Thursday, October 27, 2011

தீபம் ஏற்றி வைப்போம்!


ராதேக்ருஷ்ணா

ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில் 
அன்பெனும் தீபத்தை நிறைய 
ஏற்றி வைப்போம்! அன்பெனும் 
ஒளியிலே இந்த உலகங்கள் 
திளைத்து ஆனந்த கூத்தாடட்டும்...

பூரணமாக கிடைக்கட்டும்!


ராதேக்ருஷ்ணா

இந்த தீபாவளியில் முதியோருக்கு 
மரியாதையும், அரவணைப்பும், அன்பும், 
ஆதரவும் பூரணமாக கிடைக்கட்டும்!
அவர்கள் தானே நமக்கு 
தீபாவளியை தந்தார்!

ஒழுங்காக ஜபிப்போம்!


ராதேக்ருஷ்ணா

இந்துக்களுக்கு வீரம் வரும் 
தீபாவளியாகட்டும்! பாரத 
தேசத்திற்கு தொல்லைகள் நீங்கும் 
தீபாவளியாகட்டும்! எல்லோரும் 
இதற்காக ஒழுங்காக ஜபிப்போம்!

Tuesday, October 25, 2011

திருவனந்தபுரத்திற்கு வாருங்கள்!


ராதேக்ருஷ்ணா

இன்று முதல் ஸ்ரீ பத்மநாபர் 
ஒவ்வொரு வாகனத்தில் கோயிலில் 
பக்த ஜனங்களுக்கு காட்சி 
கொடுப்பார்! நீங்களும் எங்கள் 
திருவனந்தபுரத்திற்கு வாருங்கள்!

அருள் தரும் தீபாவளி!


ராதேக்ருஷ்ணா

இன்று இரவு தீபாவளி! உன்னுள் 
இருக்கும் நரகாசுரன் என்னும் 
அஹம்பாவம் அழியட்டும்! உன்னுள் 
உன்னதமான ஞான ஒளி பரவட்டும்!
இது அருள் தரும் தீபாவளி!

அனந்தபுரத்தில் கொண்டாட்டம்!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ அனந்த பத்மநாப 
சுவாமியின் கோயிலில் உற்சவம் 
ஆரம்பம்! கருடக் கொடியை
 பத்மநாபரின் கோயிலில் ஏற்றியாகிவிட்டது! 
அனந்தபுரத்தில் கொண்டாட்டம்!

Saturday, October 22, 2011

நிம்மதியான வழி!


ராதேக்ருஷ்ணா!

யார் எப்படி இருந்தால் உனக்கென்ன?
நீ எல்லோரிடமும் ஒரே மாதிரியாகப் 
பழகு! அப்படி இருந்தால் எல்லோருக்கும் 
உன்னை நிச்சயமாகப் பிடிக்கும்!
நிம்மதியான வழி!

எதையும் எதிர்பார்க்கதே!


ராதேக்ருஷ்ணா!

மனிதர்களிடம் மனதை தந்தால் 
கஷ்டம்தான்! யாரிடமும் எதையும் 
எதிர்பார்க்கதே! எல்லோரிடமும் 
பழகு! அனால் அவர்கள் இப்படி 
இருக்கவேண்டும் என்று ஏங்காதே!

நீ அமைதியாக இருக்கிறாயா??


ராதேக்ருஷ்ணா

மனதிலே பரபரப்பு இருந்தால் 
நிம்மதி இருக்காது! ஆசைகள் 
அதிகமாக அதிகமாக பரபரப்பு 
அதிகமாகும்! நீ அமைதியாக 
இருக்கிறாயா?? உன்னைக் கேள்!

Tuesday, October 18, 2011

செலவும் வரவும்...


ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு நியாயமான செலவும் 
உண்மையான வரவே! செலவே 
இல்லாத வாழ்க்கை யாருக்கும் 
இல்லை! வரவே இல்லாத 
மனிதரும் இல்லை! செலவும் 
வரவும் இரு பக்கங்கள்!

திருத்திக்கொள்!


ராதேக்ருஷ்ணா!

எதற்கு எவ்வளவு செலவு 
செய்யலாம் என்பதை நீ 
தான் முடிவு செய்யவேண்டும்!
அடுத்தவர் சொல்வதைக் கொண்டு 
பைத்தியம் போல் செலவு 
செய்யாதே! திருத்திக்கொள்!

பொறாமைப் படாதே!


ராதேக்ருஷ்ணா!

செலவு என்றுமே உண்டு! 
நியாயமான வழியில் உன் 
வரவை பெருக்கிக்கொள்! அல்லது 
உன் செலவை குறைத்துக்கொள்!
அடுத்தவரைப் பார்த்து பொறாமைப் 
படாதே! மாற்றிக்கொள்!

Thursday, October 6, 2011

ஜெய் வாக் தேவி!


ராதேக்ருஷ்ணா!


கலைமகளே...என்றும் க்ருஷ்ணன் 
ஆசைப்படும்படியான படிப்பை எங்கள் 
பிள்ளைகள் படித்து மிக சிறந்த 
இடத்தை அடைய என்றும் அனுக்ரஹம்    
செய்! ஜெய் வாக் தேவி!

கலைவாணியே... ஆசி கூறு!


ராதேக்ருஷ்ணா!


கலைவாணியே...வால்மீகியின் நாவில் 
அமர்ந்து அவரை ஆதி கவியாக்கின 
தேவியே...எங்கள் குழந்தைகள் 
கல்வியில் மேலும் மேலும் வளர 
பரிபூரண ஆசி கூறு!

சரஸ்வதி தேவியே...


ராதேக்ருஷ்ணா!


சரஸ்வதி தேவியே...எங்கள் 
குழந்தைகள் கல்வியில் சிறந்து 
விளங்க ஆசீர்வாதம் செய்! எங்கள் 
பிள்ளைகள் தொலைகாட்சியிலிருந்து
 மீண்டு வெளியில் வர ஆசி கொடு!

Tuesday, October 4, 2011

தெய்வம் உதவுகிறது!


ராதேக்ருஷ்ணா


நம்மை வாழவைக்க தெய்வம் 
பலவிதங்களில் உதவுகிறது! நாம் 
தான் எதையோ, யாரையோ 
 நினைத்துக்கொண்டு  தேவை 
இல்லாமல் வாழ்வை
 படுத்திக்கொள்கிறோம்...

ஒரு லாபமும் இல்லை!


ராதேக்ருஷ்ணா!


எல்லோருக்கும் உதவ யாரையாவது 
க்ருஷ்ணன் வைத்திருக்கிறான்! அதை
 நினைத்து ஆனந்தப்படுவதுதான் 
அழகு! அதை விட்டு அழுவதினால் 
ஒரு லாபமும் இல்லை!

கவலை ஏன்?


ராதேக்ருஷ்ணா


எல்லோரும் அனாதைகள் தான்!
எனக்கு யாரும் இல்லை என்று 
அழுகிறவர்கள் தெய்வத்தையும்,
 தெய்வத்தின் கருணையையும் 
அவமதிப்பவர்கள்! தெய்வம் 
இருக்க கவலை ஏன்?

Saturday, October 1, 2011

தெய்வம் தந்த சொத்து!


ராதேக்ருஷ்ணா!


வியாதி வராமல் உடலை 
பாதுகாக்க வேண்டியது 
நம் அனைவரின் கடமை!
உடல் என்பது தெய்வம் 
தந்த சொத்து! அதை 
அவமதிப்பவர் மனிதரில்லை...

வீண் வசனம்!


ராதேக்ருஷ்ணா!


வியாதி வந்து எல்லோரையும் 
கஷ்டப்படுத்தி, தானும் அழுவதனால் 
ஒரு பிரயோஜனமும் இல்லை! 
என்னால் எல்லோருக்கும் கஷ்டம் 
என்பதெல்லாம் வீண் வசனம்!
தண்டம்...

என்ன லாபம்?


ராதேக்ருஷ்ணா!


எல்லோரும் அவரவர் உடலை 
ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 
வேண்டும்! இல்லையென்றால் 
அடுத்தவருக்கும் சேர்த்து கஷ்டம்!
வியாதி வந்தால் யாருக்கு 
என்ன லாபம்?

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP