Tuesday, August 31, 2010

வாழ்வை அனுபவி!

ராதேக்ருஷ்ணா
பிரச்சனைகளை நீ 
எதிர்கொண்டால் நீ வாழ்வை
 ரசிக்கலாம்! பிரச்சனைகளை 
நீ சமாளிக்க தெரிந்து
 கொண்டால் நீ உலகை 
ரசிக்கலாம்! வாழ்வை அனுபவி!

நீ யார்?

ராதேக்ருஷ்ணா

பிரச்சனைகளை பார்த்து நீ
தப்பி ஓட நினைத்தால் நீ
ஒரு பைத்தியம்! பிரச்சனைகளை
கண்டு நீ அழுதால் நீ ஒரு
பயந்தாங்கொள்ளி! நீ யார்?

நீ கோழை இல்லை!

ராதேக்ருஷ்ணா

பிரச்சனைகளை கண்டு நீ
சோர்ந்துபோனால் நீ ஒரு
கோழை! பிரச்சனைகளை 
கண்டு நீ உடைந்துபோனால்
நீ ஒரு முட்டாள்! நீ முட்டாளோ,
 கோழையோ இல்லை!

நீ ஜெயிப்பாய்!

ராதேக்ருஷ்ணா

உன்னை உயர்த்திக்கொள்!
உன்னை நெறிபடுத்திக்கொள்!
உன்னை ஒழுங்குபடுத்திக்கொள்!
உன்னை வளர்த்துக்கொள்!
உன்னை சுத்திகரித்துக்கொள்!
அப்பொழுது நீ ஜெயிப்பாய்!

உலகம் உன்னை வணங்கும்!

ராதேக்ருஷ்ணா

உலகம் உன்னை கொண்டாட
வேண்டும் என்று நீ ஆசைப்பட
ஆசைப்பட நீ முட்டாள் ஆகி
விடுவாய்! நீ உன் கடமைகளை
ஒழுங்காக செய்து கொண்டிரு!
உலகம் உன்னை வணங்கும்!

விடாமுயற்சி!

ராதேக்ருஷ்ணா

நீ வெற்றியின் பின் ஓடாதே!
உன் திறமைகளை ஒழுங்காக
வளர்த்துக்கொள்! உன் புத்தியை
கூர்மையாக்கு! நிச்சயம் 
உன்னை தேடி வெற்றி வந்தே
 தீரும்! விடாமுயற்சி!

வா... நம்மை மறக்கலாம்!

ராதேக்ருஷ்ணா

குழந்தையாய் மாறுவோம்!
கண்ணனை அனுபவிப்போம்! 
அஹம்பாவத்தை விடுவோம்!
கோப கோபியராய் மாறுவோம்!
ஆனந்தத்தில்  திளைப்போம்!
வா... நம்மை மறக்கலாம்!

ஆனந்தம் அனுபவிப்போம்! வாருங்கள்!

ராதேக்ருஷ்ணா

நாம சங்கீர்த்தனம் செய்வோம்!
கீதை பாராயணம் செய்வோம்!
உறியடிப்போம்! ஆடுவோம்!
வன போஜனம் சாப்பிடுவோம்!
க்ருஷ்ண கதை கேட்போம்!
ஆனந்தம் அனுபவிப்போம்!
வாருங்கள்!

ராதேக்ருஷ்ணா சத் சங்கத்தின் க்ருஷ்ண ஜெயந்தி விழா!

ரதேக்ருஷ்ணா

வாருங்கள்...திருமந்திர நகருக்கு!
இன்று நமது ராதேக்ருஷ்ணா 
சத் சங்கத்தின் ஸ்ரீ க்ருஷ்ண 
ஜெயந்தி விழாவில் கலந்து
 கொண்டு க்ருஷ்ணனை
அனுபவிக்க வாருங்கள்!

திருப்பரிவட்ட பாறை தரிசனம் !

ராதேக்ருஷ்ணா

சுவாமி ராமானுஜரை
திருவனந்தபுரத்து ஸ்ரீ 
அனந்த பத்ம நாப சுவாமி
கொண்டு வந்து விட்ட,
திருப்பரிவட்ட பாறையை
தரிசிக்க நீயும் வந்துவிடு!

ஆனந்தத்தில் திளைக்க வா!

ராதேக்ருஷ்ணா

திருமங்கை ஆழ்வாருக்கும் 
மோக்ஷம் தந்த திருக்குறுங்குடி 
அழகிய நம்பி ராயரை பார்க்க
 போகிறேன்! நீயும் வா! 
நம் அழகனை பார்த்து 
ஆனந்தத்தில் திளைக்க!

ஸ்ரீ வைஷ்ணவ நம்பியை பார்க்க வா!

ராதேக்ருஷ்ணா

இன்று, இப்பொழுது நாங்கள்
திருக்குறுங்குடி சுந்தர பரிபூரண
நம்பியை பார்க்க போகிறோம்!
சுவாமி ராமானுஜரின் சிஷ்யனான
ஸ்ரீ வைஷ்ணவ நம்பியை பார்க்க வா!

Friday, August 27, 2010

சந்தோஷமாக இரு!

ராதேக்ருஷ்ணா

யாரிடமும் வெறுப்பு கொள்ளாதே!
யாரிடமும் அடிமையாகி விடாதே!
எப்பொழுதும் நிதானமாக இரு!
எதற்கும் கலங்காதே! மனதை
சந்தோஷமாக வைத்துக்கொள்!

செய்வதை திருந்த செய்!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையை ரசி! உன்
கடமைகளை நேசி! உன்
குடும்பத்தை கவனி! உன்
ஆரோக்கியத்தில் கவனம் கொள்!
செய்வதை திருந்த செய்! உன்
வாழ்க்கை நன்றாக இருக்கும்!

நன்மை உண்டு!

ராதேக்ருஷ்ணா

விடாது நாம ஜபம் செய்!
தொடர்ந்து க்ருஷ்ணனை
 நினை! கடமைகளை விடாமல்
 செய்! எல்லா நிகழ்ச்சிகளையும்
 க்ருஷ்ண பிரசாதமாக 
ஏற்றுக்கொள்! நன்மை உண்டு!

Thursday, August 26, 2010

ஹே ரங்கநாயகி தாயே! காக்க!

ராதேக்ருஷ்ணா

ஹே ரங்கநாயகி தாயே!
உன் கணவரிடம் சொல்லி
எங்களுக்கு பக்தி, ஞானம்,
வைராக்கியம் தர அனுக்ரஹிக்க
சொல்லு! இந்த ஒன்றும்
அறியாத குழந்தைகளை காக்க!

ஹே ரங்கராஜா! வரம் தா!

ராதேக்ருஷ்ணா

ஹே ரங்கராஜா! உன் கருணையே
தனிதான்! உன் பொன்னடிகளில்
சரணாகதி செய்கின்றோம்!
எங்களுக்கு நல்ல பக்தியை
தா! ஸ்ரீரங்கத்தில் ஒரு 
ஜன்மா தா! வரம் தா!

ஹே ராமானுஜா! வாரும்...

ராதேக்ருஷ்ணா

ஹே ராமானுஜா! வாரும்...
நம் பாரத பூமியை காக்க
வாரும்! நம் சனாதன ஹிந்து
தர்மத்தை காக்க வாரும்!
எங்களை காப்பாற்றி 
நல் வழிபடுத்தும்!

உனக்காகவே எல்லாம்!

ராதேக்ருஷ்ணா!

சந்தோஷத்திற்காக நீ இல்லை!
உனக்காகவே சந்தோஷம்!
வெற்றிக்காக நீ இல்லை!
உனக்காகவே வெற்றி!
உனக்காகவே எல்லாம்!
நீ க்ருஷ்ணனின் சொத்து!
அதனால்  சிரி!

ஆத்ம தத்துவம்!

ராதேக்ருஷ்ணா

தங்கத்திற்காக நீ இல்லை!
உனக்காகவே தங்கம்!
துணிகளுக்காக நீ இல்லை!
உனக்காகவே துணிகள்!
செருப்புக்காக நீ இல்லை!
உனக்காகவே செருப்பு!
நீ ஆத்மா!

நீ உயர்ந்த ஆத்மா!

ராதேக்ருஷ்ணா

பணத்திற்காக நீ இல்லை!
உனக்காகவே பணம்!
வீட்டிற்காக நீ இல்லை!
உனக்காகவே வீடு! 
சொத்துக்காக நீ இல்லை!
உனக்காகவே சொத்து!
நீ உயர்ந்த ஆத்மா!

Tuesday, August 24, 2010

குறை ஒன்றும் இல்லை!

ராதேக்ருஷ்ணா

உனக்கு எந்த விதத்திலும்
குறைவில்லை! நீ உன் மனதிடம்
இதை தெளிவாக சொல்!
அப்படியே சொல்லிக்கொண்டு
வந்தால் நிச்சயம் வாழ்வில்
மாற்றம் வந்தே தீரும்!

உன்னை மாற்றிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

நம்மிடத்தில் எல்லாம் இருக்கிறது!
நீ உன்னை மாற்றிக்கொண்டால்
எல்லாம் சரியாக புரியும்! உன்னுடைய
 மனதை சரியாக வைத்திரு! 
வாழ்க்கை உன்னை வாழவைக்கும்!

இன்று வாழ்!

ராதேக்ருஷ்ணா

இன்றைய பொழுதை நீ வாழ
பழகிக்கொண்டால், நாளைய
பொழுதை பற்றி நீ கவலைப்பட
வேண்டாம்! ஒவ்வொரு நாளும் 
அன்றைய பொழுதை வாழ
தெரிந்து கொள்!

Monday, August 23, 2010

திரு ஓண பிரார்த்தனை!

ரதேக்ருஷ்ணா

இந்த திரு ஓணத்தில்
ஹிந்து தர்மம் ஆகாசம் வரை
வளர்ந்து எல்லாவற்றையும்
ஜெயிக்க பிரார்த்தனை செய்!
நிச்சயம் உலகளந்த பெருமாள்
அனுக்ரஹம்  செய்வார்!

பூரணமாக தந்துவிடு!

ராதேக்ருஷ்ணா

மஹாபலி போலே உன்னிடம்
இருக்கும் அனைத்தையும்
க்ருஷ்ணனின் திருவடிகளில்
பூரணமாக தந்துவிடு! உன்
வாழ்க்கையே அவன் கொடுத்த
 பிரசாதம் தானே... கொடு!

ஆனந்தம் பொங்கும் திரு ஓணம்!

ராதேக்ருஷ்ணா

இன்று ஓங்கி உலகளந்த
உத்தமன் வாமனனின் பிறந்த
நாள்! இந்த திரு ஓணத்தில்
உன்  குடும்பத்தில் சந்தோஷம்
உண்டாகும்! உன் மனதில்
சமாதானம் வரும்...

ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரை தரிசிப்போம்!

ராதேக்ருஷ்ணா

திருக்கோளூரில் ஸ்ரீ மதுரகவி
ஆழ்வாரை தரிசனம் செய்வோம்!
அவரிடம் நல்ல சிஷ்ய 
லக்ஷணங்களை வரமாக
கேட்போம்! நிச்சயம் 
ஆசீர்வாதம் செய்வார்! நம்பு!

திருக்கோளூர் செல்வோம்!


ராதேக்ருஷ்ணா

ஆழ்வாரை தரிசனம் செய்துவிட்டு,
நாம் திருக்கோளூர் செல்வோம்!
அங்கே வைத்த மாநிதி
பெருமாளை சேவிப்போம்! 
அவரிடம் திடமாக பிரார்த்தனை
செய்! நல்லது நடக்கும்!

மானசீகமாக என்னோடு வா!

ராதேக்ருஷ்ணா

அடியேன் ஆழ்வார் திருநகரி
போகிறேன்! நீயும் மானசீகமாக
என்னோடு வா! சுவாமி
நம்மாழ்வாரை தரிசித்து
பவிஷ்யதாசார்யன் ராமானுஜரையும்
சேவிக்கலாம் வா!

யோசித்து பார்... புரியும்!

ராதேக்ருஷ்ணா

உன்னுடைய ஆனந்தங்கள்
என்று எதையெல்லாம் நீ
நினைக்கிறாயோ, அவற்றை
பல முறை யோசித்து பார்! 99% 
அதில் முட்டாள்தனமானவையே
அதிகம் என்பது புரியும்!

நேரம் பெரியது!

ராதேக்ருஷ்ணா

உன்னுடைய ஆசைகளை 
காட்டிலும் நேரம் பெரியது! 
உன்னுடைய தேவைகளை 
சம்பாதிக்கவும், உன் ஆனந்தத்தை 
அதிகமாக்கவும் தான் 
உனக்கு நேரம் இருக்கிறது!

நேரத்தை வீணடிக்காதே!

ராதேக்ருஷ்ணா

உன்னுடைய நேரத்தை
கண்டபடி செலவழிக்காதே!
உன்னுடைய நேரத்தைக் 
கொண்டு நீ உலகையே 
மாற்றலாம்! உனது 
வாழ்க்கையை வெற்றிகரமாக 
வாழ்ந்து காட்டு!

Friday, August 20, 2010

உன்னை நிரூபி!

ராதேக்ருஷ்ணா

மற்றவர்கள் உன்னை பற்றி
என்ன நினைப்பார்கள்
 என்பதற்கு நிறைய 
முக்கியத்துவம் தராதே! உன்
 மனதிற்கு விரோதமில்லாமல்
நீ நடந்து கொள்!
உன்னை நிரூபி!

ஒழுங்காக யோசி!

ராதேக்ருஷ்ணா

மற்றவர்கள் நீ நினைப்பதை
கொண்டாடவேண்டும் என்ற
எதிர்ப்பார்ப்பே உன்னை பல
சந்தர்ப்பங்களில் தவறான
முடிவுகளை எடுக்க வைக்கிறது!
ஒழுங்காக யோசி!

க்ருஷ்ணன் இட்ட வழக்கு!

ராதேக்ருஷ்ணா

நீ நினைப்பது தவறாக
இருப்பதனால் தான் பல
சந்தர்ப்பங்களில் உனக்கு
கஷ்டங்கள் வருகிறது! உன்
 நினைவுகள் க்ருஷ்ணனோடு
ஒத்துப் போக வேண்டும்!

Thursday, August 19, 2010

வாழ்வது உறுதி!

ராதேக்ருஷ்ணா

ராவணன், ஹிரண்யகசிபு
போன்ற மகா பாபிகளே
நம்முடைய தெய்வங்களையோ,
ஹிந்து மதத்தையோ ஒன்றும்
செய்ய முடியவில்லை! ஹிந்து
தர்மம் வாழ்வது உறுதி!

சனாதனமான ஹிந்து தர்மம்!

ராதேக்ருஷ்ணா

ஹிந்து மதம் எந்த ஒரு
தனி மனிதனாலும்
உருவாக்கப்பட்டது 
இல்லை! இது ஒரு 
நாளும் அழியாது! இது
ஒவ்வொரு முறையும் தன்னை
நிரூபணம் செய்திருக்கிறது!

நாம ஜபம் செய்வோம்!

ராதேக்ருஷ்ணா

மத மாற்றத்தினால் சீரழிந்த
குடும்பங்கள் பல! மதம் மாறி
மனம் நொந்து போனவர்கள்
பலர்! இனி மத மாற்றத்தை
தடை செய்வோம்! 
நாம ஜபம் செய்வோம்!

ஜாக்கிரதை!

ராதேக்ருஷ்ணா

மத மாற்றம் என்பது உலக
 நாடுகளை தங்கள் கைக்குள்
கொண்டு வர, பணக்கார
நாடுகள் செய்யும் சதி! ஹே
ஜனங்களே! இவர்களிடம் 
ஜாக்கிரதையாக இருக்கவும்!

மத மற்றம் ஒரு துரோகம்!

ராதேக்ருஷ்ணா

மத மற்றம் என்பது ஒரு
துரோகம்! அது குடும்பத்தை
பிரிக்கிறது! குழந்தைகளை
பெற்றோருக்கு எதிராக
தூண்டுகிறது! ஜனங்களை
ஏமாற்றுகிறது!

Tuesday, August 17, 2010

வரதராஜனே! என்னை தடுத்து ஆட்கொள்!

ராதேக்ருஷ்ணா
வரதராஜனே! உன் கோயிலில்
ஏதாவது ஒரு சின்ன
கைங்கர்யம் தா! என் 
வாழ்க்கை வீணாய் 
போகிறது, தயவு செய்து
என்னை காப்பாற்று!
தடுத்து ஆட்கொள்!

வரதா! என்னையும் காப்பாற்று!

ராதேக்ருஷ்ணா

வரதா! திருக்கச்சி நம்பி
போலே எனக்கு பக்தியை
தா! ராமானுஜரை போலே
உனக்கு கைங்கர்யம் பண்ணும்
பாக்கியம் தா! வேடனாக வந்து
என்னையும் காப்பாற்று!

வரதராஜ தரிசனம்!

ராதேக்ருஷ்ணா

இன்று வரம் தரும் ராஜனை
 தரிசிக்க செல்கிறேன்!
பெருந்தேவி தாயாரை
பார்க்க போகிறேன்!
ராமானுஜரை ஸ்ரீரங்க 
ராஜனுக்கு தத்து 
கொடுத்தவரை பார்க்க வா!

Monday, August 16, 2010

நேசி...

ராதேக்ருஷ்ணா

உன்னுடைய தோல்விகளை நேசி!
உன்னை விரோதிப்பவர்களை
நேசி! உன்னை பெற்றவரை
நேசி! உன் வாழ்வின்
 நிகழ்ச்சிகளை நேசி! உன்
வாழ்க்கையின் புதிர்களை
 நேசி! நேசி...

எல்லோரையும் நேசி!

ராதேக்ருஷ்ணா

உன்னை அவமதிப்பவர்களை
நேசி! உன்னை வெறுப்பவர்களை
நேசி! உன்னை பற்றி அவதூறு
பேசுபவர்களை நேசி! உன்னை
நோகடிப்பவர்களை நேசி!
எல்லோரையும் நேசி!

க்ருஷ்ணனை நேசி!

ராதேக்ருஷ்ணா

உன்னை நேசி! 
உலகை நேசி! 
வாழ்க்கையை நேசி!
நேரத்தை நேசி! 
பிரச்சனைகளை நேசி!
போராட்டங்களை நேசி!
பக்தியை நேசி!
நாம ஜபத்தை நேசி!
க்ருஷ்ணனை நேசி!

வந்தே மாதரம்!

ராதேக்ருஷ்ணா

பக்தி தேசத்திற்கு நமஸ்காரம்!
ஞான தேசத்திற்கு நமஸ்காரம்!
குரு  தேசத்திற்கு நமஸ்காரம்!
தெய்வ தேசத்திற்கு நமஸ்காரம்!
வந்தே மாதரம்!

தாயின் மணிக்கொடி பாரீர்!

ராதேக்ருஷ்ணா

தாயின் மணிக்கொடி பாரீர்!
நம் தாய் திருநாட்டை மதிப்பீர்!
 பாரத மாதாவை வணங்குவீர்! 
ஹிந்துஸ்தானத்தை கொண்டாடுவீர்! 
வந்தே மாதரம் என்போம்!

ஜெய் ஹிந்த்!

ராதேக்ருஷ்ணா

என் பாரத தேசமே!
என்றும் நான் உனக்கு
அடிமை! நான் என்றும்
 உன் பக்தன்! என்
 ஹிந்துஸ்தானமே! நான்
என்றும் உன் குழந்தை!
ஜெய் ஹிந்த்!

உன் வாழ்க்கையை வாழ்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிகழ்ச்சியும் 
உன்னுடைய வாழ்க்கையில்
ஒரு நல்ல மாற்றத்தை 
நிச்சயம் கொண்டு 
வருகிறது! நீ தான் 
புரிந்து நடக்க வேண்டும்! 
உன் வாழ்க்கையை வாழ்!

நீ மனிதன்...

ராதேக்ருஷ்ணா

நிகழ்ச்சிகள் உன்னை பாதிக்க
நீ என்ன ஒரு பூச்சியா?
பூச்சிகளே எந்த
 நிகழ்ச்சிகளிலும் அசராமல்
 தங்கள் வாழ்க்கையை 
நடத்துகிறது! நீ மனிதன்...

நீ சுத்தமான ஆத்மா!

ராதேக்ருஷ்ணா

எந்த ஒரு நிகழ்ச்சியும்
உன்னை பாதிக்கவே 
கூடாது! நீ நிகழ்ச்சிகளை
காட்டிலும் மிக உயர்ந்த
சுத்தமான ஆத்மா!அதை 
என்றும் நினைவில் கொள்!

Friday, August 13, 2010

இனியாவது மாறு!

ராதேக்ருஷ்ணா

திரும்ப திரும்ப நீ ஒரே
தவறை செய்கிறாய் என்றால்
 நீ இன்னும் வாழ்க்கை
 பாடத்தை ஒழுங்காக
 புரிந்துகொள்ளவில்லை
என்று அர்த்தம்!
இனியாவது மாறு!

தவறுகளை மறைக்காதே!

ராதேக்ருஷ்ணா

தவறு செய்வது மனித
இயல்பு! ஆனால் அதை
மறைக்க முயற்சிப்பது
சரியில்லை! உன் தவறை 
மறைக்க நீ 
முயற்சிக்கும்போது
நீ பாவம் செய்கிறாய்...

உன் தவறுகளை திருத்திக்கொள்!

ராதேக்ருஷ்ணா

அடுத்தவர்களின் தவறுகளை
மறக்க தெரிந்து கொள்! உன்
தவறுகளை சரி செய்ய 
கற்றுக்கொள்! தவறுகளே
செய்யாத மனிதர் உலகில்
இருந்ததே இல்லை!

Thursday, August 12, 2010

ரஹஸ்யங்கள் சொல்லுவாயா?

ராதேக்ருஷ்ணா

ஆண்டாளே என்னையும் உன்
தோழிகளில் ஒருத்தியாக்கி 
விடுவாயா? உனக்கும் 
கோவிந்தனுக்கும் நடக்கும்
ரஹஸ்யங்களை என் காதோடு
சொல்லுவாயா? சொல்லேன்..
கேட்க ஆசை!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP