Friday, January 28, 2011

க்ருஷ்ணனின் லக்ஷியம்!


ராதேக்ருஷ்ணா

உன்னை ஆனந்தக்கடலில் திளைக்க
வைப்பதே க்ருஷ்ணனின் லக்ஷியம்!
அதற்கு நீ க்ருஷ்ணனை முழுமையாக
நம்பினால் போதும்! மற்றவைகளை
அவன் செய்வான்!

க்ருஷ்ணனுக்கு தெரியும்!


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய அனைத்தும் க்ருஷ்ணனுக்கு
நன்றாகவே தெரியும்! அதனால்
க்ருஷ்ணனிடம் எல்லாவற்றையும் 
சொல்லிவிட்டு நிம்மதியாக வாழ்!
அதையே க்ருஷ்ணன் விரும்புகிறான்!

பகவான் க்ருஷ்ணனின் குழந்தை!


ராதேக்ருஷ்ணா

உன் எண்ணங்கள் உயர்ந்ததோ 
அல்லது தாழ்ந்ததோ, நீ நிச்சயம்
பகவான் க்ருஷ்ணனின் குழந்தை!
நிச்சயம் ஒரு நாள் நீ பகவானின்
இஷ்டப்படி வாழ்வாய்! 

Thursday, January 27, 2011

சுவாமி ராமானுஜரின் சொத்து!


ராதேக்ருஷ்ணா

ஸ்ரீ கூரத்தாழ்வான் எப்பொழுதும்
தன்னை சுவாமி ராமானுஜரின் 
சொத்தாகவே நினைத்திருந்தார்!
தன குரு ராமானுஜரை காக்க 
அவரின் காவியை உடுத்தினவர்!

ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருநக்ஷத்திரம்!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்
ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருநக்ஷத்திரம்!
கோடீஸ்வரனான கூரேசர் எல்லோரிடமும்
சமமாக பழகுவார்! அவரை நினை...

Tuesday, January 25, 2011

அன்பு மட்டும்தான்!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களை நீ ஜெயிக்க ஒரே 
ஆயுதம் அன்பு மட்டும்தான்!
உலகில் என்றுமே தோற்காத
ஆயுதம் அன்பு மட்டுமே! 
அன்பினால் முடியாதது 
எதுவுமில்லை! புரிந்துகொள்!

அமைதியாக இரு!


ராதேக்ருஷ்ணா

எல்லோரிடமும் நீ அன்பாக 
இரு! அவர்கள் அந்த அன்பை
உதாசீனப்படுத்தினால்
கவலைப்படாதே! அது அவர்கள்
ஸ்வபாவம் என்று விட்டு விடு!
அமைதியாக இரு!

விடாமல் நாம ஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா

உறவுகள் பலவிதம்! ஒவ்வொருவரும்
ஒரு ரகம்! இதற்கு நடுவில் 
தான் வாழவேண்டும்! அதற்கு
ஒரே வழி விடாமல் நாம ஜபம்
செய்வது மட்டுமே! 
செய்தால் சந்தோஷம்!

முயற்சி தேவை!


ராதேக்ருஷ்ணா

பொறாமையினால்தான் பலர் 
தங்களுக்கு கிடைத்த வாழ்வை
அவமதிக்கிறார்கள்! உயர்ந்த
இடத்தை அடைய நினைப்பது
தவறில்லை! அதற்கு
முயற்சி தேவை!

சமர்ப்பணம் செய்துவிடு!


ராதேக்ருஷ்ணா

எப்பொழுதெல்லாம் உன் மனதில்
பொறாமையின் சின்னங்கள் 
தோன்றுகிறதோ, அப்பொழுதே 
உடனே அதை க்ருஷ்ணனுக்கு 
சமர்ப்பணம் செய்துவிடு! 
அப்பொழுதுதான் நீ வெல்வாய்!

பொறாமை...


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு முறையும் உனக்கு
உன்னை விட பெயரும் புகழும்
அடைந்தவர்களை பார்க்கும்பொழுது
மனதில் ஒரு துக்கம் வந்தால்
அதற்கு பெயர் தான் பொறாமை...

திருமழிசை ஆழ்வார் வாழ்க!


ராதேக்ருஷ்ணா

நன்றாக படுத்திருந்த திருக்குடந்தை
ஆரவாமுதப் பெருமாளை கிடந்தவாறு
எழுந்திருந்து பேசு என்று சொல்லி
எழுப்பிய திருமழிசை ஆழ்வார் வாழ்க!

அற்புதமான யோகி...


ராதேக்ருஷ்ணா

இன்று திருமழிசை ஆழ்வாரின்
திருநக்ஷத்திரம்! திருவெக்கா
பெருமாளை கணிகண்ணனுக்காக 
எழுப்பி அழைத்துக்கொண்டு போன
பக்திசாரர்! அற்புதமான யோகி...

க்ருஷ்ணனின் விளையாட்டு ஸ்தலம்!


ராதேக்ருஷ்ணா

குடும்பம் என்பது க்ருஷ்ணனின்
விளையாட்டு ஸ்தலம்! நீ அந்த
விளையாட்டு ஸ்தலத்தில் ஒரு
நபர்! யாரையும் அவமதிக்க 
உனக்கு அங்கே உரிமையில்லை!
ஆனந்தம்!

Saturday, January 22, 2011

உடனே செய்!


ராதேக்ருஷ்ணா

பகவான் உன்னை எல்லோருக்கும்
உன்னால் முடிந்த அளவு உதவி
 செய்யும் நிலையில் வைத்துள்ளான்!
அதனால் சந்தோஷமாக உன்னால்
முடிந்த உதவிகளை உடனே செய்!

கோவிலுக்கு நிறைய கொடு!


ராதேக்ருஷ்ணா

கோவிலுக்காக நீ தரும் பணம் 
உன்னுடைய தலைமுறைகளுக்கு
சேமிப்பாகும்! அதனால் கோவில்களுக்கு
பணம் தர ஒரு நாளும்
யோசிக்காதே! இன்றே 
கோவிலுக்கு நிறைய கொடு!

செலவுக் கணக்கில் வராது!


ராதேக்ருஷ்ணா

கோயிலுக்காகவும், பகவானுக்காகவும்
சத்சங்கத்திற்காகவும், பக்தர்களுக்காகவும்
நீ உபயோகப்படுத்தும் பணம், நிச்சயம்
செலவுக் கணக்கில் வராது!

Thursday, January 20, 2011

க்ருஷ்ணனே செய்கிறான்...


ராதேக்ருஷ்ணா

உன்னை விட பெரிய காரியம்
செய்தவர்கள் பலர் உலகில்
அமைதியாக இருக்கின்றனர்!
உன் மூலமாக பெரிய 
காரியங்களை க்ருஷ்ணனே 
செய்கிறான் என்பதை நினை!

முடிவு செய்பவன் கண்ணனே...


ராதேக்ருஷ்ணா

நீ உலகில் பெரிய காரியம்
செய்துவிட்டதாக நீ நினைக்கலாம்! 
ஆனால் அது பெரிய காரியமா
இல்லை சிறிய காரியமா என்று
முடிவு செய்பவன் கண்ணனே...

ஏன் இத்தனை அஹம்பாவம்?


ராதேக்ருஷ்ணா

என்ன பெரிய காரியத்தை 
செய்துவிட்டாய் என்று இத்தனை
அஹம்பாவம்? உன் தேவைக்கான
காரியங்களை நீ செய்துகொண்டாய்!
இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?

கொண்டாடு!

ராதேக்ருஷ்ணா

இதே தை புனர்வசு நக்ஷத்திரத்தில்
 தான் சுவாமி ராமானுஜர் வெள்ளை
வஸ்திரம் உடுத்திக்கொண்டு மேல்கோட்டை
திருநாராயனபுரத்தில் நுழைந்தார்!
கொண்டாடு!

கொண்டாடு!

ராதேக்ருஷ்ணா

இதே தை புனர்வசு நக்ஷத்திரத்தில்
 தான் சுவாமி ராமானுஜர் வெள்ளை
வஸ்திரம் உடுத்திக்கொண்டு மேல்கோட்டை
திருநாராயனபுரத்தில் நுழைந்தார்!
கொண்டாடு!

வாயில் கை விட்டேனோ எம்பாரைப் போலே...

ராதேக்ருஷ்ணா

பாம்பின் வாயிலும் கை விட்டு
அதன் நாக்கில் தைத்திருந்த
முள்ளை எடுத்து அதற்கும்
உதவி செய்த மகாத்மா
எம்பார் கோவிந்தர்! என்ன
ஒரு ஜீவ காருண்யம்!

ஸ்ரீ எம்பார் கோவிந்தரின் திருநக்ஷத்திரம்!

ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ எம்பார் கோவிந்தரின்
திருநக்ஷத்திரம்! தை மாதம்
புனர்வசு நக்ஷத்திரத்தில் 
கருடாழ்வாரின் அம்சத்தோடு 
பிறந்த உத்தமர்! எம்பார் வாழ்க!

Wednesday, January 19, 2011

உன்னை தயார் செய்!

ராதேக்ருஷ்ணா

இருப்பவருக்கு உதவ உலகில்
கோடி பேர் உண்டு! 
இல்லாதவர்க்கு உதவ உலகில்
சிலர் கிடைப்பதும் மிக
துர்லபம்! இல்லாதவருக்கு
உதவ நீ உன்னை தயார் செய்!

உன் தர்மம்!

ராதேக்ருஷ்ணா

உலகில் பெருமைக்காக 
அடுத்தவருக்கு உதவுபவர் பலர்!
மறந்தும் அந்தக் கூட்டத்தில்
ஒருவராகி விடாதே! உதவி
செய்வது உன் தர்மம்!
அதை புரிந்து நட...

கொஞ்சம் உலகையும் பார்!

ராதேக்ருஷ்ணா

இன்று இறைவன் கொடுத்த
வாழ்க்கையில் எத்தனை பேருக்கு
எத்தனை நல்லது செய்யப்போகிறாய்?
நீ மட்டுமே சுகமாக வாழ்ந்தால்
போதுமோ? கொஞ்சம் 
உலகையும் பார்!

சுய சோதனை செய்...

ராதேக்ருஷ்ணா

உனது மனது வாழ்வில்
வெற்றி அடைவதற்கான எல்லா
வழிகளையும் உன்னிப்பாக
கவனிக்கிறதா என்று அவ்வப்பொழுது
சுய சோதனை செய்து பார்!
வழி தெரியும்!

கற்றுக்கொள்!

ராதேக்ருஷ்ணா

கற்றுக்கொள்! ஒவ்வொரு தவறிலும்
ஒரு பாடம் ஒளிந்துகொண்டிருகிறது!
அதை நீ தெரிந்து கொள்ளவேண்டும்!
அடுத்த முறை மீண்டும் அதே
தவறு நிகழாமல் கற்றுக்கொள்!

பொறாமை படக்கூடாது!

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் நீ முன்னேறவேண்டும்!
அது மிகவும் முக்கியம்!
ஆனால் உனக்கு அதற்கான
வழி தெரியவில்லை என்பதற்காக
அடுத்தவர் மீது பொறாமை
படக்கூடாது!

Monday, January 17, 2011

பீஷ்மரே வாழ்க!

ராதேக்ருஷ்ணா

பீஷ்மர் கண்ணனின் சத்தியத்தையே
மாற்றிக் காட்டினவர்! அவருக்காக
கண்ணன் என்ன வேண்டுமானாலும்
செய்வான்! விஷ்ணு சஹஸ்ரநாமம் 
சொன்ன பீஷ்மரே வாழ்க!

பீஷ்ம ஏகாதசி!

ராதேக்ருஷ்ணா

இன்று பீஷ்ம ஏகாதசி!
இன்றுதான் பீஷ்ம பிதாமஹர்  
தன உடலை நீத்து மோக்ஷம
அடைந்த புண்ணிய நாள்!
பீஷ்மரே! உம்மைப் போல் திட
வைராக்கியம் தாரும்!

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!

ராதேக்ருஷ்ணா

கண்ணன் மாடு மேய்த்தான்!
கண்ணன் மாடுகளை காப்பாற்றினான்!
கண்ணன் மாடுகளை கொண்டாடினான்!
எல்லோரும் மாடு மேயப்போம்!
வாழ்வை அனுபவிப்போம்!
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!

ஹிந்து பொங்கல்!

ராதேக்ருஷ்ணா

பொங்கலோ பொங்கல்! 
இது ரங்கராஜ பொங்கல்!
இது ஸ்ரீநிவாச பொங்கல்!
இது வரதராஜ பொங்கல்!
இது பத்மநாப பொங்கல்!
இது வைத்தமாநிதி பொங்கல்!
இது ஹிந்து பொங்கல்!

நாமஜப பொங்கல்!

றாதேக்ருஷ்ணா

பொங்கலோ பொங்கல்! இது
ஆண்டாள் பொங்கல்! இது
க்ருஷ்ண சைதன்ய பொங்கல்!
இது மீரா பொங்கல்! இது
துகாராம் பொங்கல்! இது 
ராமானுஜப் பொங்கல்! இது
நாமஜப பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

ராதேக்ருஷ்ணா

பொங்கலோ பொங்கல்! இது
பக்திப் பொங்கல்! இது ஞானப் 
பொங்கல்! இது ராதிகா பொங்கல்!
இது க்ருஷ்ணப் பொங்கல்!
இது பிருந்தாவனப் பொங்கல்!
இது பாகவதப் பொங்கல்!

வாழ்வே தவம்!

ராதேக்ருஷ்ணா

செலவைக் குறைப்போம்! 
இல்லாதவர்க்கு உதவி செய்வோம்!
அறியாமையை இல்லாமல் செய்வோம்!
அறிவை பகிர்ந்து வாழ்வோம்!
உலகைக் காப்போம்! உயிர்களை
மதிப்போம்! வாழ்வே தவம்!

வாழ்வோம்...

ராதேக்ருஷ்ணா

வெறுப்பைக் களைவோம்! அன்பில்
திளைப்போம்! பயத்தைக் களைவோம்!
தைரியத்தை வளர்ப்போம்! பிரிவினையைக்
களைவோம்! ஒற்றுமை காண்போம்!
மரணத்தை வெல்வோம்! வாழ்வோம்...

வாழ்ந்து காட்டுவோம்!

ராதேக்ருஷ்ணா

பழையன கழிவோம்! புதியன
புகுவோம்! அகம்பாவங்களை 
கழிப்போம்! வினயத்தில் புகுவோம்!
சுயநலத்தை கழிப்போம்! உன்னத
அன்பில் புகுவோம்! வா 
வாழ்ந்து காட்டுவோம்!

Friday, January 14, 2011

உயர்வான எண்ணங்கள்...

ராதேக்ருஷ்ணா

உன்னை யாரும் படுத்தவில்லை!
நீ தான் உன்னை படாதபாடு
படுத்திக்கொள்கிறாய்! உன்
எண்ணங்கள் எத்தனை உயர்வாக
இருக்கிறதோ அத்தனை உயரம்
நீ செல்வாய்!

உன் எண்ணங்கள்...

ராதேக்ருஷ்ணா

எண்ணங்களே உன் வாழ்க்கை!
உன் வாழ்க்கையை யாரும் 
நிர்ணயம் செய்யவில்லை! உன்
எண்ணங்களே உன் வாழ்வின் 
சகலத்தையும் நிர்ணயம் செய்கிறது
என்பதை புரிந்துகொள்!

எண்ணங்களை சரி செய்!

ராதேக்ருஷ்ணா

உன் எண்ணங்களே நீ! இதை
நன்றாக புரிந்துகொள்! உன்
எண்ணங்களை யாரும் தடுக்க 
முடியாது! யாரும் அழிக்க 
முடியாது! அதனால் எண்ணங்களை
சரி செய்து வாழ்!

Wednesday, January 12, 2011

நிரந்தர சம்மந்தம்!

ராதேக்ருஷ்ணா

நீ மஹாபாபியாகவே இருந்தாலும்
உன் கண்ணன் உன்னை விட்டு
போகவேமுடியாது! அவனே 
நினைத்தாலும் உன்னை கைவிட
முடியாது! அவனோடு அப்படி ஒரு
சம்மந்தம் நமக்கு!

கண்ணனே கதி!

ராதேக்ருஷ்ணா

கண்ணனோடு நமக்கு இருக்கும்
உறவு மட்டுமே நிரந்தரமானது!
மற்ற எல்லா உறவுகளும் வெளி
வேஷமே! அதனால் உன் 
கண்ணனை இறுக்கி 
பிடித்துக்கொள்! அவனே கதி!

வேறு யார் காப்பாற்றுவார்?

ராதேக்ருஷ்ணா

அறிவு ஒன்றும் நமக்கு இல்லை
என்ற புத்தி வந்தாலே 
கண்ணன் நம்மைத் தேடி 
வருவான்! குறை ஒன்றும்
 இல்லாத கோவிந்தனை விட
வேறு யார் நம்மை
காப்பாற்றமுடியும்?

கூடாரவல்லி பண்டிகை வாழ்த்துக்கள்!

ராதேக்ருஷ்ணா

அனைவருக்கும் கூடாரவல்லி பண்டிகை 
வாழ்த்துக்கள்! எல்லோரும் ஒன்று 
சேருவோம்! ஹிந்து தர்மத்தை
இன்னும் நன்றாக அனுபவிப்போம்!
இன்னும் நிறைய பக்தி செய்வோம்!

கண்ணன் இஷ்டப்படி...

ராதேக்ருஷ்ணா

இந்த கூடாரவல்லியில் நம்முடைய
காமம், கோபம், பொறாமை,
வெறுப்பு போன்ற விரோதிகளை
கண்ணன் வெல்லட்டும்! நாம்
அவனுடைய இஷ்டப்படி இருந்தால்
அது போதும்!

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!

ராதேக்ருஷ்ணா

இன்று கூடார வல்லி! நாம்
க்ருஷ்ணனை கொண்டாடி அனுபவிக்க
மிக அற்புதமான நாள்! கூடாரை 
வெல்லும் சீர் கோவிந்தா! உந்தன்னை 
நாங்கள் பிரியவேகூடாது!

Tuesday, January 11, 2011

மேனி சிலிர்த்தோம்!

ராதேக்ருஷ்ணா



திரு ஆதனூரில் அற்புதமான
ஆண்டளக்கும் ஐயனை கண்ணாரக்
கண்டு மேனி சிலிர்த்தோம்! 
எத்தனை அழகாக சிரிக்கின்றான்
இந்த மரக்காலை 
வைத்து படுத்திருப்பவன்!

அழகு பெட்டகம்!

ராதேக்ருஷ்ணா


திருப்புள்ளம் பூதங்குடியில் ஜடாயுவுக்கு
மோக்ஷம் கொடுத்திவிட்டு சிறிது
இளைப்பாறின வல்வில் ராமனை
தரிசித்தோம்! அழகு பெட்டகம்
இந்த வல்வில் ராமன்!

Monday, January 10, 2011

பகவானின் லீலை!

ராதேக்ருஷ்ணா

இன்று பகவானின் லீலையை
நான் என்னவென்று சொல்வது?
அவன் எங்களை தொண்டரடிப்பொடி
ஆழ்வாரின் அவதார ஸ்தலமான
திருமண்டங்குடிக்கு அழைத்து
சென்றான்!

ஒப்பிலியப்பன் கோயில்!

ராதேக்ருஷ்ணா

இப்பொழுது நாங்கள் ஒப்பிலியப்பன்
கோயிலுக்கு சென்றுகொண்டிருக்கிறோம்!
என் ஒருவனையே சரணம் அடை
என்று சொல்லும் பெருமாளை தரிசிக்கப்
போகிறோம்! நீங்களும் வாருங்கள்!

கோடி நமஸ்காரங்கள்!

ராதேக்ருஷ்ணா

காட்டு மன்னார் கோயில்
இல்லை என்றால் நிச்சயம்
நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
நமக்கு கிடைத்திருக்காது!
காட்டு மன்னார் கோயிலே
உனக்கு கோடி நமஸ்காரங்கள்!

காட்டு மன்னார் கோயில்...

ராதேக்ருஷ்ணா

இன்று ஆனந்தமாக காட்டு
மன்னார் கோயிலில், வீர நாராயண
பெருமாளை சேவித்தோம்! ஸ்ரீ 
நாத முனிகளையும், ஸ்ரீ 
ஆளவந்தாரையும் தந்த  
ஊரல்லவா!

Sunday, January 9, 2011

ஆனந்தம் உன் அடிமை!

ராதேக்ருஷ்ணா

நீ உன்னை திருப்தி செய்து
கொள்ள ஆசைப்படுவதைவிட,
உன் நெஞ்சில் இருக்கும் உன்
க்ருஷ்ணனை திருப்தி படுத்த
முயற்சித்தால், நிச்சயம்
ஆனந்தம் உன் அடிமை!

இதை கடைபிடி!

ராதேக்ருஷ்ணா

உன்னை நீ எல்லா 
சந்தர்ப்பங்களிலும் வளைந்துபோகும்
படி வைத்துக்கொண்டால், உன்னால்
எல்லா சமயங்களிலும் வாழ்வில்
ஜெயிக்கமுடியும்! இன்று முதல்
இதை கடைபிடி!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP