Saturday, May 28, 2011

நன்றாக அனுபவி!


ராதேக்ருஷ்ணா

உன் க்ருஷ்ணனை எப்படி 
வேண்டுமானாலும் அனுபவிக்க
உனக்கு அதிகாரம் உண்டு! அதை
 தடுத்து நிறுத்தும் அதிகாரம் 
யாருக்கும் ஒரு நாளும் 
இல்லை! நன்றாக அனுபவி!

செல்லக் குழந்தை...


ராதேக்ருஷ்ணா

நீ என்றுமே உன் க்ருஷ்ணனுக்கு
குழந்தைதான்! உன் உடலுக்கு 
எத்தனை வயசானாலும் நீ
என்றுமே உன் க்ருஷ்ணனுக்கு 
செல்லக் குழந்தைதான்!
உன்னை தள்ளமாட்டான்!

நீ க்ருஷ்ண குழந்தை...


ராதேக்ருஷ்ணா

குழந்தை போல் குதூகலமாய்
இரு! உன்னுடைய எல்லா வெற்றி 
தோல்விகளையும் மறந்துவிட்டு நீ
க்ருஷ்ண குழந்தை என்ற நினைவுடன்
வாழ்ந்தால் சுகம் உண்டு! 

Thursday, May 26, 2011

பெரிய சொத்து...


ராதேக்ருஷ்ணா

மனம் என்பது உலகில் எங்கும்
வாங்க முடியாத பொருள்!
அதை யாரும் உனக்கு
கடனாக தர முடியாது!
உன்னிடம் இருக்கும் பெரிய 
சொத்தே உன் மனம் மட்டும் தான்!

ஒழுங்காக வைத்துக்கொள்!


ராதேக்ருஷ்ணா

மனதைக்கொண்டு தான் பக்தி
செய்ய முடியும்! அந்த மனதை நீ 
ஒழுங்காக வைத்துக்கொள்ளாவிட்டால்
நீ என்ன சுகத்தை அனுபவிப்பாய்? 
உன் மனம்! உன் ஆனந்தம்!

க்ருஷ்ணனுக்கு பிடித்தது!


ராதேக்ருஷ்ணா

உன் மனம் க்ருஷ்ணனுக்கு மிகவும்
பிடித்த ஒன்று! எந்தக் காரணத்தைக்
கொண்டும் அதை யாருக்கும் 
கொடுத்துவிடாதே! கொடுத்தால் 
உனக்கு தான் கஷ்டம்! சரியா?

தெளிவான மனம்!


ராதேக்ருஷ்ணா

மனதை தெளிவாக வைத்துக்கொள்ளவே
பக்தி! உன் மனதை நீயே
குழப்பிக்கொண்டால் வேறு
யார் தான் உனக்கு உதவிசெய்ய
முடியும்! விடாமல் நாமஜபம் செய்!

புரிந்து நட!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை நீ சரியாக புரிந்து 
கொண்டு உபயோகப்படுத்தினால் 
நிச்சயம் நீ உலகையே வசம்
செய்யமுடியும்! உன் மனதுதான்
உன் பலம்! புரிந்து நட!

மனதின் பலம்!


ராதேக்ருஷ்ணா

மனதைக்கொண்டு உலகில் பல 
ஆயிரம் காரியங்கள் செய்யமுடியும்!
மனதிற்கு பலம் அதிகம்! அது
நினைத்ததை சாதித்தே தீரும்!
அதனால் நல்லதை நினை!

Tuesday, May 24, 2011

மன்மதனாக நிற்கிறான்!


ராதேக்ருஷ்ணா

இதோ க்ருஷ்ணன் தயாராக
இருக்கிறான்! சகல ஆபரணங்களோடு 
கதம்ப மரத்தின் கீழே
புல்லாங்குழலோடு நிற்கின்றான்!
ஆஹா மன்மதனாக நிற்கிறான்!

பிருந்தாவன சஞ்சாரம்...


ராதேக்ருஷ்ணா

ராதிகா ராணியின் கையைப்
பிடித்துக்கொண்டு குட்டிக் 
குழந்தையாக பிருந்தாவனத்தில்
சஞ்சாரம் செய்வோம்! நம்முடைய
அஹம்பாவத்தை அழிப்போம்!
வா...வா...வா..

ராசக்ரீடை!!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுது நாங்கள் ராசக்ரீடை 
வாசிக்கப்போகிறோம்! க்ருஷ்ணனோடு
கோபிகள் போலே நாமும் ஆடிப்பாடி
மகிழ்வோம்! சீக்கிரம் தயாராகு! 
இதோ க்ருஷ்ணன் வந்துவிட்டான்!

வீண் போவதில்லை!


ராதேக்ருஷ்ணா

பெற்ற தாயைக் காட்டிலும்
பாகவதம் நிறைய நல்ல 
விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறது!
பாகவதத்தை நம்பியவர்கள் ஒரு
நாளும் வீண் போவதில்லை! உறுதி!

Monday, May 23, 2011

சுகமாய் இருக்கலாம்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கைக்கு தேவையான எல்லா
நல்ல விஷயங்களும் பாகவதத்தில்
கொட்டிக்கிடக்கிறது! நாம் 
ஒழுங்காக பாகவதத்தை
புரிந்துகொண்டால் 
சுகமாய் இருக்கலாம்!

பாகவதம் படி!


ராதேக்ருஷ்ணா

இன்று ஆனந்தமாக ஸ்ரீ
க்ருஷ்ண லீலா வைபவங்களை
ஸ்ரீமத் பாகவத பாராயணத்தில்
அனுபவித்தோம்! பாகவதம் 
படிப்பதே சுகம்! நீயும்
இன்று படி!

ஆசீர்வாதம் செய்தான்!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுதுதான் ஸ்ரீ அனந்த 
பத்மநாப சுவாமியை தரிசித்து
வந்தேன்! கருணைக்கடல்
 பத்மநாபன் உங்கள் அனைவருக்கும்
ஆசீர்வாதம் செய்தான்! அற்புதம்!

எத்தனை சுகம்!


ராதேக்ருஷ்ணா

இன்று பாகவதத்தில் ஸ்ரீ 
க்ருஷ்ண அவதாரம் ஆனது!
எத்தனை சுகமாக இருந்தது!
க்ருஷ்ணனின் திருவடியில் எங்களை
ஒப்படைத்தோம்! எத்தனை க்ருபை!

கோடி கோடி நமஸ்காரங்கள்!


ராதேக்ருஷ்ணா

குருஜிஅம்மாவின் சரணகமலங்களில்
 கோடி கோடி நமஸ்காரங்கள்!
குருஜிஅம்மாவின் பரம கருணையினால்
இன்று நாங்கள் இந்த பூமியில்
நிம்மதியாய் இருக்கிறோம்!

குருஜிஅம்மா வாழ்க!


ராதேக்ருஷ்ணா

குருஜிஅம்மாவிற்கு நல்ல 
ஆரோக்யமான வாழ்வை க்ருஷ்ணா
 நீ தா! குருஜிஅம்மாவை 
100 வருஷம் சௌக்கியமாக 
இந்த பூமியில் இருக்க வை! 
குருஜிஅம்மா வாழ்க!

என்ன கைம்மாறு செய்யமுடியும்?


ராதேக்ருஷ்ணா

குருஜிஅம்மாவினால் இன்று உலகில்
என்னைப் போல் பல பேர் விடாமல்
பகவானுடைய ரதேக்ருஷ்ணா 
நாமத்தை ஜபிக்கிறார்கள்! என்ன 
கைம்மாறு எங்களால் செய்யமுடியும்?

Friday, May 20, 2011

அஹம்பாவத்தை அழிக்கும் ஆயுதம் !


ராதேக்ருஷ்ணா

உலகில் எல்லாவற்றையும் அழிக்க
அற்புதமான ஆயுதம் உள்ளது!
அஹம்பாவத்தை அழிக்க இதுவரை
ஆயுதமே இல்லை! நாம ஜபம்
மட்டுமே அஹம்பாவத்தை அழிக்கும்!

மதம் பிடித்த யானை!


ராதேக்ருஷ்ணா!

அஹம்பாவம் என்பது மதம்
பிடித்த யானை! அதன் 
முன்னால் உன்னால் ஜெயிக்க
முடியாது! அதனால் அந்த மத 
யானையை இப்போதே 
கொன்று விடு! யுத்தம் செய்!

அஹம்பாவம் வேண்டாம்!


ராதேக்ருஷ்ணா

நான் என்னும் அகந்தை தான்
மனிதரின் எல்லா விதமான
துன்பங்களுக்கும் ஆதி காரணம்!
அதனால் எந்த நிலைமையிலும் 
அஹம்பாவம் வேண்டாம் என்று
பிரார்த்தனை செய்!

Thursday, May 19, 2011

முயற்சிப்பாயா?


ராதேக்ருஷ்ணா

முயற்சி கடவுளின் மறு அவதாரம்!
முயற்சி கடவுளின் ஆசீர்வாதம்!
முயற்சி இல்லாதவர் இந்த உலகில்
நிம்மதியாக வாழவே முடியாது!
முயற்சிப்பாயா?

கடவுளின் வரம்...


ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்வதை விட உலகில்
சுகமான காரியம் என்ன உண்டு?
முயற்சி செய்வதால் நம்முடைய 
நம்பிக்கை அதிகமாகிறது! முயற்சி
தான் கடவுளின் வரம்...

முயற்சி...


ராதேக்ருஷ்ணா

முயற்சி இருக்கும் வரை நீ 
உன் வாழ்வில் முன்னேற்றத்தைக்
காண்பாய்! முயற்சிதான் வாழ்வின்
அச்சாணி! முயற்சி இல்லாதவருக்கு
தெய்வம் ஒரு நாளும் உதவாது!

Wednesday, May 18, 2011

உன்னைக் காப்பாற்றிக்கொள்!


ராதேக்ருஷ்ணா

குரு உன்னை பக்குவப்படுத்துகிறார்!
அதைப் புரிந்து கொள்ள உன்னால்
முடியவில்லை என்கிறபோது வேறு 
யார்தான் உன்னை காப்பாற்ற முடியும்?
 உன்னைக் காப்பாற்றிக்கொள்!

குரு சொல்வதைக் கேள்!


ராதேக்ருஷ்ணா

குரு சொல்வதைக் கேட்காமல்
வேறு யார் சொல்லிக்
 கேட்கப்போகிறாய்? உன்னுடைய
குரு உனக்கு எது நல்லதோ 
அதையே சொல்கிறார்! அப்படியே
நடந்தால் மிகவும் நல்லது!

Tuesday, May 17, 2011

மாட்டிக்கொள்ளாதே!


ராதேக்ருஷ்ணா

ஒழுங்காக பேசமுடியவில்லை
என்றால் வாயை மூடிக்கொண்டு
இரு! எதையாவது பேசி வம்பில்
மாட்டிக்கொள்ளாதே! நிம்மதியைக்
கெடுத்துக் கொள்ளாதே! 
பிறகு புலமாதே!

நல்லதே பேசு!


ராதேக்ருஷ்ணா

நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும்
நிச்சயம் உனக்கு திரும்பி வரும்!
இதை நன்றாக நினைவில் கொள்!
அதனால் எப்பொழுதும் நல்லதை
மட்டுமே பேசு! பிறகு உன்னிஷ்டம்!

நிதானம் வேண்டும்!


ராதேக்ருஷ்ணா 

வாய் இருக்கிறது, வார்த்தை 
இருக்கிறது என்பதற்காக என்ன
வேண்டுமானாலும் பேசக்கூடாது! 
எப்பொழுதும் பேசும்போது ஒரு 
நிதானம் வேண்டும்! மறக்காதே!

தாண்டிவிடலாம்!


ராதேக்ருஷ்ணா

தாண்டிவிடலாம்! துன்பமயமான
சம்சாரக்கடலை தாண்டிவிடலாம்!
குருவின் துணையிருக்க வாழ்க்கையை
சுலபமாக வாழ்ந்துவிடலாம்! 
கவலையே வேண்டாம்...

தயாராக இரு!


ராதேக்ருஷ்ணா

உன் குருவை மதிக்கவும், அவரின்
வார்த்தைப்படி நடக்கவும் என்றும்
தயாராக இரு! அப்பொழுதுதான்
உன்னால் மிகப்பெரிய சம்சாரக் 
கடலை தாண்டமுடியும்...

அன்பாய் நடந்துகொள்!


ராதேக்ருஷ்ணா

இன்று உயிரோடிருக்கிறாய்!
இப்பொழுது உயிரோடிருக்கிறாய்!
நாளை உயிரோடிருப்பாயா என்று
தெரியாது! அதனால் இன்று 
முடிந்தவரை அன்பாய் 
நடந்துகொள்! உடனே செய்!

சுலபமாக ஜெயிக்கலாம்!


ராதேக்ருஷ்ணா

குரு உன் நன்மைக்காகவே பல
விஷயங்களை சொல்லித் தருகிறார்!
சரியாக புரிந்துகொண்டு நடந்தால்
இந்த வாழ்வில் எல்லாவற்றையும் 
சுலபமாக ஜெயிக்கலாம்!

உன்னாலும் முடியும்...


ராதேக்ருஷ்ணா

குரு வார்த்தையை மதித்ததால்தான்
துருவன் 5 மாதத்தில் பகவானை
தன்னுடைய இருதயத்தில் அழகாகப்
பார்த்தான்! உன்னாலும் 
அதுபோல் முடியும்...

குருவின் வார்த்தை...


ராதேக்ருஷ்ணா

குரு வார்த்தையை தட்டாதவர்கள்
சுலபமாக பகவானை அனுபவிக்கிறார்கள்!
குருவின் வார்த்தையில் முதலில்
அக்கறை வேண்டும்! குரு 
வார்த்தையை மதி!

பகவான் ஏங்குகிறான்!


ராதேக்ருஷ்ணா

பகவான் தன்னை திருடுபவர்களை
தலையில் தூக்கிவைத்துக்கொண்டு
ஆடுகிறான்! தன்னை திருடமாட்டார்களா
என்று ஒவ்வொரு நாளும் 
அவனே ஏங்குகிறான்!

பெரிய திருடன்!


ராதேக்ருஷ்ணா

பகவானை திருடுவதுதான் பக்தி!
பகவானை கொள்ளையடிக்க 
முடியாதவர்கள் மனிதர்களே 
இல்லை! பக்தன் பகவானை விடப் 
பெரிய திருடன்! சத்தியம்...

என்ன பயன்?


ராதேக்ருஷ்ணா

பக்தர்களை புரிந்துகொள்ளாமல்
 பாகவதம் வாசித்து என்ன பயன்?
பக்தர்களை புரிந்துகொள்ளாதவர்கள்
பஜனை செய்து என்ன பயன்? ஒரு
பயனும் கிடையாது!

Saturday, May 14, 2011

இறைவா! ஆனந்தம்....


ராதேக்ருஷ்ணா

மூங்கில் காடுகள், குளிர்ந்த 
காற்று, உயர்ந்து வளர்ந்திருக்கும்
மரங்கள்... அஹா... இறைவா 
உன்னைப் போல் உலகை வேறு
யார் அழகாய் படைக்கமுடியும்?
ஆனந்தம்.... 

க்ருஷ்ணா நன்றி!


ராதேக்ருஷ்ணா

திருநெல்லி போகும் வழியெல்லாம்
மான்களும், யானைகளும் சுதந்திரமாகத்
திரிகின்றன! பறவைகளின் சப்தத்தில் 
எத்தனை குதூகலம்! க்ருஷ்ணா நன்றி!

திருநெல்லி மஹாவிஷ்ணு கோயில்!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுதுதான் மலைக்கு நடுவில் 
உள்ள திருநெல்லி மஹாவிஷ்ணு 
கோயிலுக்கு சென்று  வந்தோம்!
கேரளாவில் வயநாடில் உள்ள அழகான 
கோயில்! ரம்மியமான இடம்!

Thursday, May 12, 2011

பெரிய விரோதி...


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய கோபத்தினால் நீ
பலவற்றை இழந்திருக்கிறாய்!
கோபப்பட்டுவிட்டு பிறகு 
வருத்தப்படுவதால் ஒரு 
பிரயோஜனமும் இல்லை! 
கோபம் பெரிய விரோதி...

Wednesday, May 11, 2011

சாதாரணமாகப் பார்!


ராதேக்ருஷ்ணா

பக்தியை அனுபவி! பக்தியை 
பாரமாக சுமக்காதே! பக்தியை 
சாதாரணமாகப் பார்! க்ருஷ்ணனை 
நீ அனுபவிப்பதே பக்தி! இதை
புரிந்துகொண்டால் சுகம்...

பார்த்து பார்த்து செய்கின்றான்!


ராதேக்ருஷ்ணா

உனக்குள் இருக்கும் கண்ணன்
உன்னை சந்தோஷமாக வைத்திருக்க
எல்லாம் பார்த்து பார்த்து 
செய்கின்றான்! அதனால் நீ 
சந்தோஷத்தை தேடி 
அலையவேண்டாம்!

க்ருஷ்ணனுக்காக வாழ்!


ராதேக்ருஷ்ணா

உன்னை ஒரு நாளும் க்ருஷ்ணன்
ஒதுக்கப்போவதில்லை! அதனால்
நீ ஒருபோதும் கவலையே
படக்கூடாது! உன் சந்தோஷமே 
க்ருஷ்ணனின் சந்தோஷம்! 
அவனுக்காக வாழ்!

Tuesday, May 10, 2011

தைரியத்தை இழக்காதே!


ராதேக்ருஷ்ணா

எது வந்தாலும் உன் தைரியத்தை
இழக்காதே! என்ன நடந்தாலும்
நன்மைக்கே என்ற திட புத்தி 
உனக்கிருந்தால் நிச்சயம் எல்லா
பிரச்சனைகளையும் வெல்வாய்!

அலட்டிக்கொள்ளாதே!


ராதேக்ருஷ்ணா

நீ பயப்படுவதுபோல் வாழ்வில் எந்த
 பயங்கரமும் நடக்கப்போவதில்லை!
தேவையில்லாமல் மனதைப் போட்டு
அலட்டிக்கொள்ளாதே! எல்லாம் 
நல்லதாகவே நடக்கும்...

இதை மறக்காதே!


ராதேக்ருஷ்ணா

எது வந்தாலும் நீ கலங்காதவரை
உன்னால் ஜெயிக்கமுடியும்! 
எதற்கும் நீ நொந்து போகாதவரை
உன்னால் உலகில் இன்பமாக
வாழமுடியும்! இதை மறக்காதே!

நீ நிம்மதியாக இரு!


ராதேக்ருஷ்ணா

உலகம் எப்படி வேண்டுமானாலும் 
சொல்லட்டும்! நீ கலங்காதே! உன்
க்ருஷ்ணன் உன்னை நன்றாகவே 
அறிவான்! நீ நிம்மதியாக சந்தோஷமாக 
இரு! எதற்கும் கலங்காதே!

புரிந்ததா?


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் சுயநலத்தினால் என்ன
வேண்டுமானாலும் செய்வார்கள்! 
அதற்கெல்லாம் நீ 
பயந்துகொண்டிருந்தால் உன்னால் 
நிம்மதியாக வாழமுடியாது! புரிந்ததா?

தெளிவாக இரு!


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் தங்கள் மனம் 
போனபடியெல்லாம் பேசுவார்கள்!
அதனால் யாராவது 
யாரைப்பற்றியாவது குறை 
கூறினால் நீ அதை அப்படியே 
நம்பிவிடாதே! தெளிவாக இரு!

மனதார காதலிக்கிறேன்!


ராதேக்ருஷ்ணா

திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன்
கொண்டுவந்து விட்ட சுவாமி 
ராமானுஜருக்கு கைங்கர்யம் 
செய்த சுந்தரா! உன்னை நான்
மனதார காதலிக்கிறேன்!

தாங்கமுடியவில்லை...


ராதேக்ருஷ்ணா

சுந்தர பரிபூரண நம்பியே! 
நீ தானே நம்மாழ்வாராக
வந்தாய்! அதனால் நீயே 
எனக்கு உன்னிடம் உள்ள 
காதலுக்கு பதில் சொல்வாய்!
தாங்கமுடியவில்லை...

என்னவென்று சொல்வது???


ராதேக்ருஷ்ணா

இன்று சுகமான நாள்! 
திருக்குறுங்குடி சுந்தர 
பரிபூரண நம்பியை தரிசித்த்ன்!
நம்பியைக் கண்டவர்கள் மனம் 
படும் பாட்டை என்னவென்று 
சொல்வது???

ராமானுஜரின் வழி நட!


ராதேக்ருஷ்ணா

சுவாமி ராமானுஜர் 120 வருஷம் 
இந்த பூமியில் வாழ்ந்தார்! ஜாதி,
மதம் இவைகளைக் கடந்து
எல்லோருக்கும் நன்மை செய்த 
அற்புதமான ராமானுஜரின் வழி நட!

மந்திரம் சொன்னார்...


ராதேக்ருஷ்ணா

சுவாமி ராமானுஜர் தான்
நரகம் போனாலும் மற்றவர்கள்
மோக்ஷம் அடைந்தால் போதும் என்று
 திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் 
மேலேறி எல்லோருக்கும்
மந்திரம் சொன்னார்...

சுவாமி ராமானுஜரின் திருநக்ஷத்திரம்!


ராதேக்ருஷ்ணா

இன்று சுவாமி ராமானுஜரின்
திருநக்ஷத்திரம்! சித்திரை
 மாதத்தில் திருவாதிரை 
நக்ஷத்திரத்தில் இந்த பூமியில் 
ஆதிசேஷனே ராமானுஜராகப்
பிறந்தார்!

Saturday, May 7, 2011

குருவின் ஆசீர்வாதம்...


ராதேக்ருஷ்ணா

அக்ஷய த்ருதீயைக்கு தங்கம்
வாங்கவேண்டுமென்று எந்த 
ஞானியும் சொல்லவில்லை! 
தங்கத்தை வாங்குவதைக்
காட்டிலும் குருவின் 
ஆசீர்வாதம் விசேஷம்!

மோக்ஷ வழி திறக்கட்டும்!


ராதேக்ருஷ்ணா

அக்ஷய திருதியை அன்றுதான்
பத்ரிகாஸ்ரமம் செல்லும் வழி
திறக்கப்படும்! நமக்கும் இன்று
மோக்ஷ வழி திறக்கட்டும்! 
மனதில் நம்பிக்கை வளரட்டும்! 

அக்ஷய திருதியை!


ராதேக்ருஷ்ணா

இன்று அக்ஷய திருதியை! 
பக்தி, ஞானம், வைராக்கியம்,
ஆரோக்கியம், ஐஸ்வர்யம்
அக்ஷயமாக இருக்கட்டும்! 
சத்சங்கம் அக்ஷயமாய் 
கிடைக்கட்டும்! ஆசீர்வாதம்!

Thursday, May 5, 2011

வெறுப்பு காட்டாதே!


ராதேக்ருஷ்ணா

மனதில் யாரிடமும் வெறுப்பு
காட்டாதே! அடுத்தவரின் மீது 
நீ தவறு கூறினால், உன் மீதே நீ
 சேற்றை அள்ளிப் பூசிக்கொள்கிறாய்!
இதை என்றும் மறக்காதே!

தெய்வத்தை நம்பு!


ராதேக்ருஷ்ணா

யாரும் யாரையும் அழிக்கமுடியாது!
உன்னிடத்தில் உள்ள தெய்வம்
உன்னை ஒரு நாளும் தள்ளிவிடாது!
உன்னுள் உள்ள தெய்வத்தை நீ
திடமாக நம்பி வாழ்வை ரசி!

அவதூறு சொல்லாதீர்கள்!


ராதேக்ருஷ்ணா

உங்களுக்கு யாரையாவது 
பிடிக்கவில்லைஎன்றால் அவர்களோடு
பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!
மற்றவரைப் பற்றி ஒரு நாளும்
அவதூறு சொல்லாதீர்கள்!
அது தவறு!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP