Friday, April 29, 2011

எல்லாம் மாறும்!


ராதேக்ருஷ்ணா

நிச்சயம் நீ வெல்வாய்! இதில்
உனக்கு ஒருநாளும் சந்தேகமே 
வரக்கூடாது! சந்தேகம் 
வரும்போதெல்லாம் விடாமல்
நாமஜபம் செய்! எல்லாம் 
மாறும்! கவலைப்படாதே!

பிரகாசம் அடையும்!


ராதேக்ருஷ்ணா

உன் ஆழ் மனதில் பதிந்துள்ள
தேவையற்ற சிந்தனைகளை
ஒவ்வொன்றாக களைந்துகொண்டே
வந்தால் நிச்சயம் உன் மனம்
பிரகாசம் அடையும்! முயற்சி
செய் முடியும்!

அனைவரும் நலமே!


ராதேக்ருஷ்ணா

எல்லாம் வல்ல இறைவனின் 
அருளால் நாம் அனைவரும்
நலமே! நம்முடைய கேட்ட
குணங்கள், செயல்கள், 
எண்ணங்கள் மாற நாம்
நிம்மதியாய் மட்டுமே 
இருப்போம்! இது சத்தியம்!

Thursday, April 28, 2011

சவால்களை வெல்...


ராதேக்ருஷ்ணா

எல்லா சவால்களையும் சந்தித்து,
சமாளித்து, வெல்வதுதான் சுகம்!
சவால்களே இல்லையென்றால் 
வாழ்வில் ஒரு நாளும் முன்னேற்றமோ,
சுகமோ இருக்கவே இருக்காது!

சவாலை சமாளி!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலையிலும்
நீ வளருகின்றாய்! ஒவ்வொரு புதிய
சவாலும் உன்னை இன்னும்
பக்குவப்படுத்துகிறது! எதற்கும்
கலங்காதே! சவாலை சமாளி!

கணக்கு பண்ணிப் பார்!


ராதேக்ருஷ்ணா

உன் சுயநலத்தினால் நீ
எத்தனை தடவை எத்தனை
அசிங்கமான காரியங்கள்
உலகில் செய்திருக்கிறாய் 
என்பதை கணக்கு பண்ணிப்
பார்! உன்னை நீ சரி செய்!

சுயநலத்தின் எல்லை...


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய சுயநலத்தின் எல்லையை
நீ தெரிந்துகொள்! உன் சுயநலத்தின்
காரணமாக நீ எத்தனை தடவை
பயங்கரமாக நடந்துகொண்டிருக்கிறாய் 
என்று நினை! 

சுயநலவாதிகள்!


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் சுயநலவாதிகள்!
தங்களுடைய காரியம் நடக்க
என்னவேண்டுமானாலும் 
சொல்வார்கள்; செய்வார்கள்! 
நீ தான் உன்னை 
காத்துக்கொள்ளவேண்டும்!
வேறு வழி இல்லை!

Tuesday, April 26, 2011

நீ பெரிய மனிதரில்லை!


ராதேக்ருஷ்ணா

பக்தி செய்வதினால் நீ 
உலகில் பெரிய மனிதரில்லை! 
நீ குழந்தையாய் குதூகலமாய்
எப்பொழுதும் சந்தோஷமாக 
இருப்பதற்காகவே பக்தி 
செய்கிறாய்!

எளிமையான பக்தி...


ராதேக்ருஷ்ணா

எளிமையான பக்தி செய்!
பக்தி என்பது உன்னை 
நிம்மதியாக வைப்பதற்காகவே!
பக்தி என்று உன் கற்பனை
உலகில் சஞ்சரிக்காதே!
கடவுளை நம்பினால் பக்தி!

வாழ்ந்துவிடு!


ராதேக்ருஷ்ணா

இத்தனை நாள் வாழ்ந்துவிட்டாய்!
இன்னும் இருக்கும் காலம் 
வரை வாழ்ந்துவிடு! வாழ்க்கை 
உனக்கு கிடைத்திருக்கிறது!
அதனால் சந்தோஷமாக 
வாழ்ந்துவிடு!

உன்னை சரிசெய்துகொள்...


ராதேக்ருஷ்ணா

எல்லோரையும் குறை கூறுவதை
நிறுத்து! உன்னை நன்றாக
சரிசெய்துகொண்டு வாழ்வை
அனுபவி! உன்னுள் மாற்றம்
வந்தால் உலகமே மாறும்! இதை 
புரிந்துகொண்டால் நலம்!

உன் மனம்...


ராதேக்ருஷ்ணா

இன்னும் எத்தனை காலம்தான் 
உன் பிரச்சனைகளுக்கு கடவுள் 
மீது பழி போடுவாய்? உன் மனம்
ஒழுங்காக இருந்தாலே கடவுளின்
அனுக்ரஹம் உனக்குப் புரியும்!

உன் மனம் மட்டுமே...


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய தோல்விகளுக்கும்,
வியாதிகளுக்கும், பிரச்சனைகளுக்கும்
அடுத்தவரின் கண் திருஷ்டியோ அலல்து
பொறாமையோ காரணமில்லை! உன்
மனம் மட்டுமே காரணம்!

உன் மனம் மட்டுமே...


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய தோல்விகளுக்கும்,
வியாதிகளுக்கும், பிரச்சனைகளுக்கும்
அடுத்தவரின் கண் திருஷ்டியோ அலல்து
பொறாமையோ காரணமில்லை! உன்
மனம் மட்டுமே காரணம்!

விட்டலனின் அழகு!


ராதேக்ருஷ்ணா

நாங்கள் இப்பொழுதுதான் 
விட்டலனை நன்றாக 2 முறை 
தரிசனம் செய்துவிட்டு வந்தோம்!
ரொம்ப அழகாக இருக்கிறான்
விட்டலன்! அவனைப் 
பார்ப்பதே சுகம்!

என்னோடு வா!


ராதேக்ருஷ்ணா

நாங்கள் இப்பொழுது பண்டரிபுரத்தில்
இருக்கிறோம்! இதோ விட்டலனின்
சந்நிதிக்கு செல்கின்றோம்! நீயும்
என்னோடு வா! விட்டலனின் பாதம்
பிடிப்போம்! வேகமாய் வா!

Saturday, April 23, 2011

தெய்வக்குழந்தைகள்...


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் பலவிதம்! ஒவ்வொருவரும்
ஒரு விதம்! நீயும் ஒரு விதம்தான்!
அதனால் யாரையும் தரக்குறைவாக
நினைக்காதே! எல்லோரும்
தெய்வக்குழந்தைகளே!

சரியாக புரிந்துகொள்!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களை புரிந்து நட! யார்
 எப்படிப்பட்டவர்கள் என்பதை நீ
 தான் தெரிந்துகொள்ளவேண்டும்!
க்ருஷ்ணன் உனக்கு 
சொல்லிக்கொடுப்பதை 
சரியாக புரிந்துகொள்!

சந்தேகம்...


ராதேக்ருஷ்ணா

சந்தேகம் என்பது மனதின்
மிகப்பெரிய வியாதி! சந்தேகம்
இருந்தால் வாழ்வில் நிச்சயம்
பிரச்சனைகள் வந்துகொண்டே 
இருக்கும்! சந்தேகத்தை 
தூர எரி!

Friday, April 22, 2011

உன்னுடைய வேலை!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் வாழ்வில்
புதுப்புது மாற்றங்கள் 
நிகழ்ந்துகொண்டேதான்
இருக்கும்! அதை எல்லாம்
உபயோகப்படுத்திக்கொண்டு
வாழ்வில் வெல்வதுதான்
உன்னுடைய வேலை!

தெய்வத்தை நம்பு!


ராதேக்ருஷ்ணா

தெய்வம் மட்டுமே என்றும்
மாறாதது! தெய்வத்தை திடமாக
நம்பிக்கொண்டு உலகின் 
மாற்றத்தை ஏற்றுக்கொள்! நீ 
தெளிவாக இருந்தால் யாரும் 
உன்னை குழப்பமுடியாது!

மாற்றத்தை ஏற்றுக்கொள்...


ராதேக்ருஷ்ணா

உலகில் மாற்றம் என்பது
மிகவும் அவசியமான ஒன்று!
உன்னால் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள
முடியவில்லை என்றால் அது
உன் மடத்தனம்! மாற்றத்தை
ஏற்றுக்கொண்டால் வெல்வாய்!

Wednesday, April 20, 2011

மனதை சரி செய்...


ராதேக்ருஷ்ணா

முடிந்ததை பற்றி இப்பொழுது
நினைத்து என்ன பயன்? இனி
நடப்பவை நல்லவையாக இருக்க
உன்னை, உன் மனதை சரி 
செய்து கொள்! வாழ்க்கை
சுகமாக இருக்கும்!

இனி நடப்பதைப் பார்ப்போம்!


ரதேக்ருஷ்ணா

போனதெல்லாம் போகட்டும்! அதை
நினைத்து என்ன ஆகப்போகிறது
இப்பொழுது? இனி நடப்பதைப்
பார்ப்போம்! நடந்தவை அனைத்தும்
நிச்சயம் நன்மைக்காகத்தான்!

கஷ்டமே வராது!


ராதேக்ருஷ்ணா

நல்லதை மட்டுமே நினைத்திருந்தாலே,
வாழ்வில் கஷ்டமே வராது! நீ
கெட்டதையே நினைத்திருப்பதால்
தான் வாழ்வே பயங்கரமாக
ஆகிறது! சரி செய்!

Tuesday, April 19, 2011

இன்றே மாறிவிடு!


ராதேக்ருஷ்ணா

முடிந்து போன விஷயத்தை
நினைத்திருந்தால் இன்றைய 
நாள் வீணாகிவிடும்! பிறகு 
நாளைய வாழ்க்கை 
கேள்விக்குறியாகிவிடும்! 
அதனால் இன்றே மாறிவிடு!

நீ தயார்!


ராதேக்ருஷ்ணா

நாளைய வாழ்க்கை கேள்வி
என்றால், அதன் பதில் இன்றைய
வாழ்க்கை! இன்றைய பொழுதை
நீ ஒழுங்காக உபயோகப்படுத்தினால்,
நாளைய கேள்விக்கு இன்றே நீ தயார்!

நீ ஆனந்தத்தின் குழந்தை!


ராதேக்ருஷ்ணா

இன்று இப்பொழுது ஆனந்தமாக
இரு! நாளைய கவலையில் 
இன்றைய ஆனந்தத்தை ஏன்
இழக்கிறாய்? கொஞ்சம்
 யோசித்துப் பார்! நீ
ஆனந்தத்தின் குழந்தை!

Monday, April 18, 2011

குழந்தை மனம்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை எப்பொழுதும்
குழந்தை போலே வைத்திரு!
அப்பொழுதுதான் வாழ்வை 
உன்னால் உள்ளபடி
 ரசிக்கமுடியும்! வாழ்வை 
ரசிக்காமல் வாழ்வதெப்படி? 
யோசி!

ஆனந்தம் மட்டுமே...


ராதேக்ருஷ்ணா

வெய்யிலாய் இருந்தால் என்ன? 
சூரியன் உக்கிரமாய் இருந்தால்
என்ன? மனதில் குதூகலம்
இருந்தால் வாழ்வில் என்றும்
எங்கும் நிரந்தரமான 
ஆனந்தம் மட்டுமே...

மாற்றிக் கொள்...


ராதேக்ருஷ்ணா

எத்தனை சுகமான காலைப்பொழுது!
எல்லோரும் வெய்யிலைப் பற்றி 
பேசிக்கொண்டிருக்கையில்,
குயில்கள் ஆனந்தமாக பாடி
சுகமாய் வாழ்கின்றன!
உன்னை மாற்றிக் கொள்...

காலாற நடக்கலாம் வா!


ராதேக்ருஷ்ணா

பகவான் ஸ்ரீ அனந்த
பத்மநாபரோடு ஸ்ரீ நரசிம்ஹ 
மூர்த்தி, ஸ்ரீ க்ருஷ்ணன், 
ஸ்ரீ வராஹ மூர்த்தி எல்லாம்
வருவார்கள்! சுகமாக காலாற
நடக்கலாம் வா! வா!

நீயும் எங்களோடு வா!


ராதேக்ருஷ்ணா

5 மணிக்கு ஸ்ரீ அனந்த
பத்மநாப ஸ்வாமி தன் 
கோயிலை விட்டு வெளியில் 
வந்து பக்தர்களோடு நடந்து 
சங்கு முகம் கடற்கரைக்கு
செல்வார்! நீயும் எங்களோடு வா!

அனந்தபுரம் வா!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ அனந்த பத்மநாப
ஸ்வாமியின் ஆராட்டு! பகவான்
பக்தர்களோடு கடலுக்கு சென்று
நீராடி மகிழ்வார்! நீயும் உடனே 
புறப்பட்டு அனந்தபுரம் வா!

பரிசுத்தமாகப்போகிறோம்!


ராதேக்ருஷ்ணா

இன்று வேட்டையில் நம்முடைய
காமம், கோபம், பொறாமை,
துஷ்ட புத்தி எல்லாவற்றையும்
பத்மநாபன் அழிக்கப்போகிறார்!
ஆஹா! இன்று பரிசுத்தமாகப்போகிறோம்!

ஓடோடி வா!


ராதேக்ருஷ்ணா

கையில் வில் ஏந்தி என்
அனந்த பத்மநாபன் வேட்டைக்கு
வரும் அழகே தனிதான்!
என் பத்மநாபனைப் பார்க்க 
ஓடோடி வா! சீக்கிரம் வா!
இப்பொழுதே வா! வந்துவிடு!

அனந்த பத்மநாப ஸ்வாமியின் வேட்டை!


ராதேக்ருஷ்ணா

இன்று அனந்த பத்மநாப ஸ்வாமியின்
 வேட்டை! இரவு 9 அளவில் 
நடக்கப்போகிறது! உன் இடத்தில்
இருந்து கொண்டு  பகவன் நாமத்தை
விடாமல் ஜபித்து அனுபவி! 

Friday, April 15, 2011

விஷு கைநீட்டம்!


ராதேக்ருஷ்ணா

இன்று விஷுவுக்கு பெரியவர்கள்
மற்றவர்களுக்கு பணம் தருவார்கள்
(கைநீட்டம் என்று பெயர்)! நான் 
என் குழந்தை பத்மநாபனுக்கு
விஷு கைநீட்டம் கொடுத்தேனே!

ஸ்ரீ பத்மநாபரின் அலங்காரம்...


ராதேக்ருஷ்ணா

காலையில் ஸ்ரீ பத்மநாபரின்
சந்நிதியில் வாள், செங்கோல்,
பழங்கள் எல்லாவற்றையும் வைத்து 
அலங்காரம் செய்திருந்தார்கள்!
பார்க்கவே அழகாக இருந்தது!

விஷு புண்ணிய தினம்!


ராதேக்ருஷ்ணா

இன்று விஷு புண்ணிய தினம்!
காலையில் 3 மணிக்கெல்லாம் 
ஸ்ரீ பத்மநாபரை தரிசித்தேன்!
எத்தனை சுகம்! எத்தனை 
ஜனங்கள் ஆசையோடு 
வந்திருக்கிறார்கள்!

Thursday, April 14, 2011

இந்த தமிழ் புத்தாண்டில்...


ராதேக்ருஷ்ணா

இந்த தமிழ் புத்தாண்டில்
நம்முடைய ஹிந்து தர்மம்
செழிக்க பாடுபடுவோம்!
நம்முடைய பாரதம் வாழ
உண்மையாய் உழைப்போம்!
ஒன்றாய் வாழ்வோம்! 
அனுபவிப்போம்!

நல்லதாகவே இருக்கும்!


ராதேக்ருஷ்ணா

இந்த வருடம் நிச்சயம்
நல்லதாகவே இருக்கும்!
தேவையில்லாமல் மனதைப்
போட்டு குழப்பிக்கொள்ளாதே!
உன் க்ருஷ்ணன் உன்னோடு 
இருப்பது சத்தியம்! 
ஆனந்தமாய் இரு!   

நல்ல ஆரம்பம்...


ராதேக்ருஷ்ணா

இன்று தமிழ் புத்தாண்டு!
இன்று முதல் எல்லாம் நல்ல 
ஆரம்பமாகவே இருக்கட்டும்!
இன்று முதல் நல்லதையே
நினைப்போம்! இன்று முதல்
நல்லதே நடக்கும்! க்ருஷ்ணா!

Wednesday, April 13, 2011

முழுமையாக வாழ்!


ராதேக்ருஷ்ணா

வாழ்வை சுமையாக நினைக்காதே!
வாழ்வை கடமை என்று நினைக்காதே!
வாழ்வை சுகம் என்று புரிந்துகொள்!
வாழ்வை முழுமையாக வாழ்!
உன்னால் முடியும்!

கற்பனையை விடு...


ராதேக்ருஷ்ணா

மனமே கற்பனையில் நீ
ஏமாந்து போகிறாய்! மனமே
நிகழ்வில் நீ இருப்பதால் நீ
கடவுளின் ஆசீர்வாதத்தை
முழுமையாகப் பெறுகிறாய்!
கற்பனையை விடு...

யதார்த்தமாக இரு...


ராதேக்ருஷ்ணா

மனதில் கற்பனை அதிகமாக 
அதிகமாக நிச்சயம் வாழ்வில் 
தோல்வி அடைவாய்! மனதில்
யதார்த்தமாக இருந்தாலே வாழ்வில் 
வெற்றி நிச்சயம் கிடைக்கும்!

Tuesday, April 12, 2011

ராமனின் வழி நடப்போம்!


ராதேக்ருஷ்ணா

ராமனை நம்பினவர்கள் ஒரு 
நாளும் வீண் போகமாட்டார்கள்! 
ராமனின் இஷ்டப்படி வாழ்பவர்கள்
நிச்சயம் பாக்கியசாலிகள்! ராமனின்
வழி நடப்போம்! சுகம் வரும்!

கடைபிடிப்போம்!


ராதேக்ருஷ்ணா

ஸ்ரீ ராமன் மனிதர்கள் எப்படி
வாழ வேண்டும் என்பதை
தான் வாழ்ந்து காட்டினான்!
நாம் ராமன் வாழ்ந்தபடி
வாழ்ந்தால் உலகை
 வெல்லமுடியும்! கடைபிடிப்போம்!

ஸ்ரீ ராம நவமி!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ ராம நவமி!
பகவான் சக்ரவர்த்தி திருமகனாக
இந்த பூமியில், கௌசல்யா 
தேவியின் மணி வயிற்றில்
அவதரித்த புண்ணிய தினம்!
ராமா! ராகவா!

பிரயோஜனம் கிடையாது!


ராதேக்ருஷ்ணா

கவலைப்படுபவர்கள் உலகில் பெரிய
 காரியங்களை சாதித்ததில்லை!
கவலையினால் புத்தி இன்னும்
குழம்புமே ஒழிய வேறு ஒரு
பிரயோஜனமும் கிடையாது!

கவலை...


ராதேக்ருஷ்ணா

கவலை என்பது உன்னுடைய
சக்தியை குறைக்கிறது! 
கவலை உன் மனதை குழப்புகிறது!
நீ கவலைப்படுவதால் கடவுளின்
அனுக்ரஹத்தை இழக்கிறாய்!

நன்றாக இருப்பாய்!


ராதேக்ருஷ்ணா

எந்த ஒரு நிலையிலும் 
கவலைப்படாதே!
எல்லாவற்றையும் க்ருஷ்ணன் 
பார்த்துக்கொண்டிருக்கின்றான்!
நிச்சயம் நீ உன் வாழ்வில்
நன்றாகத்தான் இருப்பாய்!
அமைதி...

இன்று நடப்பதை அனுபவி!


ராதேக்ருஷ்ணா

இன்று நடப்பதை அனுபவி!
நாளை நடப்பதை பிறகு
பார்க்கலாம்! இன்று நீ 
ஒழுங்காக எல்லாவற்றையும்
செய்துவிட்டால் சத்தியமாக
நாளை நன்றாக இருக்கும்!

வாழ்வை கொண்டாடு!


ராதேக்ருஷ்ணா

சில நஷ்டங்களை நினைத்துக்கொண்டு,
பல லாபங்களை நீ இழக்கின்றாய்!
இனியாவது மனதை தெளிவாக
வைத்துக்கொண்டு உலகைப் பார்!
வாழ்வை கொண்டாடு!

கோடி சந்தோஷம்...


ராதேக்ருஷ்ணா

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும்
கோடி சந்தோஷத்தை உனக்கு
தருகிறது! நீ தான் பைத்தியமாக
நடந்து அதை எல்லாம் இழந்து
புலம்புகிறாய்! மாற்றிக்கொள்...

உன்னை தயார் செய்துகொள்...


ராதேக்ருஷ்ணா

நீ உன்னை எல்லா சமயத்திலும்
ஜெயிக்கும்படியாக தயார் 
செய்துகொள்ளவேண்டும்! 
இது தான் நீ செய்யவேண்டிய
ஒரே காரியம்! இதை 
செய்துவிட்டால் வாழ்க்கை சுகமே!

அழது ஊரைக் கூட்டாதே!


ராதேக்ருஷ்ணா

புலம்புவதால் ஒரு பிரயோஜனமும் 
இல்லை! உன் மனதை 
சமாதானப்படுத்தி அடுத்து 
ஆக வேண்டியதைப் பார்!
அழது புலம்பி ஊரைக் கூட்டி
என்ன கண்டாய்?

உனது நன்மைக்காகவே...


ராதேக்ருஷ்ணா

நடக்கிற ஒவ்வொரு செயலும் 
உனது நன்மைக்காகவே நடக்கிறது!
அதனால் நீ எதிர்ப்பார்க்காத ஏதேனும்
நடந்தால் மனது அதைரியப்படாதே!
நம்பிக்கையாய் இரு!

Friday, April 8, 2011

கொடுத்துவிடு!


ராதேக்ருஷ்ணா

மனதை ஸ்ரீ அனந்த பத்மநாபரின்
திருவடிகளில் கொடுத்துவிட்டால்,
உன் வாழ்வைப் பற்றி நீ ஒருபோதும்
கவலைப்படவேண்டியதில்லை!
உடனே கொடுத்துவிடு!

நீங்கள் எப்படி?


ராதேக்ருஷ்ணா

யார் மனதில் ஸ்ரீ அனந்த
பத்மநாப சுவாமி இருக்கிறாரோ
அவர்கள் உடலே திருவனந்தபுரம்தான்!
அவர்களை தரிசித்தாலே 
புண்ணியம்தான்! நீங்கள் எப்படி?

ஆனந்தம் பரமானந்தம்...


ராதேக்ருஷ்ணா

இன்று முதல் திருவனந்தபுரத்தில் 
உற்சவம் ஆரம்பம்! இப்பொழுது
ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியின்
ஊரில் சுகமாய் இருக்கின்றேன்!
ஆனந்தம் பரமானந்தம்...

Thursday, April 7, 2011

அவ்வளவுதான்!


ராதேக்ருஷ்ணா

இந்த உலகத்திற்காக நீ 
வாழாதே! இந்த உலகம் 
உன் வாழ்வில் ஒரு அங்கம்!
அவ்வளவுதான்! ஒரு எல்லைக்கு
மேல் இந்த உலகத்திற்கு
மரியாதை தராதே!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP