Friday, October 29, 2010

உன் வாழ்க்கை!

ராதேக்ருஷ்ணா

நினைவில் நல்லது இருந்தால்,
வார்த்தைகளில் நல்லவை வரும்!
வார்த்தைகளில் நல்லவை இருந்தால்,
வாழ்வில் நல்லவை தானாக
வரும்! உன் வாழ்வை நீ வாழ்!

புரிந்ததா?

ராதேக்ருஷ்ணா

அசிங்கங்களை உடனே தள்ளு!
நல்லவைகளை ஒரு நாளும்
தள்ளிவிடாதே! நல்லவரை ஒரு
நாளும் மறவாதே! கெட்டவரை
மறந்தும் நினைவில் 
கொள்ளாதே! புரிந்ததா?

தினமும் இதை செய்!

ராதேக்ருஷ்ணா

பழையன கழிதலும் புதியன
புகுதலும் செய்! தினமும் இதை
செய்! இதை உன் வாழ்வின்
கொள்கையாக வைத்துக்கொள்!
நிச்சயம் நீ உயர்வாய்!
இப்பொழுதே முயல்!

Thursday, October 28, 2010

தைரியமாக வாழ்!

ராதேக்ருஷ்ணா

சோகத்தினால் இதுவரை நீ
எதையும் சாதிக்கவில்லை!
நீ சோகமாக இருப்பதால்
கடவுளின் ஆசீர்வாதத்தை
இழக்கிறாய்! தைரியமாக
வாழ முடிவு செய்!

Wednesday, October 27, 2010

வெளியில் கொண்டு வா!

ராதேக்ருஷ்ணா

திறமைகள் இல்லாதவர் 
யாருமில்லை! திறமைகளை
உபயோகப்படுத்தாதவரே
வாழ்வில் தோல்வியடைகின்றனர்!
இன்று முதல் உன் திறமைகளை
வெளியில் கொண்டு வா!

கண்டுபிடி...

ராதேக்ருஷ்ணா

உன் திறமைகளை நீ தான்
கண்டுபிடிக்கவேண்டும்!
கண்டுபிடித்து அதை சரியான
முறையில், சரியான நேரத்தில்
உபயோகப்படுத்தினால் 
நிச்சயம் நீ வெல்வாய்!

சந்தோஷ ரகசியம்!

ராதேக்ருஷ்ணா

உன்னிடம் நிறைய திறமைகள்
ஒளிந்துகொண்டிருக்கிறது!
அதை நல்ல முறையில்
உபயோகப்படுத்தி வாழ்வில்
முன்னேறும் வழியை பார்!
அதுதான் சந்தோஷ ரகசியம்!

Monday, October 25, 2010

நிலவும் மனதும்...

ராதேக்ருஷ்ணா

நிலவும் உன் மனதும் கிட்டத்தட்ட
ஒன்றுதான்! ஏனெனில் உன்
மனதின் நம்பிக்கையும்
தேய்கிறது! வளர்கிறது! 
எப்பொழுதும் பௌர்ணமியாய் 
உன் நம்பிக்கை இருக்கட்டும்...

உன்னை புரிந்துகொள்!

ராதேக்ருஷ்ணா

உன் மனதை உள்ளபடி க்ருஷ்ணன்
புரிந்துவைத்திருக்கிறான்! வேறு யார்
 உன்னை புரிந்துகொள்ளாவிட்டாலும்
நீ கவலையே படவேண்டாம்! உன்னை
நீ ஒழுங்காக புரிந்துகொள்!

யோசி!

ராதேக்ருஷ்ணா

உன் மனதை யாரும்
புரிந்துகொள்ளவில்லை என்று
கவலையே படாதே! உன்னை 
யாரும் புரிந்துகொள்ளாதவரை
நிச்சயம் நிம்மதி உண்டு! யோசி!
நான் சொல்வது புரியும்!

இன்று புதிதாய் பிறந்தேன்!

ராதேக்ருஷ்ணா

கருணையின் நாயகனே! பத்மாவதி
மணாளா! வகுள மாலிகா 
புதல்வா! ஏழுமலையின் பிரபு!
உன் தரிசனம் எங்களை
வாழவைக்கும்! இன்று புதிதாய்
பிறந்தேன்! ஆஹா சுகம்!

இத்தனை கருணையா?

ராதேக்ருஷ்ணா

ஹே வேங்கடேசா! உன்
கருணையை தாங்கும் சக்தி
எங்களுக்கு இல்லை! விளையாட்டாய்
நாங்கள் உன் சன்னதிக்கு 
வந்ததற்கு இத்தனை கருணையா?
தயை கடலே வாழ்க!

ஒரு தவமும் செய்யவில்லை!

ராதேக்ருஷ்ணா

நாங்கள் ஒரு தவமும்
செய்யவில்லை! ஐயோ! 
திருமலையில் செல்ல ஒரு
 அதிகாரமும் எங்களுக்கு 
இல்லையே! ராமானுஜர் 
முட்டிக்கால் போட்டு ஏறின 
மலையில் நாங்களும் செல்கிறோமே!

Friday, October 22, 2010

முறுக்கு மீசை அழகன்!

ராதேக்ருஷ்ணா

முறுக்கு மீசை அழகன்
பார்த்தசாரதி! உலகின் மிகச் 
சிறந்த ஒரே மேய்ப்பன்
பார்த்தசாரதி! அவரின் இன்னொரு
பெயர் 'வேங்கட க்ருஷ்ணன்'!
பார்த்தசாரதி பாதமே கதி!

பார்த்தசாரதியிடம் சரணாகதி செய்!

ராதேக்ருஷ்ணா

பார்த்தசாரதியே சுவாமி 
ராமானுஜராக அவதரித்தார்! 
சுவாமி விவேகானந்தரும்
தன் தோழரிடம் பாரத
பூமிக்காக பார்த்தசாரதியிடம்
சரணாகதி செய்ய சொன்னார்!

பார்த்தசாரதி காப்பாற்றுவார்!

ராதேக்ருஷ்ணா

பார்த்தனுக்கு சாரதியானவர் உன்
வாழ்வை நடத்துவார்! நீ
தைரியமாக உன் வாழ்க்கையை
அவரிடம் ஒப்படைத்துவிட்டு நீ
நிம்மதியாக உன் கடமையை செய்!

Thursday, October 21, 2010

இவை போதும்!

ராதேக்ருஷ்ணா

நீ, உன் மனது, உன் செய்கை,
உன் எண்ணங்கள், உன் நம்பிக்கை,
உன் முயற்சி, உன் பிரார்த்தனை,
இவைகள் மட்டுமே உன்னிடம்
இருக்கிறது! இவை போதும்!
உன் வாழ்வை நீ வெல்ல!

சுலபமான வழி...

ராதேக்ருஷ்ணா

மனது சுகமாக இருக்க
ஒரே சுலபமான வழி
நாமஜபமே! உன்னால் நிச்சயமாக
நாமஜபம் செய்ய முடியும்!
நீ வாழ்வில் வென்று காட்ட
முடியும்! முயற்சி செய்!

நிகழ்காலத்தில் கவனம்...

ராதேக்ருஷ்ணா

மனது அலைபாயும்போது
உன்னால் எந்த காரியத்தையும்
ஒழுங்காக செய்யவேமுடியாது!
மனது அலைபாயாமல் இருக்க நீ
நிகழ்காலத்தில் கவனம் செலுத்து!

Wednesday, October 20, 2010

நம்பிக்கையோடு வாழ்!

ராதேக்ருஷ்ணா

என்ன வேண்டுமானாலும் 
நடக்கட்டும்! யார் வேண்டுமானாலும்
என்ன வேண்டுமானாலும் 
சொல்லட்டும்! அதையெல்லாம் 
குப்பையாக ஒதுக்கு! நீ 
நம்பிக்கையோடு வாழ்ந்து பார்!

நீ மனித ஜாதி!

ராதேக்ருஷ்ணா

பறவைகள், மிருகங்கள், பூச்சிகள்
கூட ஒவ்வொரு நாளையும்
 நல்ல நம்பிக்கையோடு துவங்கி
 வாழ்ந்து காட்டுகின்றன! நீ 
ஆறறிவு படைத்த மனித ஜாதி!

உன் மூலதனம்!

ராதேக்ருஷ்ணா

உனது நம்பிக்கையை யாரும்
அழிக்க முடியாது! உனது
நம்பிக்கை மட்டுமே உன்னுடைய
சொத்து! உன்னுடைய மூலதனம்
உன் நம்பிக்கையே! வென்று
காட்டு! வாழ்ந்து காட்டு!

புலம்பாதே...

 ராதேக்ருஷ்ணா

வாழ்வை ஜெயிக்க உன்
வாழ்க்கையில் உனக்கு
அக்கறை வேண்டும்!
நேரத்தை வீணடிக்காது
உன் ஜோலியைப் பார்!
மற்றது தானாக நடக்கும்!
சும்மா புலம்பாதே...

என்ன ப்ரயோஜனம்?

ராதேக்ருஷ்ணா

வாழ்வை நேசிக்காதவர்கள்
உலகை ரசிக்கமுடியாது!
உலகை ரசிக்காதவர்கள்
வாழ்வில் ஜெயிக்கமுடியாது!
வாழ்வில் ஜெயிக்காமல் வாழ்ந்து
என்ன ப்ரயோஜனம்?

வாழ்வை மதி!

ராதேக்ருஷ்ணா

வாழ்வை மதிக்காதவர்கள் உலகில்
என்னதான் செய்யமுடியும்!
வாழ்வை மதிப்பது என்றால்
நம் கடமையை ஒழுங்காக
செய்வதாகும்! இதில் உனக்கு
சந்தேகம் வேண்டாம்!

Monday, October 18, 2010

நீ எப்படி?

ராதேக்ருஷ்ணா

முதுமையில் பிள்ளைகள்
கவனிக்காவிடில் அந்த
முதியோர் அநாதையே!
எத்தனை கோவில் போனாலும்
இந்த பாவம் தொலையாது!
அந்த பிள்ளைகள் அரக்கர்களே!
நீ எப்படி?

முதியோர்களை கவனித்துக்கொள்!

ராதேக்ருஷ்ணா

முதியோர்களை 
கவனிக்காதவர்களுக்கும் 
முதுமை வரும் என்பதை
எல்லோரும் மறந்துவிடுகின்றனர்!
முதியோரை கவனிப்பவர் வாழ்வில்
நல்ல கதி அடைவர்!

சந்தோஷமாக வாழவிடுங்கள்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு வயதானவர்களின் 
மரணத்திலும் ஏதோ ஒரு சோகம்
 ஒளிந்துகொண்டிருக்கிறது!
தயவு செய்து வயதானவர்களை
சந்தோஷமாக வாழவிடுங்கள்!
நீ செய்!

ஜெய் ஹிந்த்!

ராதேக்ருஷ்ணா

விஜயதசமி என்பது ஹிந்து
தர்மம் சொல்லிக்கொடுத்த
விசேஷமான ஒரு நாள்!
ஹிந்து தர்மத்தை தவிர வேறு
 யார் வாழ்வை சிறப்பிக்க
முடியும்? ஜெய் ஹிந்த்!

மத்வரிடம் சரணாகதி செய்!

ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ மத்வாசார்யரின்
அவதார தினம்! உடுப்பி ஸ்ரீ 
க்ருஷ்ணனை நமக்கு தந்த
மஹாத்மாவின் பிறந்த நாள்!
விஜயதசமியில் மத்வரிடம்
சரணாகதி செய்!

தெளிவு உண்டாகட்டும்!

ராதேக்ருஷ்ணா

இன்று விஜயதசமி! இன்று
முதல் எல்லா விஷயத்திலும்
உனக்கு ஒரு தெளிவு
உண்டாகட்டும்! வாழ்க்கையின்
யதார்த்தம் புரியட்டும்! நல்ல
ஞானம் உண்டாகட்டும்...

ஜெயித்து காட்டு!

ராதேக்ருஷ்ணா

உடலில் வியாதி இருந்தாலும்,
மனதில் நம்பிக்கை இருந்தால்
உடலை சரி செய்து வாழ்ந்து
காட்டலாம்! எந்த வியாதிக்கும்,
பிரச்சனைக்கும் கலங்காதே!
ஜெயித்து காட்டு!

நல்லவைக்காக போராடு!

ராதேக்ருஷ்ணா

எல்லா பிரச்சனைகளையும்
சமாளித்து உன்னால் வாழ்வில்
வெற்றி பெறமுடியும்! நீ ஏன்
மற்றவரின் அஹம்பாவத்திற்கு
பயந்து அடிபணிகிறாய்?
நல்லவைக்காக போராடு!

நீ முடிவெடு!

ராதேக்ருஷ்ணா

மனது பலவீனமானால் வாழ்க்கையே
நரகமாகும்! மனதில் நம்பிக்கை
இருந்தால் வாழ்வே
 ருசிகரமாயிருக்கும்! உன் மனது!
உன் வாழ்க்கை! உன் 
சந்தோஷம்! நீ முடிவெடு!

Thursday, October 14, 2010

உண்மையை தெரிந்துகொள்!

ராதேக்ருஷ்ணா

தெய்வத்தை தவிர யாரும்
நம்மிடத்தில் முழுமையான
ப்ரியம் வைப்பதில்லை! அதனால்
மனிதர்கள் இவ்வளவுதான் என்று
தெரிந்துகொள்! க்ருஷ்ணனை நம்பு!

வாழ்!

ராதேக்ருஷ்ணா

சிறு தோல்விகள், சிறு தவறுகள்,
சிறு அதிர்ச்சிகள் நம்மை
அஹம்பாவத்திலிருந்து காக்கின்றன!
அதனால் இவைகளை கண்டு
நடுங்காதே! நாம ஜபம் 
செய்! வாழ்!

கஷ்டம் - தெய்வ அனுகிரகம்!

ராதேக்ருஷ்ணா

எல்லோரும் வாழ்வின் கஷ்டமான
சமயங்களில் தெய்வ நம்பிக்கையை
இழக்கிறார்கள்! ஆனால் அது
சரியில்லை! கஷ்டமான நேரங்களில்
தான் தெய்வம் நம்மோடு இருக்கிறார்... 

Wednesday, October 13, 2010

பயணம் செய்!

ராதேக்ருஷ்ணா

இந்த சுயநல மிருகங்களான
மனிதக்கூட்டம் என்னும் பயங்கர
சம்சார கடலில் நம்பிக்கை
மட்டுமே ஓடம்! தைரியமாக
நம்பிக்கையின் மேல் 
பயணம் செய்!

நம்பினார் கெடுவதில்லை!

ராதேக்ருஷ்ணா

நம்பிக்கை உடையவர் ஒரு
நாளும் இங்கே வீழ்வதில்லை!
நம்பிக்கை இல்லாதவர் இங்கே
வாழ்ந்து சாதித்ததில்லை!
நம்பினார் கெடுவதில்லை!
நன்கு மறை தீர்ப்பு...

விதைத்துவிடு!

ராதேக்ருஷ்ணா

மனதில் ஒவ்வொரு நாளும்
நம்பிக்கையை விதைத்துவிடு!
ஒரு காலத்தில் அது
 நிச்சயமாக மரமாக 
வளர்ந்து உனக்கு நன்மை 
செய்யும்! இது சத்தியம்!

Tuesday, October 12, 2010

ஒரு கஷ்டம் இல்லை!

ராதேக்ருஷ்ணா

நீ எல்லோரையும் ஜெயிக்கவும்,
எல்லாவற்றையும் ஜெயிக்கவும்,
எப்பொழுதும் ஜெயிக்கவும்,
உனக்கு தேவை நம்பிக்கை
மட்டுமே! இது ஒரு கஷ்டமான
காரியமா என்ன? நீ சொல்!

உன் நம்பிக்கை தோற்காது!

ராதேக்ருஷ்ணா

நீ அவநம்பிக்கையால் உன்
வாழ்வை அவமதிக்கிறாய்!
நீ நம்பிக்கையால் உன்
வாழ்வை அனுபவிக்கிறாய்!
ஒரு நாளும் உன் நம்பிக்கை
தோற்கவே தோற்காது! நம்பு!

நம்பிக்கை வை!

ராதேக்ருஷ்ணா

நிலவும், வானும், பூமியும்,
கடலும், சூரியனும், உலகும்
அழகாயிருந்தாலும் நீ ரசித்தால்
தான் சுகம்! வாழ்வில் 
நம்பிக்கை வை! வாழ்க்கை
உன்னை வாழவைக்கும்!

Monday, October 11, 2010

விடாது நாம ஜபம் செய்!

ராதேக்ருஷ்ணா

தன்னம்பிக்கையை வளர்ப்பதும்
தெய்வ நம்பிக்கையே! உன்
தன்னம்பிக்கை எப்பொழுதும்
பலமோடு இருக்க  விடாது 
நாம ஜபம் செய்து 
நம்பிக்கையை வை!

தெய்வ நம்பிக்கை வீண் போகாது!

ராதேக்ருஷ்ணா

நம்பிக்கைக்கு பல பரிமாணங்கள்
உண்டு! தெய்வத்தின் மேல்
வைக்கும் நம்பிக்கையே உலகில்
இன்று வரை வீண் போகாதது!
உன் நம்பிக்கை ஒரு
நாளும் தோற்காது!

புரிந்து நட!

ராதேக்ருஷ்ணா

உன் நம்பிக்கை எப்பொழுதும்
ஒரே நிலைமையில் 
வைப்பதற்காகத்தான் பக்தி!
நாம ஜபம் தொடர்ந்து
செய்து கொண்டே வர
நம்பிக்கை அதிகமாகும்!
புரிந்து நட!

நம்பிக்கையா? சந்தேகமா?

ராதேக்ருஷ்ணா

நம்பிக்கையின் ஆழத்திற்கு
தகுந்த மாதிரி வெற்றி 
அமையும்! சந்தேகத்தின்
ஆழத்திற்கு தகுந்த மாதிரி
குழப்பங்கள் விளையும்!
இப்பொழுது முடிவுசெய்!

மனம் தான் முக்கியம்!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கைக்கு மனது தான்
முக்கியம்! உன் மனதில்
நம்பிக்கை அதிகமாகும்போது
உன் வாழ்க்கை பிரகாசிக்கும்!
மனதில் நம்பிக்கை
அதிகமாவதற்கே பக்தி!

க்ருஷ்ண நாமஜபம் செய்!

ராதேக்ருஷ்ணா

போனது போகட்டும்!
 இப்பொழுதும் ஒன்றும் 
நஷ்டமாகவில்லை!
இன்றிலிருந்து ஒழுங்காக 
இரு! இப்பொழுதாவது உன்
 வாழ்வை சரி செய்து கொள்! 
க்ருஷ்ண நாமஜபம் செய்!

இனிமையான நாள்!

ராதேக்ருஷ்ணா

இந்த நாள் மிக
 இனிமையான நாள்!
 திருப்பதி வேங்கடாச்சலபதியை
நினைத்துக்கொள்! அவர்
திருவடிகளில் சரணாகதி
செய்து வாழ்வை
வளமாக்கிக்கொள்!

"கோவிந்தா....கோவிந்தா..."

ராதேக்ருஷ்ணா

இன்று புரட்டாசி சனிக்கிழமை!
திருமலை திருப்பதி 
ஸ்ரீநிவாசனுக்கு உகந்த 
திருநாள்! வெட்கத்தை 
விட்டு வாயால் 
"கோவிந்தா....கோவிந்தா..."
என்று சொல்!

Friday, October 8, 2010

தவத்திற்கு பரிசு!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை ஒரு தவம்!
முயற்சி என்பது அதன்
அஸ்திவாரம்! சிரத்தை என்பது
அதன் பலம்! நம்பிக்கை
என்பது அதன் உயிர்! வெற்றி
என்பது அதற்கு பரிசு...

விடாமுயற்சி செய்!

ராதேக்ருஷ்ணா

வாழ்வின் கடைசிவரை போராடு!
இதற்கு மேல் முயற்சிக்க 
ஒன்றுமில்லை என்பது வரை
விடாமுயற்சி செய்! வாழ்வில் 
வீழாமலிருக்க விடாது 
நாமஜபம் செய்...

Thursday, October 7, 2010

உன் வாழ்வை உயர்த்திக்கொள்!

ராதேக்ருஷ்ணா

நீ தான் உன்னை ஒழுங்காக
வைத்துக்கொள்ளமுடியும்!
நீ தான் உன் வாழ்க்கை 
சிறக்க முயற்சிக்க வேண்டும்!
நீ தான் உன் வாழ்வை
உயர்த்திக்கொள்ள 
வேண்டும்! முடியும்...

துரோகம் செய்யாதே!

ராதேக்ருஷ்ணா

உலகத்தில் யாரையும் நம்பி
யாரும் இல்லை! ஆனால் நீ
யாருக்கும் ஒரு நாளும் 
துரோகம் செய்யாதே! உன்
கடமையை மட்டும் ஒழுங்காக
செய்துகொண்டிரு! ஜெயிப்பாய்...

ஏமாற்றாதே!

ராதேக்ருஷ்ணா

நீ யாரை ஏமாற்றினாலும்,
உன்னை ஏமாற்ற தெய்வம்
உண்டு! அதனால் எந்தக் 
காரணத்தைக் கொண்டும் யாரையும்
எதற்கும் ஏமாற்றாதே! உன்
வாழ்க்கையை நீ வாழ்!

Wednesday, October 6, 2010

இன்றே முயற்சி செய்!

ராதேக்ருஷ்ணா

நாளை என்பது இன்றிலிருந்து
ஆரம்பம்! அதனால் நாளை
வாழ்க்கை நன்றாயிருக்க இன்றே
முயற்சி  செய்! நாளை
நிம்மதியாக இருக்க இன்று
ஒழுங்காக வாழ்...

இன்று வாழ்வை ரசி!

ராதேக்ருஷ்ணா

நேற்றையதின் நல்லதை
எடுத்துக்கொள்! இன்று வாழ்வை
ரசி! இன்றைய உன் வாழ்வின்
நிகழ்வுகளை ரசி! இன்றைய
நாளை ரசி! இன்றைய நாளை
மதி! வென்று காட்டு!

இன்று வாழ்வோம்!

ராதேக்ருஷ்ணா

இன்று வாழ்வோம்! நாளைய
பொழுதை நாளை இருந்தால்
பார்ப்போம்! நேற்றைய பொழுதின்
வேலை முடிந்துவிட்டது! நேற்று
நிறைய பாடங்களை கற்றோம்!
வாழ்வை வெல்வோம்!

Monday, October 4, 2010

எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவன்!

ராதேக்ருஷ்ணா

இனம், மொழி, ஜாதி, மதம்,
தேசம், காலம் என்ற 
எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவன்
நம் ராமன்! எதிலும்
அடங்காதவன்! யாருக்கும்
அடக்கமுடியாதவன்! 
ஜெய் ஸ்ரீ ராம்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP