Thursday, June 10, 2010

வாலை சுருட்டிக்கொண்டு நாமஜபம் செய்!

ராதேக்ருஷ்ணா

சத்சங்கத்தில் வம்பு பேசி
 அடுத்தவரைப் பற்றி குறை 
கூறுபவர்கள் ஒரு நாளும் 
க்ருஷ்ணனை அடைய முடியாது! 
ஒழுங்காக வாலை சுருட்டிக்கொண்டு 
நாம ஜபம் செய்! 

தெளிவாக இரு!

ராதேக்ருஷ்ணா 

சத்சங்கத்தில் யாரும் பெரியவர் இல்லை!
சிஷ்யர்கள் ஒருவரை ஒருவர் 
கேவலப்படுத்தக்கூடாது! குருவிற்கு 
எல்லோருமே குழந்தைகள் தான்!
தெளிவாக இரு!

சத்சங்கத்தில் வம்பு பேசாதே!

ராதேக்ருஷ்ணா

சத்சங்கம் என்பது நல்ல விஷயங்களை 
கற்றுக்கொள்வதற்காக மட்டுமே! அதில் 
வம்பு பேசுவது என்பது மிகப் பாபமான 
செயல்! நல்லதை கற்று உருப்படு! 

கலங்காமலிரு!

ராதேக்ருஷ்ணா

உன் மனதை எப்பொழுதுமே திடமாக 
வைத்துக்கொள்! எது வந்தாலும் 
கலங்காமலிரு! நீ பயப்படும்போதுதான் 
எல்லோரும் உன்னை பாடாய் 
படுத்துகிறார்கள்!

க்ருஷ்ண மன நோயாளி!

ராதேக்ருஷ்ணா

உலகில் எல்லோருமே மன நோயாளிகள்
 தான்! சிலருடைய நோய் வெளியில் 
தெரிகிறது! நீ க்ருஷ்ண மன 
நோயாளியாக இருக்க நாமஜபம்
செய்! மனதை அலட்டிக்கொள்ளாதே!

மூளையை உபயோகி!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை
ஒவ்வொரு விதமாக சொல்லுவார்கள்!
எது சரி என்பதை நீ ஆராய்ந்து பார்த்து 
சரியானதை புரிந்து கொள்! 
மூளையை உபயோகி!

சக்திவாய்ந்த ஆயுதம்!

ராதேக்ருஷ்ணா

இதுவரை யாரும் சத்தியத்தை 
ஜெயித்ததில்லை! உலகின் 
மிகப்பெரிய சக்தி வாய்ந்த 
ஆயுதம் சத்தியமே! சத்தியத்தை 
பிடிப்பவரும் தோற்றதில்லை!

சத்தியம்!

ராதேக்ருஷ்ணா

சத்தியத்தை அப்படியே ஏற்றுக்கொள்! 
அப்பொழுதுதான் உன்னால் நிம்மதியாக
 வாழ முடியும்! பகவான் கிருஷ்ணன் 
தான் சத்தியமாக இருக்கிறான்!

நிஜங்கள்!

ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையின் நிஜங்கள் உனக்கு 
கசக்கும்! ஆனால் நிஜங்கள் மட்டுமே 
உன்னை வளர்த்திருக்கிறது! என்றும் 
நிஜங்கள் நல்லதை மட்டுமே செய்யும்!

Wednesday, June 9, 2010

ராதேக்ருஷ்ணா


உனக்கு எது நல்லதோ அதை

மட்டுமே கிருஷ்ணன் உனக்கு

 தருகிறான்!ஆசைவயப்பட்டு

பைத்தியம் போல் பிடிவாதம்

பிடிக்காதே!கிடைப்பதை

எற்றுக்கொள்!

நாமஜபம் செய்!!!

ராதேக்ருஷ்ணா


மனதில் தேவையில்லாத

யோசனைகள் வரும்போது

உடனே வேகமாக நாமஜபம்செய்!

அப்பொழுது உடனேயே

உன் மனம் மாறுவதை

நீ உணரலாம்!

மாற்றிக்கொள்!


நீ ஜெயிப்பாய்!

ராதேக்ருஷ்ணா

உனது நல்ல நம்பிக்கை

 ஒருநாளும் வீண்போகாது!

கிருஷ்ணனிடம் திடமாக

மனத்தைக்  கொடுத்துவிட்டு

 உன் கடமைகளை சரியாக

செய்து வா!நீ ஜெயிப்பாய்!

திடமாக நம்பு!!!

ராதேக்ருஷ்ணா

உலகில்  ஒரே சமயத்தில் பல கோடி

விஷயங்கள் நடக்கிறது! நீ உன்னை

சரி செய்து  வாழப்பழகிக்கொள்! 

உன் வாழ்க்கை நன்றாயிருக்கும்!

திடமாக நம்பு!

கிருஷ்ணனுக்கு மட்டுமே நீ அடிமை!!!

ராதேக்ருஷ்ணா

உன் கிருஷ்ணனுக்கு மட்டுமே

 
நீ என்றுமே அடிமை!

 
புரிந்துகொள்!

அதிகப்ரசங்கியாய் ஆகாதே!!!

ராதேக்ருஷ்ணா


எங்கும் அதிகப்ரசங்கியாய்

பேசாதே!

நடக்காதே!

குறுக்கே பேசாதே!!!

ராதேக்ருஷ்ணா


அடுத்தவர் பேசி

 முடிக்குமுன்பு

குறுக்கே பேசாதே!

நீயே சரி என்று வாதாடாதே!!!

ராதேக்ருஷ்ணா


எப்பொழுதும் உன்

 வார்த்தைதான்

சரியென்று வாதாடாதே!

ராதேக்ருஷ்ணா


ராமானுஜர் திருக்குறுங்குடி

நம்பிக்கே ஆச்சார்யன்!

செங்கனி வாயழகில் உன்னை மற!!!

ராதேக்ருஷ்ணா


திருக்குறுங்குடி நம்பியின்

 செங்கனி வாயழகில்

 உன்னை மற!

மனதை கொடு!!!

ராதேக்ருஷ்ணா


சுந்தர பரிபூரன

 நம்பியிடம்
  
மனதைக்கோடு

ராக்ஷதனங்களை கொன்றுபோடு!!!

ராதேக்ருஷ்ணா


உன் ராக்ஷதனங்களை

எல்லாம் கொன்றுபோடு!

பயத்திற்கு இடம் தராதே!!!

ராதேக்ருஷ்ணா


உன் மனதில் மறந்தும்

பயத்திற்கு இடம் தராதே!

தைரியமாய் இரு!!!

ராதேக்ருஷ்ணா

எங்கும் உள்ள கண்ணன்

உன்னோடு இருக்கிறான்!

தைரியமாய் இரு!

கிருஷ்ணன் இஷ்டப்படி வாழவேண்டும்!!!

ராதேக்ருஷ்ணா

ஹே கிருஷ்ணா!உன்
இஷ்டப்படி
நான் வாழவேண்டும்!

கிருஷ்ணனே ஆனந்தம்!!!

ராதேக்ருஷ்ணா


ஹே க்ருஷ்ணா!நீ தான்

என்னுடைய

சாந்தியும், ஆனந்தமும்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP