Friday, September 30, 2011

முயன்று வெல்!


ராதேக்ருஷ்ணா


நீ சில விஷயங்களை உன் 
வாழ்வில் இழந்திருக்கிறாய்!
அதனால் நீ முட்டாள் என்றோ 
அல்லது தோற்கத்தான் உன்னால் 
முடியும் என்றோ அர்த்தமில்லை!
முயன்று வெல்!

ஜெயித்தே ஆகவேண்டும்...


ராதேக்ருஷ்ணா


எதையெல்லாம் இழந்தாயோ 
அதையெல்லாம்
உன் மூலதனமாக வைத்து 
இன்று முதல் புது வாழ்வை 
தொடங்கு! நிச்சயம் நீ வாழ்வில் 
ஜெயித்தே ஆகவேண்டும்...

இழந்த அனுபவங்கள்!


ராதேக்ருஷ்ணா

இதுவரை இழந்ததை நீ 
நினைத்திருந்தால் நிச்சயம் 
உன்னால் வாழ்வில் வெல்லமுடியாது!
இழந்த அனுபவங்களை மட்டும் 
நினைவில் வைத்தால் ஜெயிப்பாய்!

Friday, September 23, 2011

உன்னால் முடியும்!


ராதேக்ருஷ்ணா

உன்னால் ஜெயிக்கமுடியாது என்று 
ஜோஸ்யக்காரன் சொன்னாலும் 
நம்பாதே! நீ பிறந்த நேரம் 
சரியில்லை என்று யார் 
சொன்னாலும் நம்பாதே! 
உன்னால் முடியும்!
 சத்தியம்!

விடா முயற்சி...


ராதேக்ருஷ்ணா!


உலகில் பெரிய காரியத்தை 
சாதித்தவறேல்லாம் அவதார 
புருஷர்கள் இல்லை! விடா 
முயற்சி உடையவர்கள் மட்டுமே 
இன்று வரை சாதனை 
செய்துள்ளார்கள்...

உடனே செய்...


ராதேக்ருஷ்ணா

உன்னால் முடியாத காரியம் 
என்று எதுவுமில்லை! உனக்குப் 
பிடித்த காரியங்களை உன்னால் 
செய்யமுடியுமென்றால் உன்னால் 
எல்லாவற்றையும் செய்யமுடியும்!
உடனே செய்...

Tuesday, September 20, 2011

ஒவ்வொரு மனிதரின் உரிமை!

ராதேக்ருஷ்ணா!

பிடிவாதம் கொண்ட மனிதரிடம்
இருந்து தன்னைக் காத்துக்கொள்வது
ஒவ்வொரு மனிதரின் உரிமை!
 நல்ல பாம்பொடும் வாழமுடியும்!
அஹம்பாவ மனிதரிடம் கஷ்டம்!

கடவுளின் கட்டளை!

ராதேக்ருஷ்ணா!

குரு யாரைக்கண்டும்
பயப்படுவதில்லை!
குரு மனிதரின் கெட்ட
 எண்ணங்களிலிருந்து தன்னை
காப்பதற்காக மனிதரிடம் இருந்து
விலகுகிறார்! கடவுளின் கட்டளை!

யாரறிவார்?

ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு மனிதரும் அவரவர்
மனோ தர்மப்படி குருவைப்
பார்க்கிறார்கள்! சிலருக்கு குரு
பயந்தவராய் தெரிவார்! சிலருக்கு
தெய்வமாய் தெரிவார்! யாரறிவார்?

Saturday, September 17, 2011

விரோதியாகப் பார்!


ராதேக்ருஷ்ணா

வியாதிகளைப் பாராட்டினால் அது 
உன்னுடனேயே தங்கிவிடும்! நீ 
வியாதிகளை விரோதியாகப் பார்!
அவை உன்னிடம் நடுங்கவேண்டும்! 
நீ நடுங்கக்கூடாது! புரிந்ததா??

என்னை விட்டுப் போ!


ராதேக்ருஷ்ணா

வியாதியே என்னை விட்டுப் போ!
வியாதியே உனக்கு இங்கே இடமில்லை!
வியாதியே நானும் என் உடலும் 
க்ருஷ்ணனின் சொத்து! அதனால் 
இங்கிருந்து சென்றால் உனக்கு நல்லது!

க்ருஷ்ணனை நம்பு!


ராதேக்ருஷ்ணா


உடலுக்கு வியாதிகள் வருவது 
சகஜம்! உன் மனதை நீ 
திடமாக வைக்க,உன் வியாதிகள் 
உன்னை விட்டு சத்தியமாக ஓடிவிடும்! 
க்ருஷ்ணனை பூரணமாக நம்பு!

Wednesday, September 14, 2011

நரகமா? ப்ரசாதமா?


ராதேக்ருஷ்ணா


குடும்பம் என்பது நல்லது!
ஆனால் அதை நாம் எப்படி 
வைத்துக்கொள்கிறோம் என்பது 
நம்மிடம் தான் இருக்கிறது!
உன் குடும்பம் நரகமா?
ப்ரசாதமா? யோசி...

மனதில் சந்தோஷம்...


ராதேக்ருஷ்ணா


வீட்டிற்கு தேவையானதை செய்யும்போது 
மனதில் சந்தோஷம் இருக்கவேண்டும்!
அப்பொழுதுதான் குடும்பம் ஆனந்தமாக 
இருக்கும்! பணம் சந்தோஷத்தின் 
அளவல்ல!

சரியான வழி...


ராதேக்ருஷ்ணா


வாழ்வில் எல்லோருமே முன்னேறவே 
ஆசைப்படுகிறார்கள்! அனால் சிலர் 
குறுக்கு வழியில் முன்னேற 
ஆசைப்படுவதுதான் விபரீதம்! சரியான 
வழியில் செல்வதே நல்லது!

Saturday, September 10, 2011

என்ன தவம் செய்தாய்!

ராதேக்ருஷ்ணா!

மகாபலி சக்ரவர்த்தியே, ப்ரஹ்லாதனின்
பேரனே, என்ன தவம் செய்து
உலகளந்தவனின் திருவடியை
உன் தலையில் தாங்கினாய்!
எனக்காக அவனிடம் தூது செல்!

என் தலையில் கால் வைப்பாயா?

ராதேக்ருஷ்ணா!

இன்று குள்ளன் பிறந்த
நாள்! இந்த புண்ணியமான
உலகை தன் செந்தாமரைப்
பாதங்களால் அளக்க நம்
கண்ணன் வந்த நாள்! கண்ணா
என் தலையில் கால் வைப்பாயா?

உலகளந்தான் பிறந்த நாள்!

ராதேக்ருஷ்ணா

இன்று உலகளந்தான் பிறந்த
நாள்! கஷ்யபருக்கும், அதிதி
தேவிக்கும் திருவோண நக்ஷத்திரத்தில்
ஸ்வயம் ஆதி மூலமான
நாராயணன் இன்று பிறந்தான்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP