Tuesday, July 31, 2012

அழகான திரு முக மண்டலம்!!!


ராதேக்ருஷ்ண!

இரண்டு ஆறுகளுக்கு நடுவில் ஒரு 
சிறிய குன்று போல் மேடான 
பிரதேசத்தில் சுகமாக சயனிக்கிறார் 
நம் ஆதி கேசவர்! என்ன அழகான 
திரு முக மண்டலம்!!!

வெண்ணை க்ருஷ்ணன்...


ராதேக்ருஷ்ணா!

இன்று காலையில் நெய்யாற்றின்க்கரை 
வெண்ணை க்ருஷ்ணனை  ஆசையோடு 
பார்த்தோம்! திருடன்...இரண்டு கையிலும் 
வாழைப்பழமும், வெண்ணையும் வைத்து 
சுகமாய் நின்றான்!

Monday, July 30, 2012

வா... பார்...

ராதேக்ருஷ்ண!
 
பகவான் மோகினி அவதாரம்
எடுத்தது ஏகாதசி நாளில் தான்!
அதனாலேயே க்ருஷ்ணனுக்கு
அனந்தபுரத்தில் ஏகாதசி அன்று
மோகினி அலங்காரம்! வா... பார்...

மோகினி அலங்காரம்...

ராதேக்ருஷ்ணா!

இன்று ஏகாதசி! திருவனந்தபுரத்தில்
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் இன்று
மோகினி அலங்காரம் செய்துகொண்டு
அழகான பெண்ணாக ஜொலிக்கிறான்!
எத்தனை அழகு...

Sunday, July 29, 2012

உன் இஷ்டம் வேண்டுமா?

ராதேக்ருஷ்ணா!
உன் இஷ்டம் கஷ்டம் தரும்!
                         க்ருஷ்ணன் இஷ்டம் நலம் தரும்!
உன் இஷ்டம் உன்னை குழப்பும்!
க்ருஷ்ணன் இஷ்டம் உன்னை வழி நடத்தும்!
 இனியும் உன் இஷ்டம் வேண்டுமா?

க்ருஷ்ணன் இஷ்டம்...


ராதேக்ருஷ்ணா!

நம் இஷ்டம் பல சந்தர்ப்பங்களில் 
நம்மை பாடாய் படுத்திவிடுகிறது!
க்ருஷ்ணன்  இஷ்டம் ஒரு நாளும் 
நம்மை கீழே தள்ளுவதில்லை! 
அவன் இஷ்டமாய் இருப்பாய்!

தெய்வத்தின் இஷட்டப்படி....


ராதேக்ருஷ்ணா!

மனிதர்கள் தன் இஷ்டப்படி வரம் 
தர தெய்வத்தை நிர்பந்திக்கிறார்கள்! 
அது சரியில்லை! தெய்வத்தின் 
இஷட்டப்படி வாழ மனம் 
கேட்பதே சரியானது!

Saturday, July 28, 2012

சிபாரிசு செய்ய வேண்டும்!

ராதேக்ருஷ்ணா!

அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கையே...நீயே
எனக்காக ஸ்ரீனிவாசனிடம் 
சிபாரிசு செய்ய வேண்டும்! 
உன்னைத் தவிர யாரும் 
எனக்கு சிபாரிசு செய்யமாட்டார்!


மோக்ஷம் உண்டு!

ராதேக்ருஷ்ணா!
 
ஸ்ரீ என்றால் லக்ஷ்மி என்று
அர்த்தம்! எந்த வீட்டில் ஸ்ரீ
வாசம் செய்கிறாளோ அங்கு
ஒரு நாளும் ஒரு குறையில்லை!
தாயாரை கொண்டாடினால்
நிச்சயம் மோக்ஷம் உண்டு!

வரலக்ஷ்மி விரதம்!

ராதேக்ருஷ்ணா!
 
இன்று வரலக்ஷ்மி விரதம்!
லக்ஷ்மியின் அருள் யாருக்கு
கிடைக்கிறதோ அவர்கள் தங்கள்
வீடுகளில் ஸ்வயம் க்ருஷ்ணனை
 நன்றாக அனுபவிப்பார்கள்!
இது சத்தியம்!

Friday, July 27, 2012

ஏமாற்றுவதில்லை!


ராதேக்ருஷ்ணா!

பத்மநாபா...உன்னை நம்பும் 
ஜனங்களை நீ ஏமாற்றுவதில்லை! 
உனது குழந்தைகளின் பக்தியை 
நீ மிகவும் ரசிக்கிறாய்! உனக்கு 
இணை நீ ஒருவன் மட்டுமே...

அவசரக்காரன்!


ராதேக்ருஷ்ணா!

பக்தர்களைப் பார்த்தால் பத்மநாபனுக்கு 
ரொம்பவும் சந்தோஷம்! தன் பக்தர்களுக்கு 
அனுக்ரம் செய்வதில் பத்மநாபன் 
ரொம்பவும் அவசரக்காரன்...கருணை...

Thursday, July 26, 2012

ஆயுள் தேவை!


ராதேக்ருஷ்ணா!

பத்மநாபனின் திருமுகமும் அழகு!
திருக்கையும் அழகு! திருவடியும் 
அழகு! 18 அடியும் அழகுப் 
பெட்டகம்! அனுபவிக்க உனக்கும் 
எனக்கும் ஆயுசுதான் தேவை...

அழகு!


ராதேக்ருஷ்ணா!

திருவனந்தபுரத்தில் இரவு ஒரு அழகு! 
பகல் ஒரு அழகு! மாலை ஒரு அழகு!
வெய்யில் ஒரு அழகு! மழை ஒரு அழகு!
விடியல் ஒரு அழகு! பக்திக்கு ஒரு ஊர்...

Wednesday, July 25, 2012

பத்மநாபனின் குழந்தை...


ராதேக்ருஷ்ணா!

பத்மநாபனின் குழந்தையாய் நாம் 
இருந்து விட்டால், வாழ்வில் நாம் 
எதைப் பற்றியும் யோசிக்கவே 
வேண்டாம்! பத்மநாபனின் குழந்தையாய் 
உடனே மாறிவிடுவாய்...

எதையும் கேட்க்காத பக்தி!


ராதேக்ருஷ்ணா!

பத்மநாபா...உன்னிடம் எதுவுமே 
கேட்க்காத ஒரு பக்தியை நீ எனக்கு 
தா! உன்னை ரசித்துக்கொண்டு,
உனது நாமத்தை ஜபித்துக் கொண்டு 
நான் வாழவேண்டும்...

பொறுமை உள்ளது!


ராதேக்ருஷ்ணா!

தெய்வம் நம்மை ஒரு நாளும் 
சோதிப்பதில்லை! நாம் தான் 
பல விதத்தில் தெய்வத்தை சோதித்துக் 
கொண்டே இருக்கிறோம்! தெய்வத்திற்கு 
மிகவும் பொறுமை உள்ளது!

Tuesday, July 24, 2012

க்ருஷ்ணனின் ப்ரிய கோபி...

ராதேக்ருஷ்ணா!
 
கலியுகத்தில் அர்ச்சாவதார மூர்த்தியை
கல்யாணம் செய்து கொள்ள முடியும்
என்று நிரூபித்த க்ருஷ்ணனின் ப்ரிய
கோபி நம்முடைய ஆண்டாள் நாச்சியார்...

பூமிப் பிராட்டியின் அவதாரம்!

ராதேக்ருஷ்ணா!
 
பூமிப் பிராட்டியே ஆண்டாளாக
நமக்காக அவதரித்தாள்! அவள்
பிறந்ததால் நாமும் திருப்பாவையை
அனுபவிக்கிறோம்! கலியுக
மக்களை காக்க வந்த தேவி!

திருவாடிப்பூரம்!

ராதேக்ருஷ்ணா!
 
இன்று திருவாடிப்பூரம்! நம்
ஆண்டாள் அவதரித்த உன்னத
தினம்! இன்று ஸ்ரீ வில்லிபுத்தூரில்
தேரோட்டம்! நிறைய பக்தர்கள்
இப்பொழுது அங்கே  ஜபிக்கிரர்கள்!

Monday, July 23, 2012

வாரீர் இப்பொழுதே!


ராதேக்ருஷ்ணா!

திருவனந்தபுரத்திற்கு சமமான ஒரு 
திவ்யதேசம் உண்டோ இந்த உலகில்?
பத்மநாபனுக்கு சமமான தெய்வம் 
உண்டோ இந்த கலியுகத்தில்?
வாரீர் இப்பொழுதே!

அழகாக ஜொலிக்கிறான்...


ராதேக்ருஷ்ணா!

எத்தனை அழகாக ஜொலிக்கிறான் 
என்னுடைய காதலன் ஸ்ரீ அனந்த 
பத்மநாபன்! ஒவ்வொரு முறை 
அவனை தரிசிக்கும்போதும் அவன் 
புதியதாகவே இருக்கிறான்...

ஸ்ரீ அனந்த பத்மநாபனை தரிசித்துவிட்டேன்...


ராதேக்ருஷ்ணா!

எல்லா இடர்களையும் களையும் 
ஸ்ரீ அனந்த பத்மநாபனின் 
உன்னதமான திருவனந்தபுரத்தில் 
இப்போது இருக்கிறேன்! என் 
பத்மநாபனை தரிசித்துவிட்டேன்...

Sunday, July 22, 2012

ஆண்டாள் புறப்பாடு...


ராதேக்ருஷ்ணா!

கருடாழ்வார் இங்கு தான் தவமிருந்து,
வைகுண்ட லோகத்தில் பெருமாளோடு 
இருக்கும் பாக்கியம் அடைந்தார்! 
நாங்கள் உள்ளே செல்லும் 
சமயம் ஆண்டாள் புறப்பாடு...

வானமாமலையே வாழ்க!


ராதேக்ருஷ்ணா!


ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் 
வீச, ஸ்ரீ தேவி,பூ தேவியோடு தோதாத்ரி 
நாதன் அமர்ந்திருக்கோம் காட்சி மனதை 
                       வருடும்! வானமாமலையே வாழ்க!

தோதாத்ரி!


ராதேக்ருஷ்ணா!


இப்பொழுதுதான் வானமாமலை திவ்யதேசத்தை 
நன்றாக சேவித்தோம்! தோதாத்ரி நாதன் வீற்றிருக்கும் 
அழகே தனி தான்! சுயம்பு மூர்த்தி தோதாத்ரி!

Saturday, July 21, 2012

நாமத்தை நம்பு!

ராதேக்ருஷ்ணா!

நாவில் நாம ஜபம் இருக்கும்வரை
நீ நிச்சயம் வாழ்வில் வெல்வாய்!
நாம ஜபம் உனக்கு உற்ற சகா!
ஒரு நாளும் இந்த சகா உன்னை
கைவிடார்! நாமத்தை நம்பு!

ஜபம் செய்!

ராதேக்ருஷ்ணா!

மனதில் சமாதானம்! செய்யும்
காரியத்தில் நிதானம்! யோசிப்பதில்
ஒரு திடம்! இவையெல்லாம் நாம ஜபம்
செய்யும்போது தானாக நமக்கு 
வந்துவிடும்! ஜபம் செய்!

Friday, July 20, 2012

ஸ்ரீ வில்லிபுத்தூரே நீ வாழ்க...

ராதேக்ருஷ்ணா!
 
ஸ்ரீ வில்லிபுத்தூரே நீ வாழ்க...
கோவிந்தன் வாழும் ஊரே
நீ வாழ்க...எங்கள் பெரியாழ்வாரின்
ஊரே நீ வாழ்க...திருமுக்குளம்
உள்ள ஊரே நீ வாழ்க...

கலியுக கோபி

ராதேக்ருஷ்ணா!
 
தமிழ் தெரியாத எத்தனை
ஜனங்கள் இன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
ஆண்டாளை அனுபவிக்க
வந்திருக்கிறார்கள்!ஆண்டாள்...
சத்தியமாய் கலியுக கோபிதான்!!

சுகமாய் இருக்கிறேன்!

ராதேக்ருஷ்ணா!
 
இன்று இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூரில்
சுகமாய் இருக்கிறேன்! காலையில்
ஆண்டாளையும், ரங்க மன்னாரையும்
ஆனந்தமாய் தொழுதேன்! கோதை
பிறந்த ஊர் அழகு...

Thursday, July 19, 2012

கண்டு கொள்வதில்லை!


ராதேக்ருஷ்ணா!

அடுத்தவரை குறை கூறும் பலர்,
தன் வீட்டில் உள்ள குறைகளைப் 
பற்றி ஒரு நாளும் கண்டு 
கொள்வதில்லை! தன் குறையைப் 
பற்றி வாயை திறப்பதே இல்லை...

Wednesday, July 18, 2012

ஆனந்தம் கிடைக்கட்டும்...


ராதேக்ருஷ்ணா!

என்னை நம்புவருக்கு நல்ல 
வாழ்க்கை அமையட்டும்! என்னிடம் 
அன்பு செலுத்துபவருக்கு வாழ்க்கை 
உயரட்டும்! என்னோடு இருப்பவருக்கு 
ஆனந்தம் கிடைக்கட்டும்...க்ருஷ்ணா...

சுகம் தருவாய்!


ராதேக்ருஷ்ணா!

என்னை அவமானப் படுத்துபுவர்ருக்கு 
நிறைய நாம ஜபம் வரட்டும்! என்னை 
வெறுப்பவருக்கு நல்ல நிம்மதி 
கிடைக்கட்டும்! க்ருஷ்ணா நீ 
தான் சுகம் தருவாய்!

அருள் செய்வாய் நீ!


ராதேக்ருஷ்ணா!

என்னை தூற்றுபவருக்கு நல்ல 
பக்தி உண்டாகட்டும்! என்னை 
விரோதிப்பவருக்கு நல்ல ஞானம் 
உண்டாகட்டும்! க்ருஷ்ணா...
எல்லோரும் நன்றாக இருக்க 
அருள் செய்வாய் நீ!

Tuesday, July 17, 2012

க்ருஷ்ண தாசன்!


ராதேக்ருஷ்ணா!

என் குருவை ஒரு நாளும் 
நான் மறக்க மாட்டேன்! என் 
சிஷ்யர்களையும் ஒரு நாளும் 
நான் மறக்கமாட்டேன்! நான் 
அன்பிற்காக வாழும் ஒரு 
க்ருஷ்ண தாசன்! க்ருஷ்ணா...

நிறைய லாபம்...


ராதேக்ருஷ்ணா!

குருவை மறக்க முடியுமா? 
குருவை மறப்பவர் உண்டோ?
எப்பொழுதுமே குரு நம் நலம் 
விரும்பி! நாம் குருவை நினைப்பதால் 
நமக்கு தான் நிறைய லாபம்...

குழந்தையாக பழகுகிறார்!


ராதேக்ருஷ்ணா!

குரு என்றுமே குழந்தையாகத் தான் 
நம்மிடம் பழகுகிறார்! ஆனால் நாம் 
தான் பல சமயத்தில் பெரிய மனிதர் 
என்று நம்மை நினைத்துக்கொள்கிறோம்...

Monday, July 16, 2012

அன்பாக இருப்பாய்!

ராதேக்ருஷ்ணா!

குரு உனக்கு நல்ல தூக்கம்
தருகிறார்! குரு உனக்கு நல்ல
தைரியம் தருகிறார்! குரு உனக்கு நல்ல நிம்மதி தருகிறார்! நீ குருவிடம் அன்பாக இருப்பாய்!

ஜெயித்தே தீருவாய்...

ராதேக்ருஷ்ணா!
 
குரு ஒரு நாளும் உன்னை
நஷ்டப்பட விடமாட்டார்! உன்
குரு தான் நஷ்டப்பட்டாலும்,
உன்னை நஷ்டம் அடையவே
விடமாட்டார்! நீ வாழ்வில்
ஜெயித்தே தீருவாய்...

நீ நஷ்டப்படமாட்டாய்!

ராதேக்ருஷ்ணா!
 
குருவால் நஷ்டப்பட்டவர் எவருமில்லை! குருவால் லாபம் அடைந்தவர் மட்டுமே
இந்த உலகில் என்றும் உண்டு! உன் குரு உனக்கு லாபம் மட்டுமே! நீ நஷ்டப்படமாட்டாய்!

Saturday, July 14, 2012

குருவை நம்பு!


ராதேக்ருஷ்ணா!

குரு என்பவர் நல்ல மனிதர்!
அன்பின் உருவம்! குரு என்பவர் 
உனக்கு ஒரு நல்ல வழிகாட்டி!
குரு என்பவர் உன் குடும்பத்திற்கு 
ஒரு நல்ல காவலன்! குருவை நம்பு!

குரு சொல்படி கேள்!


ராதேக்ருஷ்ணா!

குரு என்பவர் தானும் கடவுளை 
அனுபவித்துக்கொண்டு, உன்னையும் 
கடவுளை அழகாக அனுபவிக்க 
சொல்லிக்கொடுப்பவர்! அதனால் 
நீ அவர் சொல்படி கேட்பது நல்லதே!!


ராதேக்ருஷ்ணா!

குருவை நீ கொண்டாடவேண்டும் என்று 
சத்தியமாக குரு எதிர்பார்க்கவே இல்லை!
குரு நீ கடவுளையும், நாம ஜபத்தையும்,
வாழ்க்கையையும் கொண்டாடவே 
விரும்புகிறார்!

Friday, July 13, 2012

சத்சங்கத்தை மதிப்பாய்!

ராதேக்ருஷ்ணா!
 
சத்சங்கம் என்பது ஒருவருக்கு
ஒருவர் வம்பு பேசுவதற்காக அல்ல! எல்லோரும் க்ருஷ்ணனின் குடும்பம்
என்கிற புத்தி வரவே சத்சங்கம்!
சத்சங்கத்தை மதிப்பாய்!

விசேஷ அனுக்ரஹம்...

ராதேக்ருஷ்ணா!
 
குரு மற்றவருக்கு விசேஷ
அனுக்ரஹம்  செய்கிறாரோ
என்று வம்பு பேசுபவர் பலர்
உண்டு! உனக்கு கிடைக்கும்
அனுக்ரஹத்தை வாங்கிக்கொண்டு
நீ பக்தி செய்தால் நல்லது!!

குரு அறிவார்!

ராதேக்ருஷ்ணா!

பலர் குருவிடம் சத்தியமாய்
நடந்து கொள்வது போல்
பேசுவார்கள்! பக்தியில்
மிகுந்த ஆசை உடையவர்
போலே நடப்பார்! ஆனால்
யாருக்கு நஷ்டம்? குரு அறிவார்!

Thursday, July 12, 2012

இது சத்தியம்!

ராதேக்ருஷ்ணா!
 
குருவினால் என்றும் எல்லோருக்கும் க்ருஷ்ணனிடம் சுகம், பக்தி, ஞானம்,வைராக்கியம், ஆயுள், குடும்பத்தில் நிம்மதி, ஆரோக்கியம் இதையே
பிரார்த்திக்கிறார்! 
இது சத்தியம்!

நல்லது மட்டுமே ...

ராதேக்ருஷ்ணா!

குரு நிச்சயம் எல்லோருக்கும்
நல்லது மட்டுமே செய்கிறார்!
குருவை நாம் வெறுத்தாலும்,
தூற்றினாலும் குரு சத்தியம்
நமக்கு நல்லது மட்டுமே
பிரார்த்திப்பார்...

Wednesday, July 11, 2012

ரிஷிகளே!


ராதேக்ருஷ்ணா!

பூரி ஜகந்நாதர் கோயிலில் நிறைய 
குரங்குகள், சிட்டுக்குருவிகள், புறாக்கள் 
வசிக்கின்றன! நிச்சயம் அவை எல்லாம் ரிஷிகளே!
 நான் அப்படி பிறக்க வேண்டுமே ஜகன்!

பக்தியுடையவர்கள்!


ராதேக்ருஷ்ணா!

ஒரிசா ஜனங்கள் நல்ல பக்தியுடையவர்கள்!
எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுகிறார்கள்!
ஜகன்னாதனிடம் அவர்களுக்கு  உள்ள பக்தி 
மிகவும் அற்புதமானது...

பார்த்தசாரதியை பார்க்கவேண்டும்!


ராதேக்ருஷ்ணா!


ஜெயதேவரின் ப்ரிய பூரி ஜகந்நாதனை
 நன்றாக அனுபவித்துவிட்டு பார்த்தசாரதியின் 
சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறேன்! 
சீக்கிரம் பார்த்தசாரதியை பார்க்கவேண்டும்!

Monday, July 2, 2012

கனவில் வந்தார்கள்!


ராதேக்ருஷ்ணா!

மகாத்மாக்களை தரிசித்தால் நிச்சயம் 
அவர்கள் உன்னுடைய கனவிலும் 
உனக்கு காட்சி தருவார்கள்! நேற்று 
நான் கண்ட மகாத்மாக்கள் 
கனவிலும் வந்தார்கள்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP