Sunday, September 30, 2012

நாவை பழக்கு!


ராதேக்ருஷ்ணா!

உடம்புக்கு நல்லதை மட்டுமே 
சாப்பிடும்படி உன் நாவை பழக்கு!
 இல்லையென்றால் பின்னாளில் நீ 
சாதாரண ஆகாரம் கூட சாப்பிட 
முடியாமல் போய்விடும்!

நாவை அடக்கு...


ராதேக்ருஷ்ணா!

நாவை அடக்கி எது உடலுக்கு 
நல்லதோ அதை மட்டுமே சாப்பிட 
வாழ்வில் என்றும் நிம்மதி உண்டு!
 நாவை அடக்காமல் இஷ்டப்படி 
சாப்பிட்டால் வியாதி தான்!

க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு சாப்பிடு!


ராதேக்ருஷ்ணா!

வயிற்று பசிக்காக க்ருஷ்ணனை
நினைத்துக்கொண்டு சாப்பிடு! நாக்கு 
ருசிக்காக மட்டுமே சாப்பிட்டால் 
கோளாறு தான்! உன் உடம்பை நாக்கு 
ருசிக்காக கெடுத்துக்காதே!

Saturday, September 29, 2012

பாதிப்பு அடைகிறது!


ராதேக்ருஷ்ணா!

கோபப்படுவதினால் உன் நரம்பு
 மண்டலம் பாதிப்பு அடைகிறது!
 அதனால் உன் மனதில் சந்தோஷம் 
குறைகிறது  உன் உடம்பு நன்றாக 
இருக்க அமைதியாய் இரு!

கோபம்...


ராதேக்ருஷ்ணா!

கோபப்பட்டு ஒரு பிரயோஜனமும் 
இல்லை! கோபம் உன் உடம்பில் 
உஷ்ணம் அதிகப்படுத்தும்! அதனால் 
நிச்சயம் உன் மனதில் வாழ்வில் 
உடம்பில் பாதிப்பு வந்துவிடும்!

சந்தோஷமாய் இரு!


ராதேக்ருஷ்ணா!

கோபம் நல்லதல்ல! யார் 
வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் 
சொல்லட்டும்! செயட்டும்! நீ 
கோபப்பட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளாதே!
 அமைதியாய் சந்தோஷமாய் இரு!

Friday, September 28, 2012

மரியாதையோடு பழகவேண்டும்!

ராதேக்ருஷ்ணா!

தோளுக்கு மேல் நம் குழந்தைகள்
வளரும்போது நாமும் மரியாதையோடு
அவரிடம் பழகவேண்டும்! அப்பொழுது
வயதான காலத்தில் புலம்ப
வேண்டிய அவசியமில்லை!

மாறினால் நல்லது!

ராதேக்ருஷ்ணா!

குழந்தைகள் வளரும் போது
அவர்களுடைய தீர்மானிக்கும்
திறமையும் வளர்கிறது! அதற்க்கு
தகுந்தார் போல் பெற்றோர் மாறினால்
அவர்களுக்கு மிகவும் நல்லது!

பெரியவராக மதிப்பர்!

ராதேக்ருஷ்ணா!

குழந்தைகள் பெரியவர் ஆகும்போது
நாமும் அதற்க்கு ஏற்றார் போல்
நடக்கவேண்டும்! அப்பொழுது தான்
குழந்தைகளும் நம்மை பெரியவராக மதிப்பர்!

Thursday, September 27, 2012

வாழ்ந்து காட்டுவாய்!


ராதேக்ருஷ்ணா!

இயற்க்கை நீ நன்றாய் வாழ 
ஆசைபடுகிறது! அதனால் தான் 
உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் 
இயற்க்கை வாரி வாரி வழங்குகிறது!
 வாழ்ந்து காட்டுவாய்!

நன்றாய் வாழ்!


ராதேக்ருஷ்ணா!

உன் வாழ்வை பற்றி நீ நல்லதாக 
நினைக்காமல் வேறு யார் தான் 
நினைப்பார்? உன் நலம் விரும்பிகள் 
நீ நன்றாய் வாழ ஆசைப்படுகிறார்கள்!
 அவர்களுக்காக வாழ்!

சீக்கிரம் நடக்கும்!


ராதேக்ருஷ்ணா!

நிச்சயமாய் நாம் நன்றாக இருப்போம்!
நம் வாழ்க்கை பிரகாசமாய் இருக்கும்!
நம் வாழ்வில் நாம் வெற்றியை அனுபவிப்போம்!
இப்படியே நினை! சீக்கிரம் நடக்கும்!

Wednesday, September 26, 2012

உன் க்ருஷ்ணனை நம்பு...


ராதேக்ருஷ்ணா!

தன்னம்பிக்கை நிச்சயமாய் வேண்டும்!
உனக்கு உன் மேல் நம்பிக்கை 
இல்லையென்றால், உலகில் யாரையும் 
நீ ஜெயிக்கவே முடியாது! உன்னையும்,
 உன் க்ருஷ்ணனையும் நம்பு...

விசேஷ ஆசீர்வாதம்!


ராதேக்ருஷ்ணா!

தன்னம்பிக்கை க்ருஷ்ணனின் விசேஷ 
ஆசீர்வாதம்! அதை உணராதவர் தான் 
அஹம்பாவதில் ஆடுகின்றனர்!
 உணர்ந்தவர் வாழ்வில் பெரிய 
காரியங்களை செய்கிறார்!

தன்னம்பிக்கை தேவை!


ராதேக்ருஷ்ணா!

தன்னம்பிக்கை இல்லாதவர் தைரியமாக
நடக்க கூட முடியாது! தன்னம்பிக்கை 
இல்லாதவர் நிம்மதியாய் தூங்கவும் 
முடியாது! தன்னம்பிக்கை தேவை!

Tuesday, September 25, 2012

க்ருஷ்ணனை அனுபவி!


ராதேக்ருஷ்ணா!

உன் வாழ்க்கை உனக்கு 
தராததை வேறு யார் தான் 
தர முடியும்? க்ருஷ்ணனே உன் 
வாழ்க்கையாய் இருக்கிறான் 
என்பதை தெளிவாக புரிந்துகொள்!
க்ருஷ்ணனை அனுபவி!

கல்பக வ்ருக்ஷம்!


ராதேக்ருஷ்ணா!

கல்பக வ்ருக்ஷம் என்னும் 
தேவ லோகத்து மரம் நமது 
தேவைகளை எல்லாம் பூர்த்தி 
செய்யும்! இந்த உலகில் உனது 
வாழ்க்கை தான் உனக்கு 
கல்பக வ்ருக்ஷம்!

காமதேனு!


ராதேக்ருஷ்ணா!

வானுலகில் ஒரு காமதேனு உண்டு!
அது நாம் கேட்டதையெல்லாம் 
கொடுக்கும்! அது போலே தான் நம் 
வாழ்வும்! இந்த உலகின் காமதேனு 
உன் வாழ்க்கையே! 
என்ன வேண்டுமோ கேள்!

Sunday, September 23, 2012

எப்பவும் சொல்லு...


ராதேக்ருஷ்ணா!

ஜோரா சொல்லு...ராதே ராதே!
அன்பா சொல்லு...ராதே ராதே! 
அழகா சொல்லு ... ராதே ராதே!
இப்பவும் சொல்லு ... ராதே ராதே!
 எப்பவும் சொல்லு ... ராதே ராதே!

பிரார்த்தனை செய்!


ராதேக்ருஷ்ணா!

இன்று உன் வீட்டிற்க்கு ராதிகா 
ராணி வர பிரார்த்தனை செய்! யார் 
பக்தியோடு தன்னை அழைக்கிறாரோ 
அங்கே ராதிகா ராணி வருவது 
வழக்கம்...ராதே ராதே!

ராதாஷ்டமி!


ராதேக்ருஷ்ணா!

இன்று நம் ராதிகா ராணி 
அவதரித்த நாள்! வெகு 
உற்சாகமாக கோகுலாஷ்டமையை 
கொண்டாடினது போல் இன்றும் 
ஆனந்தமாய் கொண்டாடி
 மகிழ்வோம்! ஜெய் ராதே!

பாக்யசாலிகள்...


ராதேக்ருஷ்ணா!

நிஜமாகவே உலகத்திடம் இருந்து 
ஒதுங்கி இருப்பது சுகம் தான்!
 நாம் உண்டு! நம் க்ருஷ்ணன் உண்டு!
 நம் பக்தி உண்டு! ரிஷிகள் மிகவும் 
பாக்யசாலிகள் தான்...

ஒதுங்கி இருப்பது...


ராதேக்ருஷ்ணா!

சில சமயங்களில் நாம் உலக 
ஜனகங்களிடமிருந்து ஒதுங்கி 
இருப்பது நல்லதே! அப்பொழுது 
தான் உனக்கும் மற்றவரை 
புரியும்! அது போலே 
உன்னை மற்றவருக்கும் புரியும்!

Saturday, September 22, 2012

தெய்வத்தின் அருகில்...


ராதேக்ருஷ்ணா!

தீமைக்கும் நன்மை செய்யும் 
மனம் உன்னிடம் வந்துவிட்டால்,
நீ தெய்வத்தின் அருகில் இருக்கிறாய் 
என்று அர்த்தம்! தெய்வதிர்க்குள் நீ 
இருக்கிறாய் என்று அர்த்தம்...

தெய்வ குணம்!


ராதேக்ருஷ்ணா!

உன்னை நேசிப்பவரை மட்டும் நீ 
நேசித்தால் அது மனித குணம்!
உன்னை வெறுப்பவரையும் நீ 
நேசித்தால் அது தெய்வ குணம்!
நீ மானுடத்தை தாண்டிப் பார்...

நிம்மதியாய் இருப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

நீ நிம்மதியாய் இருப்பாய்! உன்னை  
வெறுப்பவரையும் நேசிப்பாய்! உனக்கு 
கஷ்டம் கொடுப்பவரையும் நேசிப்பாய்!
நிச்சயம் ஒரு நாள் உலகமே 
உனக்கு வசப்படும்...

Friday, September 21, 2012

சத்தியம்!


ராதேக்ருஷ்ணா!

யார் மீது க்ருஷ்ணனுக்கு அளவுக்கு 
அதிகமான அன்பு இருக்கிறதோ, 
அவர்களின் திட்டங்களை மாற்றி 
தன்னுடைய திட்டத்தை செயல்படுத்துவான்!
இதுவே சத்தியம்!

அர்த்தம் உண்டு!


ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அர்த்தம் 
உண்டு! ஒவ்வொரு நிகழ்விற்கும் 
ஒரு காரணம் உண்டு! நாம் தான் 
தெய்வம் நம் மீது கொண்ட அன்பையும் 
அக்கறையையும் மறந்து விடுகிறோம்!

காத்திருப்பாய்!

ராதேக்ருஷ்ணா!

எல்லா காலங்களிலும் எல்லாமும் 
பலன் தருவதில்லை! மாம்பழ 
காலங்களில் மட்டுமே மாமரம் 
பலன் தருகிறது! அது போலே தான் 
நம் வாழ்வும்! காத்திருப்பாய்!

Thursday, September 20, 2012

நன்றாக தெரியும்!


ராதேக்ருஷ்ணா!

நம் திட்டங்கள் நடக்காவிட்டால் 
உலகில் நம்மை அவமானப் 
படுத்துவர் என்று நினைப்பது தவறு! 
க்ருஷ்ணனுக்கு நம்முடைய ஹ்ருதயம் 
நன்றாக தெரியுமே!

க்ருஷ்ணனின் பங்கு...


ராதேக்ருஷ்ணா!

எல்லா திட்டங்களும் நாம் 
நினைத்தபடி நடந்துவிட்டால் அதில் 
க்ருஷ்ணனின் பங்கு இல்லாமல் 
போய்விடும் நமது திட்டங்கள் தடைபட்டால் 
அதில் ஏதோ நன்மை உண்டு!

க்ருஷ்ணனின் இஷ்டம்!


ராதேக்ருஷ்ணா!

நமது திட்டங்கள் எல்லாம் 
வீனாகும்போது நாம் அது 
க்ருஷ்ணனின் இஷ்டம் என்று 
ஏற்க்கவேண்டும்! அதைவிட்டு நம்மை 
க்ருஷ்ணன் சோதிக்கிறார் என்று 
நினைப்பது குற்றம்!

Wednesday, September 19, 2012

விசேஷ அனுக்ரஹம்!


ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு நிகழ்ச்சியும் நமக்கு ஒரு 
ஆசீர்வாதம்! கடவுளின் விசேஷ 
அனுக்ஹம் நமக்கு வித விதமாக 
வருகிறது! நாம் தான் அவற்றை 
புரிந்து கொள்ளவேண்டும்!

தெய்வத்தின் திட்டம்!


ராதேக்ருஷ்ணா!

எல்லோருடைய வாழ்விலும் எல்லா 
விஷயங்களும் திட்டமிட்டப்படி நடப்பதில்லை!
தெய்வம் நமக்காக வேறு ஒரு நல்ல திட்டம் 
வைத்திருக்கிறது என்பதே அர்த்தம்!

நல்லது நடக்கும்!


ராதேக்ருஷ்ணா!

வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் 
நம்முடைய திட்டங்கள் எல்லாம் 
வீனாகப்போயவிடும்! அதனால் நேரம் 
சரியில்லை என்று அர்த்தமில்லை!
பெரியதாக நல்லது நடக்கும்!

Tuesday, September 18, 2012

மிகப்பெரிய மாற்றம்...


ராதேக்ருஷ்ணா!

எந்த ஒரு வியாதியும் நம் வாழ்வில் 
மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு 
வருகிறது! நாராயண பட்டதிரிக்கு 
பக்கவாதம் வியாதியே நாராயணீயம் தந்தது!

நிறைய நாம ஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா!

வியாதி வரும்போது சாதாரணமாக 
மனதில் ஒரு வருத்தமும், பலவீனமும் 
வரும்! அந்த சமயத்தில் நாம் நிறைய 
நாம ஜபம் செய்யவேண்டியது அவசியம்!

Monday, September 17, 2012

சிரத்தையோடு ஜபிப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு நாளும் பகவான் நாமத்தை
சிரத்தையோடு ஜபிப்பாய்! நிச்சயம்
 உன்னால் வாழ்வில் எல்லாவிதமான 
கஷ்டங்களையும் ஜெயிக்கமுடியும்! 
பகவான் உன்னோடு உண்டு!

Sunday, September 16, 2012

தைரியமாய் இரு!


ராதேக்ருஷ்ணா!

வியாதிகள் வர பல காரணம்!
எது எப்படியோ நீ நிச்சயமாய் 
நாம ஜபம் செய்ய உன் வியாதிகள் 
உன்னை படுத்தாமல் இருக்கும்!
மனதில் தைரியமாய் இரு!

தலையாய கடமை...


ராதேக்ருஷ்ணா!

வியாதியை கொண்டாடாதே! அதற்காக 
வியாதியை அவமதிக்காதே! சரியான 
முறையில் உன் உடலை காப்பது 
உன்னுடைய தலையாய கடமை 
என்பதை நினை!

தெய்வத்தின் கருணை...


ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு முறை வியாதி 
வரும்போதும், நாம் தெய்வத்தின் 
கருணையை எண்ணிப் பார்க்கவேண்டும்!
பல சந்தர்பங்களில் வியாதிதான் நம்மோடு 
தெய்வம் இருப்பதை காட்டும்!

Saturday, September 15, 2012

உள்ளபடி புரிகிறது!


ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு வியாதியும் நம் 
மனதில் விசேஷமான மாற்றங்களை 
கொண்டுவருகிறது! வலியில் தான் 
க்ருஷ்ணனின் அருள் உள்ளபடி புரிகிறது!
அவன் தான் நமக்கு பலம்!

க்ருஷ்ணனை அனுபவிப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

உடலில் வியாதி வராதவரை 
நல்லதே! ஒரு வேளை வியாதி 
வந்துவிட்டால்,மனம் தளராமல் 
தொடர்ந்து நாம ஜபம் செய்யவேண்டும்!
க்ருஷ்ணனை அனுபவிப்பாய்!

Friday, September 14, 2012

காளிய நர்தன மூர்த்தி..


ராதேக்ருஷ்ணா!

நேற்று க்ருஷ்ணனின் காளிய 
நர்தன மூர்த்தியை ஊத்துக்காட்டில் 
அனுபவித்தோம்! நிஜமாகவே இவனைப் 
பார்த்தல் நிறைய பாடவேண்டும் 
என்று தோன்றுகிறது...

கங்கை ஆவிர்பவிக்கிறாள்!


ராதேக்ருஷ்ணா!

நேற்று திருவிசனல்லூரில் ஸ்ரீ ஸ்ரீதர 
அய்யாவாளின் மடத்திற்கு சென்றோம்!
கார்த்திகை அமாவாசை அன்று அங்கே 
கிணற்றில் கங்கை ஆவிர்பவிக்கிறாள்!
அற்புதம்...

ஜபம் செய்கிறார்!


ராதேக்ருஷ்ணா!

நேற்று கும்பகோணத்தில் திருமழிசை 
ஆழ்வாரின் திருஅரசை பார்த்தோம்!
இன்றும் அங்கே திருமழிசை ஆழ்வார் 
ஜீவா சாமாதியில் அமர்ந்துகொண்டு 
ஜபம் செய்கிறார்!

Wednesday, September 12, 2012

சாரங்கபாணி பெருமாளை சேவித்தோம்!


ராதேக்ருஷ்ணா!

திருமழிசை ஆழ்வார் சொன்னதற்காக 
தலை தூக்கி பேசின திருக்குடந்தை 
ஆராவமுதனான சாரங்கபாணி பெருமாளை 
அற்புதமாய் சேவித்தோம்! சுகம்!

எத்தனை அமைதி!


ராதேக்ருஷ்ணா!

இன்று காலை காவேரி ஆற்றங்கரையில்,
கோவிந்தபுரத்தில் ஸ்ரீ பகவன் நாம 
போதேந்த்ரரின் ஜீவ சமாதியில் சுகமான 
தரிசனம் பெற்றோம்! எத்தனை அமைதி!

Tuesday, September 11, 2012

அழகாக நிற்கிறானே!


ராதேக்ருஷ்ணா!

இடுப்பில் மோக்ஷத்தின் சாவியையும்,
காது குடையும் குறும்பையும் 
அழகாக மாட்டிக்கொண்டு, ஒரு 
கையில் மாடு மேய்க்கும் கோலையும் 
கொண்டு ரொம்ப அழகாக நிற்கிறானே!

திருட்டுக் காதலி..


ராதேக்ருஷ்ணா!

ஒரு காதில் ஆண்களின் குண்டலத்தையும்,
ஒரு காதில் பெண்களின் தோட்டையும் 
போட்டுக்கொண்டு இந்த ராஜ 
கோபாலன் என்னை அவனுடைய 
திருட்டுக் காதலியாய் கொண்டான்!

அழகாக ஜொலிக்கிறான்...


ராதேக்ருஷ்ணா!

என்னால் நம்பவே முடியவில்லை!
 நாங்கள் மன்னார்குடி அழகன் 
ராஜகோபாலனை தரிசித்துவிட்டோம்! ஐயோ...
எத்தனை அழகாக ஜொலிக்கிறான் 
இந்த மாட்டுக்காரன்? ஹ்ம்ம் 

Sunday, September 9, 2012

நல்ல பக்தி....

ராதேக்ருஷ்ணா!


க்ருஷ்ணா...உனது பிறந்த நாளில் 
நிச்சயம் நீ எங்களோடு இருக்க 
வேண்டும்! எங்களுக்கு நல்ல 
பக்தியையும் உன் மீது நல்ல 
காதலும் தருவாய் கண்ணா...

எங்களை மகிழ்விப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணா...நாங்கள் அனைவரும் 
உன்னுடைய குழந்தைகள்! உனது 
பிறந்த நாளை எங்கள் மனம் 
ஆசைப்படும்படி கொண்டாடுகிறோம்!
 நீ வந்து எங்களை மகிழ்விப்பாய்!

ரோஹிணி நக்ஷத்திரம்!


ராதேக்ருஷ்ணா!

இன்று க்ருஷ்ணன் பிறந்த 
ரோஹிணி நக்ஷத்திரம்! அவன் 
பிறந்த நாளான இன்று, நாம் 
அவனிடம் நம்மைக் கொடுப்போம்!
அவனை பிறந்த நாள் 
பரிசாக வாங்கிக்கொள்வோம்...

Saturday, September 8, 2012

பிறந்த நாள் பரிசு !

ராதேக்ருஷ்ணா
 
 
இன்று க்ருஷ்ணன் பிறந்த ரோஹினி
நக்ஷத்திரம். அவன் பிறந்தநாளான இன்று,
நாம் அவனிடம் நம்மைக் கொடுப்போம்.
அவனைப் பிறந்த நாள் பரிசாக
வாங்கிக்கொள்வோம் . . .
 
 

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP