Wednesday, March 30, 2011

வெற்றியின் ரகசியம்!


ராதேக்ருஷ்ணா

இன்று வரை நாம ஜபம் செய்து
வாழ்வில் முன்னேறியவர்கள் பல
கோடி பேர்! உன்னாலும் முடியும்!
நாம ஜபம் உனக்கு கிடைத்த
வெற்றியின் ரகசியம்! 
பிடித்துக்கொள்!

முன்னேற்றம் காண்பாய்!


ராதேக்ருஷ்ணா

நாம ஜபம் செய்து கொண்டே 
வர, உன் வாழ்வில் பல பல 
முன்னேற்றங்களை நிச்சயம்
நீ காண்பாய்! உன் மூளை
சரியாக வேலை செய்யும்!
மனம் தெளிவாக இருக்கும்!

நாம ஜபம் செய்ய முடியும்!


ராதேக்ருஷ்ணா

எந்த வேலையை செய்து 
கொண்டிருந்தாலும் நிச்சயம் 
நாம ஜபம் செய்ய முடியும்! 
நாம ஜபம் செய்வதனால்
இன்னும் நேர்த்தியாக உன்
வேலையை செய்வாய்! 
முயற்சி செய்!

Tuesday, March 29, 2011

சும்மா புலம்பாதே!


ராதேக்ருஷ்ணா

சும்மா புலம்பாதே! என்ன
கொடுமை உன் வாழ்வில்
நடந்துவிட்டது? ஏதோ நீ 
மட்டுமே வாழ்வில் கஷ்டப்படுவதாக
நினைத்து அழாதே! தைரியமாக
வாழ்ந்து காட்டு!

வாழ்வை அனுபவி...


ராதேக்ருஷ்ணா

வாழ்வை அனுபவிக்க தெரிந்தவர்கள்
சிலரே! அனுபவிப்பது என்றால்
எது வந்தாலும் தைரியமாக
எதிர்நோக்கி ஜெயித்து நிம்மதியாக
இருப்பதே! நீ எப்படி?

உன்னத பக்தர்கள்!


ராதேக்ருஷ்ணா

வாழ்வை பாரமாக நினைப்பவர்கள்
கோழைகள்! வாழ்வை கொடுமை
என்று நினைப்பவர்கள் முட்டாள்கள்!
வாழ்வை ப்ரசாதம் என்று 
நினைப்பவர்கள் உன்னத பக்தர்கள்!

Monday, March 28, 2011

எல்லாம் கண்ணனுக்கே...


ராதேக்ருஷ்ணா

ஜனங்களிடமிருந்து நல்ல பெயரை
மட்டுமே சம்பாதித்தவர் என்று
உலகில் எவருமில்லை! சிலர்
கொண்டாடுவர்! சிலர் தூற்றுவர்!
எல்லாம் கண்ணனுக்கே 
சர்வம் அர்ப்பணம்!

ஜெயித்துவிடு!


ராதேக்ருஷ்ணா

தோல்வியே தெரியாமல் வாழ்ந்தவர்
கிடையாது! வெற்றி மட்டுமே
அறிந்தவரும் உலகில் கிடையாது!
தோல்வியை வெற்றியாய் மாற்றும்
ரஹஸ்யம் தெரிந்து ஜெயித்துவிடு!

ஆனந்தமாய் வாழ்...


ராதேக்ருஷ்ணா

வாழ்வை ரசிக்க கற்றுக்கொள்!
அவமானங்களை ஜெயிக்க கற்றுக்கொள்!
விரோதங்களை நட்பாக்க கற்றுக்கொள்!
தோல்விகளை வெற்றியாக்க கற்றுக்கொள்!
ஆனந்தமாய் வாழ்...

வாழ்ந்து பார்!


ராதேக்ருஷ்ணா

மனதை மதி! எண்ணங்களை
உயர்த்திக்கொள்! வாழ்வை நேசி!
தைரியமாக இரு! நடப்பது
நடக்கட்டும்! உன் நம்பிக்கையை 
இழக்காதே! வாழ்ந்து பார்!
வசந்தம் வரும்!

நிம்மதி...


ராதேக்ருஷ்ணா

மனதை சாதாரணமாக
வைத்துக்கொண்டு வாழ்ந்தாலே
வாழ்க்கை சத்தியமாக நன்றாக
இருக்கும்! மனதை நிதானத்தில்
வைத்துக்கொள்ளுங்கள்! 
நிம்மதி...

பரம சுகம்!


ராதேக்ருஷ்ணா

வாழ்வில் வெல்வது மிக சுலபம்!
வாழ்வை ரசிப்பது பரம சுகம்!
வாழ்வை அனுபவிப்பது உன் 
கடமை! க்ருஷ்ணனை மனதில்
நினைத்துக்கொண்டு 
வாழ்ந்து காட்டு!

கவலையே இல்லை!


ராதேக்ருஷ்ணா

என் வாழ்க்கைக்கு நான்
முக்கியத்துவம் தராவிட்டால்
வேறு யார் தான் தருவார்கள்?
என் க்ருஷ்ணன் என்னோடு 
இருக்கும்போது எனக்கு என்
வாழ்வை பற்றி கவலையே இல்லை!

வென்று காட்டுவேன்!


ராதேக்ருஷ்ணா

என்னால் முடியும்! என் வாழ்க்கை
நன்றாகவே இருக்கும்! இந்த
வாழ்வில் நான் ஜெயித்தே 
தீருவேன்! என் வாழ்வில் ஒரு
 நாளும் நான் தோற்கவே 
மாட்டேன்! வென்று காட்டுவேன்!

பல்லாயிரம் கோடி சுகங்கள்...


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை என்னும் அற்புதத்தில்
பல்லாயிரம் கோடி சுகங்கள் 
கொட்டிக்கிடக்கிறது! மனிதர் தன் 
மனம் என்னும் பலத்தைக் கொண்டு 
அதை அனுபவிக்கவேண்டும்! முடியும்!

Friday, March 25, 2011

ஒழுங்காக புரிந்துகொள்!


ராதேக்ருஷ்ணா

பக்தி என்பது நாம் சந்தோஷமாய்
வாழ்வதற்காக மட்டுமே! பக்தி
நம்மை ஒரு நாளும் கஷ்டப்படுத்தாது!
தயவு செய்து பக்தியை
ஒழுங்காக புரிந்துகொள்!

பக்தி என்பது...


ராதேக்ருஷ்ணா

பக்தி என்பது நம்மை சுகமாக
வாழ வைக்கத்தான்! பக்தி என்ற
 பெயர் கொண்டு இன்றைய 
காலத்தில் மனிதர்கள் தங்களை 
பாடாய் படுத்திக்கொள்கிறார்கள்!

அவனிஷ்டம்!


ராதேக்ருஷ்ணா

இன்று திருவனந்தபுரத்தில் 
இருக்கின்றேன்! மீண்டும்
 அனந்த பத்மநாபன் அழைக்கும்
 போது திருவனந்தபுரம் வருவேன்! 
எல்லாம் அவனிஷ்டம்!
அதுவே என் இஷ்டம்!

Thursday, March 24, 2011

கொஞ்சம் இளைத்துவிட்டான்!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ அனந்த பத்மநாப 
சுவாமி ரொம்ப அழகாக 
இருந்தார்! என் காதலன் 
என்னை காணாமல் கொஞ்சம் 
இளைத்துவிட்டான்! அவனை 
நன்றாக சமாதானம் செய்யவேண்டும்!

பத்மநாபனின் ஆசீர்வாதத்தோடு...


ராதேக்ருஷ்ணா

பத்மநாபனின் ஆசீர்வாதத்தோடு
த்வாரகா யாத்திரை சென்றோம்!
அவனுடைய அனுக்ரஹத்தோடு 
யாத்திரையை நிறைவு செய்தோம்!
எத்தனை அனுபவங்கள் பெற்றோம்!

என் காதலன்!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ அனந்த பத்மநாபரின்
திவ்யதேசத்திற்கு வந்துவிட்டேன்!
என் பத்மநாபனை கண்ட பிறகே
மனம் ஆனந்தம் அடைந்தது! என்
காதலன் அல்லவா இவன்!

Wednesday, March 23, 2011

திருநாவாய் திவ்யதேசம்!


ராதேக்ருஷ்ணா

திருநாவாய் திவ்யதேசத்தில் 
யோகிகள் பூஜித்த முகுந்தனை
ஆனந்தமாக தரிசனம் செய்தோம்!
பாரத புழா கரையில் உள்ளது
இந்த திவ்யதேசம்!

திருவித்துவக்கோடு...


ராதேக்ருஷ்ணா

திருவித்துவக்கோடு பகவானை 
ஆனந்தமாக தரிசனம் செய்தோம்!
எங்கு போய் உய்கேன் என்று ஸ்ரீ
குலசேகர ஆழ்வார் புலம்பின
திவ்ய தேசத்தை அனுபவித்தோம்!

குருவாயூரப்பா! சொல்லப்பா!


ராதேக்ருஷ்ணா

குருவாயூரப்பா! நன்றாக 
தூங்கினாயா? காலையில் 
வயிறு நிறைய சாப்பிட்டாயா?
உனக்கு பிடித்த பக்தர்களை
நிர்மால்ய தரிசனத்தில் 
கண்டாயா? சொல்லப்பா!

Tuesday, March 22, 2011

உத்தரவு போடுங்கள்!


ராதேக்ருஷ்ணா

குலசேகரா! உங்களுக்கு பகவானை
நன்றாகத் தெரியும்! இந்த
ஜீவர்களை எல்லாம் நல வழிப்
படுத்த சொல்லி தயவு செய்து
பகவானுக்கு உத்தரவு போடுங்கள்!

நிர்மலமான ஹ்ருதயம்...


ராதேக்ருஷ்ணா

ராஜாவாக இருந்தும் மண்ணாசை,
பெண்ணாசை இரண்டையும்
அலட்சியமாக உதறித்தள்ளிய
குலசேகரா! உங்களைப்போல்
எனக்கும் நிர்மலமான 
ஹ்ருதயம் தாருங்கள்!  

திருவஞ்சிக்களம்!


ராதேக்ருஷ்ணா

இன்று இப்பொழுது திருவஞ்சிக்களம்
செல்கின்றோம்! ஸ்ரீ குலசேகர ஆழ்வார்
அவதரித்த புண்ணிய ஸ்தலம் இது!
எத்தனையோ நாள் ஏங்கின
ஒரு விஷயம் இது!

Monday, March 21, 2011

திருமூழிக்களத்து அப்பன்!


ராதேக்ருஷ்ணா

லக்ஷ்மணன் பரதனை தவறாக
நினைத்ததற்கு வருந்தி 
திருமூழிக்களத்து அப்பனை 
ஆராதித்து தன் தவற்றுக்கு
 மன்னிப்பு கேட்டு
நிம்மதி அடைந்தான்!

திருமூழிக்களத்து பெருமாள்!


ராதேக்ருஷ்ணா

ஹாரித மஹரிஷிக்கு காட்சி 
கொடுத்து மோக்ஷ ரஹஸ்யத்தை  
நான்கு வர்ணத்தாரும் அடையும்
ரஹஸியத்தை சொன்னவர் இந்த
திருமூழிக்களத்து பெருமாள்!

லக்ஷ்மணன் ஆராதனை செய்த பெருமாள்!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுதுதான் லக்ஷ்மணன் 
ஆராதனை செய்த திருமூழிக்களம் 
பகவானை தரிசனம் செய்துவிட்டு
வந்தோம்! எத்தனை அற்புதமான
கோயில்! மூர்த்தி மிக அழகு! 

க்ருஷ்ணனிடம் மட்டுமே மயங்கு!


ராதேக்ருஷ்ணா

மனமே நீ மனிதர்களிடம்
மயங்கி ஏன் உன்னை பாடாய்
படுத்திக்கொள்கிறாய்? மனமே
நீ க்ருஷ்ணனிடம் மட்டுமே
மயங்கினால் உனக்கு ஒரு 
நாளும் துக்கம் என்பதில்லை!

தெய்வத்தை நம்புவது நல்லது!


ராதேக்ருஷ்ணா

நீ மனிதர்களை நம்பி
ஏமாந்தால் அதற்கு தெய்வம்
என்ன செய்ய முடியும்? 
தெய்வமா உன்னை மனிதர்களை
நம்பச் சொல்லியது? தெய்வத்தை
நம்புவது நல்லது!

க்ருஷ்ணனை நம்பு!


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் ஆசை வயப்பட்டவர்கள்!
மனிதர்கள் சந்தப்பவாதிகள்!
அதனால் மனிதர்களை நம்பி உன் 
வாழ்க்கையை வீணடித்துவிடாதே!
க்ருஷ்ணனை நம்பு!

த்ருஷ்டி சுத்தவேண்டும்!


ராதேக்ருஷ்ணா

ஹே ராதா! உன்னையும் 
கண்ணனையும் நிற்க வைத்து
த்ருஷ்டி சுத்தவேண்டும்! நீங்கள்
இருவரும் நன்றாக இருக்கவேண்டும்!
நாங்கள் உங்கள் அடிமைகள் அல்லவா!

வா... உடனே.. வா...

ராதேக்ருஷ்ணா

ஹே க்ருஷ்ணா! என் மீது 
வண்ணப்பொடிகளை தூவு!
நான் அதற்காக 
காத்துக்கொண்டிருக்கிறேன்!
வா... உடனே.. வா...ராதிகா
மாதா! உன்  கண்ணனிடம் 
சீக்கிரம் சொல்!

க்ருஷ்ணா! வரம் தா!


ராதேக்ருஷ்ணா

இன்று ஹோலி பண்டிகை!
 நம்முடைய அஹம்பாவத்தை
அழித்து நாம் வாழ்வில் பக்தி
செய்யவே ஹோலி பண்டிகை!
க்ருஷ்ணா! உன் இஷ்டப்படி
வாழ வரம் தா!

செல்லக்குட்டி!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுதுதான் நாங்கள் 
த்வாரகாவில் நகர சங்கீர்த்தனம் 
செய்து விட்டு வந்தோம்! 
கோயிலில் த்வாரகாதீசன் 
ரொம்பவே அழகாக இருக்கிறான்! 
அவன் செல்லக்குட்டி!

சௌக்கியமாயிறு !


ராதேக்ருஷ்ணா

ஹே த்வாரகாநாதா! நீ
நன்றாக இருக்க வேண்டும்!
நீ எப்பொழுதும் ஆனந்தமாக
இருக்கவேண்டும்! எங்களைப்
பற்றி எல்லாம் நீ கவலைப்
படாதே! நீ சௌக்கியமாயிறு !

சீக்கிரம் கூப்பிடு!


ராதேக்ருஷ்ணா

த்வாரகாநாதா!  இன்று இரவு
நான் உன் ராஜதானியை விட்டு
கிளம்புகிறேன்! சீக்கிரம் என்னை 
திரும்பவும் உன்னுடைய ராஜதானிக்கு
கூப்பிடு! சரியா?

Thursday, March 17, 2011

ஏனடா வரவழைத்தாய்?


ராதேக்ருஷ்ணா

ஏனடா என்னை த்வாரகைக்கு
வரவழைத்தாய்?என்னை இந்தப்
 பாடுபடுத்தவா? உன் மனம் ஏன்
என்னிடத்தில் லயப்படுவதில்லை?
நான் என்ன குற்றம் செய்தேன்? வா...

என்னோடு வந்துவிடு!


ராதேக்ருஷ்ணா

என் த்வாரகாதீசா! உன்னை
விட்டு நாளை கிளம்புகிறேன்!
நீயும் என்னோடு வந்துவிடு!
என்னை விட்டு நீ எப்படி 
இருப்பாய்? உன்னால் முடியுமா?
என்னாலும் முடியாது....

நான் அடிமை!


ராதேக்ருஷ்ணா

எத்தனை பாமர ஜனங்கள்
த்வாரகாதீசனை ரசிக்க
ஆசையோடு வருகிறார்கள்!
என் த்வாரகானாதனை 
கொண்டாடுபவர்களுக்கு நான்
அடிமை! இது சத்தியம்!

Wednesday, March 16, 2011

த்வாரகாவில் ஹோலி!


ராதேக்ருஷ்ணா

த்வாரகானாதன் இன்று தன் 
வலது கையில் ஹோலி
 தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் 
பீச்சாங்குழலையும், இடுப்பில் 
ஹோலி வண்ணப்பொடியையும்
வைத்திருந்தான்!

வண்ணப்பொடி தூவினான்!


ராதேக்ருஷ்ணா

த்வாரகானாதன் இன்று வெள்ளை
ஆடை உடுத்திக்கொண்டு, தன் பக்த 
ஜனங்களோடு சுகமாக ஹோலி 
விளையாடினான்! அவன் எல்லோர் 
மீதும் வண்ணப்பொடி தூவினானே!

கற்றுக்கொள்ளவேண்டும்!


ராதேக்ருஷ்ணா

பக்தி எப்படி செய்யவேண்டும்
என்பதை த்வாரகா ஜனங்களிடமிருந்து
நாம் கற்றுக்கொள்ளவேண்டும்!
இவர்கள் த்வாரகானாதனை
அனுபவிப்பதே தனி அழகுதான்!

Tuesday, March 15, 2011

உள்ளம் கவர் கள்வன்!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் த்வாரகாதீசன்
வித விதமாய் லீலை செய்கிறான்!
அவனுடைய லீலையில் நான் என்னை
இழந்துகொண்டிருக்கிறேன்! உள்ளம்
கவர் கள்வன் இந்த ராஜன்!

தாயை கொண்டாடுகிறான்!


ராதேக்ருஷ்ணா

உலகில பலரும் அம்மாவைக்
கொண்டாடுவதில்லை! ஆனால்
இந்த த்வாரகானாதானோ ராஜாதி
ராஜனாக இருந்தாலும் தன் தாயை
அப்படிக் கொண்டாடுகிறான்! சத்தியம்! 

நீயே அரசன்!


ராதேக்ருஷ்ணா

எல்லோரும் பகவானைக்
 கொண்டாடுவோம்! இந்த
 த்வாரகாவில் பகவான்
பக்தர்களை கொண்டாடுகிறான்!
பக்தர்களை ஆராதனை செய்யும்
த்வாரகாநாதா... நீயே அரசன்!

அன்பு நிறைந்த த்வாரகா!


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் மிக அன்போடு 
பழகும் இந்த த்வாரகா
க்ருஷ்ண சாநித்தியத்தில் 
மிக ஜோராக சிலிர்க்கிறது!
கண்ணன் பக்தர்களை இங்கே
கொண்டாடுகிறான்! 

எத்தனை அழகு!!!


ராதேக்ருஷ்ணா

கோமதி நதி சமுத்திரத்தோடு 
சங்கமிக்கும் த்வாரகா மிக
அழகாக இருக்கிறது! 
தெருவெல்லாம் பசுக்கூட்டம்!
மக்கள் பசுக்களை தெய்வமாகக் 
கொண்டாடுகின்றனர்!

கோமதி ஸ்நானம்...


ராதேக்ருஷ்ணா

இப்பொழுது பலரும் கோமதி
நதியில் சுகமாக ஸ்நானம் 
செய்துகொண்டிருக்கிறார்கள்!
எத்தனை பேர் இந்த 
த்வாரகாதீசனிடம் எவ்வளவு 
பக்தி செய்கிறார்கள்!

க்ருஷ்ணனை தா!


ராதேக்ருஷ்ணா

கோமதி நதியின் கரையில்
இந்த த்வாரகா எத்தனை 
அழகாக இருக்கிறது! ஹே
கோமதி மாதா! உன்னை 
சரணடைந்தேன்! எனக்கு 
க்ருஷ்ணனை தா! உடனே தா!

எவ்வளவு பக்தி!!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் த்வாரகாநாதன்
வித விதமாக எங்களுக்கு
அனுக்ரஹம் செய்கின்றான்!
எத்தனை ஜனங்கள் அவன் 
மீது எவ்வளவு பக்தி 
கொண்டிருக்கிறார்கள்!

ஜொலிக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

இன்று த்வாரகாதீசன் நீல வண்ண 
ஆடையில் ஜொலிக்கிறான்! முத்து
மாலைகளை உடல் முழுதும் 
போட்டுக்கொண்டு அற்புத தரிசனம்
தருகிறான்! எத்தனை சுகம்!

Friday, March 11, 2011

இது சத்தியம்!


ராதேக்ருஷ்ணா

பாகவத புஸ்தகம் எங்கு
இருக்கிறதோ அங்கே நிச்சயம் 
கண்ணன் இருக்கின்றான்! எங்கே
பாகவதம் வாசிக்கிறார்களோ 
அங்கே நிச்சயம் கண்ணன் 
வருவான்! இது சத்தியம்!

மனதில் சந்தோஷம்!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொருவரும் பாகவதம் 
வாசிக்கும்போது அத்தனை 
சுகமாக இருக்கிறது! எல்லோருமே
பகவானின் குழந்தைகள் என்கிற
தைரியம் வருகிறது! 
மனதில் சந்தோஷம்!

பாகவத பாராயணம்...


ராதேக்ருஷ்ணா

இன்று காலை பாகவத பாராயணம்
 தொடங்கினோம்! சுகமாக காலை
5:30 மணிக்கு புருஷ சூக்தம் 
சொல்லி த்வாரகாதீசனை
நினைத்துக்கொண்டு பாகவதம்!

ராதிகா க்ருஷ்ண தரிசனம்!


ராதேக்ருஷ்ணா

பேட் த்வாரகாவில் அற்புதமான
க்ருஷ்ணனையும், ஆனந்தமான 
ராதிகாவையும் கண்டோம்! என்ன
தவம் செய்தோம் நாங்கள்? ஹே
க்ருஷ்ணா! காருண்யம்
தாங்கமுடியாது!

ஆஞ்சநேயரின் புத்திரன்...


ராதேக்ருஷ்ணா

பேட் த்வாரகாவில் ஆஞ்சநேயரை
அவருடைய புத்திரன் மகரத்வஜனோடு
கண்டோம்! ஆஞ்சநேயரின் வியர்வையை
ஒரு மீன் முழுங்க அதிலிருந்து
உண்டானவன் இவன்!

பேட் த்வாரகா...


ராதேக்ருஷ்ணா

நேற்று அந்திப்பொழுதில் சுகமாக
படகில் பயணம் செய்து பேட்
த்வாரகாவைக் கண்டோம்! 
மீண்டும் இரவில் படகில் 
பயணம் செய்து மீண்டும் 
த்வரகாவிற்கு வந்தோம்!

Wednesday, March 9, 2011

ஜொலிக்கின்றான்!


ராதேக்ருஷ்ணா

இன்று த்வாரகாதீசன் பச்சை
வண்ண ஆடையில் ஜொலிக்கின்றான்!
அவனுடைய அங்கங்களில் முத்து
சுகமாக விளையாடிக்கொண்டிருக்கிறது!
எத்தனை அழகு! ஆஹா!

த்வாரகாதீசனின் தரிசனம்!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுது நாங்கள் த்வாரகாதீசனை
தரிசிக்கப் போகிறோம்! நீங்களும் 
எங்களோடு த்வாரகாதீசனை 
தரிசிக்க வாருங்கள்! எல்லோரும் 
க்ருஷ்ணனின் குழந்தை!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP