Friday, August 31, 2012

தெளிவான தைரியம் ...


ராதேக்ருஷ்ணா!

பயந்தவன் வாழ்வில் ஜெயித்ததில்லை!
அசட்டு தைரியமும் வாழ்க்கைக்கு 
நல்லதல்ல! தெளிவான தைரியம் 
உன்னை வாழவைக்கும்! க்ருஷ்ணனின் 
திருவடியை பிடி!

அழுதது போதும்!


ராதேக்ருஷ்ணா!

பயந்து பயந்து நீ குழம்பியது 
போதும்! பயந்து பயந்து நீ 
அழுதது போதும்! இனி தைரியம் 
மட்டும் வாழ்வாய் இருக்கட்டும்!
தைரியம் உன்னோடு வாழட்டும்!

பயப்படாதே!


ராதேக்ருஷ்ணா!

பயப்படாதே! உன்னை வெல்ல 
உலகில் யாருமில்லை! உன்னை 
அழிக்க யாருமில்லை! உன்னை 
அவமானப்படுத்த யாருமில்லை!
எல்லாம் உன் மனதின் பயமே!
பயத்தை அழி!

Thursday, August 30, 2012

நிம்மதி பெறுவோம்!


ராதேக்ருஷ்ணா!

மஹாபலி சக்ரவர்த்தி பகவானுக்கு 
எல்லாவற்றையும் தானம் தந்ததால் 
நல்ல கதி அடைந்தான்! நாமும் 
நம்மை இன்று வாமனனுக்கு 
தந்து நிம்மதி பெறுவோம்!

வாமன மூர்த்தியின் திருநக்ஷத்திரம்!


ராதேக்ருஷ்ணா!

வாமன மூர்த்தியின் தந்தை 
ஸ்ரீ கச்யப மகரிஷி! தாயார் 
ஸ்ரீமதி அதிதி தேவி! பகவானின் 
திருநக்ஷத்திரம் திருவோணம்!
வாமனனே கண்ணனாக வந்தான்!

நீங்காத செல்வம் நிறையும்!


ராதேக்ருஷ்ணா!

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் 
பாடினால் நிச்சயம் நீங்காத 
செல்வம் நிறையும்! வாமன 
மூர்த்தியை நினைத்து நாம ஜபம் 
செய்தால் நல்ல மழை பொழியும்!

Wednesday, August 29, 2012

ஏன் கலங்குகிறாய்?


ராதேக்ருஷ்ணா!

உன்னோடு உன் குரு இருக்கும்போது 
நீ ஏன் கலங்குகிறாய்? உன் குரு 
உனக்காக நாம ஜபம் செய்கிறார்!
நீ நம்பிக்கையோடு வாழ்வாய்!
நிச்சயம் வாழ்வில் வெல்வாய்!

குருவிடம் நம்பிக்கை!


ராதேக்ருஷ்ணா!

என் குரு என்னும் பலம் என்னிடம் 
என்றுமுண்டு! அந்த பலத்தைக் கொண்டு 
நான் யமதர்ம ராஜனையும் ஜெயிப்பேன்!
இது ஆணவமல்ல! என் குருவிடம் 
எனக்குள்ள நம்பிக்கை!

குரு என்னும் விளக்கு...


ராதேக்ருஷ்ணா!

குரு என்னும் விளக்கு உன்னிடம் 
இருக்கிறது! அதைக் கொண்டு நீ 
அறியாமை என்னும் இருளை அழித்து 
வாழ்வில் க்ருஷ்ணனை அனுபவிப்பாய்!
உன்னோடு உன் க்ருஷ்ணன் என்றுமுண்டு!

Tuesday, August 28, 2012

மிக அவசியம்!


ராதேக்ருஷ்ணா!

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது 
மிக சுலபம்! அதன் ஆரோக்கியத்தை 
கெடுப்பது தான் கடினம்! ஆரோக்கியம் உன் 
வாழ்க்கைக்கு மிக மிக அவசியம்!

உயர்ந்த சொத்து!


ராதேக்ருஷ்ணா!

உன் உடல் என்னும் சொத்தை 
நீ ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டாலே,
பாதிக்கு பாதி செலவு நன்றாக 
குறைந்து விடும்! உன் உடலை 
போலே உயர்ந்த சொத்தில்லை!

ஜாக்கிரதை!


ராதேக்ருஷ்ணா!

சிலர் ஆரம்பத்தில் நன்றாக
பழகுவார்கள்! திடீரென்று தான் 
பழகினவரைப் பற்றியே தவறாக 
பேசுவார்கள்! மிகவும் மோசமான 
குணம் இது! ஜாக்கிரதை!

Sunday, August 26, 2012

நாம ஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா!

உடல் நம்மை பல சந்தர்ப்பங்களில் 
படாத பாடு படுத்தி விடும்! மனமும் 
அதனோடு சேர்ந்து நம்மை 
கஷ்டப்படுத்தும்! நிறைய நாம 
ஜபம் செய்து வருவாய்!

நன்றியே கிடையாது!


ராதேக்ருஷ்ணா!

நாம் உடலை கொண்டாடுகிறோம்!
ஆனால் அதற்கு நன்றியே கிடையாது!
ஏனெனில் அது சிந்திப்பதில்லை! அது 
நம்மை வியாதியோடு சேர்ந்து 
கொண்டு நம்மை படுத்தும்!

Saturday, August 25, 2012

நிதானம்!


ராதேக்ருஷ்ணா!

மனதை ஒரு நிதானத்தில் 
வைத்தால் நாம் உலகையே 
வசப்படுத்தலாம்! நாம் இந்த 
உலகிற்கு அடிமைபட்டவர் 
அல்ல! அதனால் இந்த 
உலகை வெல்ல முடியும்!

க்ருஷ்ண நாமம்!


ராதேக்ருஷ்ணா!

மனதில் துன்பம் வரும்போதெல்லாம் 
உடனே வேகமாக க்ருஷ்ண நாமத்தை 
ஜபிப்பாய்! அவனைத் தவிர நம் துன்பத்தை 
வேறு யார் நம் துன்பத்தை களைவர்?

சாந்தம்...


ராதேக்ருஷ்ணா!

மனதை எப்போதும் சாந்தமாக 
வைத்துக்கொள்! உன் சமாதானம் 
உன்னிடமே உள்ளது! உன் நிம்மதி 
உனக்குள்ளே தான் இருக்கிறது!
உன்னை க்ருஷ்ணனிடம் தந்துவிடுவாய்!

Friday, August 24, 2012

வெறுப்படையாதே!


ராதேக்ருஷ்ணா!

மனிதர்களைக் கண்டு நீ 
வெறுப்படைந்தால் நிச்சயம் 
உனக்குத்தான் கவலை! யாரும் 
நீ சொல்வதை கேட்கப்போவதில்லை!
அவரவர் இஷ்டமே அவரவருக்கு முக்கியம்!

அப்படியே ஏற்றுக்கொள்...


ராதேக்ருஷ்ணா!

யாரிடமும் நாம் வெறுப்பைக்
காட்டக்கூடாது! மனிதர்கள் 
ஒவ்வொருவரும் ஒரு விதம்!
யார் எந்த சமயத்தில் எப்படி 
இருக்கிறார்களோ நீ 
அப்படியே ஏற்றுக்கொள்...

சௌக்கியமாய் சேவித்தோம்!


ராதேக்ருஷ்ணா!

நேற்று மாலை திருநீர்மலை 
நீர் வண்ண பெருமாளை 
சௌக்கியமாய் சேவித்தோம்! அவர் 
எங்களை நினைக்கும்போதெல்லாம் 
எங்களை உடனே அழைக்கிறார்!
என்னே கருணை!

Wednesday, August 22, 2012

உய்ய வந்த பெருமாள்!


ராதேக்ருஷ்ணா!

உய்ய வந்த பெருமாள் எங்களுக்கு 
விசேஷமாய் காட்சி தந்தார்!
எங்களை ஏகாந்தமாக தரிசிக்க 
வைத்தார்! எங்களை உய்விக்க 
வந்த பெருமாள் இவர்தான்...

Tuesday, August 21, 2012

சொல்வாய் அப்பனே!!


ராதேக்ருஷ்ணா!
குருவாயூரப்பா...நான் இந்த குருவாயூரில் 
உன்னுடைய தாசனாக, குழந்தையாக 
அலைந்து கொண்டு பாகவதம் வாசிக்கும் 
நாள் என்று வரும்? சொல்வாய் அப்பனே!!

குருவாயூரப்பா...அருள் செய்வாய்!


ராதேக்ருஷ்ணா!

குருவாயூரப்பா...உன்னுடைய பூந்தானம் 
போல் அடியேன் பாகவதம் வாசிக்க 
வேண்டும்! உனது நாராயண பட்டத்ரி 
போல் நாராயணீயம் ஜபிக்க 
வேண்டும்! அருள் செய்வாய்!

பலருக்கும் குழந்தை!


ராதேக்ருஷ்ணா!

குருவாயூரப்பனை பார்த்துவிட்டேன்! 
அவனை காத்திருந்து தரிசித்தோம்! 
எத்தனை ஜனங்கள் அவனிடம் 
பக்தியோடு இருக்கிறார்கள்! இவன்
 பலருக்கும் குழந்தை தான்!

Monday, August 20, 2012

குருவாயூரப்பா...


ராதேக்ருஷ்ணா!

குருவாயூரப்பா...உனது திருவடியை 
கதி என்று நம்பி வந்திருக்கிறோம்!
எனக்கு ஒன்றுமே தெரியாது!
உன்னை அனுபவிக்க எங்களுக்கு 
நல்ல பக்தியை தாடா...

விசேஷ கிருபை...


ராதேக்ருஷ்ணா!

குருவாயூரப்பனை தொழ நாங்கள் 
காத்திருக்கிறோம்! அவன் தன்னுடைய 
விசேஷ கிருபையால் மட்டுமே நாங்கள் 
அவனை தரிசிக்க வந்திருக்கிறோம்!
இது சத்தியம்!

உத்தமமான அனுக்ரஹம்!


ராதேக்ருஷ்ணா!

குருவாயூருக்கு வந்து விட்டேன்! 
குருவாயூரப்பன் எங்களை அவனுடைய 
ஊருக்கு அழைத்துவிட்டான்! எல்லாம் 
அவனுடைய உத்தமமான 
அனுக்ஹத்தினால் மட்டுமே...

Sunday, August 19, 2012

எத்தனை அதிசயங்கள்!


ராதேக்ருஷ்ணா!

ஒரே பூமியில் ஒரு பக்கம் 
குளிரான மலை பிரதேசம்!
இன்னொரு புறம் சுட்டெரிக்கும் 
பாலைவனம்! இறைவனின் படைப்பில் 
எத்தனை எத்தனை அதிசயங்கள்!
வெகு ஜோர்!

மலை அருவி!


ராதேக்ருஷ்ணா!

மலையிலிருந்து விழும் அருவி 
சுத்தமான மூலிகை தண்ணீர்!
நிஜமாகவே இயற்க்கை தரும் 
எல்லாமே மிக உயர்ந்தது தான்!
இயற்கை அன்னையே நீ 
என்றும் வாழ்க!

Saturday, August 18, 2012

மழை...


ராதேக்ருஷ்ணா!

வான் தரும் மழைக்கு ஈடு 
இந்த உலகில் வேறு ஒன்றுமில்லை! 
சுத்தமான நீர் என்பது மேகத்தில் 
உள்ள நீரே! க்ருஷ்ணனின் ஆசை
 நம் மீது துளித் துளியாய்!

வினோதம்!


ராதேக்ருஷ்ணா!

காடுப்பூக்களுக்கு மணமில்லை! ஆனால் 
அழகுக்கு குறைவில்லை! இது போலே
 தான் மனிதர்களில் சிலர்! நல்ல 
அழகில்லை! ஆனால் அற்புதமான 
குணம் உண்டு! வினோதம்!

சற்று கேட்போம்!


ராதேக்ருஷ்ணா!

மலையும், அருவியும், மழையும், காடும்,
சில் வண்டுகளின் சப்தமும் நமக்கு 
க்ருஷ்ணனின் எல்லையில்லா கருணையை 
நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றன!
 சற்று கேட்போம்!

Friday, August 17, 2012

நிம்மதி தந்தாள்!


ராதேக்ருஷ்ணா!

கார் மேகம் போல் கருணை 
மழை பொழியும் காள மேகப் 
பெருமாளை கண்ணாரக் கண்டோம்!
என் மனதை மோகனவல்லி தயார் 
அமைதியாக்கி நல்ல நிம்மதி தந்தாள்!

மார்க்க பந்து!!


ராதேக்ருஷ்ணா!

இன்று வாழ்க்கைக்கும், மோக்ஷத்திர்க்கும் 
வழி துணையாய் வரும் மார்க்க பந்து 
பெருமாளை திருமோகூர் திவ்ய தேசத்தில் 
அருமையாய் சேவித்தோம்! எத்தனை ஜோர்!

Thursday, August 16, 2012

வெட்கம்!


ராதேக்ருஷ்ணா!

இந்த தேசம் நல்லது தான்!
நாம் தான் சரியில்லை! நாம் 
இந்த தேசத்தால் பயன் 
பெறுகிறோம்! இந்த தேசம் 
தான் நம்மால் ஒரு பயனும் 
அடையவில்லை...வெட்கம்!

குப்பை போடாதே!


ராதேக்ருஷ்ணா!

நிஜமாகவே நீ இந்த பாரத 
தேசத்தை மதிக்கிறாய் என்றால்,
இனியும் கண்ட இடங்களில் குப்பை 
போடாதே! இந்த தேசத்தை ஒரு
 நாளும் கேவலமாய் பேசாதே!

சுதந்திர தினம்!


ராதேக்ருஷ்ணா!

இன்று சுதந்திர தினம்! நிஜமாகவே 
நீ நமது சுதந்திர நாளை கொண்டாடினாயா?
அனுபவித்தாயா? நீ என்ன செய்துவிட்டாய் 
இந்த பாரத பூமிக்கு? யோசி!

Tuesday, August 14, 2012

விட்டலனின் வாசனை!


ராதேக்ருஷ்ணா!

விட்டலனின் மீது என்ன 
அற்புதமான வாசனை! அவனை 
தொட்டவுடன் என் கைகளில் 
எத்தனை மணம்...இன்னும் 
என் மனத்திலும், மூக்கிலும் 
ஜோராக வாசனை வருகிறது!

என்று தொடுவேன்?


ராதேக்ருஷ்ணா!

விட்டலா...திரும்பவும் நான் 
எப்பொழுது உன்னைக் காண்பேன்?
என்று இந்த கையால் உன்னை 
தொடுவேன்? என்று என் வாயார 
உன் நாமத்தை சொல்லி 
பண்டரிபுரத்தில் ஆடுவேன்?

அருமையான தரிசனம்!


ராதேக்ருஷ்ணா!

விட்டலனிட்ம் மனமார பிரார்த்தனை 
செய்ததற்கு பகவான் அருமையான 
தரிசனம் தந்தான்! அவனுடைய எல்லையில்லாத 
கருணையை அனுபவித்தேன்! விட்டலா!

Monday, August 13, 2012

பிரார்த்தனை செய்யுங்கள்!


ராதேக்ருஷ்ணா!

சந்த்ரபாகாவில் துளி கூட ஜலமில்லை!
மனது கனத்தது! எல்லோரும் நன்றாக 
பிரார்த்தனை செய்யுங்கள்! எல்லோரும் 
வாழ உலகினில் வேண்டிய மழை பெய்யட்டும்!

என்ன செய்யட்டும் நான்?


ராதேக்ருஷ்ணா!

ஹே விட்டலா! உன்னை தொட்டவுடன் 
எத்தனை வாசனை எங்கள் கைகளில்!
அம்மம்மா!!!!ஐயோ...உன் திருமேனியின் 
மணம் என்னை மயக்குகிறதே! என்ன 
செய்யட்டும் நான் இங்கே?

கருணைக்கு அளவுண்டோ?


ராதேக்ருஷ்ணா!

நேற்று எங்களுக்கு பாண்டுரங்கன் 
நன்றாக தரிசனம் தந்தான்! அவன் 
எங்களைப் பார்த்ததில் மிகவும் 
சந்தோஷப்பட்டான் விட்டாலன்! அவன் 
கருணைக்கு அளவுண்டோ இங்கே?

Sunday, August 12, 2012

ஆசீர்வாதம் செய்!


ராதேக்ருஷ்ணா!

ருக்குமாய்...உன் விட்டலனை 
பார்க்க எங்களுக்கு அனுமதி தா!
உன்னை நம்பித்தான் நாங்கள் 
எல்லோரும் பண்டரிபுரத்திர்க்கு வருகிறோம்!
எங்களுக்கு ஆசீர்வாதம் செய்!

விட்டலனின் திருவடி...


ராதேக்ருஷ்ணா!

விட்டலனின் திருவடியை பார்க்கப்போகிறோம்!
அவனின் திருவடியை பிடிக்கப்போகிறோம்!
அவனை திருடி வீட்டிற்கு கொண்டுவரப்போகிறோம்!
வா விட்டலனை கொள்ளையடிப்போம்...

காண கண் கோடி வேண்டும்!


ராதேக்ருஷ்ணா!

பாண்டுரங்கனை காண செல்கிறோம்!
நீங்களும் எங்களோடு வாருங்கள்!
நமது விட்டலனை பார்க்க காண கண் 
கோடி வேண்டும்! விட்டலா எங்களுக்கு 
நல்ல தரிசனம் தா...

Saturday, August 11, 2012

கோவிந்தா கோவிந்தா...


ராதேக்ருஷ்ணா!

மழை பெய்கிறது! ஜனங்கள் 
கோவிந்தா கோவிந்தா என்று 
சொல்லுகிறார்கள்! பானையோ 
5 மாடி 10 மாடி உயரத்தில் 
இருக்கிறது! உடைக்க 
வட்டமாய் ஏறுகிறார்கள்..

உரியடி கொண்டாடுகிறார்கள்!


ராதேக்ருஷ்ணா!

மகாராஷ்ட்ராவில் அத்தனை பேரும் 
ஆனந்தமாக உரியடி கொண்டாடுகிறார்கள்!
கோவிந்தா என்று வாயார அழைத்து 
தயிர் பானையை உடைத்து ஆடுகிறார்கள்...

ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!

ராதேக்ருஷ்ணா!

இன்று இரவு த்வாரகா நாதனுக்கு 
ஜன்மாஷ்டமி! இரவு 11 30 மணி 
அளவில் நமது தூர்தர்ஷன் 
தொலைக்காட்சியில் இரவு கண்டு 
மகிழ்வீர்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!

Friday, August 10, 2012

வாரீர் கோபியரே!


ராதேக்ருஷ்ணா!

இன்று நம் க்ருஷ்ணனின் பிறந்தநாள்!
நாம் ஆனந்தமாய் கொண்டாடுவோம்!
நாம் அனைவரும் எல்லாவற்றையும் 
மறந்து அவனோடு ஆடிப் பாடி 
மகிழ்வோம்! வாரீர் கோபியரே!

ஆவலோடு காத்திருக்கிறான்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனுக்கு என்ன வண்ணத்தில் 
வஸ்திரம் வாங்கினாய்? க்ருஷ்ணனுக்கு 
என்ன பக்ஷணம் எல்லாம் தரப்போகிறாய்?
அவன் ஆவலோடு உனக்காகக் 
காத்திருக்கிறான்! நீயும்தானே?

கோகுலாஷ்டமி!


ராதேக்ருஷ்ணா!

இன்று கோகுலாஷ்டமி! மனது 
நிறைய உன் க்ருஷ்ணனை வா 
என்று அழை! இன்று இரவு 
அவன் உன் வீட்டிற்கு  ரஹசியமாய் 
வரப்போகிறான்! வரவேற்க தயாராகு!

Thursday, August 9, 2012

க்ருஷ்ணனை விடாதே!


ராதேக்ருஷ்ணா!

உன் வீட்டில் க்ருஷ்ணனை பிடித்து 
வைத்துக்கொள்! அவனை விடாதே!
அவனுக்கு நீ  தாசநாக/தாசியாக 
மாறிவிடு! அவனுக்கு கைங்கர்யம் 
செய்து வாழ்வை அனுபவி!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP