Saturday, November 10, 2012

சரியாக புரிந்துகொள்...

ராதேக்ருஷ்ணா!

எல்லா மஹாத்மாக்களையும் எல்லோரும் 
கொண்டாடுவதில்லை! எல்லா மஹாத்மாக்களும் 
உலகில் தங்கள் மஹிமையை காட்டுவதில்லை!
சரியாக புரிந்துகொள்வதே சரி!

அறிந்துகொள்...

ராதேக்ருஷ்ணா!

சில ஜனங்கள் ஒரு மஹாத்மாவை 
கேவலப்படுத்துவதால், அந்த மஹாத்மா 
மோசமானவர் என்று அர்த்தமில்லை!
உன் குருவை நீ சரியாக 
அறிந்துகொள்ளவேண்டும்!


குருவை புரிந்துகொள்!

ராதேக்ருஷ்ணா!

பலர் உன் குருவை புகழ்வதால் 
நீ அவரை கொண்டாட வேண்டாம்!
சிலர் உன் குருவை இகழ்வதால்,
நீ அவரை கேவலப்படுத்த வேண்டாம்!
குருவை புரிந்துகொள்!

Friday, November 9, 2012

நம்பிக்கை மட்டுமே!

ராதேக்ருஷ்ணா!

எத்தனை முறை மனிதரை 
நம்பி ஏமாந்து விட்டாய்?
இனியாவது உன் க்ருஷ்ணனை 
பூரணமாக நம்பி உன் வாழ்வில் 
ஏமாறாமல் இரு! இனி 
நம்பிக்கை மட்டுமே!

ஏன் யோசிக்கிறாய்?

ராதேக்ருஷ்ணா!
உன் வாழ்க்கையை யாரையெல்லாமோ 
நம்பி கொடுத்திருக்கிறாய்! உனது 
உள்ளேயும், உன் கூடவும், எப்போதும் 
இருக்கும் க்ருஷ்ணனை நம்பி 
கொடுப்பதற்கு ஏன் யோசிக்கிறாய்?

ஆனந்தத்தை அனுபவி...

ராதேக்ருஷ்ணா!

உன்னை நீ பகவானிடம் 
ஒப்படைப்பதால், உனது பாரத்தை 
நீ அவரிடம் கொடுத்துவிடுகிறாய்!
பிறகென்ன? ஆனந்தத்தை அனுபவிப்பது  
மட்டுமே உன் வேலை!

Thursday, November 8, 2012

மாறுவாய்!

ராதேக்ருஷ்ணா!

கோபப்படுவதால் சண்டை முடிவதில்லை!
சந்தேகப்படுவதால் துன்பங்கள் மறைவதில்லை!
குறையை கவனிப்பதால் மற்றவரின் அருமை 
புரிவதில்லை! மாறுவாய்!

க்ருஷ்ணனை பிடி!

ராதேக்ருஷ்ணா!
புலம்புவதால் கஷ்டம் மாறுவதில்லை!
அழுவதால் பிரச்சனைகள் தீர்வதில்லை!
குழம்புவதால் கவலைகள் அழிவதில்லை!
க்ருஷ்ணனை பிடி! எல்லாம் மாறும்!

Wednesday, November 7, 2012

புரிந்து கொள்!

ராதேக்ருஷ்ணா!

குரு உன்னை நாம ஜபம் 
செய்ய சொல்வது உனது 
குடும்பத்திற்காகவும், உன் 
வாழ்க்கைக்காகவும், உன் 
எதிர்காலத்திற்காகவும் தான்!
இதை ஒழுங்காக புரிந்து கொள்!

உடனே செய்வாய்!

ராதேக்ருஷ்ணா!

உன் குருவிடம் நிஜமாகவே 
உனக்கு மரியாதை இருந்தால்,
அவர் சொல்லும்படி விடாமல் 
நாம ஜபம் செய்து க்ருஷ்ணனையே 
நினைத்துக்கொண்டிருப்பாய்! 
உடனே செய்வாய்! 


உயர்ந்த பக்தி!

ராதேக்ருஷ்ணா!

குரு உன்னிடம் எதிர்ப்பார்ப்பது 
உயர்ந்த பக்தியை மட்டுமே!
அதைத் தவிர வேறு எதற்காகவும் 
உன் குரு உன்னை கொண்டாடவே 
மாட்டார்! நன்றாக பக்தி செய்வாய்!


Tuesday, November 6, 2012

நிறைய பிடிக்கும்!

ராதேக்ருஷ்ணா!

குருவிற்கு யார் விடாமல் 
நாம ஜபம் செய்கிறாரோ 
அவர்களை மட்டுமே நிறைய 
பிடிக்கும்! நீ நாம ஜபம் 
செய்யாவிட்டால் நிச்சயம் 
குருவுக்கு உன்னை பிடிக்காது!


ஒரே வழி!

ராதேக்ருஷ்ணா!

குரு உன் மேல் விசேஷ அனுக்ரஹம்  
செய்ய வேண்டுமா?அப்படியெனில் 
நீ விடாமல் க்ருஷ்ண நாமம் 
ஜபிப்பாய் ! இது ஒன்று தான் உன் 
குருவை இழுக்க ஒரே வழி!

உன்னை நினைக்கிறான்!

ராதேக்ருஷ்ணா!

நீ க்ருஷ்ணனை நினைக்கும்போது
உன் க்ருஷ்ணன் உன்னை 
நினைக்கிறான்! நீ க்ருஷ்ணன் பெயரை 
ஜபிக்கும்  போது க்ருஷ்ணன் உன் 
பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறான்!

Monday, November 5, 2012

உணர்வாய்!

ராதேக்ருஷ்ணா!

மனதிற்கு சமாதானம் வேண்டும்
 என்றால், நீ க்ருஷ்ணனை நினை!
அவன் நாமத்தை விடாமல் 
ஜபிப்பாய் ! வாழ்வில் பல நல்ல 
மாறுதல்களை நீ உணர்வாய்!

க்ருஷ்ணனை நினை...

ராதேக்ருஷ்ணா!
க்ருஷ்ணனை நினைப்பதால் நீ 
உனது கவலைகளை மறக்கிறாய்!
உன் மனதும் உடலும் ஆரோக்கியமாய் 
இருக்கும்! க்ருஷ்ணனை நினைத்தால் 
நல்லதே நடக்கும்!

நினைப்பாய்...ஜபிப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனை அவனது பாதம் 
முதல் தலை முடி வரை நிறுத்தி 
நிதானமாக நினைப்பாய்! கூடவே 
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்று 
விடாமல் ஜபிப்பாய்!

Sunday, November 4, 2012

தலையில் மயில்பீலி!

ராதேக்ருஷ்ணா!

பரந்த நெற்றியில் அழகான 
திலகம்! அற்புதமான காதுகளில் 
மகர குண்டலங்கள்! அழகாக 
சுருண்ட கருத்த தலை முடி!
தலையில் மயில்பீலி! நினை!

வில் போன்ற புருவம்!

ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனுடைய பற்கள் முத்து 
போலே பிரகாசிக்கும்!எடுப்பான 
மூக்கு க்ருஷ்ணனுக்கு ! சிவந்த 
தாமரை போன்ற கண்கள்!
அழகாக வளைந்த வில் 
போன்ற புருவம்!

பளபளக்கும் கண்கள்!

ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனின் திருமுக மண்டலம் 
எப்பொழுதும் புன் சிரிப்போடு இருக்கும்!
கண்ணாடி போன்ற பளபளக்கும் கண்கள்!
கோவைப்பழம் போலே சிவந்த 
உதடுகள் அவனுக்கு!


Saturday, November 3, 2012

அழகான தோள்கள்...


ராதேக்ருஷ்ணா!

உருண்டு திரண்ட அழகான 
தோள்கள் க்ருஷ்ணனுக்கு! நீண்ட 
கைகள்! அழகாக சிவந்த 
உள்ளங்கைகள்! 10 விரல்களிலும் ஜோரான 
மோதிரங்கள் அணிதிருக்கிறான்!

வக்ஷஸ்தளம்...


ராதேக்ருஷ்ணா! 

எல்லோரும் மயங்கும் படியான 
வக்ஷஸ்தளம் க்ருஷ்ணனுக்கு! எடுப்பான 
கழுத்து! வித விதமான நவரத்தின 
மாலைகளும், பூ மாலைகளும் அவன் கழுத்தில்...

சாமுத்ரிகா லக்ஷணம்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனின் தொப்புள் கருந்தாமரை 
பூ போலே இருக்கும்! அவனுடைய 
வயிற்றில் சாமுத்ரிகா லக்ஷணப்படி 
3 மடிப்புகள் இருக்கும்! அகன்ற 
மார்பு பிரதேசம் அவனுக்கு!

Friday, November 2, 2012

நினைப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனின் இடை நன்றாக 
சிறியதாக இருக்கும்! அதில் 
பகவான் அழாகான பட்டு 
பீதாம்பரம் உடுத்தி இருப்பான்!
 இடுப்பில் ஒட்டியாணம் இருக்கும்!
 நினைப்பாய்!

மென்மையாய் இருக்கும்!


ராதேக்ருஷ்ணா!

பகவானுடைய கணுக்கால்களில் அழகான 
தண்டையும், சலங்கையும் மின்னும்!
 முழங்கால்கள் மிகவும் மென்மையாய் இருக்கும்!
 திருத்தொடைகள் அகலமாய் இருக்கும்!

அழகாக இருக்கும்!

ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனின் பாதங்கள் தாமரை 
போலே சிவந்திருக்கும்! க்ருஷ்ணனின் 
திருவடிகள் மிக அழகாக இருக்கும்!
விரல் நகங்கள் மென்மையாக சிவந்திருக்கும்!

Thursday, November 1, 2012

கண்ணாரக் கண்டனர்!


ராதேக்ருஷ்ணா!

மழைக்காக தான் முதாலாழ்வார்கள் 
மூவரும் திருக்கோவலூரில் ஒரு ரிஷியின் 
ஆசிரமத்தில் ஒதுங்கினர்! அப்பொழுதுதான் 
பகவானைக் கண்ணாரக் கண்டனர்!

மழைக்கு ஜெய்!


ராதேக்ருஷ்ணா!

கொட்டும் மழையில் தான் 
பகவான் க்ருஷ்ணன் கோவர்தன 
மலையை தூக்கி கோபர்கள்,
கோபிகைகள், மாடுகள், ஆடுகள் 
எல்லாவற்றையும் ரக்ஷித்தான்!
 மழைக்கு ஜெய்!

தெய்வீகமானது...


ராதேக்ருஷ்ணா!

மழை தெய்வீகமானது, மழையைப் 
பார்த்தே ஸ்ரீ ஜெயதேவர் அஷ்டபதியை 
ஆரம்பித்தார்! மழையில் தான் சுதாமாவும் 
க்ருஷ்ணனும் காட்டில் அலைந்தனர்!

Wednesday, October 31, 2012

மனதின் ஆரோக்கியம்!


ராதேக்ருஷ்ணா!

உன் மனதை நீ ஆரோக்கியமாக 
வைத்திருப்பதே உனக்கு நல்லது!
உன் மனதின் ஆரோக்கியத்தை 
பொருத்தே உனது வாழ்க்கையின் 
ஆனந்தமும், உடலின் ஆரோக்கியமும்!

அமைதி கிடைக்கும்!


ராதேக்ருஷ்ணா!

உன் மனதை நீ சமாதானமாக 
வைத்துக்கொண்டே ஆகவேண்டும்!
 அதற்க்கு நீ விடாமல் நாம ஜபம் 
செய்தே ஆகவேண்டும்! நிச்சயம் 
அமைதி கிடைக்கும்! கலங்காதே!

சுகமாய் இரு!

ராதேக்ருஷ்ணா!

மனதுக்கும் உடலுக்கும் நிறைய 
சம்மந்தம் உண்டு! நம் மனதின் 
பயமும், கோபமும், கவலையும் 
நம் உடல் நலத்தை நிச்சயம் 
பாதிக்கும்! மனதே சுகமாய் இரு!

Tuesday, October 30, 2012

நாராயண நாமம்...


ராதேக்ருஷ்ணா!

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்
 " இந்த மனித உடம்பில் பிறந்து,
நிறைய தவறுகளை செய்து நான் 
படாத பாடு பட்டேன்! நாராயண
 நாமம் என்னை காத்தது!"

மோக்ஷம் உண்டு...


ராதேக்ருஷ்ணா!

திருப்பாணாழ்வார் சொல்கிறார் 
" ஸ்ரீ ரங்க நாதன் இடையில் 
கட்டி இருக்கும் அழகான 
பீதாம்பரத்தை நினைதிருந்தாலே 
நமக்கு நிச்சயம் மோக்ஷம் உண்டு"

Monday, October 29, 2012

யோசிப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

அஹம்பாவம் ஒரு நாளும் 
நல்லது செய்யாது! விநயம் 
ஒரு நாளும் கெடுதல் தராது!
 சத் சங்கம் ஒரு நாளும் உனக்கு 
கஷ்டம் தராது! தீர்கமாய் யோசிப்பாய்!

சத்சங்கத்தில் இருப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

பக்தி செய்வதால் உனக்கு 
நஷ்டமில்லை! நாம் ஜபம் 
சொல்வதில் ஒரு கஷ்டமுமில்லை!
 குரு சொல்படி நடந்தால் ஒரு 
தொல்லையுமில்லை! சத்சங்கத்தில் இருப்பாய்!

பக்தி செய்வாய்!


ராதேக்ருஷ்ணா!

கஷ்டம் வருவது தெய்வதினால் 
அல்ல! பிரச்னை தருவது கடவுளின் 
வேலையுமல்ல! நம்மை அழவைப்பதில் 
தெய்வத்திற்கு ஆசையுமில்லை!
 பக்தி செய்வாய்!

Sunday, October 28, 2012

தெளிவாகு!


ராதேக்ருஷ்ணா!

காவி கட்டுபவர் எல்லாம் 
சன்யாசியுமல்ல! கோயிலுக்கு போகாதவர் 
எல்லாம் நாஸ்தீகனுமல்ல! கண்களில் 
அழுகை வருபவரெல்லாம் பக்தருமல்ல!
 தெளிவாகு!

கெட்டவர் அல்ல...


ராதேக்ருஷ்ணா!

கோபப்படுபவர் எல்லாம் கெட்டவர் 
அல்ல! அமைதியாய் இருப்பவர் எல்லாம் 
நல்லவரல்ல! திட்டுபவர் எல்லாம் விரோதியுமல்ல! 
கொஞ்சுபவர் எல்லாம் வேண்டியவருமல்ல!

தெரிந்து கொள்!


ராதேக்ருஷ்ணா!

அழுபவர் எல்லாம் கோழையுமல்ல!
சிரிப்பவர் எல்லாம் தைரியசாலியுமல்ல!
தோர்ப்பவர் எல்லாம் முட்டாளல்ல!
ஜெயிப்பவர் எல்லாம் புத்திசாலியல்ல!
தெரிந்து கொள்!

Saturday, October 27, 2012

வாயினால் பாடி...மனிதனால் சிந்திக்க...


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீமதி ஆண்டாள் சொல்கிறார் 
"க்ருஷ்ண நாமத்தை வாயினால் 
சொல்லி, மனிதனால் அவனையே 
நினைத்தால் பாவங்கள் எல்லாம் 
தீயில் பஞ்சு போலே உடனே அழியும்"

என் அரங்கன்!


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீ திருப்பாணாழ்வார் சொல்கிறார்" 
அமுதனான ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும் 
என் அரங்கனாதனைக் கண்ட கண்கள் 
வேறு எதையும் ரசித்து அனுபவிக்காது"

சுகம்..


ராதேக்ருஷ்ணா!

குலசேகர ஆழ்வார் சொல்கிறார் 
"ஹே மனமே ! ஸ்ரீ ஹரியின் 
திருவடிகளை நினைப்பது போலே 
சுகம் தரும் வேறு ஒரு விஷயம் 
இந்த உலகில் எதுவுமில்லை!"

Friday, October 26, 2012

நல்ல ரிஷியே!


ராதேக்ருஷ்ணா!

மான் மீது ஆசை வைத்து 
மானாக பிறந்து 3 ஜன்மா 
கழிந்து மோக்ஷம் அடைந்தாலும்,
 ஜட பரதர் நல்ல ரிஷியே! யாவரையும் 
மதிக்க தெரிந்து கொள்!

க்ருஷ்ண பக்தை !


ராதேக்ருஷ்ணா!

5 கணவரோடு வாழ்ந்தாலும் 
திரௌபதி பதிவிரதை தான்!
 அவள் காமத்துக்காக 5 பேரை 
கல்யாணாம் செய்யவில்லை! திரௌபதி 
அற்புதமான க்ருஷ்ண பக்தை !

தவறாக நினைக்ககூடாது!


ராதேக்ருஷ்ணா!

கோபக்காரராக இருந்தாலும் துர்வாசர் 
ரிஷி தான்! பெண்ணிடம் மயங்கினாலும் 
விஸ்வாமித்திரர் பிரம்ம ரிஷி தான்! நாம் 
அவர்களை தவறாக நினைக்ககூடாது!

Thursday, October 25, 2012

விஜயம் உண்டாகட்டும்!


ராதேக்ருஷ்ணா!

இந்த விஜய தசமிக்கு எல்லோருக்கும் 
விஜயம் உண்டாகட்டும்! மனதில் 
நிரந்தரமான நம்பிக்கை வரட்டும்!
வென்று காட்டும் வைராக்கியம் 
உடனே வந்து சேரட்டும்!

Wednesday, October 24, 2012

போற்றி போற்றி!

ராதேக்ருஷ்ணா!

இன்று பூததாழ்வாரின் திருநக்ஷத்திரம்!
 ஐப்பசி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில்,
திருக்கடல் மலை திவ்ய தேசத்தில்
அவதரித்தார்! போற்றி போற்றி!

விஜய தசமி!

ராதேக்ருஷ்ணா!

இன்று விஜய தசமி!
 நாம் நன்றாக வாழ்வில்
வெற்றி பெற நமக்கு
கிடைத்த பொன்னால் இது!
 என்றும் குருவை மறவாமல்
இருந்து வாழ்வில் ஜெயித்து கட்டுவாய்!

Tuesday, October 23, 2012

வேட்டையாடுவாய்!


ராதேக்ருஷ்ணா!

ஹே பத்மநாபா! உனது அருளுக்காக 
ஏங்கும் எங்களிடம் தேவை இல்லாத
 அசுர குணங்கள் பல கோடி 
இருக்கிறது! அவற்றை எல்லாம் 
இப்பொழுதே வேட்டையாடுவாய்!

காண கண் கோடி வேண்டும்!


ராதேக்ருஷ்ணா!

வில்லேந்தி பத்மநாபன் வரும் 
அழகைக் காண கண் கோடி 
வேண்டும்! உச்சி முதல் பாதம் 
வரை இப்பொழுது பத்மனாபரை 
தரிசிப்பவர் பாகவதர்களே...

வைகுந்தம் அடைவர்!


ராதேக்ருஷ்ணா!

வேட்டையாட நமது பத்மநாபன் 
தயாராகிவிட்டான்! இன்று ஸ்ரீ 
அனந்த பத்மானாபனின் வேட்டையை 
திருவனந்தபுரத்தில் பார்ப்பவர் 
வைகுந்தம் அடைவர்!

Monday, October 22, 2012

தோற்பதில்லை!


ராதேக்ருஷ்ணா!

பிரார்த்தனை செய்பவர் வீண் 
போவதில்லை! பிரார்த்தனை ஒரு 
நாளும் தோற்பதில்லை! பிரார்த்தனை 
செய்பவருக்கு பலம் அதிகம் !
பிரார்த்தனை என்பது பக்தியே!

விசேஷ வரம்!


ராதேக்ருஷ்ணா!

பிரார்த்தனை என்பது க்ருஷ்ணன் 
உனக்கென விசேஷமாக கொடுத்த 
வரம்! அந்த வரத்தைக் கொண்டு நீ 
உலகில் எதை வேண்டுமானாலும் 
அடையமுடியும்!

பிரார்த்தனை செய்!


ராதேக்ருஷ்ணா!

உனக்கு வேண்டியதை எல்லாம் 
தருவதற்கு க்ருஷ்ணன் இருக்க,
நீ ஏன் மனிதரிடம் போய் 
கெஞ்சுகிறாய்? நிம்மதியாய், நிதானமாய் 
க்ருஷ்ணனிடம் பிரார்த்தனை செய்!

Sunday, October 21, 2012

கர்மாவுக்கு தகுந்தபடி...


ராதேக்ருஷ்ணா!

கர்மாவுக்கு தகுந்தபடி தான் 
நம் வாழ்க்கை! நம் கர்மாவுக்கு 
தகுந்தபடி தான் நம் உடலின் பலம்!
கர்மாவுக்கு தகுந்த படி தான் 
நம் ஆனந்தமும்!

கர்மாவை கவனி!


ராதேக்ருஷ்ணா!
உனது உடல்  மாறும்! ஆத்மா 
மாறாது! கர்மாவுக்கு தகுந்தபடி 
நிச்சயம் நமக்கு சரீரம் உண்டு!
உன் கர்மாவை கவனி! 
க்ருஷ்ணனுக்கு பிடித்ததை செய்!

வைகுண்டைத்தை அடைவாய்!


ராதேக்ருஷ்ணா!

உன் கர்மாவுக்கு தகுந்த படி 
உனது சரீரம் கிடைத்துள்ளது!
இந்த சரீரத்தைக் கொண்டு
நல்ல காரியத்தை செய்து 
க்ருஷ்ணனின் வைகுண்டைத்தை அடைவாய்!

Saturday, October 20, 2012

மனதில் பலம்...


ராதேக்ருஷ்ணா!

உன் மனதில் பலத்தை பற்றிய 
சிந்தனை வந்தாலே, உன் 
பலவீனமேல்லாம் நிச்சயம் மாறும்!
 பலம் உன் மனதில் வரவேண்டும்!
 பின் உடலிலும் வாழ்விலும் வரும்!

பலம் பெறுவாய்!


ராதேக்ருஷ்ணா!

வியாதியை பற்றி யோசிப்பதை 
விட ஆரோக்கியத்தை பற்றி 
யோசிப்பதே மிகவும் நல்லது!
உன் ஆரோக்கியத்தில் உனது 
சிந்தனையை வெய்! நிச்சயம் 
பலம் பெறுவாய்!

வளம் பெரும்!


ராதேக்ருஷ்ணா!

நாம் நமக்கு கிடைக்கும் 
பொழுதிலெல்லாம், நல்ல விஷயங்களாக 
யோசிக்க ஆரம்பித்தால், நம் உடலும்,
 நம் மனமும், நம் வாழ்வும் வளம் 
பெரும்! இது சத்தியம்!

Friday, October 19, 2012

உனது சொத்து!


ராதேக்ருஷ்ணா!

உன் வாழ்க்கை என்பது உனது 
சொத்து! எந்த நாளும் அதை 
நீ வீனடிக்கவே கூடாது! இழந்தால் 
கிடைக்காத சொத்து உனது 
வாழ்வே! இதை நினைவில் கொள்!

க்ருஷ்ணன் தந்ததே!


ராதேக்ருஷ்ணா!

உன் வாழ்க்கையை பற்றி உன்னை 
விட க்ருஷ்ணனுக்கு அக்கறை அதிகம்!
உனக்கு கிடைக்கிற எல்லாமே 
க்ருஷ்ணன் உனக்கு விசேஷமாக
தந்ததே! வாழ்வை அனுபவிப்பாய்!

உபயோகப்படுத்து!


ராதேக்ருஷ்ணா!

நமக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை 
அமையவில்லை என்றால், அதில் 
ஏதோ நன்மை இருக்கிறது என்று 
புரிந்து கொள்! கிடைத்த வாழ்வை 
நன்றாய் உபயோகப்படுத்து!

Thursday, October 18, 2012

உணரமுடியும்!


ராதேக்ருஷ்ணா!

குழந்தையும் தெய்வமும் ஒன்று!
 நீ குழந்தையானால், நிச்சயம் 
உன் வாழ்வில், வார்த்தையில், 
செயலில் நீ தெய்வத்தின் 
தன்மையை நன்றாக உணரமுடியும்!

அனுபவிக்கமுடியும்!


ராதேக்ருஷ்ணா!

நீ குழந்தையாய் இருக்கும் வரை,
உன்னுடைய க்ருஷ்ணனை நீ வித 
விதமாக அனுபவிக்கமுடியும்! உனது 
அஹம்பாவம் தான் உன்னை 
க்ருஷ்ணனிடமிருந்து விலக்கும்!

குழந்தையாய் வாழலாம்!


ராதேக்ருஷ்ணா!

நீ குழந்தையாய் மாறிவிட்டால்,
 உலகமே உனக்கு கோயில்! நீ 
அஹம்பாவியாக இருந்தால், உலகமே 
உனக்கு நரகம்! நீ பக்தி செய்தால் 
குழந்தையாய் வாழலாம்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP