேக்ருஷ்ணா

திடீரென நிகழ்ச்சிகள் மாறலாம்!
அதற்காக மனதை அலட்டிக்காதே!
அவன் இஷ்டப்படி எல்லாம் 
மாறுகிறது! நிச்சயம் உன் 
நன்மைக்காகத்தான் மாறுகிறது!

க்ருஷ்ணன் மனதிலிருந்து உலகை பார்!

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் எல்லாவற்றையும் மிகுந்த
ரசனையோடு படைத்திருக்கிறான்!
அதனால் எதையும் இழிவு படுத்தி
பேசாதே! அவன் மனதிலிருந்து 
உலகை பார்! புரியும்!

க்ருஷ்ணனிடம் கொடுத்துவிடு!

ராதேக்ருஷ்ணா

நீ எதைக் கொடுத்தாலும் க்ருஷ்ணன்
அதை  ஏற்றுக்கொள்வான்! உன் 
மனதை தான் க்ருஷ்ணன் உன்னிடம்
கேட்கிறான்! கொடுத்து விட்டு
 நிம்மதியாக இரு! உனக்கு
 அதுவே நன்மை!

குணத்திற்கு மரியாதை கொடு!

ராதேக்ருஷ்ணா

குற்றம் சொல்லி இதுவரை நீ
எதையும் சம்பாதிக்கவில்லை!
குற்றம் என்று பார்த்தால் உலகில்
யாருடனும் நீ பழகவே முடியாது!
குணத்திற்கு மரியாதை கொடு!

Thursday, June 24, 2010

இன்று முழுமையாக வாழ்ந்துவிடு!

ராதேக்ருஷ்ணா

போனது போகட்டும்! இன்று 
வாழ்! முழுமையாக வாழ்ந்துவிடு! 
நாளை, இன்று இழந்தோமே
 என்று வருந்தாமல் இருக்கும்படி
பார்த்துக்கொள்! மனதை
குதூகலமாக வை!

இன்று உன் கையில்!

ராதேக்ருஷ்ணா

இன்றைய வாழ்க்கை க்ருஷ்ணனின்
 வரம்! நேற்று முடிந்துவிட்டது! நாளை
நிச்சயமில்லை! இன்று இப்பொழுது
உன் கையில்! அதை உள்ளபடி
உபயோகப்படுத்திக்கொள்!

Wednesday, June 23, 2010

நீ க்ருஷ்ணனின் அடிமை!

ராதேக்ருஷ்ணா

நேசமாக இரு! ஆனால்
அடிமையாகி விடாதே!
நீ க்ருஷ்ணனின் அடிமை!
க்ருஷ்ணநிஷ்டப்படி வாழ
உனக்கு முழு அதிகாரம்
உண்டு! வாழ்க்கையைக்
கொண்டாடு! வாழ்க!

ஏன் தப்பிக்கிறாய்?

ராதேக்ருஷ்ணா

மிருகங்கள் கூட ஒழுங்காக
இருக்கிறது! நீ ஏன் உன்
கடமைகளிலிருந்து தப்பிக்கிறாய்?
உன் கடமையை யாருடைய
தலையிலும் சுமத்தாதே!
அது உனக்கு கேவலம்!

நீ மனித ஜாதி!

ராதேக்ருஷ்ணா

நீ மிருகம் அல்ல! நீ மனித ஜாதி! 
அதனால் மனிதரைப்போல் நட!
வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்!
க்ருஷ்ணனைப் பிடித்தால் நீ
மனிதராய் வாழலாம்!

வாழ்க்கையை ரசிக்க பழகிக்கொள்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை ஸ்வாரஸ்யமானது! 
எல்லாவற்றையும் ரசிக்க 
பழகிக்கொள்! வாழ்க்கையை 
நீ ரசித்தால், வாழ்க்கை 
உன்னை ரசிக்கும்! உன் 
ரசனையைப்பொருத்தே
வாழ்க்கை!

மனதை கோயிலாக்கு!


ராதேக்ருஷ்ணா

மனதை எல்லோரிடமும் 
கொடுத்துவிட்டு புலம்பாதே!
 பெரியாழ்வார் சொன்னது போலே
மனதை கோயிலாக்கு! 
க்ருஷ்ணனை அதில் வைத்து, 
உன் ஆர்வத்தை பூவாக இடு!

அப்போதைக்கு இப்போதே சொல்லி வை!


ராதேக்ருஷ்ணா

உடலில் பலம் இருக்கும்போதே 
பகவானை கூப்பிட்டு வை! 
ஏனெனில் ஸ்ரீ பெரியாழ்வார் 
சொன்னது போலே, 
மரணப்படுக்கையில் பகவானை
நினைப்போமா என்று தெரியாது!

சிந்தனை செய்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் யாரும் 
அஹம்பாவத்தினால் ஜெயித்ததில்லை!
அதே சமயத்தில் வினயத்தினால்
யாரும் தோற்றதில்லை! ஒவ்வொரு 
நிகழ்விலும் சிந்தனை செய்!

க்ருஷ்ணனின் ஆசீர்வாதம்!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையின் எல்லா
 நிகழ்ச்சிகளிலும் மறக்காமல்
உன் க்ருஷ்ணனைக் கூப்பிடு!
அவன் மட்டும்தான் உன் 
சந்தோஷத்தை கொண்டாடுவான்!
க்ருஷ்ணனின் ஆசீர்வாதம்!

முழு மனதோடு முயற்சி செய்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையை கொண்டாடு! உடல் 
பலவீனம், பிரச்சனைகள், ஏமாற்றங்கள்
எல்லாவற்றையும் வீசி எறி! முழு 
மனதோடு உன் முயற்சியை செய்!
எல்லாம் நல்லதாக நடக்கும்!

சிரி! உன் க்ருஷ்ணனை சந்தோஷப்படுத்து!


ராதேக்ருஷ்ணா

நீ சிரிததால் உன் க்ருஷ்ணன்
சந்தோஷப்படுகிறான்! நீ சிரிததால் 
உன் ஜன்மா நன்றாக இருக்கும்!
சிரிப்பதற்கு நீ யாருக்கும் ஒன்றும்
தரவேண்டாம்! சிரி! சிரி!

ஏன் கஞ்சத்தனம்?

ராதேக்ருஷ்ணா

சிரிப்பதற்கு ஏன் கஞ்சத்தனம்!
நன்றாக சிரி! எப்பொழுதும் 
சிரித்துக்கொண்டே இரு! 
ஆனந்தமாக இருப்பது உன்
கடமை! இன்று முதல் அழவே 
கூடாது! சரியா?

சிரி!

ராதேக்ருஷ்ணா

எப்பொழுதும் சந்தோஷமாக இரு!
எதுவும் உனக்கு நஷ்டமாகவில்லை!
உனக்கு எந்த பயங்கரமும்
 நடக்கவில்லை! உன்
 எதிர்காலம் நன்றாக
 இருக்கும்! சிரி! சிரி!

குறை சொல்லாதே!

ராதேக்ருஷ்ணா

எதையும் குறை சொல்லாதே!
யாரையும் குறை சொல்லாதே!
உன்னிடமும் நிறைய குறை 
உள்ளது! நிறைகளை மட்டும்
எடுத்துக்கொண்டால் எப்பொழுதும் 
சந்தோஷமாயிருக்கலாம்!

நல்லதை மட்டும் எடுத்துக்கொள்!

ராதேக்ருஷ்ணா

எல்லாவற்றிலும் நல்லது உண்டு!
கெடுதலும் உண்டு! நீ நல்லதை
மட்டும் எடுத்துக்கொள்! யாரும் 
உன் மீது எதையும்
 திணிக்கவில்லை! நீ உனக்கு
 வேண்டியதை எடுத்துக்கொள்!

முயற்சி செய்து பார்!

ராதேக்ருஷ்ணா

நீ உலகம் சரியில்லை என்று
சொல்லாதே! ஒவ்வொரு முறையும்
நீ பார்க்கும் பார்வை சரியில்லை!
நீ உன்னை மாற்றிக்கொண்டால்
எல்லாமே மாறும்! முயற்சி 
செய்து பார்!

வெல்வாய்!

ராதேக்ருஷ்ணா

உன் வார்த்தைகள் சரியாக 
இருக்கட்டும்! உன் ஒவ்வொரு 
வார்த்தைக்கும் பலன் நிச்சயம்
 உண்டு! நல்ல வார்த்தைகளை
மட்டுமே பேசு! உனக்கே
 வித்யாசம் தெரியும்! வெல்வாய்!

அனுபவி !

ரதேக்ருஷ்ணா

உனது மனம் கோயிலாகட்டும்!
உன் க்ருஷ்ணன் அதில் 
விளையாடட்டும்! பக்தர்கள் அதில்
குடியேரட்டும்! ராதிகா அதை
ஆளட்டும்! பக்தி அதில் 
பெருகட்டும் ! அனுபவி !

உன்னை சரி செய்!

ராதேக்ருஷ்ணா

உனது மனமே உனக்கு 
தோல்வியைத் தருகிறது! 
எப்பொழுதும் நல்லதாகவே
நினை! நல்லது நினைப்பதில்
என்ன கஷ்டம்? உன்னை சரி 
செய்தால் எல்லாம் சரியாகும்!

Friday, June 18, 2010

நிம்மதியாக இரு!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு கஷ்டத்திலும் உனக்கு 
ஒரு செய்தி இருக்கிறது! அதை 
புரிந்துகொள்! மனதை
அலட்டிக்கொள்ளாதே! எல்லாம்
மாறி நீ நன்றாக இருப்பாய்!
நிம்மதியாக இரு!

போராடி ஜெயிக்க வேண்டும்!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் கஷ்டம் வருகிறது 
என்பதற்காக யாராவது வாழ்க்கையை
வெறுப்பார்களா? போராடி ஜெயிக்க
வேண்டாமா? உன் வாழ்க்கையில் நீ
தான் போராட வேண்டும்!

சமத்தாக இரு!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஒரு
அர்த்தம் நிச்சயம் உண்டு! எதோ நீ
 மட்டும்தான் வாழ்க்கையில் ஒழுங்காக 
இருப்பதாக அஹம்பாவம் வேண்டாம்!
சமத்தாக இரு!

க்ருஷ்ணனோடு அனுபவிப்போம்!

ராதேக்ருஷ்ணா

உலகத்தின் எல்லா இடங்களிலும்
க்ருஷ்ணன் நீக்கமற நிறைந்திருக்கிறான்!
அதனால் அனைவரும் க்ருஷ்ணனின்
குழந்தைகளே! வாழ்க்கையை 
க்ருஷ்ணனோடு அனுபவிப்போம்!

கண்ணனின் கருணை!

ராதேக்ருஷ்ணா

உலகின் ஒரு புறம் தூங்கும்போது 
மற்றொரு புறம் விழித்திருக்கிறது!
ஆனால் க்ருஷ்ணன் ஒரு பொழுதும்
தூங்குவதே  இல்லை! அவனின்
இந்த கருணைக்கு நன்றி!

குருவின் ஆசீர்வாதம் உண்டு!

ராதேக்ருஷ்ணா

உலகத்தின் எந்த மூலையில் குரு
 இருந்தாலும் உனக்கு ஆசீர்வாதம்
நிச்சயம் உண்டு! உன் மனதில் குரு 
த்யானம் இருக்கும் வரை குருவின்
மனதில் நீயும் உண்டு!

Tuesday, June 15, 2010

மனதை சரி செய்து கொள்!

ராதேக்ருஷ்ணா

உன் மனதின் பலவீனங்கள், 
சந்தேகங்கள், பயங்கள்,
 குழப்பங்கள் எல்லாம் உன் சக்தியை 
கொன்றுகொண்டிருக்கிறது! 
நாம ஜபம் செய்து உன் 
மனதை சரி செய்து கொள்!

உன் சக்தியை உபயோகித்துக்கொள்!

ராதேக்ருஷ்ணா

உன் சக்தியை அடுத்தவர்களை பற்றி 
பேசி, நினைத்து, பொறாமைப்பட்டு 
வீணடிக்கிறாய்! ஒவ்வொரு நிமிஷமும் 
உன் சக்தியை உபயோகித்துக்கொள்!
எல்லாம் மாறும்!

வீணடிக்காதே!

ராதேக்ருஷ்ணா

உனக்குள் இருக்கும் சக்தி மிகவும்
உன்னதமானது! உன்னுடைய சக்தியில்
 நீ 1%  தான் உபயோகப்படுத்துகிறாய்!
மீதி 99% வீணாகிறது! இனியும்
வீணடிக்காதே!

அடுத்தவர் வாழ்க்கையில் தலையிடாதே!

ராதேக்ருஷ்ணா

நீ உன் வாழ்க்கையை ஒழுங்காக 
வாழ உனக்கு முழு அதிகாரமும்,
சுதந்திரமும் உண்டு! ஆனால்
 அடுத்தவர் வாழ்க்கையில் 
தலையிட ஒரு நாளும்
அதிகாரம் கிடையாது!

ஏமாறாதே!

ராதேக்ருஷ்ணா

மற்றவர்கள் ஏமாற்றினார்கள் என்று 
சொல்வதை விட நீ ஏமாந்தாய் 
என்பதே சரி! நீ ஜாக்கிரதையாக
இருந்தால் யாரும் உன்னை 
ஏமாற்றவே முடியாது! 
ஏமாறாதே!

உன் வேலையை ஒழுங்காக பார்!

ராதேக்ருஷ்ணா

மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள்
என்பது உனக்கு அனாவசியம்! உன்
வேலையை மட்டும் நீ ஒழுங்காக 
பார்! நீ செய்யும் காரியங்களில் 
ஆயிரம் ஓட்டைகள்! திருந்து!

க்ருஷ்ண ஆசீர்வாதமும் குருவின் வாழ்த்தும் முக்கியம்!

ராதேக்ருஷ்ணா

பிறந்த நாளுக்கு எல்லோரும்
 வாழ்த்து சொல்லுவார்கள்! 
ஆனால் நீ கிருஷ்ணனின் 
ஆசீர்வாதத்தையும், குருவின் 
வாழ்த்துக்களையும் பெறுவதே
 மிக மிக முக்கியம்!

க்ருஷ்ணனை கொண்டாடு!

ராதேக்ருஷ்ணா

உடல் பிறந்ததும், வாழ்வதும் க்ருஷ்ண 
க்ருபையால்தான்! அதனால் பிறந்த
நாளில் க்ருஷ்ணனை கொண்டாடு!
உன்னை கொண்டாட நீ என்ன
 பெரியதாக செய்தாய்?

ஆத்மாவை கொண்டாடு!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு பிறந்த நாளும் நம் 
உடலுக்கு மரணம் நெருங்குவதை 
நினைவுபடுத்துகிறது! ஆனால் நாம்
அதை புரிந்துகொள்வதில்லை! 
ஆத்மாவை கொண்டாடு!

Saturday, June 12, 2010

குருவின் கடமை!


ராதேக்ருஷ்ணா

குரு உன் கோபத்திற்கு எல்லாம்
 பயப்படவே மாட்டார்! உன் 
அஹம்பாவத்திற்கு எல்லாம் குரு
அடி பணியவே மாட்டார்! உன் 
பக்தியை வளர்ப்பது தான் 
குருவின் கடமை!

குருவின் அன்பை இழக்காதே!


ராதேக்ருஷ்ணா

சத்குருவிடம் நீ வாதாடி உன் தவறை 
நியாயப்படுத்த முடியாது! அப்படி 
செய்தால் நீ தான் குருவின் அன்பை 
இழப்பாய்! குரு உன் திமிரை 
கொண்டாட மாட்டார்!

உனக்கும் நன்மை! உலகிற்கும் நன்மை!


ராதேக்ருஷ்ணா

யார் தவறு செய்தாலும் கண்டிப்பது 
குருவின் கடமை! உன்னிடம் உள்ள 
தவற்றை நீ சரி செய்து கொண்டால்
குருவிற்கு சந்தோஷம்! உனக்கும் 
நன்மை! உலகிற்கும் நன்மை!

Friday, June 11, 2010

பாபத்திற்கு பரிகாரம்...

ராதேக்ருஷ்ணா

எல்லாவிதமான பாபத்திற்கும் ஒரே 
பரிகாரம் நாம  ஜபமே! விடாது 
க்ருஷ்ணா என்று சொல்லி 
க்ருஷ்ணனிடம் ப்ராத்தனை செய்!
நிச்சயம் பாவ மன்னிப்பு உண்டு!

உன் தவறுகளை மறைக்காதே!

ராதேக்ருஷ்ணா

தவறு செய்யாத மனிதர்கள் உலகில்
 இல்லை! ஆனால் தான் செய்த தவறை 
மறைப்பவர்கள் உருப்படுவதில்லை! செய்த 
தவறுக்கு  க்ருஷ்ணனிடம் மன்னிப்பு கேள்! 

தவறுகளை திருத்திக்கொள்!

ராதேக்ருஷ்ணா

உன்னுடைய தவறுகளை திருத்திக்கொண்டால் 
உன்னால் முன்னேற முடியும்! நீ தவறு 
செய்யவில்லை என்று வாதாடினால் 
உனக்குத்தான் நஷ்டம்!
 இனி உன் இஷ்டம்!

Thursday, June 10, 2010

அன்பு செய்!


ராதேக்ருஷ்ணா

உலகம் மிகப்பெரியது! நீ 
ஒருத்தரை வெறுத்து ஒதுக்குவதால் 
அவர்களுக்கும் ஒன்றும் நஷ்டமில்லை!
உன்னிடம் இருக்கும் அன்பிற்கு 
மட்டுமே உலகம் ஏங்கும்! 
அன்பு செய்!

உன் கையில்!


ராதேக்ருஷ்ணா

நீ அடுத்தவர்க்கு என்ன
 நினைக்கிறாயோ,கொடுக்கிறாயோ 
அதுவே உனக்கு திரும்ப 
பலமடங்காக கிடைக்கும்!
நல்லதை நினைப்பதும் 
கொடுப்பதும் உன் கையில்!

அன்பாகப் பழகு!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை என்பது ஒரு வழி பாதை!
எல்லோரும் திரும்பிப் பார்க்கலாம்!
யாரும் திரும்பிப் போகமுடியாது!
அதனால் யாவரிடமும் அன்பாகப்
பழகு! ஏமாறாதே!

சத்குருவிற்கு க்ருஷ்ணன் இருக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

சத்குருவிற்கு நீ வழி காட்ட 
வரவில்லை!  சத்குருவிற்கு 
க்ருஷ்ணன் இருக்கிறான்! குரு 
எந்த மைந்தரையும் நம்பி
 பூமியில் வாழவில்லை! க்ருஷ்ணன்
காப்பாற்றுகிறான்!

மனம் திருந்தி வாழ்!


ராதேக்ருஷ்ணா

சத்குருவிற்கு எல்லோரும் பக்தி 
செய்தால் பிடிக்கும்! வம்பு பேசுபவர்கள்
யாராக இருந்தாலும் ஒரு நாளும் 
பிடிக்காது! மனம் திருந்தி நீ வாழ
நன்மை உண்டு!

நீ சரியாய் இரு!


ராதேக்ருஷ்ணா

சத்குருவிற்கு ஒவ்வொருவரை பற்றியும் 
அக்கறை உண்டு! ஏதோ நீ மட்டும் 
தான் சத்குருவிற்கு ப்ரியம் என்று 
நினைத்துக்கொள்ளாதே! நீ சரியாய் 
இருந்தால் சந்தோஷம்!

தொலைத்துவிடாதே!


ராதேக்ருஷ்ணா

உன்னை உயர்த்திக்கொள்ளவே 
வாழ்க்கை கிடைத்திருக்கிறது!  
அடுத்தவரை கேவலப்படுத்தி 
மற்றவரிடம் பேசுவதற்காக 
இல்லை! உன் வாழ்க்கையை 
தொலைத்துவிடாதே!

பக்தர்களை நிந்திக்காதே!


ராதேக்ருஷ்ணா

உன் மூளையை விட கோடி மடங்கு 
பெரியது பக்தர்களின் பக்தி! உன் 
புத்திசாலித்தனம் எல்லாம் பக்தர்களின்
முன் தூசிக்கு சமம்! பக்தர்களை
நிந்திக்காதே!

திருந்து!


ராதேக்ருஷ்ணா

நீ என்ன கடவுளின் ப்ரதிநிதியா
அடுத்தவரை திருத்துவதற்கு? உன் 
வேலையை ஒழுங்காக பார்! உன்னை 
திருத்திக்கொள்ளவே நேரம் 
போதவில்லை! திருந்து!

நீ நீயாக இரு!


ராதேக்ருஷ்ணா

உன்னைப் பற்றி உயர்வான எண்ணமே 
வேண்டாம்! தாழ்வான எண்ணமும் 
வேண்டாம்! யாரைப்பார்த்தும் காப்பி 
அடிக்காதே! நீ நீயாக இருந்தாலே
 க்ருஷ்ணனுக்கு உன்னை பிடிக்கும்! 

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP