Sunday, January 22, 2012

வென்றே தீரும்!


ராதேக்ருஷ்ணா!

என் முயற்சிகள் தோற்பதினால்,   
நான் வாழ்வில்  தோற்பேன் என்று 
அர்த்தமில்லை! என் முயற்சிகள் 
ஒரு நாள் வென்றே தீரும்!
அன்று நான் என் தோல்விகளை 
பார்த்து சிரிப்பேன்!

உன்னை நீ அறிவாய்!


ராதேக்ருஷ்ணா!

முயற்சிகள் தோற்பதினால்
 மனிதர்கள் தோற்பதில்லை! 
முயற்சிகள்  தோற்பதினால் 
 நீ வெற்றியை நோக்கி சீக்கிரம் 
செல்கிறாய் என்பதே சத்தியம்!
உன்னை நீ அறிவாய்!

போராடிக்கொண்டே இரு!


ராதேக்ருஷ்ணா

போராடிக்கொண்டே இரு! 
நீ தோற்றாலும் பரவாஇல்லை! 
அதனால் ஒரு குற்றமில்லை!
நீ போராடாவிட்டால் தான் 
நீ வாழ்வில் தோற்றுவிடுவாய்! 
முயற்சிகள் தோற்கலாம்!

Wednesday, January 18, 2012

வாழ்வின் யதார்த்தம்!


ராதேக்ருஷ்ணா!

மரணம் உலகிற்கு புதிதல்ல!
ஆனால் அவரவர்க்கு வரும்போது 
தான் மரணம் புதிதாக உள்ளது!
மரணம் பற்றிய பேச்சு தவறல்ல!
வாழ்வின் யதார்த்தம்!

புதிர்!


ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொருவர் மரணத்திலும் ஒரு 
ரஹசியம் ஒளிந்துகொண்டிருக்கிறது!
நாம் அனைவருமே அதை 
நம்முடைய மரண சமயத்தில் 
மட்டுமே உணருகின்றோம்!
வாழ்கை புதிர்!

மரணம்...


ராதேக்ருஷ்ணா!

மரணத்தை நாம் யாரும் 
நினைப்பதில்லை! மரணத்தை 
நாம் அடுத்தவரின் மரண 
சமயத்தில் தான் நினைக்கிறோம்!
அது போலவே அடுத்தவர்  நம்
 மரணத்தில் நினைப்பர்!

Tuesday, January 17, 2012

நல்லதல்ல!


ராதேக்ருஷ்ணா!

பல பெண்கள் தங்களின் 
வார்த்தைக்கு தான் குடும்பத்தில் 
மதிப்பு இருக்கவேண்டும் என்று 
பிடிவாதம் பிடிப்பார்கள்! அது 
குடும்பத்திற்கு என்றுமே நல்லதல்ல!

நல்லது!


ராதேக்ருஷ்ணா!

பல பெண்கள் நாம் ஒன்றை 
சொன்னால் அதற்க்கு நேர் 
விரோதமாக எதையாவது 
சொல்வார்கள்! அதனால் 
அவர்களிடம் வாயை திறக்காமல் இருப்பதே நமக்கு நல்லது!


ராதேக்ருஷ்ணா!

பெண்கள் பலர் மற்றவரை 
ஒரு விஷயத்தை சொல்லக்கூட 
விடமாட்டார்கள்! விஷயத்தை 
ஆரம்பிப்பதற்கு முன்பே அடுத்தவர் 
தன் கருத்தை சொல்லவிடமட்டார்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP