Friday, November 25, 2011

மறக்காதே!


ராதேக்ருஷ்ணா!

மனிதர்கள் நம்மை பலவிதமாக 
ஏமாற்றுவார்கள்! நாம்தான் நம்மை 
ஜாக்கிரதையாக வைத்திருக்கவேண்டும்! 
நீ ஏமாற்றுபவர்களை ஜெயிக்கவேண்டும்!
மறக்காதே!

Thursday, November 24, 2011

க்ருஷ்ணா... காப்பாய்!


ராதேக்ருஷ்ணா

எல்லோரும் மாறிவிடுகிறோம்!
க்ருஷ்ணா நீ மட்டும் தான் 
மாறவில்லை! அதனால் நான் 
உன்னை தவிர யாரையும் 
நம்புவதில்லை! நம்பினாலும் 
பிரயோஜனமில்லை! காப்பாய்!

எனக்கு ஒன்றும் புரியவில்லை!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா... நீ தானே மனிதர்களை 
சேர்த்து வைக்கிறாய்! நீ தானே 
மனிதர்களை நல்ல காரணத்திற்க்காக 
பிரிக்கிறாய்! எனக்கு ஒன்றும் 
புரியவில்லை! ப்ரபோ!

பூரணமாக நம்புகிறேன்!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா! உனக்கு எல்லாம் 
தெரியும்! எல்லோரையும் தெரியும்!
எனக்கு உன்னை விட்டால் 
எதுவும் தெரியாது! யாரையும் 
தெரியாது! உன்னை மட்டுமே 
பூரணமாக நம்புகிறேன்!

Thursday, November 10, 2011

நல்ல மனிதராய் வாழ்!


ராதேக்ருஷ்ணா!

உன் உயிர் உள்ளவரை உனக்கு 
உதவி செய்தவரை மறக்கவே 
மறக்காதே! மறந்துவிட்டால் 
நிச்சயம் நீ ஒரு நாளும் 
நல்ல மனிதரில்லை! நல்ல 
மனிதராய் வாழ்!

ஆனந்தமாய் இரு!

ராதேக்ருஷ்ணா!


உனக்கு மற்றவர் செய்த 
உதவியை ஒரு நாளும் மறக்காதே! 
உனக்கு அடுத்தவர் கொடுத்த 
கஷ்டத்தை ஒரு நாளும் 
நினைவில் வைத்துக்கொள்ளாதே!
ஆனந்தமாய் இரு!

பழகு...

ராதேக்ருஷ்ணா!


ஒவ்வொருவரிடமும் நீ பழகித்தான் 
ஆகவேண்டும்! இதை நீ உன் 
வாழ்வின் எல்லைவரை தவிர்க்கவே 
முடியாது! மனிதர்களை நம்மால் 
ஒதுக்கமுடியாது! பழகு...

Monday, November 7, 2011

தயாராக இரு!


ராதேக்ருஷ்ணா

நீ வெளியில் செல்லும்போது 
மழை பெய்தால் அது இயற்கையின் 
சதியல்ல! மழைக்காலத்தில் எப்பொழுது 
 வேண்டுமானாலும் மழை பெய்யும்!
நீ எப்போதும் தயாராக இரு!

Wednesday, November 2, 2011

உதவி நிச்சயம்!


ராதேக்ருஷ்ணா!

உதவிகள் செய்ய உலகமே 
தயாராக இருக்கிறது! நீ 
க்ருஷ்ணனின் குழந்தையாக
இருப்பதால் எல்லா சமயத்திலும் 
உனக்கு என்றும் எங்கும் 
உதவி நிச்சயம்!

சரியா?


ராதேக்ருஷ்ணா!

உதவியை தேடி நீ செல்ல 
வேண்டாம்! உன்னை தேடி 
வரும் உதவிகளை நீ 
ஒதுக்காமல் இருந்தாலே போதும்!
உனக்கு உதவி செய்ய பலர் 
காத்திருக்கிறார்கள்! சரியா?

வாங்கிக்கொள்!


ராதேக்ருஷ்ணா!

நிச்சயம் உனக்கு எல்லோரும் 
உதவி செய்வார்கள்! நீ உன் 
அஹம்பாவத்தை விட்டு அன்போடு 
பழகினால் நிச்சயம் உன்னால் 
எல்லோரிடமும் உதவி பெற 
முடியும்! வாங்கிக்கொள்!

Tuesday, November 1, 2011

செய்! செய்!


ராதேக்ருஷ்ணா

உன்னை நீ ஆசைகளிடம் 
இருந்து விடுதலை செய்துவிட்டு,
க்ருஷ்ணனிடம் உன் மனதை 
வசப்படுத்திவிட்டால் நிச்சயம் 
நீ உலகை வசம் செய்ய 
முடியும்! செய்! செய்!

உன்னிடத்தில் உண்டு...


ராதேக்ருஷ்ணா

மனதை திடமாக நிதானமாக 
தெளிவாக வைத்துக்கொள்! உன்னால் 
நிச்சயம் இது முடியும்! உலகை 
வசம் செய்யும் ஆற்றல் உன்னிடத்தில் 
பூரணமாக உண்டு...

உன் சிந்தனைகள்!


ராதேக்ருஷ்ணா

நீ உன்னுடைய சிந்தனைகளை 
சரியான வழியில் எடுத்து 
சென்றால் நிச்சயம் நீ உலகில் 
எல்லோரையும் ஜெயிக்கமுடியும்!
உன் சிந்தனைகளே உன் வழியாகும்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP