Wednesday, July 27, 2011

மறக்கமுடியாத நிமிஷங்கள்!


ராதேக்ருஷ்ணா

திருமலையில் இருக்கும் ஒவ்வொரு
நிமிடமும் வாழ்வில் மறக்கமுடியாத
நிமிஷங்கள்! திருமலையே எனக்கு
ஒரு ஜன்மாவில் உன் மடியில் 
பிறந்து வாழ வரம் தா!

பக்தர்களின் கூட்டம்...


ராதேக்ருஷ்ணா

மலையப்பருக்கு 365 நாளும்
பக்தர்களின் கூட்டத்தில் தான்
சுகமே! எத்தனை ஜனங்கள் 
நம்பிக்கையோடு இந்த 
ஏழுமலையானை தரிசிக்க
வருகிறார்கள்! ஆஹா!

கருணைராஜா!


ராதேக்ருஷ்ணா

மலையப்பரின் கருணைக்கு சமானமாக 
சொல்ல உலகில் ஒரு பொருளில்லை!
பக்த ஜனங்களுக்காக ஒரு தெய்வம்
கால் கடுக்க நிற்கிறதே! 
மலையப்பா நீ கருணைராஜா!

Saturday, July 23, 2011

அன்பு செலுத்து!

ராதேக்ருஷ்ணா

நீ உலகை விட்டு போகும்போது
உலகின் உயிர்கள் எல்லாம்
உனக்காக அழவேண்டும்! நீ
செத்து ஒழிந்தாய் என்று
ஒருவரும் நினைக்கவே கூடாது!
உடனே அன்பு செலுத்து!

குறை சொல்லாதே!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் முடிந்தவரை
அடுத்தவருக்கு கஷ்டம் கொடுக்காமல்
இரு! என்றும் அடுத்தவரை தவறாக
புரிந்துகொள்ளாதே! என்றும்
மற்றவரை குறை சொல்லாதே!

க்ருஷ்ணனின் பொறுப்பு!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை எப்படியும் நடக்கும்!
நீ தேவையில்லாமல் யோசிப்பதை
விட்டு உன் கடமைகளை
ஒழுங்காக செய்துகொண்டிரு!
உன் வாழ்க்கை க்ருஷ்ணனின்
பொறுப்பு! நிம்மதி!

Sunday, July 10, 2011

திருப்தியே செய்யமுடியாது!

ராதேக்ருஷ்ணா

சில வயதானவர்களை என்ன
செய்தாலும் திருப்தியே செய்யமுடியாது!
நம்மால் முடிந்தவரை செய்துவிட்டு
கடவுளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு
வாழவேண்டும்! 

வளர்ந்த குழந்தை!

ராதேக்ருஷ்ணா

வயதானவர்களை கவனித்துக் 
கொள்பவர்கள் மிகவும் அமைதியாகவும்,
நிதானமாகவும் இருக்கவேண்டும்!
வயதானவர்கள் வளர்ந்த குழந்தை!
சமாளிக்கவேண்டும்!

புரிந்துகொள்வர்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு முறையும் வயதானவர்களுக்கு
நாம் நன்மையே செய்தாலும் 
அவர்கள் அதை பல சந்தர்ப்பங்களில்
தவறாகவே நினைப்பதுண்டு!
சில சமயம் புரிந்துகொள்வர்!

Wednesday, July 6, 2011

நம்பிக்கை அவசியம்....


ராதேக்ருஷ்ணா

நமக்கு நன்மை செய்பவர்களிடம்
நாம் வைக்கும் சந்தேகமே
நமக்கு பாதகத்தை விளைவிக்கும்!
யாரிடமாவது துளியாவது நமக்கு
நம்பிக்கை அவசியம்....

சந்தேகப் படுவது...


ராதேக்ருஷ்ணா

சந்தேகப் படுவது மட்டுமே
நாம் வழக்கமாகக் கொண்டால்
வாழ்வில் யாரிடமும் நாம்
ஒத்துப்போகமுடியாது! உலகில்
எல்லோரையும் சார்ந்தே நாம் 
வாழ்கின்றோம்!

நம்பிக்கை தேவை!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களுக்கு வயதான காலத்தில்
யாரிடமாவது திடமான நம்பிக்கை
தேவை! க்ருஷ்ணனை
 நினைத்துக்கொண்டு நல்ல மனிதரை
 நம்பினால் சுகம் மட்டுமே!

Tuesday, July 5, 2011

மறந்துவிடு!


ராதேக்ருஷ்ணா

எல்லோரும் தங்களுக்கு தோணினதை
எல்லாம் உனக்கு அறிவுரையாக
சொல்லுவார்கள்! நீ அதில்
வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு
மற்றவற்றை யோசிக்காமல் மறந்துவிடு!

பிரயோஜனமில்லை!


ராதேக்ருஷ்ணா

உலகம் என்றைக்கு நமக்கு
தைரியம் தந்திருக்கிறது?
நம்மை பயமுறுத்தவே உலகம்
எப்பொழுதும் தயாராய் 
இருக்கிறது! உலகை நம்பி
பிரயோஜனமில்லை!

உலகத்தை ஒதுக்கு!


ராதேக்ருஷ்ணா

எல்லோருமே உன்னை பைத்தியம்
என்றே திட்டட்டும்! உன் 
மனதிற்கு ஒரு விஷயம் 
சத்தியமாக சரி என்று 
பட்டால் யார் சொன்னாலும்
கேட்காதே! உலகத்தை ஒதுக்கு!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP