Monday, April 30, 2012

நிம்மதி...

ராதேக்ருஷ்ணா!

அடுத்தவரின் சொத்து நமக்கு
 ஒரு நாளும் வேண்டவே
வேண்டாம்! நமக்கு கிடைப்பதைக் கொண்டு 
நாம் வாழ்ந்தால்
மட்டுமே நாம் இங்கே
நிம்மதியாக இருக்க முடியும்!

Thursday, April 26, 2012

ஸ்ரீரங்கநாயகி...


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீரங்கநாயகி...உன்னை நம்பியே 
அடியேன் இந்த ஏமாற்று 
மனிதருக்கு நடுவில் காலத்தை 
கழிக்கின்றேன்! எல்லோரும் நலமாய்
இருக்க உன் திருவடியில் விழுகின்றேன்!

ராஜாதி ராஜன்!


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீரங்கநாதா...நிஜமாகவே நீர் 
ராஜாதி ராஜன்தான்! உம்முடைய 
திருவடி நிழலில் எனக்கு ஒரு இடம் 
தா! உனது கருணை மட்டுமே 
எனக்கு சமாதானம்!

ராமானுஜா...


ராதேக்ருஷ்ணா!


ராமானுஜா...நீர் மிகவும் பெரியவர்!
அதனால் தான் இன்று உமது 
தானான திருமேனி தரிசனத்தை 
அடியேனுக்கு ஸ்ரீரங்கத்தில் 
அற்புதமாக தந்தீர்...

Thursday, April 19, 2012

நீயே காப்பாற்று!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணா...இந்த வாழ்வில் 
எல்லோரும் நன்றாய் இருக்க 
ஓடிக்கொண்டிருக்கிறேன்! மனைவி 
குழந்தை குடும்பம் சத்சங்கம் 
சிஷ்யர்கள் எல்லோரையும் 
நீயே காப்பாற்று!

உழன்றுகொண்டிருக்கிறேன்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணா நான் இந்த உலகில் 
வந்த காரணம் உன்னை 
அனுபவிக்கவே! ஆனால் நான் 
உன்னை அனுபவிக்காமல் சம்சார 
சாகரத்தில் உழன்றுகொண்டிருக்கிறேன்! 
காப்பாய்...

க்ருஷ்ணா...காப்பாற்று!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா...நான் உன்னை மட்டுமே 
நம்பி இருக்கிறேன்! இந்த சந்தேக 
மனிதர்களுக்கு நடுவில் நான் படும் 
பாடு உனக்கு நன்றாய் தெரியும்!
என்னை உடனே காப்பாற்று!

Friday, April 6, 2012


ராதேக்ருஷ்ணா!

இன்று இரவு 8 மணிக்கு 
ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி 
வேட்டையாட வருகிறார்! பக்த 
ஜனங்கள் எல்லோரும் கட்டாயம் 
வரவேண்டும்! இது 
கோபாலவள்ளியின் உத்தரவு!

ஸ்ரீ பத்மநாபரின் வேட்டை!


ராதேக்ருஷ்ணா!

பத்மநாபனுடைய திருவடி நிழலில் 
சௌக்கியமாக இருக்கிறேன்! 
எனக்கு என்ன குறை? வாழ்வில் 
பத்மநாபன் மட்டுமே எனக்கு கதி! 
இன்று ஸ்ரீ பத்மநாபரின் வேட்டை!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP