Friday, March 30, 2012

அவமானப்படுவர்!


ராதேக்ருஷ்ணா

அடுத்தவரை அவமானப்படுத்துபவர் ஒரு நாள் 
நிச்சயம் இந்த உலகத்தில் பலரிடம் இருந்து 
அவமானப்படுவர்! என்ன கொடுக்கிறோமோ 
அதுவே நமக்கு கிடைக்கும்!

தர்மம் வெல்லும்!


ராதேக்ருஷ்ணா

சிலருக்கு அடுத்தவரை கஷ்டப்படுத்துவதில் 
அலாதி இன்பம்! ஆனால் அது 
அவர்களையே படுத்தும் என்பது 
பின்னாளில் நிச்சயமாகப் புரியும்!
தர்மம் வெல்லும்!


ராக்ஷசரின் செய்கைகள்!


ராதேக்ருஷ்ணா

அடுத்தவரை மனிதராக மதிக்காதவர்கள் 
நிச்சயம் வாழ்வில் படாத பாடு படுவர்!
மனிதரை இம்சிப்பதும் அவமதிப்பதும் 
ராக்ஷசரின் செய்கைகள்!

Friday, March 23, 2012

கோடி நமஸ்காரம்!

ராதேக்ருஷ்ணா!

த்யாகராஜரின் தெலுங்கு
கீர்த்தனைகள் கேட்டாலே
மனது உருகும்! ராமனை
தனது மொழியில் எத்தனை
அழகாக அனுபவித்து இருக்கிறார்!
கோடி நமஸ்காரம்!

ராதேக்ருஷ்ணா!

இன்று உகாதி! தெலுங்கு
மற்றும் கன்னடம் பேசும்
மக்களுக்கு புத்தாண்டு! பல
பக்தர்கள் இந்த 2 மொழிகளிலும்
நிறைய பக்திப்பாடல்கள்
பாடி இருக்கிறார்கள்...

அடுத்தவரை தாழ்வாக நினைக்காதே!

ராதேக்ருஷ்ணா!

எப்பொழுதும் அடுத்தவரை தாழ்வாக நினைப்பவர்கள் நிச்சயம் தான் இறுதி காலத்தில் அடுத்தவரின்
தயவோடு மட்டுமே வாழ
வேண்டிய நிலை வரும்!

சுயநலத்தின் வெளிப்பாடு!

ராதேக்ருஷ்ணா!

தன்னை மட்டுமே எல்லோரும்
கொண்டாடவேண்டும் என்று
நினைப்பவர்கள் எப்பொழுதும்
அடுத்தவருக்கு துக்கத்தை
மட்டுமே தருகிறார்கள்!
சுயநலத்தின் வெளிப்பாடு!

புரிந்துகொள்வதே இல்லை!

ராதேக்ருஷ்ணா!

சிலருக்கு அடுத்தவர் மனதை
நோகடிப்பதில் எப்பொழுதும்
பரம ஆனந்தம்! அனால்
அந்த புத்தி தன்னையே
பாதிக்கும் என்பதை பலர்
புரிந்துகொள்வதே இல்லை!

Sunday, March 18, 2012

காத்திருக்கிறோம் தாயாருக்காக!


ராதேக்ருஷ்ணா!

இப்பொழுது திருச்சாநூரை 
நெருங்குகிறோம்! தாயாரின் 
தரிசனம் கிடைக்குமா இல்லையா 
என்று தாயாருக்கு மட்டுமே தெரியும்! 
காத்திருக்கிறோம் தாயாருக்காக!

ஸ்ரீநிவாசனின் திருவிளையாடல்...


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீநிவாசனின் திருவிளையாடல் 
ஆரம்பமாகிவிட்டது! எங்களை 
திருமழிசையில் மத்ய 
ஜகந்நாதரையும், திருமழிசை 
ஆழ்வாரையும் தரிசிக்க வைத்தான்!

Thursday, March 15, 2012

தயவு செய்!


ராதேக்ருஷ்ணா!

குழந்தையாய் நான் இருக்க 
க்ருஷ்ணா நீ அருள் செய்!
குழந்தையாய் நான் இருந்தால் 
உலகில் உள்ள அனைவருக்கும் 
என்னால் சந்தோஷம் மட்டுமே 
கிடைக்கும்! தயவு செய்!

உத்திரமேரூர்!


ராதேக்ருஷ்ணா!

நேற்று உத்திரமேரூரில் பஞ்ச 
வரதராஜரை அனுபவித்தோம்!
பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் 
5 மூர்த்திகளை ஸ்தாபித்து 
உபாசனை செய்த இடம் 
உத்திரமேரூர்!

ராஜ அலங்காரத்தில் பாண்டுரங்கன்!!


ராதேக்ருஷ்ணா!

நேற்று ஸ்ரீ ஹரிதாஸ் கிரி 
குருஜி அவர்கள் பிறந்த 
ஊரான தென்னாங்கூர் 
சென்று, ராஜ அலங்காரத்தில் 
பாண்டுரங்கனை அழகாக 
தரிசித்தோம்! ஆஹா...ஆஹா...

Monday, March 12, 2012

இது சத்தியம்...


ராதேக்ருஷ்ணா!

நிச்சயம் தர்மம் வெல்லும்!
யாரும் அதர்மத்தைக் கண்டு 
பயப்படவேண்டாம்! மதம் 
மாற்றும் கொடுமை சீக்கிரத்தில் 
இல்லாமல் போகும்! இது 
சத்தியம்... வெல்வோம்...

சூழ்நிலை கைதிகள்!

ராதேக்ருஷ்ணா

நாம் நல்லது செய்ய நினைத்தாலும் 
சில சமயங்களில் நாம் சூழ்நிலை 
கைதிகளாகிறோம்! அப்பொழுது 
தெய்வம் மட்டுமே நாம் செய்யவேண்டிய 
நல்லதை செய்யமுடியும்!

பிரார்த்தனை...


ராதேக்ருஷ்ணா

பல சந்தர்ப்பங்களில் பல நிகழ்சிகளில் 
நாம் கையாலாகாதவராகவே 
இருக்கவேண்டியுள்ளது! அந்த 
சமயத்தில் நாம் பிரார்த்தனை 
தான் செய்யமுடியும்!

Saturday, March 10, 2012

கிருபை செய்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணா, எனக்கு நிறைய 
நல்ல காரியங்கள் செய்யவேண்டி 
இருக்கிறது! தயவு செய்து இந்த 
மனிதர்களிடம் பணத்திற்காக 
என்னை கெஞ்ச வைக்காதே!
கிருபை செய்!

க்ருஷ்ண சைதன்ய மகாபிரபு அவதரித்தார்!


ராதேக்ருஷ்ணா!

இன்று ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மகாபிரபு 
அவதரித்த புண்ணிய நாள்!
அந்திப்பொழுதில் எல்லோரும் நாம
ஜபம் செய்யும் நேரத்தில்தான் 
அவர் அவதரித்தார்!

ஹோலி பண்டிகை!


ராதேக்ருஷ்ணா

இன்று ஹோலி பண்டிகை!
ப்ஹல்லாதனை அழிக்க நினைத்த 
ஹோலிகா என்னும் அரக்கி 
அழிந்த நாள்! இன்று விடாமல் 
நாம ஜபம் செய்தால் ப்ஹல்லாதனைப் 
போல் பக்தனாகலாம்!

Thursday, March 8, 2012

மனோ பலம்...


ராதேக்ருஷ்ணா!

மனதில் பலம் என்றும் குறையவே 
கூடாது! உடல் பலம் குறைந்தாலும் 
உன் மனோ பலத்தினால் நீ வாழ்வில் 
சாதிக்கமுடியும்! மனோ பலம் 
அதிகமாக நாமஜபம் செய்!

சாதித்துவிடு!


ராதேக்ருஷ்ணா!

நிச்சயம் உடலுக்கு பலவீனம் 
உண்டு! இது உலக இயற்க்கை!
நீயோ நானோ இதை மாற்றவே 
முடியாது! அதனால் உடலில் 
பலம் இருக்கும்போதே வாழ்வில் 
சாதித்துவிடு!

ஓடு!


ராதேக்ருஷ்ணா!

எத்தனை ஓடமுடியுமோ அத்தனை 
ஓடு! ஒரு காலத்திற்கு பிறகு 
நீ நினைத்தாலும் ஓடவே 
முடியாது! அதனால் உடலில் 
பலம் இருக்கும் வரை 
நிறைய ஓடு! ஓடு...

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP