Wednesday, June 22, 2011

தோளுக்கு மிஞ்சின பிள்ளை...


ராதேக்ருஷ்ணா

தோளுக்கு மிஞ்சின பிள்ளைகளை
தோழனாக நடத்தினால் பெற்றோருக்கு
மரியாதை! சிறு பிள்ளையாக
நடத்தினால் பொய் சொல்லி 
ஏமாற்றுவார்கள்! ஆகவே ஜாக்கிரதை!

வழிகாட்டுங்கள்!


ராதேக்ருஷ்ணா

ஆண் பிள்ளைகளை பொத்தி
பாதுகாத்து வளர்ப்பதனால்
அவர்கள் வெளி உலகில்
போராடத் தெரியாமல்
 திணறுகிறார்கள்! பிள்ளைகளுக்கு
சரியான வழிகாட்டுங்கள்!

வளரவிடுங்கள்...


ராதேக்ருஷ்ணா

வயது வந்த பிள்ளைகளை
தைரியமாக வெளியூர் செல்வதற்கும்
வீட்டு வேலைகளை செய்வதற்கும்
பெற்றோர் அனுமதிக்க வேண்டும்!
பிள்ளைகளை வளரவிடுங்கள்...

Tuesday, June 21, 2011

மனதை கவனி!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை நீதான் ஜாக்கிரதையாக 
பார்த்துக்கொள்ளவேண்டும்! வேறு
யாராலும் உன் மனதை ஒழுங்காக
கவனித்துக்கொள்ளமுடியாது! 
மனதை கவனி! ரகசியம்!

உன் பலம்!


ராதேக்ருஷ்ணா

மனம் என்பது உன்னுடைய பலம்! 
அதை பலவீனமாக்குவது நீதான்!
எந்த விஷயங்கள் எல்லாம் 
உன்னை பலவீனமாக்குகிறதோ
அதை எல்லாம் தவிர்! முடியும்!

வாழ்வின் அஸ்திவாரம்!


ராதேக்ருஷ்ணா

மனதை ஒழுங்காக வைத்திருப்பவர்கள்
நிச்சயம் வெல்வார்கள்! மனதை 
நன்றாக வைப்பதற்காகவே பக்தி!
அதனால் பக்தி என்பது
வாழ்வின் அஸ்திவாரம்!

Monday, June 20, 2011

என்ன பிரயோஜனம்?


ராதேக்ருஷ்ணா

தன் அருகில் இருக்கும்
 தெய்வத்தை விட்டு எங்கோ
ஓடி என்ன பிரயோஜனம்?
உன் அருகில் இருக்கும்
தெய்வத்தை கொண்டாட நீ
தெரிந்துகொள்ளவேண்டும்!
உன்னை மாற்றிக்கொள்...

தெளிவு தேவை!


ராதேக்ருஷ்ணா

பக்தி என்ற பெயர் கொண்டு
மக்கள் பல விஷயங்களில் 
பைத்தியம் போலே நடக்கிறார்கள்!
அதனால்தான் மற்றவர் பக்தியை 
பரிகசிக்கிறார்கள்! தெளிவு தேவை!

தயார்படுத்து!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் வாழ்க்கை
வித்தியாசமாக செல்கிறது!
நீயோ நானோ அதை ஒன்றும்
மாற்றமுடியாது! உன்னை எல்லா
நிலைமைக்கும் தயார்படுத்து!
வாழ்ந்துகாட்டு!

குருவின் குழந்தைகள்!


ராதேக்ருஷ்ணா

சத்சங்கத்தில் யாரும் யாரையும்
அவமதிக்கக்கூடாது! எல்லோருமே
குருவின் குழந்தைகள்! சத்சங்கத்தில்
யாரும் உயர்ந்தவர்கள் இல்லை!
எல்லோருமே குழந்தைகள்!

நல்ல சிஷ்யர்...


ராதேக்ருஷ்ணா

சத்சங்கத்தில் எல்லோருமே 
சிஷ்யர்கள்தான்! ஒரு சிஷ்யர் 
இன்னொரு சிஷ்யரை
வேலை வாங்க ஒரு நாளும்
அதிகாரமில்லை! நல்ல சிஷ்யராக
இருக்கவேண்டும்! கவனி..

கைங்கர்யம்!


ராதேக்ருஷ்ணா

சத்சங்கத்தில் யாரும் யாரையும்
வேலை வாங்கக்கூடாது!
குருவிற்கு மட்டுமே சிஷ்யர்களிடம்
வேலை வாங்கும் அதிகாரம் 
உள்ளது! அதற்குப் பெயர் 
கைங்கர்யம்!

கோபமே வேண்டாம்!


ராதேக்ருஷ்ணா

ஹே மனமே! 
அவமானப்படுத்துபவர்களும்
நன்றாக இருக்க பிரார்த்தனை
செய்! மனிதர்களின் புத்தி
அவ்வளவுதான்! யார் மீதும் 
கோபமே வேண்டாம்! 
நன்மை செய்!

நிதானம்...


ராதேக்ருஷ்ணா

ஒருத்தரை அவமானப்படுத்தும்
எண்ணம் வருகிறது என்றாலே
அது அஹம்பாவத்தின் வெளிப்பாடே!
பக்தர்களிடம் ஒரு நாளும்
கோபப்படவே கூடாது! நிதானம்...

அஹம்பாவத்தை அழி!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களின் அஹம்பாவம் சமயத்தில்
குருவிடம் கூட அபச்சாரம்
செய்யவைக்கும்! குருவிடம் 
கோபத்தில் கூட கத்தவைக்கும்!
அஹம்பாவம் அழிந்தால் நல்லது!

உன் மனம்!


ராதேக்ருஷ்ணா

உனக்கு ஒரு நாளும் 
வெளியில் விரோதி கிடையவே 
கிடையாது! உன் மனமே உனக்கு 
ஒரே விரோதி! உன் மனம்
சரியானால் உன்னுடைய
விரோதியும் உனக்கு உதவுவார்கள்!

நிம்மதியாய் வாழ்!


ராதேக்ருஷ்ணா

தைரியமாக இரு! உன்னை 
அழிப்பதற்கு உன்னைத் 
தவிர வெளியில் யாருமே
இல்லை! அதனால் நீ 
உன்னை அழிக்காமல் இருந்தால் 
போதும்! நிம்மதியாய் வாழ்!

நீ ஒழுங்காக வாழ்!


ராதேக்ருஷ்ணா

உலகம் எப்படி வேண்டுமானாலும்
இருக்கட்டும்! நீ உன்னைப்பொறுத்தவரை
ஒழுங்காக வாழ்! உலகம்
தவறான பாதையில் போனால்
போகட்டும்! நீ சரியாக 
மட்டுமே இரு!

ரசித்து அனுபவி!


ராதேக்ருஷ்ணா

உனது திறமைகளை நீ 
வளர்த்துக்கொண்டு உன் 
வாழ்க்கையை ரசித்து அனுபவி!
அதை விட்டு அடுத்தவர் 
வாழ்க்கையை நீ வாழ
ஆசைப்பட்டால் சுகமேது?

அனுபவிக்க கற்றுக்கொள்...


ராதேக்ருஷ்ணா

உனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை
நீ அடுத்தவரோடு போட்டி 
போடுவதனால் தான் இழக்கிறாய்!
உன் வாழ்க்கையை நீ அனுபவிக்கக்
கற்றுக்கொள்ளவேண்டும்! 
ரசி! கொண்டாடு!

போட்டி இல்லை!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையை ரசி! யாரோடும்
 உனக்கு போட்டி இல்லை! ஒரு
போட்டியும் இல்லாமல் வாழப்
பழகு! கொட்டிக்கிடக்கும் 
ஆனந்தத்தை அனுபவிக்காமல்
என்ன போட்டி?
 யோசி... யோசி...

Monday, June 13, 2011

பரமபதத்து எல்லை!


ராதேக்ருஷ்ணா

ஆழ்வார் திருநகரி பரமபதத்து
எல்லை! தாமிரபரணி வைகுந்தத்தில்
ஓடும் விரஜா நதி! சுவாமி 
நம்மாழ்வார் ஸ்வயம் ராமசந்த்ரமூர்த்தி!
மோக்ஷம்!

பாக்கியசாலிகள்


ராதேக்ருஷ்ணா

சுவாமி நம்மாழ்வாரின் ஆழ்வார்
திருநகரியில் வாழும் பக்த
ஜனங்களே உங்கள் திருவடிகளில்
நான் சரணாகதி செய்கிறேன்!
உலகில் பாக்கியசாலிகள் நீங்களே!

இன்று வைகாசி விசாகம்!


ராதேக்ருஷ்ணா

இன்று வைகாசி விசாகம்!
சுவாமி நம்மாழ்வாரின் 
திருநக்ஷத்திரம்! காரியார்,
உடையநங்கை பெற்றெடுத்த
தெய்வப் பிள்ளையே! உன்னை
சரணமடைந்தோம்! காப்பாற்று!

ஆத்ம பந்து...


ராதேக்ருஷ்ணா

குருவிடம் நம்பிக்கையும் 
மரியாதையும் வைத்தவர்கள்
ஒரு நாளும் வாழ்வில் 
வீணானதில்லை! குருவை தன்
ஆத்ம பந்துவாக கொள்பவர்கள்
உலகை வெல்வார்கள்! 

குருவை திடமாக நம்பு!


ராதேக்ருஷ்ணா

குருவை உடனே யார்
 பிடிக்கிறார்களோ அவர்கள்
வாழ்வில் மிக சீக்கிரத்தில்
மஹோன்மதமான நிலைமையை
அடைவர்! குருவிடம் திடமான 
நம்பிக்கை வைத்துவிடு!

குருவை பிடி!


ராதேக்ருஷ்ணா

தெய்வம் இல்லாத இடம் 
என்றும் இல்லை! மனிதர்கள்
சுத்தமான பக்தியினால் தெய்வத்தை
எங்கும் எப்பொழுதும் அனுபவிக்க
 முடியும்! பக்திக்கு குருவை
உடனே பிடி!

Saturday, June 11, 2011

க்ருஷ்ணனுக்கே அர்ப்பணம்!


ராதேக்ருஷ்ணா

உடல் அபிமானம் கொண்டவருக்கே
அவமானம் பாதிப்பைத் தரும்!
உடலை கொண்டாடாதவருக்கு 
அவமானத்தைப் பற்றி கவலையில்லை!
க்ருஷ்ணனுக்கே அவமானம் அர்ப்பணம்! 

நீ சுத்தமான ஆத்மா!


ராதேக்ருஷ்ணா

யாரும் உன்னை அவமானப்படுத்த 
முடியாது! நீ சுத்தமான ஆத்மா!
நீ அவமானப்பட உடலல்ல! நீ
அழவேண்டிய அவசியமும் 
இல்லை! தைரியமாக வாழ்!

அவமானம் ...


ராதேக்ருஷ்ணா

அவமானம் என்பது நாம் அதை 
அவமானமாகக் கருதுவதால் தான்
உண்டாகிறது! அவமானங்களுக்கு
விலை கொடுக்காதே! நீ க்ருஷ்ணனின்
குழந்தை! கவலையில்லை!

பிரியா விடை தந்தீரோ?


ராதேக்ருஷ்ணா

சுவாமி நம்மாழ்வாரே! 8 திருப்பதி
எம்பெருமான்களுக்கு இன்று பிரியா
விடை தந்தீரோ? உங்கள் தாய்
தந்தையான திருதொலைவில்லிமங்களம்  
சென்றார்களோ?

திருவீதி உலா!


ராதேக்ருஷ்ணா

நவ திருப்பதி எம்பெருமான்களே!
எங்கள் சுவாமி நம்மாழ்வாரோடு
இரவு முழுவதும் திருவீதி உலா
வந்தீரே! எப்படி இருந்தது!
எங்கள் ஆழ்வார் ஜோர்தானே!

பிரியா விடை!


ராதேக்ருஷ்ணா

இன்று காலை 8 திருப்பதி  
எம்பெருமான்களும் சுவாமி
நம்மாழ்வாரிடம் இருந்து விடை
பெற்றுக்கொண்டு தங்கள் திவ்ய
தேசம் போனார்கள்! பிரியா
விடை அல்லவா...

அடுத்த மூவர்!


ராதேக்ருஷ்ணா

திருத்தொலைவில்லிமங்களம் ஸ்ரீ
அரவிந்தலோசனரும், ஸ்ரீ தேவபிரானும்,
திருக்குளந்தை மாயக்கூத்தனும், இவர்கள்
9 திருப்பதியில் அடுத்த மூவர்!

முதல் மூவர்...


ராதேக்ருஷ்ணா

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரான், 
வரகுணமங்கை விஜயாசனர்,
திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலர்
இவர்கள் 3 பேரும் 9 திருப்பதியில் 
முதல் மூவர்...

உடனே வா!


ராதேக்ருஷ்ணா

இன்று இரவு ஆழ்வார் திருநகரியில்
9 கருட சேவை! விடிய விடிய
ஆழ்வாரோடு நவ திருப்பதி
பெருமாள்கள் வீதி உலா வருவர்!
திருநகரிக்கு உடனே வா!

உனக்குத்தான் இழப்பு!


ராதேக்ருஷ்ணா

உன் மீது அக்கறை கொண்டவர்களை
 நீ இழிவாகப்பேசினால் நிச்சயம்
உனக்குத்தான் இழப்பு! பிறகு யார் 
தான் உன் மீது அக்கறை கொண்டு 
உனக்கு நன்மை செய்வார்?

இழிவு படுத்தாதே!


ராதேக்ருஷ்ணா

மற்றவரை இழிவாக நடத்துவது
 மிக சுலபம்! ஆனால் நிச்சயம் 
அது உன் வாழ்வை பாதிக்கும்!
நீ யார் மற்றவரை இழிவுபடுத்திப்
பேச? நீ ஒழுங்கோ?

மரியாதை வேண்டும்!


ராதேக்ருஷ்ணா

பெரியவர்களிடம் மரியாதையாக
பேசவேண்டும்! ஒரு நாளும் 
பெரியவர்களை அவமரியாதையாகப்
பேசக்கூடாது! மரியாதையாக
நடக்கவேண்டியது தர்மம்...

விசேஷ கருணை!


ராதேக்ருஷ்ணா

குழந்தைகள் தெய்வத்தின் விசேஷ 
கருணை! அதனால் ஒரு நாளும்
குழந்தைகளை கெட்ட வார்த்தையால்
திட்டவேகூடாது! உங்கள் 
குழந்தைகளை அனுபவியுங்கள்!

Friday, June 10, 2011

நல்லதை விதை!


ராதேக்ருஷ்ணா

குழந்தைகள் மனதில் நாம்
என்ன விதைக்கிறோமோ 
அதுதான் அவர்களின் எதிர்காலம்!
நாம் என்ன விதைக்கிறோமோ 
அதையேதான் அறுவடை செய்கிறோம்!
நல்லதை விதை!

நம் நடவடிக்கை...


ராதேக்ருஷ்ணா

குழந்தைகள் குழந்தைகளாக 
இருக்கவேண்டுமென்றால் 
பெரியவர்கள் பெரியவர்களாக
இருக்கவேண்டும்! நம்
நடவடிக்கை குழந்தைகளுக்கு
பாடமாக இருக்கவேண்டும்!

பகவானின் வீடு!


ராதேக்ருஷ்ணா

கோயில் என்பது பகவானின் வீடு!
அந்த வீட்டிற்கு செல்லும்போது 
அன்போடும், ஆசையோடும்
செல்லவேண்டும்! பகவானின்
வீட்டை நாம் சுத்தமாக
வைக்கவேண்டும்! சரியா...

பகவான் ழைக்கிறார்!


ராதேக்ருஷ்ணா

தெய்வம் அழைக்காமல் கோயிலுக்கு
யாராலும் செல்ல முடியாது!
நாம் நம்முடைய முயற்சியால்
கோயிலுக்கு செல்லவில்லை! 
பகவான் நம்மை அழைக்கிறார்!
சத்தியம்!

ஆழ்வார் அழைக்கிறார்..


ராதேக்ருஷ்ணா

வைகாசி மாதத்தில் ஆழ்வார்
 திருநகரிக்கு செல்வதே பரம
சுகம்! நாங்கள் இப்பொழுது
ஆழ்வாரை தரிசிக்கக் 
கிளம்பிக்கொண்டிருக்கிறோம்!
அவர் அழைக்கிறார்..

Thursday, June 9, 2011

எழுவாய்!


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய சோம்பேறித்தனம் 
உனக்கு முதல் விரோதி! அதை
முதலில் புரிந்துகொள்! 
சோம்பேறித்தனத்தை ஒழித்துவிட்டால்
உன்னை வெல்ல உலகில்
யாருமில்லை! எழுவாய்!

உன்னை மாற்றிக்கொள்!


ராதேக்ருஷ்ணா

சோம்பேறித்தனத்தைப் போல் ஒரு
பாவம் இன்று வரை உலகில் 
இல்லை! சோம்பேறிகளினால்
தான் பல குடும்பங்களில் இன்றும்
பிரச்சனைகள் வருகிறது!
உன்னை மாற்றிக்கொள்!


ராதேக்ருஷ்ணா

சோம்பேறித்தனம் ஒழியவேண்டும்!
அப்பொழுதுதான் வாழ்க்கை 
முன்னேறும்! சோம்பேறித்தனத்தால்
இதுவரை வாழ்க்கையை இழந்தவர்கள்
பல கோடி பேர்! ஜாக்கிரதை!

Saturday, June 4, 2011

ராக்ஷசர்கள்!


ராதேக்ருஷ்ணா

சோம்பேறியை கடவுளுக்கும்
பிடிக்காது! சோம்பேறி தானும்
அழிகிறான்! அடுத்தவர்களையும்
அழிக்கிறான்! சோம்பேறிகள் 
உலகின் ராக்ஷசர்கள்! 
சோம்பேறியை ஒதுக்கு...

முயற்சி செய்...


ராதேக்ருஷ்ணா

கடவுளின் ஆசீர்வாதம் இருந்தாலும்
முயற்சி செய்யாதவர் வாழ்வில்
ஆனந்தத்தை அனுபவிக்கமுடியாது!
முயற்சி இல்லாதவன் நிச்சயம்
நடைபிணமே!

சோம்பேறித்தனம்...


ராதேக்ருஷ்ணா

உலகின் பல கொடுமைகளுக்கு
காரணம் சோம்பேறித்தனமே!
மனிதனுக்கு சோம்பேறித்தனம் 
வந்துவிட்டால் அவனை அழிக்க
வேறு யாருமே முயற்சி 
செய்யவேண்டாம்!

Friday, June 3, 2011

நல்லதே செய்கிறார்!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் எப்பொழுதும் உனக்கு
எது நல்லதோ அதை மட்டுமே
செய்கிறார்! அதனால் நிச்சயம்
நீ உன் வாழ்வில் மிகப் பெரிய 
இடத்தை அடைவாய்! 
கவலையே வேண்டாம்!

சந்தோஷமாய் இரு...


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனை நம்பியவர்கள் ஒரு
நாளும் வீண் போனதில்லை! 
க்ருஷ்ணன் என்னும் கருந்தெய்வம்
நிச்சயம் உனக்கு துணை
இருக்கிறது! நிம்மதியாய்
சந்தோஷமாய் இரு...

க்ருஷ்ணனை நம்பு!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனை நம்பு! எப்பொழுதும்
 நீ க்ருஷ்ணா என்று ஜபித்துக்
கொண்டிரு! நிச்சயம் வாழ்வின்
மகிமை உனக்குப் புரியும்! உன்
வாழ்க்கை மிக மிக அருமையானது!

Wednesday, June 1, 2011

மறைமுக உதவி!


ராதேக்ருஷ்ணா

உலகம் உன்னை கேவலப்படுத்தும்போது
தைரியமாக இரு! உலகம் உனக்கு 
மறைமுகமாக உதவி செய்கிறது!
ஒவ்வொரு அவமரியாதையும் 
உனக்கு நல்லதே! யோசி!

பெருமைக்கு மயங்காதே!


ராதேக்ருஷ்ணா!

உன்னை எல்லோரும் கொண்டாடும்போது
ஜாக்கிரதையாக இரு! பெருமைக்கு
மயங்கினவர்கள் இன்றுவரை வாழ்வில்
பெரிய காரியங்களை செய்ததில்லை!
இதை மறக்காதே!

புத்தி மாறும்!


ராதேக்ருஷ்ணா

சமயத்தில் புத்தி சோம்பேறியாக
இருக்க உன்னை தூண்டும்!
அந்த சமயத்தில் உன் 
பொறுப்புகளையும் லட்சியங்களையும்
நினைத்துக்கொள்! உடனேயே
உன் புத்தி மாறும்!

ஆனந்தமாய் சிரி!


ராதேக்ருஷ்ணா

உன் க்ருஷ்ணனுக்கு உன்னிடம் 
முழு உரிமை உண்டு! அவன்
உனக்கு என்றுமே நல்லது
மட்டுமே செய்கிறான்! அதனால்
நீ எப்பொழுதும் நிம்மதியாக 
இருக்கலாம்! ஆனந்தமாய் சிரி!

ஆசை வைக்காதே!


ராதேக்ருஷ்ணா

உனது என்று உன்னிடம் 
இருப்பது என்றுமே க்ருஷ்ணந்தான்!
அதனால் மற்ற எந்தப் பொருளிலும் 
ஒரு எல்லைக்கு மேல் ஆசை 
வைக்காதே! ஆசை வைத்தால்
துன்பம்தான்!

நன்றாக இரு!


ராதேக்ருஷ்ணா

எதையாவது யோசித்துக்கொண்டு
மனதை குழப்பிக்கொள்ளாதே! 
சரியாக யோசித்து உன் வாழ்வை
சந்தோஷமாக வைத்துக்கொள்! 
நீ நன்றாக இருக்கவேண்டும்!

என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய்?


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் எதையாவது 
யோசித்துக்கொண்டே இருப்பார்கள்!
என்ன யோசிக்கிறார்கள் என்பது
அவர்களுக்கே வெளிச்சம்! நீ
இப்பொழுது என்ன 
யோசித்துக்கொண்டிருக்கிறாய்?

மனதை படுத்தாதே!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களின் அவமரியாதைஎல்லாம் 
ஒரு விஷயமல்ல! அதற்கெல்லாம்
மனதை போட்டு குழப்பிக்கொண்டால்
பிறகு என்னதான் நீ செய்யமுடியும்!
மனதை படுத்தாதே!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP